புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம்

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டமானது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணியளவில் துவங்கியது. சேலம் மாநகர அமைப்பாளர் தோழர் பாலு அவர்களின் கண்டன முழக்கங்கள் எழுப்ப அதை தொடர்ந்து கழக தலைவர் அவர்கள் புதிய தேசிய கல்வி கொள்கையின் நகல் கிழித்தெரியும் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி கண்டன உரையாற்றினார். அதை தொடர்ந்து நம் தோழர்களின் கண்டன முழக்கங்களோடு புதிய தேசிய கல்வி கொள்கையின் வரைவு நகல்கள் கிழித்தெரிய பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் டேவிட் ஒருங்கிணைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 110 தோழர்கள் கலந்து கொண்டனர். 5 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 85 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோட்டை கமலா மஹால் மண்டபத்தில் தங்க வைக்கபட்டு, மாலை 7 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்த உடன் நமது ஆதரவாளர் தோழர் கவுதம் தோழர்களுக்கு தேனீர் மற்றும் பிஸ்கட் ஏற்பாடு செய்திருந்தார், பின் தலைவரை சந்தித்து வாழ்த்து கூறி சென்றார். நமது போராட்ட செய்தி அறிந்த தமுமுக தோழர்கள் தோழர் இப்ராஹிம் தலைமையில் மண்டபத்திற்கு வந்து நமது தோழர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து இதுபோன்ற போராட்டங்களின் தமுமுகவையும் இணைத்து கொள்ளுமாறு கோரிக்கை வைத்துவிட்டு சென்றார்கள். மாலை தமிழ்தேச மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் மாரியப்பன் தலைமையில் தோழர் வின்செண்ட் தோழர் காமராஜ் உட்பட தோழர்கள் வந்து போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாலை விடுவிக்கப்பட்ட பின் தமுமுக வழக்கறிஞர்கள் மற்றும் மஜக நிர்வாகிகள் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். மண்டலத்தில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் கோவிந்தராசு அவர்களின் பெரியாரியல் பாடலுடன் கருத்தரங்கம் துவங்கியது. அதை தொடர்ந்து கல்வியில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட எவ்வாறு முன்னோக்கி உள்ளது என்பதையும் இந்த புதிய தேசிய கல்வி கொள்கை அமுல் படுத்தப்பட்டால் தமிழக மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பதை குறித்து கழக தலைவர் விரிவாக உரை நிகழ்த்தினார். மேட்டூர் தோழர் முத்துகுமார், ஆத்தூர் கணபதி, ஆத்தூர் மகேந்திரன் நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன் தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர் சந்தோஸ் ஆகியோர் இயக்க பாடல்களை பாடினர் மற்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் கருப்பூர் சக்திவேல், கிழக்கு மாவட்ட பொருளாளர் ஏற்காடு பெருமாள், சேலம் மாநகர தலைவர் பரமேஸ்குமார், மாநகர செயலாளர் பிரபு, சேலம் சரவணன் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார், மேற்கு மாவட்ட பொருளாளர் சம்பத், மேட்டூர் நகர செயலாளர் சுரேஸ்குமார், பொருளாளர் கதிரேசன், காவலாண்டியூர் பொறுப்பாளர் மாரி, மேட்டூர் ஆர்.ஏஸ் நகர பொறுப்பாளர் விவேக் மேற்கு மாவட்ட அமைப்பாளர்கள் அண்ணாதுரை, நங்கவள்ளி கிருஸ்ணன், நங்கவள்ளி நகர தலைவர் ராஜேந்திரன், செயலாளர் கண்ணன், வனவாசி நகர செயலாளர் உமாசங்கர், நகர தலைவர் செந்தில், நங்கவள்ளி இந்திராணி, நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் முத்துபாண்டி, இராசிபுரம் நகர பொறுப்பாளர் பிடல்சேகுவரா, சிந்தாமணியூர் ஒன்றிய பொறுப்பாளர் பிராகாஸ், இளம்பிள்ளை நகர செயலாளர் தங்கதுரை, செய்தி தொடர்பாளர் மோகன்ராஜ், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சவுந்தர், தர்மபுரி மாவட்ட செயலாளர் பரமசிவம், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் நாகராஜ், மாணவர் கழக பொறுப்பாளர்கள் பிரதாப், சந்தோஸ், ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர் மற்றும் சேலம் மாநகரம், இளம்பிள்ளை, ஏற்காடு, ஆத்தூர், நங்கவள்ளி, மேட்டூர், கொளத்தூர், காவலாண்டியூர், ஆர்.எஸ், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், வாழப்பாடி, மேச்சேரி ஆகிய பகுதிகளிலிருந்து தோழர்கள் கலந்து கொண்டனர்.

You may also like...