அர்த்தனாரி வாத்தியார் நூற்றாண்டு விழா மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா

மறைந்த சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் அர்த்தனாரி வாத்தியார் நூற்றாண்டு விழா, மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் 39ஆம் ஆண்டு நினைவுதின பொதுக்கூட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 05.01.2022 புதன் காலை 10.00 மணியளவில், நங்கவள்ளி ஒன்றியம் பெரியசோரகையில் நடைபெற்றது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அடிக்கல் நாட்டும் நிகழ்சியில் பங்கேற்று நினைவு தின பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். முன்னதாக, புதுகை பூபாலம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா,திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் கே சுப்பாராயன் அவர்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள். நிகழ்ச்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டம் ஒருங்கிணைத்திருந்தது.

பெரியார் முழக்கம் 13012022 இதழ்

You may also like...