ட 170 கி.மீ மேல் பயணம் ட 45 க்கு மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா ட பெண் தோழர்கள் திரளாக பங்கேற்பு மேட்டூர் பகுதியைக் குலுக்கிய வாகனப் பேரணி

தந்தை பெரியார்  144ஆவது பிறந்த நாள் விழா சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 17.09.2022 சனி காலை 10.00 மணிக்கு சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராஜ் தலைமையில் தொடங்கியது.

மேட்டூர் அருகே உள்ள கோனூர் சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு பெண் தோழர்கள் மாலை அணிவிக்க கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து தேன்மொழி உறுதிமொழி கூற அனைத்து தோழர்களும்  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாலை அணிவிப்பு நிகழ்வில் திராவிட முன்னேற்ற கழக நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் அர்த்தனாரீஸ்வன் (எ) சின்னு, பி.என்.பட்டி பேரூராட்சி முன்னாள் சேர்மேன் பொன்னுசாமி மற்றும் தி.மு.க.வைச் சார்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.

மாலை அணிவிக்கும் நிகழ்வில் சுசீந்திரன் – கிளாரா மேரியின் பெண் குழந்தைக்கு ஆதினி என்ற பெயர் சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பேரணி மல்லிகுந்தம் பகுதிக்கு புறப்பட்டது.  மல்லிகுந்தம் பகுதியில் உள்ள கழகக் கொடியினை சந்திரா சம்புசாமி, பேருந்து நிலையத்தில் அன்பழகன் கழகக் கொடியினை ஏற்றி சிறப்பித்தனர். தோழர்களுக்கு கேக் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கழகக் கொடியேற்றிய இடங்களும் ஏற்றிய தோழர்களும் மேச்சேரி பகுதி சூரி, பனங்காடு பகுதியில் நங்கவள்ளி அறிவழகன், வனவாசி சந்தை பேட்டை பகுதியில் கதிர்வேல், நங்கவள்ளி பேருந்து நிலையம் – ஐஸ்வர்யா, வீரக்கல் – இந்திரா, சுஊ பிளாண்ட் – சந்திர மூர்த்தி, ஆர்.எஸ்.  பகுதி – முரளிதரன், சூளுமு நகர் – பிரபாகரன், தேங்கல் வாரை – பிரசாந்த், சுளு படிப்பகம் – விவேக், தங்கமாபுரிபட்டினம் – சுகந்தன், சேலம் கேம்ப் – சந்தோஸ் குமார், காவேரி கிராஸ் -சுந்தரம், மாதையன் குட்டை – மேட்டூர் நகர தலைவர் மார்ட்டின், புதுக் காலணி அம்ஜத்கான், தூக்கணாம்பட்டி – திவாகர், காவேரி நகர் – கிட்டு, மசூதி தெரு – சுதா, நேரு நகர் – இராமச்சந்திரன், மேட்டூர் பேருந்து நிலையம் – மார்ட்டின், மேட்டூர் நகர படிப்பகம் – நகர பொருளாளர் முத்துக்குமார், ஏஞமு நகர் – பொன்னகர் சக்தி, பாரதி நகர் – கோகுல், பொன்னகர் – காயத்ரி, குமரன் நகர் – மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் திவாகர், மணி மெடிக்கல் -அண்ணாதுரை, ஒர்க் ஷாப் கார்னர்-காவை ஈஸ்வரன், கொளத்தூர் படிப்பகம் – குமார், தார்க்காடு – தர்மலிங்கம், கத்திரிப்பட்டி – பழனியப்பன், மூலக் கடை – மூங்கத்தூர் இராஜேந்திரன், காந்திநகர் – செண்பகம், செட்டியூர் – மாரி அண்ணன், செ.செ.காட்டுவளவு – அபிமன்யு, காவலாண்டியூர் – விஜி, கொளத்தூர் நகரத்தில் திருவள்ளுவர் நகர் கோவிந்தராஜ், காவல் நிலையம் அருகில் வால்குறிச்சி குமார், கொளத்தூர் பேருந்து நிலையம் கு. சூரியகுமார் நீதிபுரம் வெங்கடேஷ், உக்கம்பருத்திக்காடு மோகன் ஆகியோர் கொடியேற்றினர்.

கோவிந்தப்பாடியில் தோழர் சென்னியப்பன் பெரியார் பதாகை வைத்து அதற்கு மாலை அணிவித்தார். பின்னர் தோழர்களுக்கு தேனீர் வழங்கினார்.

கண்ணாமூச்சி பகுதியில் தந்தை பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் கேக் வெட்டப்பட்டு இனிப்புகளும், குளிர்பானங்களும் வழங்கப்பட்டது. மதிய உணவு நங்கவள்ளி பகுதி தோழர்களால் மாட்டுக்கறி பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து தோழர்களுக்கும் வழங்கப்பட்டது.

இரவு 8.00 மணிக்கு கொடியேற்று விழா மற்றும் இரு சக்கர வாகனப் பேரணி காவலாண்டியூர் படிப்பகத்தில் நிறைவடைந்தது. இரவு உணவு காவலாண்டியூர் பகுதியில் அசைவ உணவாக ஏற்பாடு செய்யப்பட்டது.

காவலாண்டியூரில் தோழர்கள் சாப்பிட ஊர் மாரியம்மன் கோயில் கமிட்டியார் கோவில் அன்னதானத்திற்கு வைத்திருந்த பாக்குமட்டை தட்டு 150ஐ உடனடியாக கொடுத்து சாப்பிட உதவினர்.

தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் மேட்டூர் சுளு, மேட்டூர் நகரம், கொளத்தூர், காவலாண்டியூர், உக்கம்பருத்திக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள படிப்பகங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

மேட்டூர் சுளு, மேட்டூர் நகர பகுதிகளில் சுவரெழுத்துப் பணிகளை குமரப்பா உடன் இணைந்து முத்துராஜ், சுளு நாகராஜ், சிறுத்தை பாலா மற்றும் ஓவியர் செந்தில் ஆகியோரால் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. சேலம் மேற்கு மாவட்டம் முழுவதும் 600 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, 2000 துண்டறிக்கைகள் பொது மக்களிடையே விநியோகிக்கப்பட்டது. தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஒத்துழைப்புடன் தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாள் விழா சேலம் மேற்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடந்து முடிந்தது.

கோட்டை மைதானம் பெரியார் கோட்டையானது

சேலம் மாநகர் முழுவதுமே, பறை இசை, முழக்கங்கள் என கோட்டை மைதானமே பெரியாரின் கோட்டையாக மாறியது. நிகழ்விற்கு வந்த தோழர்களின் வாகனத்தில் பெரியார் 144  (ளுவiஉமநச) ஒட்டப்பட்டது. பறை இசையுடன் நடைப் பேரணியை  மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம்  துவக்கி  வைத்தார்.  பெரியாரின் முகமூடி அணிந்து பேரணி கோட்டை மைதானத்தில் இருந்து அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக பெரியார் சிலையை வந்தடைந்தது. பேரணியில் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

பெரியார்  சிலை அருகே  கூடியிருந்த மற்ற இயக்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினருக்கு சனாதன எதிர்ப்பு  துண்டறிக்கை கொடுக்கப்பட்டது. மாவட்ட தலைவர் சக்திவேல்  தலைமையில்  பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. பெரியார் சிலையின் அருகே அமைக்கப்பட்ட புதிய கொடிக்கம்பத்தில் மாவட்டச் செயலாளர் டேவிட் கொடியேற்றினார்.  சிலை அருகே  அமைக்கப்பட்ட பெரியார் கருத்தியல் பலகையை  மாவட்ட துணைத் தலைவர் ஏற்காடு பெருமாள் திறந்து வைத்தார். 17.09.2022 அன்று தொடங்கப்பட்ட  நமது கழகத்தின்  இணையதள வானொலியின்  பெயர் மற்றும் சின்னத்தை  நமது கழகத் தலைவரிடம் வாட்ஸ்அப் வழியாக பெற்ற வாழ்த்துரையுடன் முன்னாள் பதிவாளர் இளங்கோ வெளியிட்டார்.

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் முதலிடம் வென்ற முத்துக்குமாரிக்கு தீபா மற்றும் ஆனந்தி இணைந்து பெரியார் புத்தகங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணி வரை காலை நிகழ்வுகள் நடைபெற்றது. பெரியார் சிலையிலிருந்து சேலம் மாநகரம் ஏற்காடு இளம்பிள்ளை மற்றும் சிந்தாமணியூர் தோழர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட வாகனப்  பேரணியை  மாநகர அமைப்பாளர் பாலு  கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாகன பேரணி நகரின் முக்கிய பகுதியில் பயணித்து பொது மக்களிடம் துண்டறிக்கை வழங்கி பெரியாரின் கருத்துகளை கொண்டு சேர்க்கப்பட்டது.

வாகனப் பேரணியை தொடர்ந்து பிரபாத் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட பெரியாரின் திருவுருவப் படத்திற்கு குமார்  மாலை அணிவித்தார். எப்போதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திருச்சி மற்றும் கோவை பிரிவு சாலையில் பெரியார் பிறந்தநாள் உறுதிமொழியை ஆனந்தி வாசிக்க தோழர்கள் அனைவரும் உறுதி எடுத்துக் கொண்டோம். வெங்கட்  அருணாச்சலம் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். விழாவில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

தாதகாப்பட்டி உழவர் சந்தை  அருகே  அமைக்கப்பட்ட பெண் உரிமை எனும் பெரியாரின் கருத்தியல் பலகையை  வெற்றிமுருகன் திறந்து வைத்தார். செல்வமணி பில்லு கடை பேருந்து நிறுத்தம் அருகே அமைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார்.  ராஜசேகர்  கருங்கல்பட்டி மார்க்கெட் பகுதியில் அமைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். மூனாங்கரடு பகுதியில் புதிதாக அமைக்கப் பட்ட கொடிக்கம்பத்தில் மாநகர தலைவர் சரவணன் கொடியேற்றினார். மெய்யழகன் மூனாங்கரடு பகுதியில் அமைக்கப்பட்ட அய்யாவின் படத்திற்கு மாலை அணிவித்தார்.

சரவணன் மூனாங்கரடு பகுதி-2இல் அமைக்கப்பட்ட அய்யாவின் படத்திற்கு மாலை அணிவித்து முழக்கமிட்டோம்.

அம்பிகாபதி, சிவசக்தி நகர் பகுதியில் அமைக்கப்பட்ட அய்யாவின் படத்திற்கு மாலை அணிவித்து முழக்கமிட்டு தோழர்களுக்கு தேனீர் விருந்து அளித்தார். கதிரேசன் உத்திரப்பன் நகர் பகுதியில் அமைக்கப்பட்ட அய்யாவின் படத்திற்கு மாலை அணிவித்தார். ஆசைத்தம்பி அன்னதானபட்டியில் உள்ள அம்பேத்கர் மண்டபத்தில்  அமைக்கப்பட்ட அய்யாவின் படத்திற்கு மாலை அணிவித்தார். தேவராஜ் நெத்திமேடு  பகுதியில் அமைக்கப்பட்ட அய்யாவின் படத்திற்கு மாலை அணிவித்தார்.

செந்தில்குமார் தமிழ் ஈழ மக்களுக்காக தன்னுயிர் தந்த தியாகச் சுடர் விஜயராசு படத்தை திறந்து  வீரவணக்கம் செலுத்தினார்.

ஒருதலைபட்சமாக செயல்பட்ட காவல்துறையின்  எதிர்ப்பை மீறி ஜங்ஷன் தபால் நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட நமது கழகத்தின் கொடிக்கம்பத்தில் மாநகர அமைப்பாளர் பாலு கொடியேற்றினார். காவல்துறையின் எதிர்ப்பை சரியாக கையாண்டு தோழர்கள் அனைவரும் ஜங்சன் பகுதியில் அமைக்கப்பட்ட அய்யாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து  விண்ணதிர முழக்கமிட்டோம்.

காவல்துறையின் மிரட்டலுக்கு அஞ்சாமல் நகரத்தின் நிகழ்வுகளை முடித்து அதே வேகத்தில் வாகனப் பேரணியாக சிந்தாமணியூர் நோக்கி பயணித்தோம்.

சிந்தாமணியூர் : சிந்தாமணியூர் பகுதியில் பகுதி செயலாளர்  முருகேசன் நமது கழக கொடி ஏற்றினார்.  பாரப்பட்டி பகுதியில் பகுதி பொருளாளர் பிரகாஷ் கொடியேற்றி சிறப்பித்தார். அதைத் தொடர்ந்து பெரியசாமி ஐயாவின்  உருவப்படத்திற்கு மாலை அணிவித்து முழக்கமிட்டோம். பகுதி தலைவர் ரவி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

தாரமங்கலம் : குடந்தை பாலன் தாரமங்கலம் பேருந்து நிலையம் மற்றும் அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்ட அய்யாவின் படத்திற்கு மாலை அணிவித்து முழக்கமிட்டோம். அதிக வெயிலின் தாக்கத்திலிருந்து தோழர்களை காக்க தனசேகரன் இல்லத்தில் அனைவருக்கும் எலுமிச்சை சாறு வழங்கினார்.

பவளத்தானூர் : தோழர்களுக்கு மதிய உணவாக மாட்டுக்கறி பிரியாணி வழங்கப் பட்டது. இன்னும் அதிக வேகத்துடன் வாகன பேரணி தொடங்கி பவளத்தானூரில் சரவணன் அய்யாவின் படத்திற்கு மாலை அணிவித்து முழக்கமிட்டோம்.

கே.ஆர். தோப்பூர் : திமுகவைச் சார்ந்த தோழர்கள் பேரணியை வரவேற்றது மட்டுமின்றி இனிப்பும் வழங்கினர். அதைத் தொடர்ந்து கண்ணன் அய்யாவின் படத்திற்கு மாலை அணிவித்து முழக்கமிட்டோம். வாகனப் பேரணி தொடர்ந்து இளம்பிள்ளை சென்றடைந்தோம்.

இளம்பிள்ளை : இளம்பிள்ளை – தங்கதுரை, கறிக்கடை பேருந்து நிறுத்தம் – மணிகண்டன், கோனேரிப்பட்டி – தனசேகர், முருங்கபட்டி – குப்புசாமி, பெத்தாம்பட்டி –  பார்த்திபன், நல்லகவுண்டனூர் – கணபதி ஆகியோர் கழக கொடி ஏற்றி சிறப்பித்தனர். கிட்டத்தட்ட 7 மணி நேரம் நடந்த வாகனப் பேரணி இறுதியாக முடிந்தது. வாகனப் பேரணி முடியும் போது 2000 துண்டறிக்கையும் மக்களிடம் சென்றடைந்தது.

பயணித்து களைத்துப் போன தோழர்களுக்கு கோகுல கண்ணன் இல்லத்தில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. நன்றியுரை தங்கதுரை வழங்க பெரியார் பிறந்த நாள் நிகழ்வுகள் நிறைவுற்றது. அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்ட அய்யாவின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

ஆத்தூர் : உழவர் சந்தை எதிரே உள்ள பெரியார் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டோம் அதைத் தொடர்ந்து அருகே இருக்கும் கழக கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றி பெரியார் பிறந்தநாள் உறுதிமொழியை ஏற்றோம். நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்கள் மாணவர்களென இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தோம். மாவட்டம் முழுவதும் 500 சுவரொட்டிகள் சுவர் சித்திரங்களாக மாற்றப்பட்டான.

நம்முடைய நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவாக துரளவ சூடிற ளுயடநஅ முகநூல் பக்கத்தில் 2200 பார்வையாளர்கள் மற்றும் இண்ஸ்டாகிரமில் 5000 பார்வையாளர்களை கடந்து மக்களை சென்றடைந்தது வருகிறது. தோழர்கள்  குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 22092022 இதழ்

You may also like...