ஹத்ராஸ் படுகொலை – சூரப்பா எதேச்சாதிகாரத்தைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்

உ.பி. ஹத்ராஸ் தலித் பெண் படுகொலை – அண்ணா பல்கலை துணை வேந்தர் எதேச்சாதிகார நடவடிக்கை – பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் இடமாற்றத்தைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட் டங்கள் நடந்தன.

இந்திய ஒன்றியத்தில் தரவரிசைப் பட்டியலில் 12 வது இடத்தைப் பெற்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகமாக அண்ணா பல்கலைக் கழகம் ஒளிவீசிக் கொண்டு இருக்கும் நிலையில், இந்தப் பல்கலைக் கழகத்தை உயர்ப் புகழ் நிறுவனமாக ஆக்குவது என்ற பெயரில் மத்திய அரசிடம் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், இதனால் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69ரூ இட ஒதுக்கீடு முறைக்கு வரும் பெரும் ஆபத்தைத் தடுக்கவும் மேலும், ‘‘உயர் புகழ் நிறுவனமாக அண்ணா பல்கலைக் கழகத்தை தரம் உயர்த்த மாநில அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டிய தில்லை” என்று பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதைக் கண்டித்து அவரை பதவி விலக வலியுறுத்தியும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி மற்றும் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி : 16.10.2020 அன்று மாலை 4:30 மணியளவில் பொள்ளாச்சி யில் சபரி தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் தில் தமிழ்நாடு மாணவர் மன்றம், ஃபெட்டர்நிட்டி இயக்கம் ஆகிய அமைப்புகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

திருப்பூர் : 18.10.2020 அன்று காலை 11 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அருகில் திருப்பூர் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.

ஜெய்லானி-பிரெட்டர்னிட்டி இயக்கம், சபரிகிரி – தமிழ்நாடு மாணவர் கழகம், பொள்ளாச்சி. சம்சீர் அகமது – இந்திய மாணவர் சங்கம், பிரசாந்த் – தமிழ்நாடு மாணவர் கழகம், தமிழமுதன் – புரட்சிகர இளைஞர் முன்னணி, முகில்ராசு – மாவட்டத் தலைவர், திவிக, வெள்ளியங்கிரி, கோவை மாவட்டச் செயலாளர், திவிக, துரைசாமி- கழகப் பொருளாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக கனல்மதி தமிழ்நாடு மாணவர் கழகம் நன்றி கூறினார்.

மதுரை :  உத்திரப்பிரதேசம் மனிசா வால்மீகி படுகொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல் படும் யோகி ஆதித்யநாத் ஆட்சியைக் கண்டித்தும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டங்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் நடைபெற்றது. மதுரை திருவள்ளுவர் சிலை அருகில் 02.10.2020 அன்று காலை 10 மணியளவில், மதுரை மாவட்ட செயலாளர் மணிஅமுதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தமிழ் தேச மக்கள் முன்னணி, தமிழ்ப் புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள் இளைஞர் பாசறை, மஜ்லீஸ் கட்சி, புரட்சிகர மாணவர் முண்ணனி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

வேலூர் :  வேலூர் குடியாத்தத்தில் 04.10.2020 அன்று மாலை 5 மணியளவில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத் திற்கு அருகில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை முன்பு, வேலூர் மாவட்ட செயலாளர் இரா.பா.சிவா தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய குடியரசு கட்சிசார்பாக மாவட்ட தலைவர் தோழர் தலித் குமார்  அவர்களும், விசிக சார்பாக மாவட்ட பொறுப்பாளர் தோழர் செ.விவேக் அவர்களும் பங்கேற்று கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திவிக மற்றும் இந்திய குடியரசு கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தின் நிறைவாக புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து  வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

நங்கவள்ளி : சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் 05.10.2020 அன்று மாலை 4:30 மணியளவில் சமூக நீதி கூட்டியக்கம் சார்பில் திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்தில், வால்மீகி படுகொலை சம்பவத்தை கழகத் தோழர்கள் வீதி நாடகம் மூலம் மக்களுக்கு தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.

இராசிபுரம் : 06.10.2020 அன்று மாலை 5 மணியளவில் இராசிபுரம் பேருந்து நிலையத்தில், இராசிபுரம் நகர செயலாளர் பிடல் சேகுவேரா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில், திமுக, காங்கிரஸ், சி.பி.அய்,  திராவிடர் கழகம், விசிக, ஆதித் தமிழர் பேரவை, தமிழ்நாடு முற்போக்கு பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம், தமிழ்ப்புலிகள் கட்சி,  தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஏற்காடு :  07.10.2020 அன்று காலை 11 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைக்குழு உறுப்பினர் ஆர்.எஸ் சக்தி தலைமை வகித்தார். 08.10.2020 அன்று காலை 11 மணியளவில் ஏற்காடு பேருந்து நிறுத்தம் அருகில் ஏற்காடு பெருமாள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்கள் பாலியல் படுகொலையைக் கண்டித் தும், பாஜக கொலையாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்தும் பதாகைகள் எழுதப்பட்டு கையில் பிடித்திருந்தனர்.

மேட்டூர் :  கடலூர் மாவட்டத்தில் பெரியார் அவர்களின் 142வது பிறந்த நாள் அன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூன்று காவலர்களை கடலூர் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட் டத்திற்கு பணியிட மாற்றம் செய்த காவல் அதிகாரியைக் கண்டித் தும், பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைகளை இரும்புக் கூண்டுக்குள் அடைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் 12.10.2020 அன்று  மாலை 5.00 மணிக்கு மேட்டூர் சின்ன பார்க் காமராசர் சிலை எதிரில் சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடைபெற்றது.  கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் சூரிய குமார் தலைமை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட அமைப் பாளர் டைகர் பாலன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் அ.சக்திவேல், திராவிடர் பண்பாட்டு நடுவத்தின் அமைப்பாளர் முல்லைவேந்தன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.  பொதுமக்களுக்கு ஆர்ப்பாட்டத்தை விளக்கி துண்டறிக்கை வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு நங்கவள்ளி, மேட்டூர் ஆர்.எஸ், கொளத்தூர், காவலாண்டியூர், காவேரி கிராஸ் பகுதியைச் சார்ந்த பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் 6.30 மணியளவில் நகர பொருளாளர் காளியப்பன் நன்றியுரை கூற நிறைவுற்றது

செங்கல்பட்டு : செங்கல்பட்டில் 08.10.2020 மாலை 3 மணியளவில் நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை, வேளாண் சட்ட மசோதா போன்ற பாஜக வின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து, பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் தினேசு குமார், தென் சென்னை மாவட்ட செய லாளர் இரா உமாபதி, தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சென்னை கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர். மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்து இரவு 7:30 மணிக்கு மேல் விடுவித்தது.

கொளத்தூர் : கொளத்தூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்  15.10.2020 அன்று மாலை 5 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையத்தில், உத்திரப் பிரதேசம் மனிஷா, பாலியல் படுகொலையை கண்டித்தும்,  வேளாண் மசோதா சட்டத் திருத்தத்தை கண்டித்தும், பெரியார் சிலைகளுக்கு கம்பி வலைகள் அமைப்பதை கண்டித்தும்,  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் மூவரை பணியிட மாற்றம் செய்யப் பட்டதை கண்டித்தும், அந்த உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் டைகர் பாலன் தலைமை வகித்தார். தோழர்கள் சி. கோவிந்தராசு மேற்கு மாவட்ட செயலாளர், பரத், அ. சக்திவேல் கழக செயற்குழு உறுப்பினர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  மத்திய மாநில அரசுகளை கண்டித்து, நமது கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது. இறுதியாக கொளத்தூர் நகரச் செயலாளர் தோழர் ராமமூர்த்தி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர், காவலாண்டியூர், உக்கம்பருத்திக்காடு, மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ். பகுதிகளிலிருந்து தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 22102020 இதழ்

You may also like...