Category: சேலம் மேற்கு

மேட்டூர் – சேலம் – சென்னை – கோவை – திருப்பூரில் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டங்கள்

மேட்டூர் – சேலம் – சென்னை – கோவை – திருப்பூரில் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டங்கள்

சேலம் மேற்கு மாவட்ட திவிகவின் சார்பில் கழகத்தின் 11ம் ஆண்டு துவக்க நாளில் தெருமுனைக் கூட்டங்கள் 12.08.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையத்தில் பறை முழக்கம்,மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் கொள்கைப் பாடல்களுடன் துவங்கியது. முதலாவதாக வழக்கறிஞர் கண்ணகி “பெரியாரின் தேவை, பெண்ணுரிமை” ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினார். அடுத்து கழகத்தின் பரப்புரைச் செய லாளர் பால்.பிரபாகரன்,  “திராவிடர் விடுதலைக் கழகம் கடந்து வந்த பாதைகளையும், தமிழக உரிமை களுக்காக கழகம் செய்த போராட்டங்கள், பரப்புரைகள் மற்றும் ஒன்றிய பிஜேபி அரசினால் நாம் எவ்வாரெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம்” என்பதை பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார். கொளத்தூர் பேருந்து நிலையத்தில் திரளான பொதுமக்கள் உரையை கேட்டனர். பொது மக்களுக்கு திராவிடர் விடுதலைக்கத்தின் கடந்த 10 ஆண்டு கால பரப்புரை, போராட்டங்கள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை விளக்கி துண்டறிக்கை வழங்கப்பட்டது. நிறைவாக கொளத்தூர் நகர செயலாளர்  அறிவுச்செல்வன் நன்றியுரை கூற தெருமுனைக் கூட்டம் 11...

மேட்டூர் பெண்கள் சந்திப்பில் கொளத்தூர் மணி உரை பெரியார் காலம் போராட்டக் காலம்; தற்போது அறுவடைக் காலம்

மேட்டூர் பெண்கள் சந்திப்பில் கொளத்தூர் மணி உரை பெரியார் காலம் போராட்டக் காலம்; தற்போது அறுவடைக் காலம்

பெண்கள் சந்திப்பு நிகழ்வு 07.08.2022 ஞாயிறு காலை 10.00 மணியளவில் மேட்டூர் தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. திருப்பூர் யாழினியின் கடவுள் – ஆத்மா மறுப்பு மற்றும் பாடலுடன் தொடங்கியது. கீதா வரவேற்புரை நிகழ்த்த சுதா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.முதலில் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தோழர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். தேநீர் இடைவேளைக்கு பிறகு கோவை அமிலா சுந்தர் “அன்னை மணியம்மையார்” பற்றியும், திருப்பூர் சங்கீதா “பெரியாரின் பெண்ணியம்” பற்றியும் உரை நிகழ்த்தினர். மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு 2.30 மணிக்கு இரண்டாம் அமர்வு தொடங்கியது. நிகழ்வில் முத்துக்குமார், கோவிந்தராஜ் ஆகியோர் பெண்ணுரிமை மற்றும் ஜாதி ஒழிப்பு பாடல்களை பாடினர். அதனைத் தொடர்ந்து ஆனந்தி “பெண் ஏன் அடிமையானாள்” எனும் தலைப்பிலும்,  மனோரஞ்சனி “பெண்களும் மூட நம்பிக்கைகளும்” எனும் தலைப் பிலும்,  வசந்தி “மூவலூர் இராமாமிர்தம்” அம்மையாரைப் பற்றியும், வழக்கறிஞர் கண்ணகி “பெண்ணுரிமைச் சட்டங்கள்” பற்றியும் சிறப்பாக உரை நிகழ்த்தினர். பிற்பகல்...

கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 28.07.2022 வியாழக்கிழமை சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், நங்கவள்ளி பகுதியில் உள்ள வனவாசியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடை பெற்றது. முதல் நிகழ்வாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி  வனவாசியில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். பொதுக் கூட்ட ஆரம்பமாக மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவினர் ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு பாடல்களைப் பாடினர். அதனைத் தொடர்ந்து காவை இளவரசன் ‘மந்திரமா? தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்வை மக்கள் மத்தியில் மிக எளிமையாக செய்து காட்டினார்.அது கூடியிருந்த மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்து வனவாசி பகுதி நகர செயலாளர் பழ. உமாசங்கர் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு தலைமை உரை நிகழ்த்தினார். திவிக மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்டத் தலைவர் சூரியகுமார், ஒன்றிய அமைப்பாளர் கிருஷ்ணன், நகர அமைப்பாளர் ராஜேந்திரன், நகர பொருளாளர் கதிர்வேல், பன்னீர்செல்வம் ஆகியோர்...

பெரியார் பல்கலை முறைகேடுகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

பெரியார் பல்கலை முறைகேடுகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

20.07.2022 புதன் காலை 11.00 மணி அளவில் பெரியார் பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து கண்டன கோரிக்கை ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், திராவிட பண்பாட்டு நடுவத்தின் பொறுப்பாளர் முல்லை வேந்தன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். நிறைவாக கொளத்தூர் மணி கண்டன உரையில், பெரியார் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையின் வினாத்தாளில் ஜாதி குறித்து கேட்கப்பட்டமையைக் குறித்தும், மாநில அரசின் அறிவுரைகளை மதிக்காமல் புதிய கல்வி கொள்கையை நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்படுத்தி வரும் துனணவேந்தரின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் உரை நிகழ்த்தினார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி பொது மக்களுக்கு துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏற்காடு, சேலம், கோவை, திருப்பூர், இளம் பிள்ளை, நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர் சுள,...

நன்கொடை

நன்கொடை

மேட்டூர் புதுச்சாம் பள்ளி கழகத் தோழர் செந்தில் குமார், கழகத் தலைவரை சந்தித்து கழக வளர்ச்சி நிதிக்காக ரூ.2500/- வழங்கினார். பெரியார் முழக்கம் 23062022 இதழ்

கொளத்தூர் மணி 75ஆவது பிறந்த நாள் குடும்ப விழாவாக நடந்தது

கொளத்தூர் மணி 75ஆவது பிறந்த நாள் குடும்ப விழாவாக நடந்தது

கிராமப் பிரச்சாரங்கள், கழகத்  தோழர் சந்திப்புக் கூட்டங்களை அதிகரிக்க கழகத் தலைவர் வேண்டுகோள் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மற்றும் குடும்ப விருந்து நிகழ்ச்சி மேட்டூர் தூய மரியன்னை சமுதாயக் கூடத்தில்  கொளத்தூர் மணி தலைமையில் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்தில் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக நகர, கிளைக் கழக, ஒன்றியப் பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களும், தோழர்களும் கழகத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும், இயக்க வளர்ச்சி குறித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். கலந்துரையாடல் கூட்ட இடைவேளையில் கழகத் தலைவருக்கு 75ஆவது பிறந்த நாள் விழா கேக் வெட்டப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதன் பின்பு தலைவருக்கு சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ரூ.75,000/- வழங்கப்பட்டது. பிறகு குடும்ப விருந்து நிகழ்வு மதியம் 2.00 மணிக்கு நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட...

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ மக்கள் பேராதரவுடன் நடந்த சேலம்-தருமபுரி- கிருட்டிணகிரி மாவட்ட பரப்புரைப் பயணம்

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ மக்கள் பேராதரவுடன் நடந்த சேலம்-தருமபுரி- கிருட்டிணகிரி மாவட்ட பரப்புரைப் பயணம்

ட         பறை இசைப் பாடல்கள்; வீதி நாடகங்களுடன் திராவிட மாடல் மக்களிடம் விளக்கம். ட         கெலமங்கலம் மண்டல மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் பேச்சு. ட         கழகச் செயல்பாட்டாளர்களுக்கு உற்சாகத்தைத் தந்த பரப்புரை நிகழ்வுகள். முதல் நாள் : 01.05.2022 ஞாயிறு காலை 10.00 மணியளவில் சேலம் – தருமபுரி – கிருட்டிணகிரி மாவட்ட திராவிட மாடல் தொடர் பரப்புரைப் பயண தெருமுனைக் கூட்டம் ஏற்காட்டில் தொடங்கியது. கூட்டத்தில் முதல் நிகழ்வாக பறை முழக்கம், பாடல்கள், வீதி நாடகம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.     முதல் நிகழ்வு ஏற்காடு ரவுண்டானா, இரண்டாவது நிகழ்வு ஏற்காடு டவுன், மூன்றாவது நிகழ்வு ஏற்காடு பேருந்து நிலையம், நிறைவாக மஞ்சக்குட்டை ஆகிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.   மஞ்சக்குட்டை நிகழ்வில் திமுக பொறுப்பாளர் பாபு கலந்து கொண்டு உரையாற்றினார். மாலை 6.00 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது. தெருமுனைக் கூட்டத்தில் ஏற்காடு...

கொளத்தூரில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு கழகம் எடுத்த அம்பேத்கர் விழா எழுச்சி கழக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.

கொளத்தூரில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு கழகம் எடுத்த அம்பேத்கர் விழா எழுச்சி கழக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.

15.4.2022 திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலம் மேற்கு மாவட்டம் கொளத்தூர் பேருந்து நிலையத்தில் மாலை 6.00 மணியளவில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா சாதி மறுப்பு இணையர்கள் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கொளத்தூர் நகரச் செயலாளர் பா. அறிவுச்செல்வன் வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராசு, கொளத்தூர் நகர தலைவர் சி.இராமமூர்த்தி, பெரியாரிய அம்பேத்கரிய உணர்வாளர் தீன ரட்சகன் ஆகியோர் முன்னிலை வகிக்க கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் தலைமை ஏற்றார். தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் சந்தோஷ் உரையை தொடர்ந்து ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் ப.பா. மோகன், வழக்கறிஞர் கார்த்திகேயன், பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் பார்த்திபன் மற்றும் கொளத்தூர் பகுதியில் சாதி மறுப்புத் திருமணங்களை முன்னின்று நடத்திவரும்...

‘திராவிட மாடல்’ பரப்புரைப் பயணத்துக்குத் தோழர்கள் தயாராகிறார்கள்

‘திராவிட மாடல்’ பரப்புரைப் பயணத்துக்குத் தோழர்கள் தயாராகிறார்கள்

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ மண்டல மாநாடு ஒட்டி மாவட்ட கழகங்களின் கலந்துரையாடல்களை நடத்தி தோழர்கள் பயணத்துக்கு திட்டமிட்டு வருகிறார்கள். சென்னை : கடந்த ஏப்ரல் 02, 03 ஆகிய நாட்களில், ஈரோட்டில் நடைபெற்ற தலைமைக்குழு, செயலவையில், மண்டலம் வாரியாக மாநாடு நடத்துவது என்றும், மாநாட்டிற்கு முன்னதாக 15 தெருமுனைக் கூட்டங்கள் மாவட்டம் வாரியாக நடத்த வேண்டும் என்றும், முடிவுகள் எடுக்கப்பட்டன. செயலவை முடிவுகளின் படி, சென்னை மாவட்டம் சார்பாக மாநாடு மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது பற்றி சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல், 05.04.2022 செவ்வாய் கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை இராயப்பேட்டை வி.எம் தெரு பெரியார் படிப்பகத்தில், மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன் ஆகியோர் உட்பட மாவட்ட, பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். சேலம் – தருமபுரி...

நங்கவள்ளி ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர் மணி கோரிக்கை மத நல்லிணக்க சீர்குலைவுத் தடுப்புச் சட்டம் தமிழ்நாட்டில் வரவேண்டும்

நங்கவள்ளி ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர் மணி கோரிக்கை மத நல்லிணக்க சீர்குலைவுத் தடுப்புச் சட்டம் தமிழ்நாட்டில் வரவேண்டும்

நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, 01.02.2022 செவ்வாய் மாலை 4 மணியளவில் தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவி  தற்கொலையை காரணம் காட்டி தமிழகத்தில் பொது அமைதியைக் குலைக்கப் பொய்யான தகவல்களைப் பரப்பி வரும் மதவாத பா.ஜ.கவினரைக் கண்டித்தும், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைக் கைது செய்யக் கோரியும் கண்டன ஆர்ப் பாட்டம் நங்கவள்ளி நகரத் தலைவர் த.கண்ணன் தலைமையில் நடை பெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். உரையில், “தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி என்ற ஊரில் படித்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதையே ஒரு காரணமாக வைத்துக் கொண்டு, பொய்யான செய்திகளை திட்டமிட்டு பரப்புவதும், அதை சமூக நல்லிணக் கத்திற்கு எதிராகப் பரப்புவதும், சமூகப் பதற்றத்தை உருவாக்குகிற நோக்கத் தோடும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கம் (3) பெரியார் காண விரும்பியது மதமற்ற சமுதாயத்தைத் தான்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கம் (3) பெரியார் காண விரும்பியது மதமற்ற சமுதாயத்தைத் தான்

ஜாதி இழிவு ஒழிய மதமாற்றம் குறித்துப் பேசினாலும் பெரியார் விரும்பியது மதம் அற்ற ஒரு சமுதாயத்தைத்தான் என்று கழகத் தலைவர் குடியாத்தம் நவம். 07, 2021இல் நடந்த நூல் ஆய்வுக் கூட்டத்தில் குறிப்பிட்டார். அவரது உரையின் தொடர்ச்சி. காந்தியுடன் பெரியார் உரையாடலை நடத்தினார். “இந்து மதத்தை திருத்தலாம் என்று கூறுகிறீர்கள். ஆனால், அதை பின் வருபவர்களும் செய்வார்களே, நீங்கள் அவர்களுக்கு (பார்ப்பனர்கள்) ஆதரவாக இருக்கும் வரை விட்டு வைத்திருக் கிறார்கள். கொஞ்சம் எதிராக திரும்பினாலும்கூட விட்டு வைக்க மாட்டார்கள்” என்று பெரியார் 1927இல் கூறினார். பின் அதுதான் நடந்தது. அப்படிப்பட்ட இந்து மதத்தின் மீது வருகிற கோபம், அதன் பின் வரும் காலங்களில் இந்து மதத்தின் தீமைகளை, சூழ்ச்சிகளை பதிவு செய்து வருகிறார். அரசியல் சட்டத்திலும் புகுந்து கொண்டதே என்றெல்லாம் கோபித்துக் கொண்டார். அதை யொட்டித்தான் சட்ட எரிப்புப் போராட்டத்தையே நடத்துகிறார். இதை காரணமாக வைத்து சிலர் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் இடைவெளி...

கழக ஏட்டுக்கு 400 சந்தாக்கள் : மேட்டூர் வழி காட்டுகிறது

கழக ஏட்டுக்கு 400 சந்தாக்கள் : மேட்டூர் வழி காட்டுகிறது

சேலம் (மேற்கு) மாவட்ட மேட்டூர் கழகம் சார்பாக கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு முதல் தவணையாக 400 சந்தாக்களையும் அதற்குரிய கட்டணம் ரூபாய் ஒரு இலட்சத்தையும் மேற்கு மாவட்ட செயலாளர் கழகச் செயல் வீரர் ஜி. கோவிந்தராஜ் அனுப்பியுள்ளார்.  நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். மேட்டூரைப் பின்பற்றி, தோழர்களே, முழக்கம் சந்தா சேர்ப்பு இயக்கத்தைத் தீவிரப்படுத்துங்கள்! பெரியார் முழக்கம் 03022022 இதழ்

அர்த்தனாரி வாத்தியார் நூற்றாண்டு விழா மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா

அர்த்தனாரி வாத்தியார் நூற்றாண்டு விழா மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா

மறைந்த சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் அர்த்தனாரி வாத்தியார் நூற்றாண்டு விழா, மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் 39ஆம் ஆண்டு நினைவுதின பொதுக்கூட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 05.01.2022 புதன் காலை 10.00 மணியளவில், நங்கவள்ளி ஒன்றியம் பெரியசோரகையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி அடிக்கல் நாட்டும் நிகழ்சியில் பங்கேற்று நினைவு தின பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். முன்னதாக, புதுகை பூபாலம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா,திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் கே சுப்பாராயன் அவர்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள். நிகழ்ச்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டம் ஒருங்கிணைத்திருந்தது. பெரியார் முழக்கம் 13012022 இதழ்

கழக ஏட்டுக்கு சந்தா: கழகக் கிளைகள் தீவிரப் பணி

கழக ஏட்டுக்கு சந்தா: கழகக் கிளைகள் தீவிரப் பணி

கொளத்தூர் : 04.12.2021 சனி மாலை 5.30 மணியளவில், கொளத்தூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமையிலும், மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்களாகக் கீழ்க்கண்ட தோழர்கள் நியமிக்கப்பட்டனர். கொளத்தூர் நகரம்: நகரத் தலைவர் -இராமமூர்த்தி, நகரச் செயலாளர் – பா.அறிவுச்செல்வன், பொருளாளர் – சூ. இனியன், காவலாண்டியூர் கிளைக் கழகத் தலைவர் – இராசேந்திரன், துணைத் தலைவர் – சேகர், செயலாளர் – தங்கராசு, இணைச் செயலாளர் – சந்தோஷ், பொருளாளர் – சின்ராசு, உக்கம்பருத்திக்காடு செயலாளர் – செல்வம், ஒருங்கிணைப்பாளர்கள் – கோமதி, சித்ரா, ஒன்றிய குழு ஒருங்கிணைப்பாளர்கள் – சித்துசாமி, விஜயகுமார், ஒருங்கிணைப்பு குழு தோழர்கள் – சுதா, இளவரசன், சுரேஷ், சக்தி குமார், இளைஞர் குழு ஒருங்கிணைப்பாளர் – செல்வேந்திரன், இளைஞர் குழு தோழர்கள் – சூ. இனியன், பா.அறிவுச்செல்வன், சந்தோஷ், இராமன்,...

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், 06.12.2021 அன்று காலை 9 மணியளவில் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மயிலாப்பூர் சுண்ணாம்பு கால்வாயில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அடுத்து, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் படத்திற்கு தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார் மாலை அணிவித்தார். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி, வட சென்னை யேசுகுமார், மயிலை சுகுமார், இராவணன், மனோகர் ஆகியோர் உட்பட சென்னை கழக தோழர்கள் கலந்து கொண்டனர். திருப்பூரில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 65ஆவது நினைவு நாள் நிகழ்வு திருப்பூர் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. 06.12.2021 அன்று காலை 10.00 மணியளவில் திருப்பூரில் அமைந்துள்ள புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கழகத் தோழர்கள்...

‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு சேலம் மாவட்டக் கழகங்கள் சார்பாக 1500 சந்தாக்கள் வழங்க முடிவு

‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு சேலம் மாவட்டக் கழகங்கள் சார்பாக 1500 சந்தாக்கள் வழங்க முடிவு

26.11.2021 சனிக்கிழமை மதியம் 02.00 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைந்த சேலம் கிழக்கு – மேற்கு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மேட்டூர் தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளியில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராசு வரவேற்பு மற்றும் கடவுள் மறுப்பு கூற கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் அனைத்துக் கிளைக் கழகப் பகுதிப் பொறுப்பாளர்களும், இயக்க வளர்ச்சி குறித்தும், 2022ஆம் ஆண்டு சந்தா சேர்ப்பு குறித்தும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 09.11.2021 அன்று இயற்கை எய்திய திராவிடர் கழக மண்டல தலைவர் தோழர் பிரகலாதன் அவர்களின் மறைவிற்கு சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. 2022ஆம் ஆண்டிற்கான புரட்சி பெரியார் முழக்க சந்தாக்கலாக சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக 500...

கொளத்தூர் – புலியூரில் எழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்

கொளத்தூர் – புலியூரில் எழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்

தமிழ் ஈழ விடுதலைப் போராட் டத்தில் களமாடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நவம்பர் 27 அன்று கொளத்தூர் அருகே புலியூர் செல்லும் வழியில் அய்யம்புதூர் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விடுதலைப் புலிகள் இராணுவப் பயிற்சி எடுத்த இடத்தின் அருகே திறந்தவெளியில் முகாமுக்கு தலைமையேற்று பயிற்சி யளித்து வீரமரணமடைந்த பொன்னம்மான் நினைவாக அமைக்கப்பட்ட புலியூர் ‘நிழற்குடை’ அருகே இதுவரை இந்த நிகழ்வு நடந்து வந்தது. மழை காரணமாக அருகே உள்ள திருமண மண்டபத்தில் இந்த ஆண்டு நிகழ்வு நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தோழர்கள் 2000 பேர் திரண்டிருந்தனர். உலகம் முழுதும் 6.05 மணிக்கு நிகழ்வு நடத்தப்படுவதை யொட்டி அதே நேரத்தில் மாவீரர் வீரவணக்கப் பாடல் ஒலிக்கப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாவீரர் சுடரை ஏற்றினார். தொடர்ந்து...

சட்ட எரிப்புப் போராட்டம் நடத்திய நவம்பர் 26இல் தோழர்கள் – ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

சட்ட எரிப்புப் போராட்டம் நடத்திய நவம்பர் 26இல் தோழர்கள் – ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

1957 நவம்பர் 26ஆம் நாள் அரசியல் சட்டத்தை அரசியல் நிர்ணயசபை ஏற்ற நாளாகும். அதே சட்டம் மதத்தை அடிப்படை உரிமையாக்கி, அதன் வழியாக ஜாதி இழிவுகளைக் காப்பாற்றுவதற்குப் பாதுகாப்பான பிரிவுகளை உள்ளடக்கியிருந்தது. ஜாதி ஒழிப்புக்குத் தடையாக இருந்த சட்டத்தின் உட்பிரிவுகளான 13(2), 25(1), 26(1), 26(2) மற்றும் 368 பிரிவுகளை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்துக்கு பெரியார் ‘நவம்பர் 27’அய் தான் தேர்வு செய்தார். ஒரு நாட்டின் அரசியல் சட்டப் பிரிவுகளையே 10,000 பேர் தீயிட்டுக் கொளுத்திய போராட்ட வரலாறு பெரியார் இயக்கத் துக்கு மட்டுமே உண்டு. சரியாக போராட்டத்திற்கு 24 நாட்களுக்கு முன் தஞ்சையில் நடந்த சிறப்பு மாநாட் டில் போராட்ட அறிவிப்பை பெரியார் அறிவித்தார். 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தோழர்கள் தண்டிக் கப்பட்டனர். தோழர்கள் எவரும் எதிர் வழக்காட வில்லை. ‘சட்டத்தை எரித்தேன்; தண்டனை ஏற்கத் தயாராக உள்ளேன்’ என்று நீதிமன்றத்தில் வாக்கு மூலம் தந்தனர்....

தமிழ்நாடு கொடியை  கொளத்தூர் மணி ஏற்றினார்

தமிழ்நாடு கொடியை கொளத்தூர் மணி ஏற்றினார்

நவ. 1 தமிழ்நாடு நாளாக முன்னெடுக்கப்பட்டு தமிழ்நாட்டு கொடி ஏற்றும் நிகழ்வு தமிழகம் முழுவதும் நடைபெறும் என பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 1 காலை 8 மணியளவில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக வெளிடப்பட்ட தமிழ்நாடு கொடியை, கழகத் தலைவர் கொளத்தூர் மணி,  கொளத்தூர் செக்போஸ்ட்டில் ஏற்றி வைத்தார். மேட்டூர் கழகத் தோழர்கள் உடனிருந்தனர். அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் கழகத் தோழர்கள் 01.11.2021 திங்கள் காலை 10.30 அளவில் தமிழ்நாடு கொடி ஏற்ற முயன்ற பொழுது அதற்கு அனுமதி மறுத்து காவல்துறை தடுத்தது. காவல்துறையின் தடையையும் மீறி தமிழ் நாட்டுக் கொடியை ஏற்ற முயன்ற கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட தோழர்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன், கண்ணன், சந்திரசேகரன், பிரபாகரன், தீனதயாளன், அருண்குமார், கோகிலா ஆகிய 8 பேரும் நங்கவள்ளி ஆசூஏ மஹால் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டார்கள். மாலை 6.00 மணிக்கு...

இளைய தலைமுறையினருக்கு இளைஞர்கள் வகுப்பு எடுத்த பெரியாரியல் பயிற்சி முகாம்

இளைய தலைமுறையினருக்கு இளைஞர்கள் வகுப்பு எடுத்த பெரியாரியல் பயிற்சி முகாம்

இளைய தலைமுறையினருக்கு பெரியாரியலை அறிமுகப்படுத்தும் பயிற்சி வகுப்புகள் மேட்டூரில் 2021, பிப். 6, 7 தேதிகளில் தாய்த் தமிழ்ப் பள்ளி அரங்கில் சிறப்புடன் நடந்தன. இரு நாள் பயிற்சி வகுப்பிலும் 50 மாணவிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர். முதல் நாள் பயிற்சி வகுப்பை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடங்கி வைத்தார். வாழ்க்கையில் முக்கியமான இளமைக் காலத்தில் பதிய வைக்கும் சிந்தனைகள் மானுட வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவையாகும். இன்றைய சமூகச் சூழல் இளைஞர்களைக் குழப்பக் கூடியதாகவும் பல நேரங்களில் சமூக விரோதிகளாக செயல்படவும் தூண்டுகின்றன. சிலர் ஜாதி சங்கங்களிலும் சிலர் பொழுது போக்கு கேளிக்கைகளிலும் மூழ்கி விடுகிறார்கள். நேர்மையான சமூகக் கவலையுள்ள சமூக மாற்றத்துக்கு பங்களிப்புகளை வழங்கக் கூடிய இளைஞர்களாக உருவாவதற்கு உரிய சிந்தனைகளை நாம் சிந்தனையில் ஏற்றிக் கொள்ள வேண்டும். பெரியார் சிந்தனைகள் வாழ்க்கைக்கான இலட்சியத்தையும் மானுடப் பண்புகளையும் சுயமரியாதை உணர்வுகளையும் பகுத்தறிவையும் பெண்களை சமமாக ஏற்கும்...

கழகம் முன்னெடுத்த பொங்கல் விழாக்கள்

கழகம் முன்னெடுத்த பொங்கல் விழாக்கள்

திருவல்லிக்கேணி : திராவிடர் விடுதலைக் கழகம் திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 21ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் தமிழர் திருநாள் 13.01.2021 அன்று மாலை 6 மணியளவில் வி.எம். சாலை, பெரியார் படிப்பகம், பத்ரிநாராயணன் நூலகம் வாயிலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பறையிசையுடன் தொடங்கியது. சமரன் கலைக் குழுவின் பறையிசை, சிலம்பாட்டம், ஓயிலாட்டம், கரகாட்டம், கிராமியப் பாடல்கள் ஆகிய கலை நிகழ்ச்சிகள் 3 மணி நேரம் நிகழ்ந்தன. நிகழ்வில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு, தமிழர் திருநாள், பொங்கல் தினம் குறித்து  உரையாற்றினார். தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், அன்பு தனசேகர், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டத் தலைவர் வேழவேந்தன், திமுக தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, திருவல்லிக்கேணி பகுதி அவைத் தலைவர் கா.வே. செழியன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் உமாபதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கொரோனா காலத்திலும் நிகழ்விற்கு, நிதி யுதவி...

ஹத்ராஸ் படுகொலை – சூரப்பா எதேச்சாதிகாரத்தைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்

ஹத்ராஸ் படுகொலை – சூரப்பா எதேச்சாதிகாரத்தைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்

உ.பி. ஹத்ராஸ் தலித் பெண் படுகொலை – அண்ணா பல்கலை துணை வேந்தர் எதேச்சாதிகார நடவடிக்கை – பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் இடமாற்றத்தைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட் டங்கள் நடந்தன. இந்திய ஒன்றியத்தில் தரவரிசைப் பட்டியலில் 12 வது இடத்தைப் பெற்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகமாக அண்ணா பல்கலைக் கழகம் ஒளிவீசிக் கொண்டு இருக்கும் நிலையில், இந்தப் பல்கலைக் கழகத்தை உயர்ப் புகழ் நிறுவனமாக ஆக்குவது என்ற பெயரில் மத்திய அரசிடம் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், இதனால் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69ரூ இட ஒதுக்கீடு முறைக்கு வரும் பெரும் ஆபத்தைத் தடுக்கவும் மேலும், ‘‘உயர் புகழ் நிறுவனமாக அண்ணா பல்கலைக் கழகத்தை தரம் உயர்த்த மாநில அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டிய தில்லை” என்று பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம்...

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

சேலம் மேற்கு மாவட்டக் கழக சார்பில் மேட்டூரில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் தொடக்கம்

சேலம் மேற்கு மாவட்டக் கழக சார்பில் மேட்டூரில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் தொடக்கம்

சேலம் மேற்கு மாவட்ட  திராவிடர் விடுதலைக் கழகத்தின் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் சார்பாக முதல் கலந்துரையாடல் கூட்டம் 26.01.2020 கொளத்தூர் பெரியார் படிப்பகத்தில் பகல் 12.00 மணி அளவில் திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையிலும், தலைமை செயற்குழு உறுப்பினர் காவை ஈசுவரன் முன்னிலையிலும்  நடைபெற்றது. அதற்கு முன்பாக கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குருதிக் கொடை முகாமில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தோழர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் முதல் கூட்டத்தில் வாசகர் வட்டத்தின் பொறுப்பாளராக மே.கா. கிட்டு அறிவிக்கப் பட்டார். தலைமை செயற்குழு உறுப்பினர் அ.சக்திவேல்  அறிமுக உரைக்கு பின்னர்  வாசகர் வட்டத்தில் நவம்பர்,  டிசம்பர் 2019 மாத ‘நிமிர்வோம்’ இதழில் வெளிவந்த கட்டுரைகளை பற்றிய விவாதத்தினை வாசகர் வட்ட பொறுப்பாளர் மே.கா. கிட்டு விளக்கினார். மேலும் இனி ஒவ்வொரு மாத இறுதியிலும் நிமிர்வோம் வாசகர்...

காவலாண்டியூர் ஈசுவரன் கழக ஏட்டுக்கு நன்கொடை

காவலாண்டியூர் ஈசுவரன் கழக ஏட்டுக்கு நன்கொடை

காவலாண்டியூர் கழகத் தோழர், தலைமைக் குழு உறுப்பினர் ஈசுவரன் மகன் கனிகாசெல்வன்-இலக்கியா ஜாதி மறுப்பு மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.5000/- நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 05032020 இதழ்

திருப்பூர்-கொளத்தூர்-மேட்டூரில் தமிழர் திருநாள்

திருப்பூர்-கொளத்தூர்-மேட்டூரில் தமிழர் திருநாள்

திருப்பூர் மாவட்ட திவிக சார்பில் பதினோராம் ஆண்டு தை 1 தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா நாள் 26.1.2020 ஞாயிறு காலை 8 மணிக்கு மாஸ்கோ நகர் பெரியார் திடலில் நிகர் கலைக்குழுவினர் பறை முழக்கத் துடன் ஆரம்பித்தது. தமிழர் விழா, பகுதி மக்களின் ஒத்துழைப்போடு நடைபெறும் இவ்விழாவில் முதல் நிகழ்வாக காலை 9 மணி அளவில் தோழர் புல்லட் இரவி (அமமுக) பொங்கல் வழங்கினார். அதனை தொடர்ந்து சிறுவர் சிறுமி களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை சேகர் (அதிமுக) தொடங்கி வைத்தார். கழகப் பொருளாளர் துரைசாமி தொடக்க உரையாற்றிய பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, செயலாளர் நீதிராசன், அமைப்பாளர் அகிலன், சங்கீதா, மாநகர் தலைவர் தனபால், செயலாளர் மாதவன் மற்றும் மாநகர் அமைப்பாளர் முத்து ஆகியோர் பல்வேறு விளையாட்டு போட்டிகளை திறம்பட நடத்தினர். உடன் தமிழ்நாடு மாணவர் கழக நிர்வாகிகள் தோழர் சந்தோஷ் மற்றும் பிரசாந்த் ஒருங்கிணைத்தனர் சிறுவர்...

கொளத்தூர் ‘புலியூரில்’ மாவீரர் நாள்

கொளத்தூர் ‘புலியூரில்’ மாவீரர் நாள்

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சேலம் கொளத்தூர் புலியூர் பிரிவில் உள்ள பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் 26.11.2019 அன்று மாலை 5 மணிக்கு  மாவீரர் நாள், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவீரர் நாள் பாடல் மாலை 6 மணிக்கு ஒலிக்க, மெழுகுவர்த்தி ஏந்தி தோழர்கள் நினைவு கூர்ந்தனர். சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு மாவீரர் நாள் உரையாற்றினார். புலிகள் பஞ்சர் கடை சுப்பிரமணி நன்றி கூறினார். கழகத் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என 1000 ற்கும் மேற்பட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 05122019 இதழ்

நீலச் சட்டைப் பேரணி : கழகம் தயாராகிறது

நீலச் சட்டைப் பேரணி : கழகம் தயாராகிறது

சேலம் – சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம், 16.11.2019 அன்று சேலம் இளம்பிள்ளை நகர அமைப்பாளர் தனசேகர் இல்லத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கலந்துரையாடல் கூட்டத்தில், நீலச் சட்டைப் பேரணிக்கு தோழர்கள் அதிகளவில் பங்கேற்பது, சேலத்தில் அலுவலகம் அமைப்பது, கிளைக் கழக பயிற்சி வகுப்புகள், மாணவர் பிரச்சினைக்கான துண்டறிக்கைகளை கல்லூரி முன்பு மாணவர்களிடத்தில் கொடுப்பது போன்ற கருத்துக்கள் தோழர்களால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இறுதியாக கழகத் தலைவர், தோழர்களிடத்தில் கழகச் செயல்பாடுகள் மற்றும் நீலச் சட்டைப் பேரணிக்கு அதிகளவில் பங்கேற்பதன் நோக்கம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். கலந்துரையாடலில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சேலம் மாநகரத் தலைவர், சேலம் சரவணன் (மூணாங்கரடு), கிழக்கு...

வில்வித்தையில் தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டு

வில்வித்தையில் தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டு

திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் தமிழரசி-கொளத்தூர் குமார் ஆகியோரின் மகன் இனியன், காவலாண்டியூர் கலைச்செல்வி- விஜயகுமார்  ஆகியோரின் மகன் வளவன், அக்டோபர் 5, 6 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு வில்வித்தை சங்கம் (TAAT) நடத்திய மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றனர். அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அழைத்துப் பாராட்டினார். பெரியார் முழக்கம் 07112019 இதழ்

வீதி நாடகம் கலை நிகழ்வுகளுடன் மேட்டூர் பயணக் குழு நடத்திய எழுச்சிப் பிரச்சாரம்

வீதி நாடகம் கலை நிகழ்வுகளுடன் மேட்டூர் பயணக் குழு நடத்திய எழுச்சிப் பிரச்சாரம்

17.09.2019 தந்தை பெரியார் 141ஆவது பிறந்தநாளில் மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரைப் பயணம் சமத்துவபுரத்தில் காலை 10 மணிக்கு  தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சமத்துவபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சார பயணத்தை துவக்கி வைத்தார். பயணம் சமத்துவபுரம், மல்லிகுந்தம், மேச்சேரி, நங்கவள்ளி, குஞ்சாண்டியூர், சுஊ பிளாண்ட், ராமன் நகர், புதுச் சாம்பள்ளி, மேட்டூர் சுளு, தேசாய் நகர், சேலம் கேம்ப், தங்கமாபுரி பட்டிணம், காவேரி கிராஸ், மாதையன் குட்டை, புதுக் காலனி, பெரியார் நகர், தூக்கணாம்பட்டி, காவேரி நகர், சின்ன பார்க், பாரதிநகர், குமரன் நகர், பொன்னகர், ஆஸ்பத்திரி காலனி, ஒர்க் ஷாப் கார்னர், பெரியார் பேருந்து நிலையம், மேட்டூர் நகர படிப்பகம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் கொடி யேற்று விழாவாகவும் இரு சக்கர வாகன பேரணியாகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவினை கழகப் பொறுப்பாளர்களும் தோழர் களும் சிறப்பாக நடத்தினார்கள். கொடியேற்று...

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம்

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம்

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டமானது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணியளவில் துவங்கியது. சேலம் மாநகர அமைப்பாளர் தோழர் பாலு அவர்களின் கண்டன முழக்கங்கள் எழுப்ப அதை தொடர்ந்து கழக தலைவர் அவர்கள் புதிய தேசிய கல்வி கொள்கையின் நகல் கிழித்தெரியும் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி கண்டன உரையாற்றினார். அதை தொடர்ந்து நம் தோழர்களின் கண்டன முழக்கங்களோடு புதிய தேசிய கல்வி கொள்கையின் வரைவு நகல்கள் கிழித்தெரிய பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் டேவிட் ஒருங்கிணைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 110 தோழர்கள் கலந்து கொண்டனர். 5 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 85 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோட்டை கமலா மஹால் மண்டபத்தில்...

மூத்த பெரியார் தொண்டர் தா மு அர்த்தநாரி அவர்கள் முடிவெய்தினார்

மூத்த பெரியார் தொண்டர் தா மு அர்த்தநாரி அவர்கள் முடிவெய்தினார்

மூத்த பெரியார் தொண்டர் தா மு அர்த்தநாரி அவர்கள் முடிவெய்தினார் சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த இலக்கம்பட்டியைச் சார்ந்த மூத்த பெரியார் தொண்டர் தா.மு.அர்த்தநாரி அவர்கள் இன்று 28.08.2019 காலை மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 74. தந்தை பெரியாரை முதன் முதலில் சந்தித்த 1971 முதல் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றியவர்.அவரது துணைவியார் தோழர் சந்திராவும் அப்போதே பெண்ணடிமைச் சின்னமாம் தாலியை அகற்றியவர். தன் குடும்பத்தையே பெரியாரின் கொள்கை வழியில் வழிகாட்டி நடத்தியவர். தன் குடும்பத்தில் ஜாதி மறுப்பு திருமணத்தை, இயக்கக் குடும்பத்தோடு நடத்தி முன்னுதாரணமாய் வாழ்ந்தவர். 1998-இல் இதயநோய்க்காக அறுவை சிகிச்சை செய்யும்வரை, பெரியார் இயக்க மாநாடுகள் எங்கு நடந்தாலும், டெல்லியில் நடந்த மண்டல் கமிஷன் மாநாடு உட்பட துணைவியார் மற்றும் குடும்பத்துடன் பங்கேற்பதை வழக்கமாக வைத்திருந்தவர். அவரது மகன் இலக்கம்பட்டி குமார் அவர்களும் திராவிடர் கழகத்தில் மாநில மாணவர் அணி செயலாளர் ஆக பணியாற்றியவர்.தற்போது திராவிடர் விடுதலைக் கழகத்தில்...

கல்விக் கொள்கை ஆபத்துகளை விளக்கி மாணவர்களிடம் கழகம் துண்டறிக்கை

கல்விக் கொள்கை ஆபத்துகளை விளக்கி மாணவர்களிடம் கழகம் துண்டறிக்கை

“புதிய தேசிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் மீண்டும் குலக் கல்வி” என்கிற தலைப்புடன் மத்திய பாஜக வின் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தை மாணவர்களுக்கு புரியும் வகையில், தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் சேலம் மற்றும் சென்னையில் துண்டறிக்கைகள் கல்லூரி மாணவர்களிடையே தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களால் வழங்கப்பட்டது. 29.07.2019 அன்று சென்னையில், இராணி மேரி, விவேகானந்தா ஆகிய கல்லூரிகளில் மாணவர் கழகத் தோழர்கள் அருண், பிரவீன், தமிழ்தாசன், யுவராஜ், வெங்கடேஷ் ஆகியோர் துண்டறிக்கைகளை வழங்கினர். யுவராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதி மாணவர் கழகத் தோழர்கள், ஜூலை 30, 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய மூன்று நாட்கள் கல்லூரி மாணவர்களிடையே துண்டறிக்கைகளை வழங்கினர். முதல் நாள் 30.07.2019 அன்று, மேட்டூர் அரசு கலைக் கல்லூரி முன்பும், பேருந்து நிலையம் முன்பும் வழங்கப்பட்டது. இரண்டாவது நாளான 31.07.2019, நங்கவள்ளி பேருந்து நிலையம், அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலும்...

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

நங்கவள்ளி கிருட்டிணன் இல்லத் திருமணவிழா

நங்கவள்ளி கிருட்டிணன் இல்லத் திருமணவிழா

கழக செயல்பாட்டாளரும், சேலம் மாவட்ட அமைப்பாளருமான பொ.கிருட்டிணன்-கி.லலிதா இணையரின் மகள் கி.தமிழ்ச்செல்வி-ஏ.பிரபு ஆகியோரது இணையேற்பு விழா 13.07.2019 சனி பகல் 11 மணியளவில் வனவாசி ரங்கண்ணா திருமண மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், பழ. ஜீவானந்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மேச்சேரி தமிழரசன், நங்கவள்ளி அன்பு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மணவிழாவிற்கு கழகத் தோழர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். பெரியார் முழக்கம் 01082019 இதழ்

டாக்டர் அறிவுக்கரசி நன்கொடை

டாக்டர் அறிவுக்கரசி நன்கொடை

மேட்டூர் மார்டின்-விஜயலட்சுமி மகள் அறிவுக்கரசி, ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு முடித்து விட்டு டெல்லிக்கு தேர்வெழுத செல்லும்போது ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு ரூ.2,000/- நன்கொடை அளித்தார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 18072019 இதழ்

மேட்டூரில் வட்டார மாநாடு: மாவட்டக் கழகம் முடிவு

மேட்டூரில் வட்டார மாநாடு: மாவட்டக் கழகம் முடிவு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாவட்ட கலந்துரையாடல், ஜூன் 30 அன்று மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகிக்க, காவை ஈசுவரன், தலைமைக் குழு உறுப்பினர், முன்னிலை வகித்தார். நிகழ்வில், மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாநாடு நடத்துவது எனவும், மாநாட்டை ஏற்பாடு செய்வது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டு, பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) மேட்டூரில் வட்டார மாநாடு நடத்துவது. 2) வட்டார மாநாட்டின் நோக்கங்களை விளக்கி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றியங்களில் தெருமுனை கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது. 3) மாநாட்டிற்கான பணிகளை புதிய மாணவர் கழக தோழர்கள் செய்வார்கள். – என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வில், சூரியக்குமார் சேலம் மேற்கு மாவட்ட தலைவர், டேவிட் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர், ஆர்.எஸ். சக்திவேல் தலைமைக் குழு உறுப்பினர் மற்றும் நகர, ஒன்றிய,...

மேட்டூரில் ஒரு நாள் ‘பெரியாரியல்’ பயிற்சி வகுப்பு

மேட்டூரில் ஒரு நாள் ‘பெரியாரியல்’ பயிற்சி வகுப்பு

மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் ஜூன் 8, 2019 அன்று ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. மேட்டூரில் தொடர்ந்து மாலையில் மழை பெய்து வருவதால் பொதுக் கூட்டமாக நடக்க இருந்த நிகழ்ச்சியை பயிலரங்கமாக மாற்றிட தோழர்கள் திட்ட மிட்டார்கள். பயிற்சியில் 43 மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்றனர். மே 23, 24 தேதிகளில் காவலாண்டியூர் அய்யம் புதூரில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் 15 பேரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “ஏன் தோன்றியது திராவிட இயக்கம்?”, “திராவிடமும் தமிழ்த்  தேசியமும்” என்ற இரண்டு தலைப்பு களிலும் பேராசிரியர் சுந்தரவள்ளி, ‘பெண்ணியம் ஓர் அறிமுகம்’, ‘இந்துத்துவத்தை எதிர்கொள்ளும் வழிமுறைகள்’ என்ற இரண்டு தலைப்புகளிலும் வகுப்புகள் எடுத்தனர். காலை 10 மணியளவில் தொடங்கிய வகுப்புகள், இரவு 8 மணி வரை நீடித்தது. பயிற்சியாளர்கள் ஆர்வமுடன் வகுப்புகளைக் கேட்டனர். மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம், பயிற்சிக்கான ஏற்பாடுகளை...

மும்மொழித் திட்டத்தை எதிர்த்து மேட்டூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

மும்மொழித் திட்டத்தை எதிர்த்து மேட்டூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

மத்திய பா.ஜ.க. அரசு மும் மொழித் திட்டத்தைத் திணிப்பதை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுப் பணிகளில் தொடர்ந்து வட நாட்டவரை பணியமர்த்தும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் மேட்டூர் பேருந்து நிலையத்தில் 07.06.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.கோவிந்த ராஜ் (சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்) தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திவிக தலைமை செயற்குழு உறுப்பினர் சக்தி கண்டன உரையாற்றியதைத் தொடர்ந்து, முல்லை வேந்தன் கண்டன உரை யாற்றினார். தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் வட நாட்டவர்களைத் தமிழகத்தில் பணியிலமர்த்தும் சூழ்ச்சியையும் விளக்கிப் பேசினார். இறுதியாக மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப் நன்றியுரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத் திற்கு மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ், கொளத்தூர், காவலாண்டியூர், நங்கவள்ளி போன்ற பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தோழர்கள்...

மேட்டூர் படிப்பகத்தில்  தருமபுரி  நாடாளுமன்ற உறுப்பினர்  டாக்டர் செந்தில்

மேட்டூர் படிப்பகத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செந்தில், எம்.பி., கழகத் தலைவர் கொளத்தூர் மணியை 07.06.2019 வெள்ளிக்கிழமை மாலை மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 13062019 இதழ்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கோவை விடியல் நண்பர்கள் ரூ.   4,20,000 (27.5.2019 அன்று மாலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் விடியல் நண்பர்கள் குழுவினரைச்  சந்தித்தபோது தங்கள் நிதியுடன் திரட்டிய நிதியையும் சேர்த்து ரூ. 4,20,000த்தைக் கழகத் தலைவரிடம் வழங்கினர். இவர்கள் ஏற்கனவே ரூ. 20,000 வழங்கியுள்ளனர்.) அ.மாசிலாமணி (கீழப்பாவூர்)  ரூ.         25,000 கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட சார்பில்     ரூ.   4,35,000 (ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டக் கழக கட்டமைப்பு நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி 27.05.2019 அன்று கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டு முதல் கட்டமாக ரூ.4,35,000 (நான்கு இலட்சத்து முப்பத்தி ஐயாயிரம்) ரூபாயை கழகத் தலைவரிடம் ஒப்படைத்தனர்) மேட்டூர் நாத்திகர் விழாவில்…...

கழக இளைஞர்கள் தீச்சட்டி ஏந்தி அணிவகுத்து வந்தனர் மேட்டூரில் கொட்டும் மழையில் நாத்திகர் பேரணி

கழக இளைஞர்கள் தீச்சட்டி ஏந்தி அணிவகுத்து வந்தனர் மேட்டூரில் கொட்டும் மழையில் நாத்திகர் பேரணி

மே 25, 2019 அன்று மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா மற்றும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவும் எழுச்சியுடன் நடை பெற்றது.  நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, சென்னையிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். உயர்நீதிமன்றம் வழியாக உத்தரவு பெற்று நடந்த நாத்திகர் பேரணி மேட்டூர் கேம்ப் பகுதியில் தொடங்கி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தத்தில் முடிவடைந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேரணியை மாலை 4 மணியளவில் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணி 2 மணி நேரம் நடந்தது. பேரணி வரும்போதே மழை கொட்டத் தொடங்கிவிட்டது. கொட்டும் மழையில் ஒரு மணி நேரம் தோழர்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு முழக்கங்களை எழுப்பி வந்தனர். பெண்களும் ஆண்களுமாக இளைஞர் கூட்டம். பேரணிக்காகவே தயாரிக்கப்பட்ட ‘டி சட்டைகளை’ அணிந்து முழக்கமிட்டு வந்த காட்சியை வீதியின் இருபுறங்களிலும் மக்கள் திரளாகக் கூடி நின்று பார்த்தனர்....

கொளத்தூர் அய்யம்புதூரில் கழகம் நடத்திய பயிற்சி முகாம்

கொளத்தூர் அய்யம்புதூரில் கழகம் நடத்திய பயிற்சி முகாம்

சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கொளத்தூர் ஒன்றியம் அய்யம்புதூர் கிராமத்தில் திராவிடர் விடுதலைக் கழக பெரியாரியல் பயிற்சிமுகாம், மே 23, 24 தேதிகளில் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. இதுவரை பெரியாரியல் பயிற்சி முகாமில் பங்கேற்காத புதிய இளைஞர் களுக்கான இந்த முகாமில் 20 பெண்கள் உள்பட 45 தோழர்கள் பங்கேற்றனர். காவலாண்டியூர் ஒன்றியக் கழகம் பயிற்சி முகாமை மாவட்டக் கழகம் சார்பில் முன்னின்று நடத்தியது. மே 23 அன்று மாலை 9.30 மணியளவில் முகாமை கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தொடங்கி வைத்தார். முதல் வகுப்பாக ‘பெரியார் ஒரு அறிமுகம்’ என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வகுப்பு எடுத்தார்.  மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணியளவில் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், ‘புராணம் – மூட நம்பிக்கைகள்’ என்ற தலைப்பில்  பேசினார். பிற்பகல் 4...

மே 25இல் மேட்டூரில் நாத்திகர் விழா: சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி

மே 25இல் மேட்டூரில் நாத்திகர் விழா: சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி

நாத்திகர் பேரணி தொடர்பாகத் திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்த வழக்கில், பேரணி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், சென்னை உயர்நீதிமன்றத்தில் நாத்திகர் விழாவுக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். ஏப்ரல் மாதம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சேலம் மேட்டூரில் நாத்திகர் பேரணி மற்றும் விழா நடத்தவிருப்பதாகவும், அதற்கு அனுமதி கோரி மார்ச் மாதம் கருமலைக் கூடல் காவல் நிலையத்தில் மனு அளித்ததாகவும், கருமலைக்கூடல் காவல் நிலைய ஆய்வாளர் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டுமென்று கோரித் தங்களது மனுவை நிராகரித்தார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று இது தொடர்பாக மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்திருப்பதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி சட்டத்துக்கு உட்பட்டு முடிவெடுக்க வேண்டுமென்று கூறி...

மே 25ல் மேட்டூரில் நாத்திகர் விழா !  சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவு !

மே 25ல் மேட்டூரில் நாத்திகர் விழா ! சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவு !

  நாத்திகர் பேரணி தொடர்பாகத் திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்த வழக்கில், பேரணி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார். ஏப்ரல் மாதம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சேலம் மேட்டூரில் நாத்திகர் பேரணி மற்றும் விழா நடத்தவிருப்பதாகவும், அதற்கு அனுமதி கோரி மார்ச் மாதம் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் மனு அளித்ததாகவும், கருமலைக்கூடல் காவல் நிலைய ஆய்வாளர் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டுமென்று கோரித் தங்களது மனுவை நிராகரித்தார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி சட்டத்துக்கு உட்பட்டு முடிவெடுக்க வேண்டுமென்று கூறி உத்தரவிட்டது. ஆனால், தங்களின் மனுவை இதுவரை பரிசீலிக்கவில்லை என்றும்,...

மேட்டூர் நாத்திகர் விழா தள்ளி வைப்பு

மேட்டூர் நாத்திகர் விழா தள்ளி வைப்பு

சேலம் மேட்டூரில் ஏப்ரல் 27ஆம் தேதி மூட நம்பிக்கைகளுக்கு எதிராக நாத்திகர் விழா என்ற பெயரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் சக்திவேல் மனு அளித்திருந்தார்.  தேர்தலைக் காரணம் காட்டி, மாவட்ட ஆட்சியரை அணுகக் கூறி, காவல்துறையினர் மனுவைத் திரும்ப அளித்தனர். தங்கள் மனுவைத் திரும்ப அளித்ததன் மூலம் நிகழ்ச்சியைத் தாமதப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, விழாவுக்கு அனுமதி அளிக்க மாவட்ட ஆட்சியருக்கும், கருமலைக்கூடல் காவல் நிலையத்தினருக்கும் உத்தரவிடக் கோரி சக்திவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை இரண்டு நாட்களில் பரிசீலிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். நாட்கள் கடந்தபின்னும் இன்னும் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்காமல் தாமதம் செய்வதால் நிகழ்ச்சியை ஒத்தி வைப்பதாக சக்திவேல் அறிவித்துள்ளார். விரைவில் நீதிமன்ற அனுமதி பெற்று மூடநம்பிக்கைக்கு எதிரான நாத்திகர் விழா...

நாத்திகர் விழா – அனுமதி கோரி வழக்கு

நாத்திகர் விழா – அனுமதி கோரி வழக்கு

நாத்திகர் விழா: அனுமதி கோரி வழக்கு! நாத்திகர் விழாவுக்கு அனுமதி அளிக்கக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 27ஆம் தேதியன்று சேலம் மாவட்டம் மேட்டூரில் நாத்திகர் விழா நடத்த முடிவு செய்துள்ளது திராவிடர் விடுதலைக் கழகம். இதற்கு அனுமதி அளிக்கக் கோரி, திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நாத்திகர் விழா நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி, கடந்த மாதம் 28ஆம் தேதியன்று கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் மனு அளித்ததாகவும், அங்கிருந்த காவல் துறை ஆய்வாளர் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறித் தங்களது மனுவை நிராகரித்ததாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். “கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று மாவட்டத் தேர்தல் அதிகாரியாக உள்ள மாவட்ட ஆட்சியரிடம் விழா நடத்த அனுமதி கேட்டு மனு அளித்தோம். எங்களது...

பொள்ளாச்சி பாலுறவு வன்முறை: மேட்டூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலுறவு வன்முறை: மேட்டூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மேட்டூர் அனை சதுரங்காடி பெரியார் திடலில் 16.3.2019 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைக் கண்டித்து மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்துக் கட்சி, முற்போக்கு இயக்கங்கள், மகளிர் அமைப்புகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கி. கோவிந்தராசு தலைமை தாங்கினார். ஈழவளவன் (நாம் தமிழர்), அப்துல் கபூர் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), கே. நடராஜன் (அய்.என்.டி.யு.சி.), செ. மோகன்ராஜ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), வசந்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), என்.பி. இராஜா (தி.மு.க.), மா. சிவக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்), ஏ.எஸ். வெங்கடேஸ்வரன் (மேட்டூர் காங்கிரஸ் கட்சி), அ. சக்திவேல் (திராவிடர் விடுதலைக் கழகம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  கழகத் தோழர் ம. குமரேசன், கண்டன முழக்கமிட்டு நன்றியுரையாற்றினார். கூட்டத்தில் காவை. ஈசுவரன் (கொளத்தூர் ஒன்றிய செயலாளர்), மேட்டூர் நகர செயலாளர் ஆ. சுரேசு குமார், மாவட்ட...

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மேட்டூரில் கழக மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராஜன்-மு.கீதா இணையரின் மகள் தேன்மொழி-மணிகண்டன், ஜாதி மறுப்பு மண விழா, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மேட்டூரில் நடந்தது. மணவிழா மகிழ்வாக தோழர் சி.கோவிந்தராஜன், ரூ.10,000 கழக வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளார். கடந்த வார இதழில் வெளி வந்த மணவிழா செய்தியில் பிப்.3 என்பதற்கு பதிலாக ஜனவரி 3 என்று தவறாக வெளி வந்துவிட்டது. மணமகளின் தந்தை சி. கோவிந்தராஜன் பெயரில் கி. கோவிந்தராஜன் என்றும் தவறாக வெளி வந்துள்ளது. தவறுக்கு வருந்துகிறோம். (ஆர்) பெரியார் முழக்கம் 28022019 இதழ்

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மேட்டூரில் கழக மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராஜன்-மு.கீதா இணையரின் மகள் தேன்மொழி-மணிகண்டன், ஜாதி மறுப்பு மண விழா, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மேட்டூரில் நடந்தது. மணவிழா மகிழ்வாக தோழர் சி.கோவிந்தராஜன், ரூ.10,000 கழக வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளார். கடந்த வார இதழில் வெளி வந்த மணவிழா செய்தியில் பிப்.3 என்பதற்கு பதிலாக ஜனவரி 3 என்று தவறாக வெளி வந்துவிட்டது. மணமகளின் தந்தை சி. கோவிந்தராஜன் பெயரில் கி. கோவிந்தராஜன் என்றும் தவறாக வெளி வந்துள்ளது. தவறுக்கு வருந்துகிறோம். (ஆர்) பெரியார் முழக்கம் 28022019 இதழ்