சேலம் மாவட்டம் சார்பாக 2023 ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தாக்கள் சேர்ப்பதாகத் தீர்மானம்

சேலம் மாவட்டக் கழகங்களின் சார்பாக 1.11.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் 2023 ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தாக்களை சேர்க்க வேண்டும் என்று கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் மேற்கு மாவட்டம் : 01.11.2022 செவ்வாய் மாலை 6.00 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மேட்டூர் நகர படிப்பகத்தில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1 )          2023ஆம் ஆண்டு பெரியார் முழக்க சந்தாக்களாக 2023 சந்தாக்களை சேலம் மாவட் டத்தின் சார்பாக   (கிழக்கு – மேற்கு) தலைமைக் கழகத்திற்கு டிசம்பர் 15ஆம் தேதி அன்று வழங்குவதென முடிவு செய்யப் பட்டது

2)           அய்ந்தாண்டு சந்தாவாக சேலம் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக 100 சந்தாக்களுக்கான தொகையினை நவம்பர் 26 அன்று ஜாதி ஒழிப்பு நாளில் தலைமைக்கு ஒப்படைப்ப தெனவும் தீர்மானிக்கப் பட்டது.

3)           நவம்பர் – 26 ஜாதி ஒழிப்பு நாளில் சேலம் மாவட்ட நகர, ஒன்றிய, கிளைக் கழக பகுதி களில் ஜாதி ஒழிப்பு நாள் குறித்த விளக்கத் துண்டறிக்கைகள் பொது மக்களிடம் விநியோகிக் கப்படும் எனவும் தீர்மானிக்கப் பட்டது.

கலந்துரையாடல் கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் காவை ஈஸ்வரன், அ.சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நங்கவள்ளி, மேட்டூர் சுளு, மேட்டூர் நகரம், கொளத்தூர், காவலாண்டியூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்களும், தோழர் களும் கலந்து கொண்டனர். நிறைவாக நகர செயலாளர் சு.குமரப்பா நன்றியுரை கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவடைந்தது.

மேட்டூர் நகரம் : 04.11.2022 வெள்ளி மாலை 6.00 மணியளவில் மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம்  மேட்டூர் நகர படிப்பகத்தில் நகர செயலாளர்  சு.குமரப்பா தலைமையில் நடை பெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1)            மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 2023ஆம் ஆண்டு ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தாவாக 1000  அளிப்பதென தீர்மானிக் கப்பட்டது.

2)            ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’

5 ஆண்டு சந்தாவாக மேட்டூர் நகரக் கழகத்தின் சார்பாக

25 சந்தா அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

3)           நவம்பர் – 26 சட்ட எரிப்பு நாளில் மேட்டூர் நகரப் பகுதி களில் தெருமுனைக் கூட்டங் கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்துவ தெனவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் நகரப் பொறுப் பாளர்களும், தோழர்களும், மாவட்டப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். நிறைவாக நகரத் தலைவர்  செ.மார்ட்டின் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவடைந்தது.

சேலம் கிழக்கு மாவட்டம் : 06.11.2022 ஞாயிறு காலை 11.00 மணி யளவில் சேலம் கருப்பூர் சக்திவேல் இல்லத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் கிழக்கு மாவட்டத் தலைவர்  கருப்பூர் சக்திவேல்  தலைமையில் கடவுள் மறுப்பு கூற தொடங்கி நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

1)            2023ஆம் ஆண்டு புரட்சி பெரியார் முழக்க ஆண்டு சந்தாவாக 500 சந்தாக்களும், அய்ந்தாண்டு சந்தாவாக 40 சந்தாக்களும், தலைமைக்கு டிசம்பர் 15ஆம் தேதி ஒப்படைப் பதென தீர்மானிக்கப்பட்டது.

2)           சேலம் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக மண்டல மாநாட்டினை வருகின்ற டிசம்பர் மாதம் நடத்துவதென தீர்மானிக்கப் பட்டது.

3)            நவம்பர் – 26 சட்ட எரிப்பு நாளில் சேலம் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதி களில் சட்ட எரிப்பு நாளை விளக்கி துண்டறிக்கை விநியோ கிப்பதென தீர்மானிக்கப் பட்டது.

மேலும் ஏற்காடு பகுதியின் சார்பாக மண்டல மாநாட்டிற்கு ரூ 50,000/-ம் மற்றும் கழகத் தலைவர் பிரச்சார வாகனம் வாங்குவதற்கு  ரூ 50,000/- வழங்குவதாக  ஏற்காடு பெருமாள் கலந்துரையாடல் கூட்டத்தில் அறிவித்தார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செய லாளர்  இரா.டேவிட், மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்த ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்  சக்திவேல் மற்றும் மாநகர, ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள்  கலந்து கொண்டனர்.

நிறைவாக சேலம் மாநகரத் தலைவர்  சரவணன் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவடைந்தது.

கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் கருப்பூர் சக்தி வேல் இல்லத்தில் மதிய உணவாக மாட்டுக்கறி உணவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

பெரியார் முழக்கம் 10112022 இதழ்

You may also like...