நங்கவள்ளிப் பகுதியிலில் கழகத்தில் இணைந்த 30 தோழர்களுக்கு பயிற்சி வகுப்பு
நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 07.10.2022 வெள்ளி அன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நங்கவள்ளி சமுதாயக் கூடத்தில் புதிய தோழர்களுக்கான ‘பெரியாரியல் ஓர் அறிமுகம்’ எனும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இவ்வகுப்பிற்கு நகரச் செய லாளர் பிரபாகரன் அனைவரை யும் வரவேற்று புதிய தோழர் களின் அறிமுகத்தோடு துவக்கி வைத்தார். காலை முதல் அமர்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘தமிழகம் பெரியாருக்கு முன் பின்’ எனும் தலைப்பிலும், மதியம் இரண்டாம் அமர்வில் கழக பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் ‘திராவிடர் விடுதலைக் கழகத் தின் செயல்பாடுகள்’ குறித்தும், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ‘கழகத்தின் களப் பணிகள்’ குறித்தும் உரையாற்றினர்.
காலையிலும் மதிய உணவு இடை வேளைக்குப் பின்பும் வகுப்புகள் துவங்குவதற்கு முன் கழக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராசு, மேட்டூர் நகர கழக பொருளாளர் முத்துக்குமார், சங்ககிரி சாரள் மிரியம் ஆகியோர் பகுத்தறிவு பாடல்களைப் பாடினர்.
புதிய தோழர்கள் 30 பேர் உட்பட 50 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். வகுப்பில் கலந்து கொண் டவர்களுக்கு குறிப்பு நோட்டுகளை கே.ஆர். தோப்பூர் கண்ணன், கழக வெளியீட்டு புத்தகங்களை மேட்டூர் நகர கழகத் தலைவர் மார்ட்டின் வழங்கினர்.
புதிய தோழர்களின் அறிமுகத் திற்கான வகுப்பினை நங்கவள்ளி கிளைக் கழகத் தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இவ்வறிமுக வகுப்பு சிறப்பாக நடைபெற தோழர்கள் நங்கவள்ளி கிருஷ்ணன், பிரபாகரன், கண்ணன், சந்திரசேகர், ஹரிகரன் மற்றும் கிளைக் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
பெரியார் முழக்கம் 13102022 இதழ்