Category: குடி அரசு 1938

அருஞ்சொல் பொருள்

அருஞ்சொல் பொருள்

  அகவிலை – தவச விலை அக்காரவடிசில் – சருக்கரைப் பொங்கல் வகை அசூயை – பொறாமை அடப்பக்காரன் – வெற்றிலைப் பை வைத்திருக்கும் ஏவலன், வெற்றிலையை மடித்துக் கொடுக்கும் ஊழியக்காரன். அந்தகாரம் – இருள், அறியாமை அந்தர் – நிறுத்தல் அளவு (50 கிலோ எடை) அமரிக்கை – அமைதி அனாசாரம் – தீய நடத்தை ஆக்கினை – கட்டளை ஆப்பு – மூளை ஆயுள்பரியந்தம் – வானாள் முழுவதும் இஞ்சிநீயர் – பொறிஞர் இதோபதேசம் – நல்லறிவூட்டல் ஈடுமெடுப்பும் – ஒப்புயர்வும் உண்டை கட்டி – கோயிலில் தரும் சோற்று உருண்டை உருவாரமாய் – பிரதிமையாய் உளைமாந்தை – கடுநோய், உட்புண் ஒட்டை வேட்டு – பத்து விரற்கடை வெடி கந்தமூலம் – கிழங்கு வேர் கனிகள் கலி – வறுமை, துன்பம் குச்சுக்காரி – விலைமகளிர் குதவை – அடமானம் குமரி இருட்டு – விடியற்கு முன்...

நமது லòயம்

நமது லòயம்

  சுயமரியாதை இயக்கம் இதுவரை சமூக முன்னேற்ற இயக்கமாக இருந்ததுமாறி இப்போது பொருளாதாரத்திலும், அரசியலிலும் பிரவேசித்துவிட்டதாகவும் இதனால் இயக்கம் ஆதரவற்று அரசாங்க அடக்குமுறைக்கு ஆளாகி நசித்துப்போகுமென்றும் சொல்லுகிறார்கள். சிலர் தாங்கள் அரசாங்க ஆக்கினைக்கு தயாராயில்லை என்றும் ஆதலால் இதில் கலந்துகொள்ள முடியாது என்றும் சொல்லுகிறார்கள். இக்கூட்டத்தார் எல்லோருக்குள்ளும் மகிழ்ச்சி யடையத்தக்க ஒரு விஷயமிருக்கிறது. அதென்னவென்றால் அரசாங்க அடக்குமுறைக்கு ஆளாக முடியாது என்கின்ற காரணம் மாத்திரமே அல்லாமல், இக்கொள்கை விஷயத்தில் ஆட்சேபனை யிருப்பதாகக் காணப்படவில்லை என்பதேயாகும். இது எப்படியிருந்தபோதிலும் விஷயத்தை சற்று கவனித்துப் பார்ப்போம். ~subhead சமூக முன்னேற்றம் ~shend சமூக முன்னேற்றமென்றால் என்ன? எந்த சமூக முன்னேற்றம்? என்பதை நாம் கவனிக்க வேண்டும். மனித சமூக முன்னேற்றம் என்பது மனிதர்கள் குளிப்பது, மதக்குறி இடுவது, புராணங்கள் படிப்பது, கோவில்களுக்கு யாத்திரை உற்சவம் செய்வது முதலாகிய இவைகள் தானா? அல்லது ஜாதி வித்தியாசம் ஒழிப்பது, சத்திரம் சாவடி கட்டுவது, பள்ளிக் கூடம் வைப்பது...

பெரியார் திருநாள்

பெரியார் திருநாள்

  தமிழரியக்கத் தந்தையாரான ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழ்நாட்டிலும், தெலுங்கு நாட்டிலும் மலையாள நாட்டிலும் வெகு விமரிசையாகச் சென்ற டிசம்பர் 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. தமிழரியக்கத் தந்தையாரின் பிறந்தநாள் மலையாள நாட்டிலும் தெலுங்கு நாட்டிலும் கொண்டாடப்பட்டது பலருக்கு விநோதமாகத் தோன்றலாம். தமிழர் இயக்கத் தந்தையார் தமிழர் விடுதலைக்காக மட்டும் உழைக்கவில்லை, திராவிட மக்கள் அனைவருடையவும் விடுதலைக்காகவே உழைக்கின்றார். தமிழர் விடுதலையின் பயனாக மலையாளரும் தெலுங்கரும் விடுதலை பெறுவது உறுதி. அதனாலேயே மலையாளரும் தெலுங்கரும் மிக உற்சாகத்துடன் கொண்டாடியிருக்கின்றனர். மற்றும் சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு 60-வது பிறந்த நாள் கொண்டாட்டம் புதுமையாகத் தோன்றலாம். பெரியார் வெளியிலிருந்திருந்தால் இத்திருநாள் கொண்டாட சம்மதித்திருக்கவுமாட்டார். திருநாள், பெருநாள் போன்ற ஆடம்பரங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் அவருக்குப் பெரிய வெறுப்பு. பாராட்டுகளும் உபசாரங்களும் அவருக்கு வேப்பங்காய். ஆனால் இந்த அறுபதாவது பிறந்தநாள் ஒரு மதச்சடங்காகவோ சமுதாய மரியாதைச் சடங்காகவோ கொண்டாடப்படவில்லை. பெரியார் சிறைபுகுந்த காரணத்தினால் தமிழரியக்கம் தளர்ச்சியடையாமலிருக்கவும் அவரது...

இரண்டு மாநாடுகள்

இரண்டு மாநாடுகள்

  வேலூரில் 27-12-1938 ல் நடைபெறப்போகும் 4-வது சென்னை மாநிலத் தமிழர் மாநாடும் சென்னையில் டிசம்பர் 28-ம் 29-ம் 30-ந் தேதிகளில் நடைபெறப்போகும் தென்னிந்திய நல உரிமைச் சங்க 14 வது மாநாடும் தென்னாட்டுச் சரித்திரத்திலே மிகவும் முக்கியமான மாநாடுகள் ஆகும். வேலூர் மாநாடு தமிழர்களுக்கெல்லாம் பொதுவான மாநாடு. ஜாதி மத வித்தியாசமின்றி – அரசியல் கொள்கை வித்தியாசமின்றி, தமிழராகப் பிறந்தோரெல்லாம் அம்மாநாட்டில் பங்கு கொள்ளப் போகிறார்கள். ஆதியிலே தமிழர்களாக இருந்து ஆரிய மதக் கொடுமை காரணமாகப் பிற மதம் புகுந்து பிறந்தவர்களும் அரசியல் அபிப்பிராயங் காரணமாகப் பிரிந்தவர்களும் தம் தாய்மொழிக்கு இடுக்கண் நேர்ந்திருப்பது கண்டு சர்வ வித்தியாசங்களையும் மறந்து ஐக்கியப்பட்டு வேலூரில் கூடப் போகிறார்கள். வேலூர் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கப் போகும் ஸர்.எ.டி. பன்னீர் செல்வம் அம்மாநாட்டுக்கு தலைமை வகிக்க எல்லாவற்றாலும் தகுதியுடையப் பெரியார். ~subhead பன்னீர் செல்வம் மாட்சி ~shend தமிழர் முன்னேற்ற இயக்கமான இந்தி எதிர்ப்பு இயக்கத்தில்...

பெரியார் ஈ.வெ.ரா. வழக்கு  சர்க்கார் தரப்பு சாட்சியம்  பெரியார் வாக்கு மூலம்  3 வருஷம் கடுங்காவல்  2000 ரூபாய் அபராதம்

பெரியார் ஈ.வெ.ரா. வழக்கு சர்க்கார் தரப்பு சாட்சியம் பெரியார் வாக்கு மூலம் 3 வருஷம் கடுங்காவல் 2000 ரூபாய் அபராதம்

  சென்னை, டிச. 5 தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் 14-வது மகாநாட்டின் தலைவரும், சுயமரியாதை இயக்கத் தலைவருமான பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் மீது, சென்னை அரசாங்கத்தாரால் 117-வது 7(1) ஏ செக்ஷன் கீழ் கொண்டுவரப்பட்ட வழக்கு, இன்று காலை 11-25 மணிக்கு சென்னை ஜார்ஜ்டவுன் போலீஸ் கோர்ட்டு 4-வது நீதிபதி தோழர் மாதவராவ் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் காலை 10-45 மணிக்கே படுக்கையுடன் தயாராகக் கோர்ட்டிற்கு வந்துவிட்டார். வழக்கைக் கவனிக்கத் தோழர்கள் ஸர்.ஏ.டி. பன்னீர் செல்வம், ஈ.வெ. கிருஷ்ணசாமி, டி. சுந்தரராவ் நாயுடு பி.எ. பி.எல்., கி.ஆ.பெ. விசுவநாதம், எஸ்.வி. ராஜன், பி.எ.பி.எல்., தாமோதரம்பிள்ளை, ராவ்சாகிப் தர்மலிங்கம் பிள்ளை, டி.ஆர். கோதண்டராம முதலியார் பி.எ., பி.எல்., சி. பாசுதேவ் பி.எ. பி.எல். திருவெற்றியூர் சண்முகம் பிள்ளை, சேலம் எ. சித்தையன், ஓ.எஸ். சதக்தம்பி மரைக்காயர், ஜமால் இப்ராஹிம், டி.எஸ். முகம்மது இப்ராகிம், சாமி...

சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு  பெரியார் அறிக்கை  சிறைபுகு முன் கூறியது

சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு பெரியார் அறிக்கை சிறைபுகு முன் கூறியது

  சென்னை, டிச. 6 நான் இன்னும் சிறிது நேரத்துக்குள் சிறைக்குள் அனுப்பப்படுவேன். நமது இயக்க சம்பந்தமாக இனி நடக்கவேண்டியவைகளை தலைவர் செளந்திரபாண்டியனும், தோழர் கி. ஆ. பெ. விஸ்வநாதமும் இருந்து கவனித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகிறேன். இயக்கத் தோழர்களும் தலைவர்களுடன் ஒத்துழைத்து நான் வெளிவரும் வரை செவ்வனே நடைபெற ஒத்தாசை செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். ஜஸ்டிஸ் கட்சிக்கு நான் தற்போது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதிலும் பொப்பிலி அரசர் இருந்து எல்லா காரியங்களையும் கவனித்துக் கொள்வார் என்கிற திட நம்பிக்கை எனக்கிருப்பதினாலும் அவருடைய தலைமைப் பொறுப்பு நீங்கி விட்டதாக மற்ற தோழர்களும் கருதமாட்டார்கள் என்ற நம்பிக்கையிருப்பதாலும் அதைப்பற்றி கவலையில்லாமலே செல்லுகிறேன். இந்தி எதிர்ப்பு இயக்கம் பொது ஜன இயக்கமானதினாலே, தமிழ் மக்கள் எல்லோரும் அந்த இயக்கத்தைப் பற்றி கவலை எடுத்துக்கொள்வார்கள் என்பதில் எனக்கு பெருத்த நம்பிக்கையுண்டு. இதைப்பற்றி யாருக்கும் நான் எதுவும் சொல்லத் தேவையில்லை. ஆனால் பலாத்காரமில்லாமலும், துவேஷ உணர்ச்சி இல்லாமலும்...

பெரியார் சிறைவாசம்

பெரியார் சிறைவாசம்

  டிசம்பர் 6-ந்தேதி தென்னாட்டு சரிதத்தில் ஒரு முக்கியமான நாளாகும். அன்றுதான் சுயமரியாதை இயக்கத் தலைவரும் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் ஆகப் போகிறவரும், தமிழர்களைத் தட்டி எழுப்பி சுயமரியாதையுடன் வாழக் கற்பித்தவரும், தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவருமான பெரியார் ஈ.வெ.ராமசாமி தமிழர் விடுதலைக்காகச் சிறை புகுந்தார். தமிழர் சரிதம் எழுதப்படும் போது அந்நன்னாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதற்கு ஐயமே இல்லை. ஒரு பெரியார் சிறை புகுந்தநாளை நன்னாள் எனக் கூறியது பலருக்கு வியப்பாக இருக்கலாம். சிறை புகுவது துன்பம் தரக்கூடியதாகையால் சிறைபுகும் ஒரு நாளை நன்னாள் எனக் குறிப்பிடுவது பலருக்குப் பிடிக்காதிருக்கலாம். நாம் வேண்டுமென்றே அந்நாளை நன்னாள் என்றோம். அந்நாள் பெரியாருக்கு துன்பகரமான நாளாயிருந்தாலும் தமிழர்களுக்கு நலந்தரக்கூடிய நாளாகும். பெரியார் சிறை புகுந்தது மூலம் தமிழுலகம் புத்துயிர் பெறப்போகிறது; தமிழர்கள் அடிமை வாழ்வு நீங்கி சுயமரியாதை வாழ்வு – சுகவாழ்வு வாழப் போகிறார். நமது சந்ததிகள் ஆரியப் பீடையிலிருந்து விடுபட்டு தனித்தமிழ்...

பெரியார் சென்னைப் பிரசங்கம்

பெரியார் சென்னைப் பிரசங்கம்

  பெருமை மிக்க தலைவரவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இன்றைய கூட்டத்தை, நாளை நான் எனது அருமை நண்பர் ஆச்சாரியாரின் விருந்தினராகப் போகப் போகின்றேனெனக் கருதி, என்னை உங்கள் எல்லோருக்கும் காட்டுவிக்க இவ்வளவு அவசரத்தில் கூட்டினார்கள் போலும். நானும் நாளை எனது சீட்டுக்கிழிந்து விடுமென்று கருதினேன். ஆனால், 1-ந் தேதி விசாரணை போட்ட பழைய சம்மன் ரத்தாகி 5-ந்தேதி வாய்தா போட்டு இன்று புதிய சம்மன் என்னிடம் கொடுக்கப்பட்டது. எனவே எனது வழக்கு நாளைக்கல்ல; 5-ந்தேதியாகும். நானும் அதற்குள் ஊருக்குச் சென்று வரவும், 4-ந்தேதி காரைக்குடியில் நடைபெறும் தமிழர் மகாநாட்டிற்குச் சென்று வரவும் ஏற்பாடு செய்துள்ளேன். தலைவரும் காரைக்குடிக்கு வருவார். எனவே மீண்டும் ஒன்றிரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குச் சென்னையில் இது எனது கடைசிப் பேச்சாக இருக்கலாம். மீண்டும் வருவேன் என்ற தைரியத்தில்தான் செல்லுகின்றேன். ~subhead கெமால் செய்த நன்மைகள் ~shend உலகத்திற்கே-மனித சமூகத்திற்கே வழிகாட்டியாயிருந்த இரண்டு பெரியார்கட்கு இங்கு அனுதாபத் தீர்மானம்...

ஈரோடு தமிழர் பெருங்கூட்டம்

ஈரோடு தமிழர் பெருங்கூட்டம்

  கோவை ஜில்லா போர்டில் காங்கரஸ் ஆதிக்கமும் கட்டுப்பாட்டுப் புரட்டும் வெளியாகிவிட்டது குறித்தும் காங்கரஸ் ஒழுங்கையும் மீறி காங்கரஸ் அபேட்சகர் வெள்ளியங்கிரிக் கவுண்டரையே ஒரு காங்கரஸ் எம்.எல்.ஏ.வான தோழர் வேணுடையாக்கவுண்டர் (சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர்) முறியடித்ததை மக்கள் ஆரவாரத்திற்கிடையே எடுத்துக் கூறினார். அவர் மேலும் பேசுகையில் முன்னால் பேசிய தலைவர்கள் தம்மை மிகைப்பட புகழ்ந்து கூறியதற்கு தாம் அருகதையுடையவரல்லவென்றும் அவர்கள் தம்மைப் பொதுத் தொண்டில் தீவிரமாக ஈடுபடவே அவ்வாறு உற்சாக மூட்டினர் எனக் கருதுவதாகவும் கூறிவிட்டு சர்.பன்னீர்செல்வமும் மற்ற தலைவர்களும் ஆதிகால முதற்கொண்டு பார்ப்பனரல்லாத மக்களுக்கும் பெரிதும் தமிழர்களுக்கும் செய்த சேவைகளைப் புகழ்ந்துவிட்டு குறிப்பாக சர். பன்னீர்செல்வத்தைப் பாராட்டிப் பேசினார். சென்னைச் சம்பவங்கள் சென்ற 21-11-38-ந் தேதி சென்னையில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் ஆர்ப்பாட்டங்களைப்பற்றி பெரியார் பிரஸ்தாபித்துத் தொடர்ந்து பேசுகையில் இந்தி எதிர்ப்பியக்கத்தை எவ்வழியிலேனும் – அவ்வழிகள் எவ்வளவு கேவலமாயிருந்த போதிலும் – அவற்றின் மூலம் ஒழித்துவிடவேண்டுமென்று கங்கணம் பூண்ட ஒரு கோஷ்டியார் கட்டுப்பாடாக...

இந்தி எதிர்ப்பு ஒழிந்து விட்டதா?

இந்தி எதிர்ப்பு ஒழிந்து விட்டதா?

  சென்னை மாகாணத்தில் 125 பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கப் போவதாக கனம் ஆச்சாரியார் கூறியது முதற் கொண்டு நாளிது வரை தமிழர்கள் எல்லாம் கட்டாய இந்தியை ஒருமுகமாக எதிர்த்து வருவதை சென்னை மாகாணத்தார் நன்கறிவார்கள். முதன்முதல் ்பொதுமொழி தேவையா?” என்ற சிறு நூலை மறைமலையடிகள் வெளியிட்டார். அப்பால் இந்தி கட்டாய பாடத்தைக் கண்டித்து தோழர் சோமசுந்தர பாரதியார் சென்னை முதன்மந்திரிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பினார். திருநெல்வேலி தமிழ்ப்பாதுகாப்புச் சங்கத்தாரும் கட்டாய இந்தியைக் கண்டித்துப் பல துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டனர். இப்பிரசுரங்கள் எல்லாம் பதினாயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு தமிழ்நாடு முழுதும் வினியோகம் செய்யப்பட்டன. தமிழ்நாட்டார் அவைகளைப் படித்துக் கட்டாய இந்திச் சூழ்ச்சியை நன்குணர்ந்தனர். 26-12-37-ல் திருச்சியில் கூடிய சென்னை மாகாண 3-வது தமிழர் மகாநாட்டில் கட்டாய இந்தி வன்மையாகக் கண்டிக்கப்பட்டதுடன் இந்தி எதிர்ப்புக் கமிட்டியும் ஸ்தாபிக்கப்பட்டது. இம்மகாநாட்டில் காங்கரஸ்வாதிகளும் ஜஸ்டிஸ்வாதிகளும், சுயமரியாதைக் கட்சியாரும், எக்கட்சியிலும் சேராத தமிழர்களும் மனமுவந்து தாராளமாகக் கலந்து...

கூட்டுறவு வாழ்க்கை

கூட்டுறவு வாழ்க்கை

  நான் (கோவாப்ரேடிவ்) கூட்டுறவு சங்கங்கள் என்ற விஷயத்தில் ஆதியில் கொஞ்சம் அக்கரை கொண்டவனாய் இருந்தவன். சுமார் 25 வருஷத்திற்குமுன் நம்முடைய சென்னை மாகாண கூட்டுறவு ரிஜிஸ்திராராயிருந்த தோழர் ராமச்சந்திராவும், இங்கு டிப்டிக் கலைக்டராக இருந்த தோழர் நாராயணசாமி பிள்ளை அவர்களும் இங்கு கோவாப்ரேடிவ் பாங்கு ஸ்தாபனம் ஏற்படுத்த முதல் முதல் என்னிடமே வந்தார்கள். எங்கள் வீட்டில்தான் முதல் கூட்டம் கூட்டப்பட்டது. பங்கு புஸ்தகத்தைப் பார்த்தாலும் நான் தான் அதில் முதல் பங்குக்காரனாக இருப்பது தெரியவரும். அதற்காகப் பெரிதும் நானும் அந்தக்காலங்களில் உழைத்திருக்கிறேன். என்றாலும் இன்றைய நிலைமையானது நான் கோவாப்ரேடிவ் சொசைடிகளிலிருந்து சிறிது விலகி அலòய அபிப்பிராயமுடையவனாக இருக்கிறேன். ஏனெனில் எங்கு பார்த்தாலும் கòயையும், ஸ்தாபனங்களையும் சுயநலத்திற்கு உபயோகித்துக் கொள்வதும் அவற்றின் உத்தேசங்களுக்கு விரோதமாக பணக்காரர்கள் அதில் ஆதிக்கம் செலுத்துவதுமாய் இருந்துவருவதேயாகும். தோழர் கணபதி ஐயர் அவர்கள் ஒரு சமயம் என்னிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது நம்முடைய நிலைமையானது இப்படித்தான் இருக்க முடியுமென்று...

சென்னையில் ஈ.வெ.ரா.  சிறை சென்ற தாய்மார்களுக்குப் பாராட்டு

சென்னையில் ஈ.வெ.ரா. சிறை சென்ற தாய்மார்களுக்குப் பாராட்டு

  தாய்மார்களே! தோழர்களே! அருமைச் சிறுவன் – லூர்துசாமியும், சகோதரி பார்வதியம்மையாரும் பேசிய பேச்சு என் மனதை உருக்கிவிட்டது. அதனால் நான் பேசக் கருதியிருந்ததை மறந்தேன். நிற்க, காலை நடைபெற்ற சம்பவம் நடக்குமென்று நான் நினைக்கவில்லை. இரண்டு குழந்தைகளுடன் சென்ற 5 தாய்மார்கட்கும், 2 தொண்டர்கட்கும் 6 – வாரம் தண்டனை விதிக்கப்பட்டது. இன்று ஒரு முத்துக்குமாரசாமிப் பாவலருக்கு 18 – மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே இந்த நாள் மிக வன்மத்துடன் மனதில் வைக்கவேண்டிய நாளாகும். உண்மையுடன் சிறை செல்பவருக்கு அங்கு ஒருவித கஷ்டமுமில்லை. கஷ்டமென்று நினைப்பவருக்கு வெளியில் கூடக் கஷ்டமாய்த் தானிருக்கும். என் அனுபவத்தில் 5,6 முறை சிறை சென்றிருக்கின்றேன். 18 ஆண்டுகளுக்கு முன் நான் சிறைசென்ற காலத்து முத்திரம் கழிப்பது, தண்ணீர் குடிப்பது எல்லாம் ஒரே சட்டியில் தான். அவ்வளவு கொடுமையாவிருந்தது; கேள்வி முறையில்லை. ஆனால் இன்றைய சிறையோ பெரிதும் மாற்றமடைந்துள்ளது. காங்கரஸ்காரர் சிறை சென்ற...

எதிர்ப்பை அடக்க புதிய சூழ்ச்சி

எதிர்ப்பை அடக்க புதிய சூழ்ச்சி

  காங்கரஸ்காரர்கள் எப்படிப்பட்ட காலித்தனம் செய்தாலும் அதை பொது ஜனங்களின் கோபம் என்றும், ஆத்திரமென்றும் “தினமணி”யும் “சுதேசமித்திர”னும் “ஆனந்த விகட”னும் எழுதி வருகின்றன. காங்கரஸ் காலித்தனங்களுக்குப் பொது ஜனங்களால் புத்தி கற்பிக்கப்பட்டால் அது சு.ம.காரர்கள் காலித்தனம் என்றும், சில நாளாக இந்தி எதிர்ப்பவர்கள் காலித்தனமென்றும் அப்பத்திரிகைகள் எழுதி வருகின்றன. இந்தி எதிர்ப்பை அடக்க காந்தியாரும், ஆச்சாரியாரும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாய் விட்டன. கனம் ஆச்சாரியார் புளுகுகளுக்கு இன்று பொது ஜனங்களிடம் அரைக்காசு மதிப்புக்கூட இல்லாமல் போய்விட்டதானது யாவருக்கும் தெரிந்துவிட்டது. மாஜிஸ்ட்ரேட் நற்சாட்சிப் பத்திரம் கனம் ஆச்சாரியார் இந்தி தொண்டர்கள் மீது அபாண்டப் பழி சுமத்தினார். பிரமுகர்கள் வீடுவீடாய் ஏன்? வெள்ளைக்காரர்கள் வீடு வீடாய் சென்று “இந்தி எதிர்ப்பாளர்கள் என்னையும் என் பெண்டுபிள்ளைகளையும் கண்டபடி பேசுகிறார்கள்” என்று நினைக்க முடியாத வார்த்தைகளை கட்டுக் கட்டி கூறினார். அவரது கூலிப்பத்திரிகைகளும் அவற்றை அப்படியே எடுத்துப் பெருக்கி விஷமப் பிரசாரம் செய்தன. அவ்வளவும் தோழர்...

சென்னையில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு

சென்னையில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு

  தலைவரவர்களே! தாய்மார்களே! இத்தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில், உங்கள் முன்னால் பேச சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி உண்மையிலேயே பெரு மகிழ்ச்சியடைகிறேன். சமுத்திரம் போல் பெண்கள் கூடியுள்ள இக்கூட்டத்தைப் பார்க்க என் மனமே ஒருவித நிலைகொள்ளா மகிழ்ச்சியடைகிறது. ~subhead சென்னையைப் பற்றி ~shend இவ்வளவு பெரிய ஒரு பெண்கள் கூட்டம் சென்னையில் கூடும் என நான் நினைக்கவில்லை. சென்னையைப்பற்றி நான் சில சமயங்களில் பரிகாசமாய் நினைப்பதுண்டு. என்ன வென்றால் சென்னை மூடநம்பிக்கைக்கு இருப்பிடமானது என்று நான் சொல்லுவதுண்டு. இதை நான் அடிக்கடி பத்திரிகையிலும் எழுதி வந்திருக்கிறேன். சென்னையிலுள்ள எனது சில தோழர்களுக்கு நீங்கள் முடநம்பிக்கையை விடுங்கள் பகுத்தறிவுடன் வாழுங்கள் என்று கூறுகின்ற காலத்து அவர்கள் நீங்கள் சொல்வதெல்லாம் சரி என்றும் அவற்றை அப்படியே ஒப்புக் கொள்வதாகவும் ஆனால் தங்கள் வீட்டிலுள்ள பெண்கள் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறார்களே என்றும் உங்களை இழித்துக் கூற உங்கள் மீது பழியைப் போட்டதை நான் பல...

சென்னைக் “கலவரங்கள்”

சென்னைக் “கலவரங்கள்”

கட்டாய இந்தியினால் தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஆபத்து உண்டாகுமெனத் தமிழர்கள் நம்புகிறார்கள். கட்டாய இந்தியினால் தமிழர்களுக்கு ஏற்படும் தீமைகளை மறைமலையடிகளும் தோழர் சோமசுந்தர பாரதியாரும், சிறு சுவடி மூலமும், பகிரங்கக் கடிதம் மூலமும் காங்கரஸ் மந்திரி சபையாருக்கு அறிவுறுத்தியுமிருக்கிறார்கள். திருச்சி, காஞ்சீவரம், சோழவந்தான் முதலிய இடங்களில் கூடிய தமிழர் மகாநாட்டிலும் கட்டாய இந்தியால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் இடையூறுகள் விளக்கப்பட்டு கண்டனத் தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. மற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் பொதுக்கூட்டங் கூட்டி கட்டாய இந்தி கண்டிக்கப்பட்டிருக்கின்றது. சென்னைக் கடற்கரையில் கூடிய மூன்று பிரம்மாண்டமான இந்தி எதிர்ப்புக் கூட்டங்களிலும் கட்டாய இந்தி கண்டிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறெல்லாம் தமிழர்கள் கட்டாய இந்தியை பகிரங்கமாக எதிர்த்தும் கனம் ஆச்சாரியார்கள் மனமிளகாததினால் ஆவேசங்கொண்ட தமிழர்கள் நேரடியாக வேலை செய்யத் தொடங்கினார்கள். உடனே அவர்கள் மீது கிரிமினல் திருத்தச் சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டு இன்றுவரை 446 பேர் சிறை புகுந்திருக்கிறார்கள். ஆண்கள் சிறை புகுந்தும் பலன் ஏற்படாததினால் இப்பொழுது பெண்களும்...

ஆச்சாரியார் இதற்கென்ன பதில் சொல்லுவார்?

ஆச்சாரியார் இதற்கென்ன பதில் சொல்லுவார்?

  சென்னையில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி செய்து சிறைப்பட்ட பெண்களது வழக்கு விசாரணையில் முடிவு சொன்ன நீதிபதி அவர்கள் எழுதிய தீர்ப்பு ்விடுதலை”யில் பிரசுரிக்கப்பட்டிருப்பதை வாசகர்கள் படித்திருக்கலாம். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:- ்கிளர்ச்சி செய்த பெண்களில் இருவர் கவுரவமான பெண்கள்; மற்றும் சிலர் வயதானவர்கள். ஆதலால் அவர்கள் சொல்லுவதை நான் நம்புகிறேன். அதாவது அவர்கள் ்ராஜகோபாலாச்சாரியார் ஒழிக” என்றும் ்பார்ப்பனர் ஒழிக” என்றும் சொல்லி இருக்கமாட்டார்கள் என்றே கருதுகிறேன். அன்றியும் ்இந்தி ஒழிக” ்தமிழ் வாழ்க” என்று கோஷிப்பதாலும் குற்றமில்லை என்றும் அந்த வார்த்தைகள் குற்றமானவை அல்ல என்றும் ஒப்புக்கொள்ளுகிறேன்” என்பதாகும். இதிலிருந்து நீதிபதி அவர்கள் போலீசாரை நம்பவில்லை என்பதும் போலீசார் சொன்ன சாòயம் உண்மை அல்ல என்பதும் நன்றாய்க் காணக்கிடக்கின்றது. இந்தப் போலீசார்தான் இதுவரை அனேகத் தொண்டர்கள் மீது இதே மாதிரி சாò சொல்லி தண்டிக்கச் செய்திருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் உணர்வார்களாக. அதோடு மாத்திரமல்லாமல் சில பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்கள்...

தமிழ்க்கொலை

தமிழ்க்கொலை

தற்காலத்தில் பள்ளிக்கூடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பாடப் புத்தகங்களிலுள்ள குற்றங் குறைகளை எழுத வேண்டுமானால் அதற்கே ஒரு தனிப் புத்தகம் எழுதலாம். அந்த வேலை மணற்சோற்றில் கல் ஆராய்வது போன்றது. 315 கோடி! சென்னை ராஜதானிக் கல்லூரியில் ஆசிரியராயிருக்கும் ஒரு வித்வான் எழுதிய தமிழக வாசகம் நான்காம் புத்தகத்தில் இந்தியாவின் ஜனத்தொகை சுமார் 315 கோடியென்று முட்டையெழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கிறது. “செஞ்சி நகரக் கோட்டைச் சிறப்பு” என்பது ஒரு பாடத்தின் பெயர். “தஞ்சையில் விஜயராகவரிடம் வேலை பார்த்து வந்த இராயசம் வெங்கண்ணா என்ற ஒரு கணக்குப்பிள்ளை ஒருவர் இருந்தார்” என்பது ஓர் அழகான வாக்கியம். அநுமானும் சீதையும் என்ற ஒரு பாடத்தில் அநுமான் அசோகவனத்தில் சீதையைக் கண்டு. “தாயே….. தங்களை இராமரிடம் எடுத்துப் போக நான் விரும்புகிறேன். ஓர் இமைப்பொழுதில் நான் அவரிருக்கும் இடம் செல்வேன். தங்கட்குச் சிறு துயரம் நேராது” என்று சொல்வதாகக் கூறப்பட்டிருக்கிறது. சிறு துயரம் நேராது என்பது சென்னை ராஜதானிக் கல்லூரியில்...

காலஞ் சென்ற கெமால் பாஷா

காலஞ் சென்ற கெமால் பாஷா

  1918 – வரை ்ஐரோப்பாவின் நோயாளி” என்ற பழிப்புரைக்கு இலக்காயிருந்தது துருக்கி நாடு. துருக்கி சுல்தான்களின் சோம்பேறி ஆடம்பர வாழ்க்கையும் மதபோதகர்களின் அட்டூழியங்களுமே துருக்கியின் இழிவான நிலைமைக்குக் காரணம். துருக்கி சுல்த்தான்கள் மதாசிரியர்களுக்கு அடிமைப்பட்டே வாழ்ந்து வந்தனர். பகுத்தறிவற்ற பாமர மக்கள் மிகுந்த நாட்டிலே மதாசிரியர்களுக்குச் செல்வாக்குப் பெருகி யிருப்பது இயல்பு. எனவே துருக்கியிலே கிலாபத்தே கிரியாம்சையில் சுல்த்தான்களையும் அடக்கியாண்டு வந்தது. மதாசிரியர்களுக்கு நாட்டு முன்னேற்றத்தில் இயல்பாகவே விருப்பமிராது. அவர்கள் தமது செல்வாக்கு அழியாமல் இருப்பதற்குத் தேவையான காரியங்களையே செய்து வருவார்கள். எனவே சோம்பேறிச் சுல்த்தான்களும் சுயநல கிலாபத்தும் ஆதிக்கம் செலுத்திய நாடு ்ஐரோப்பாவின் நோயாளி” என இகழ்ந்துரைக்கப்பட்டது ஆச்சரியமன்று. துருக்கியிலே மக்களுக்குள் ஒற்றுமை சூனியமாக இருந்தது. மேட்டுக்குடிப் பிரபுக்கள் சதா ஒருவருக்கொருவர் பூசலிட்டுக் கொண்டிருந்தனர். செல்வ வருவாய்க்குரிய மார்க்கங்கள் தடைப்பட்டன. இவ்வாறாக நாடு சீரழிந்து கிடந்த காலத்தில் ஐரோப்பிய மகாயுத்தம் உண்டாயிற்று. ருஷியாவுக்குப் பயந்து துருக்கி மத்திய ஐரோப்பிய...

காங்கிரசும் கல்வியும்

காங்கிரசும் கல்வியும்

  தாவர வர்க்கத்திலே காணப்படும் புல்லுருவிகளைப் போல் மனித வர்க்கத்திலும் புல்லுருவிக்கொப்பான ஒரு கூட்டத்தார் இருந்து வருகின்றனர். அவர்கள்தான் பிறர் உழைப்பினால், பிறர் ரத்தத்தை அட்டை போல் உறிஞ்சி நெற்றி வேர்வை நிலத்தில் விழாமல் நகங்களில் அழுக்கு படாமல், சோம்பேறி வாழ்க்கை நடத்தும் புரோகிதக் கூட்டத்தார். இத்தகையோர் தமது இந்திய நாட்டிலுமல்ல உலகமெங்கும் எல்லா நாட்டிலும் பண்டு தொட்டு இருந்து வந்திருக்கின்றனர். இன்றும் இருக்கின்றனர். ஆனால் ரஷ்யாவில் மட்டும் இவர்கள் ஒரு அளவுக்கு ஒழிக்கப்பட்டிருக்கின்றனர் என்று சொல்லலாம். இவர்கள் தங்கள் சோம்பேறி வாழ்க்கை நடத்துவதற்கு அவர்களுக்கு உபயோகமாகயிருந்து வருவது கல்வியின்மை – அறியாமை – மூடத்தனம் என்பதேயாகும். மக்கள் அறியாமையைப் போக்கிக்கொண்டால் – அறிவு பெற்றுக்கொண்டால் தங்களது சோம்பேறி வாழ்க்கைக்கு கேடு வந்துவிடுமே என்று எண்ணி அக்கூட்டத்தார் மக்கள் கல்வியறிவை பெற முடியாமல் செய்து வந்திருக்கின்றனர். நம் நாட்டிலே வேதங்கள், நீதி நூல்கள் என்று சொல்லுகிற மனுநீதி சாஸ்திரம் போன்றவைகளிலிருந்து இதற்கு...

ஒரு யோசனை

ஒரு யோசனை

  எங்கு பார்த்தபோதிலும் பார்ப்பன உபாத்தியாயர்களது கொடுமையானது சகிக்கமுடியாத அளவில் பெருகிக் கொண்டு வருகிறது என்ற செய்தி நமக்கு எட்டிக்கொண்டே வருகின்றது. இதற்குக் காரணம் அனேகமாய் கல்வி இலாகா உத்தியோகங்களில் எல்லாம் பார்ப்பனர்களே அதிகாரியாயும் பரீட்சை அதிகாரிகள் பெரும்பாலும் பார்ப்பனர்களாயிருப்பதாலும் அவர்களுடைய சலுகைக்கு பாத்திரர்களாக பார்ப்பன ஆசிரியர்கள் இருப்பதாலும் என்பதே. இந்நிலை ஒழிய வேண்டுமானால் கல்வி இலாகாவில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்றுதான் ஒரு கண்ணியமுள்ள ஒருவன் சொல்வான். ஏனெனில், முதலாவதாக இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பானும் தான் பிறப்பினாலே உயர்ந்த ஜாதியானென்றும், தானே அறிவாளியென்றும், வருணாச்சிரமப்படி தாம் ்பிராமண”ரென்றும், மற்றவர்கள் ்சூத்திர”ரென்றும் எண்ணிக் கொண்டிருக்கிறான். எந்தக் கொள்கைப்படி தங்களை ிபிராமணனென்றும் மற்றவர்களை ்சூத்திர”ரென்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அதே கொள்கைப்படி பிராமணர் சூத்திரரை படிக்க வைக்கக்கூடாது என்றும் சூத்திரர் படித்தால் வருணாச்சிரம தர்மம் கெட்டுவிடுமென்றும் பார்ப்பனரல்லாதார் படித்தால் பார்ப்பனருக்கு ஆபத்தாய் எமனாய் விடுவார்கள் என்றும், 100-க்கு 3 பேர்கள் 97 பேர்களின்...

காங்கரஸ் காலித்தனத்துக்கு ஆப்பு

காங்கரஸ் காலித்தனத்துக்கு ஆப்பு

  அன்பார்ந்த தலைவர் அவர்களே! தோழர்களே! இது இந்தியை எதிர்ப்பதற்காகப் போடப்பட்ட கூட்டமாகும். நாங்கள் இந்தியை எதிர்ப்பதற்குக் கூறும் காரணங்களைக் கேட்டு சிந்தித்துச் சரியென்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். பிடிக்காதவர்கள் இங்கு நாளை ஒரு கூட்டம் போட்டு ஆதாரமிருந்தால் நேர்மையான காரணங்களைக் கூறி மறுக்கட்டும். அதைவிட்டுப் பொறுப்பற்ற வகையில் காலித்தனமாக குழப்பம் விளைவிக்க முயலுவது இழிவான காரியமாகும். இதுதான் காங்கரஸ்காரர்களின் சமாதானம் என்றால் அதையும் சமாளிக்க தயாராயிருக்கிறோம். காங்கரஸ் அஹிம்சை என்று கூறிக்கொண்டு காலித்தனத்தைக் கையாளுகின்றது. ஆனால் தாங்கள் அஹிம்சைவாதிகள் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர். ~subhead யார் தேசத் துரோகி? ~shend அதே மாதிரி தாங்கள்தான் வெள்ளையர்களை இந்நாட்டைவிட்டு விரட்டப் போகின்றவர்கள் என்று மக்களிடம் கூறுகின்றனர். ஆனால் வெள்ளைக்காரர்களிடம் சென்று உங்களை இந்நாட்டில் என்றென்றும் நிலைத்திருப்பதற்கு உதவி செய்கிறோம், எங்களுக்கென்ன செய்கிறீர்கள் என வெள்ளையரிடம் ரகசிய ஒப்பந்தம் பேசுகின்றனர். ஆதியில் அன்னிய ஆட்சியை இந்நாட்டிற்கு கொண்டு வந்தது யார்? இதே பார்ப்பனர்கள்தான்....

மேலப்பாளையம் ஆதிதிராவிட மகாநாடு

மேலப்பாளையம் ஆதிதிராவிட மகாநாடு

  தலைவரவர்களே! தோழர்களே! ஆதிதிராவிடர்கள் என்பவர்கள் ஆயிரக்கணக்காகக் கூடியுள்ள இந்த பெரிய கூட்டத்தில் பேசும்படியான சந்தர்ப்பம் கிடைத்ததற்காக நான் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் ஆதிதிராவிட அபிவிர்த்தி என்பதைப் பற்றி நான் பேச வேண்டுமென்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள். உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி பேசிப்பேசிக் களைத்துப் போய்விட்டது. இனி பேசித் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. உங்கள் நிலை பல நூற்றாண்டுகளாகவே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. அதற்கு முன் ஆயிரக்கணக்கான வருஷங்களாக நீங்கள் இப்படித்தான் இருந்து வந்ததாக புராணங்களும் சரித்திரங்களும் கூறுகின்றன. இவ்வளவு நாள் பேசப்பட்டிராத விஷயம் இனி என்ன பேசப் போகிறேன்? உங்கள் சமூகம் சரித்திரங்களிலும் புராணங்களிலும் இருந்ததைவிட இப்போது அதிலும் இந்த 10 வருஷ காலத்தில் சிறிது மேலான நிலைமையில் இருக்கிறதாக நான் அறிகிறேன். ~subhead கொடுமை சிறிது குறைந்தது ~shend யார் என்ன சொன்னபோதிலும் ஆங்கிலேய அரசாò ஏற்பட்ட பிறகு உங்களுக்கு ஓரளவு...

தமிழர் செய்ய வேண்டிய வேலை

தமிழர் செய்ய வேண்டிய வேலை

  தமிழர்கள் சமூக வாழ்வில் தமிழ்நாட்டிலேயே கீழ் ஜாதியாய் இழி ஜாதியாய் சூத்திரராய் கருதப்படுகிறார்கள். தமிழர் தலையில் சுமத்தப்பட்ட மதங்களும் தமிழர்களை 4-ம் ஜாதி 5-ம் ஜாதி சூத்திர ஜாதி சண்டாள ஜாதி என்று சொல்லுகின்றன. தமிழர்களுக்குள் புகுத்தப்பட்ட கடவுள்களும் தமிழ் பெண்களிலேயே தாசிகள் இருக்கச் செய்வதோடு அக்கடவுள்கள் இந்தத் தாசிகள் வீட்டுக்கு போகும் உற்சவங்களும் கொண்டாடப்படுகின்றன. தமிழர்கள் அறிவும் சமயத்தின் பேரால் மழுங்கச் செய்து மூட நம்பிக்கை குருட்டு பழக்கவழக்கங்களுக்கு ஆளாக்கப்பட்டு உலகிலேயே தமிழ் மக்கள் முதல்தர மூடர்கள் என்றும் காட்டுமிராண்டிகள் என்றும் கருதும்படி செய்யப்பட்டுவிட்டது. தமிழன் செல்வ நிலையைப் பற்றி யோசிப்போமேயானால் ஆரியமுறை ஜாதிப்பிரிவு காரணமாகவே தமிழர்களில் 4-ல் ஒரு பங்கு மக்கள் படிப்புக்கும் வைத்தியத்திற்கும் அறவே வழியில்லாமலும் உணவிற்கு அரைவயிற்றுக் கஞ்சிக்குக்கூட வழிஇல்லாமல் கூலி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உழைத்துத் தீரவேண்டும் என்கின்ற நிலையில் தீண்டப்படாதவர்களாய் இருக்கிறார்கள். மற்ற 3 பாகத்தவர்களில் பெருமக்களும் சரீரப் பாடுபட்டு உழைப்பதே அவர்களது...

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை

இவ் வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப்போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப் போகின்றீர்கள்? “அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையை கொண்டாடப்போகின்றீர்களா? என்பதுதான் “நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?” என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே சிறிதும் யோசனையின்றி யோக்கியப் பொறுப்பின்றி உண்மைத் தத்துவமின்றி சுயமரியாதை உணர்ச்சியின்றி சுயமரியாதை இயக்கத்தின்மீது வெறுப்புக்கொள்ளுகின்றீர்களே யல்லாமல் மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப் பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே யல்லாமல் மேலும், உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும் ஜீவனற்ற தன்மையான “பழைய வழக்கம்” “பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம்” என்கின்றதான வியாதிக்கு இடங்கொடுத்துக்கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப் போல் துடிக்கின்றீர்களே யல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள். பணத்தையும், மானத்தையும் எவ்வளவு...

இனி செய்ய வேண்டியதென்ன?

இனி செய்ய வேண்டியதென்ன?

  உலகிலே நாம் எத்திசையை நோக்கினும், எந்நாட்டை நோக்கினும் சுதந்திரத் தீ மூண்டு கொண்டிருப்பதையும், சுவாலை விட்டு எரிந்து கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் சுதந்திரத்தோடு வாழ விரும்புகின்றனர். ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் சுதந்தரமாக வாழ விரும்புகின்றனர். எத்தகைய பழக்கவழக்கத்தையும் கட்டுத் திட்டத்தையும் உடைத்தெரிந்துவிட்டு சுதந்திரத்தோடு, மனிதாபிமானத்தோடு வாழ ஆசைப்படுகின்றனர். ஒரு நாட்டார் மற்றொரு நாட்டாரின் அடிமையிலிருந்து விடுதலை அடைய ஆர்வங் கொண்டுழைக்கின்றனர். ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடையப் போராடி வருகிறது. சமத்துவமாக, சம உரிமையோடு, சம அந்தஸ்தோடு விளங்க வேண்டுமென்று ஒவ்வொரு சமூகமும் பல வருடங்களாக போராடி வருகிறது. இதை எவரும் மறுக்கத் துணிவு கொள்ளார். ஒரு சமூகமோ, ஒரு நாடோ, ஒரு வகுப்போ, மற்றொரு சமூகத்திலிருந்தோ, நாட்டாரிடமிருந்தோ, வகுப்பாரிடமிருந்தோ விடுதலையடைய வேண்டுமானால் அவர்களால் தங்களுக்கு நேர்ந்த இடுக்கண்களையும், அவமானத்தையும், தாங்கள் அடைந்த நிலைமையையும் எடுத்துரைத்தல் நியாயமா அல்லவா? அதற்கு உரிமையிருக்க வேண்டியது அவசியமா அல்லவா?...

சென்னையில் மாபெருங் கூட்டம்

சென்னையில் மாபெருங் கூட்டம்

  தலைவரவர்களே! தோழர்களே! வடசென்னைத் தமிழர் முன்னேற்றக் கழகக் காரியதரிசி தோழர் செ.சி.ந. காசிராஜன் அவர்கள் முயற்சியினால் கூட்டப்பட்ட இம்மாபெருங் கூட்டத்தில், நானும் பேசக் கட்டளை இடப்பட்டது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். இந்தி எதிர்ப்பிற்கு நாட்டில் அதிக ஆதரவு கிடைத்துவரும் இக்காலத்தில், இந்தி எதிர்ப்பைப் பற்றி நான் அதிகம் பேசத் தேவையில்லை. இந்தி எதிர்ப்பு செத்துவிட்டதென்று பார்ப்பன பத்திரிகைகளும், சில கூலிப் பத்திரிகைகளும், செய்துவரும் பொய்ப்பிரசாரத்தைக் கண்டு வெளி ஜில்லாவாசிகள் சிறிது ஏமாந்தாலும், சென்னையிலுள்ள நீங்கள் ஏமாற மாட்டீர்களென நினைக்கிறேன். (கைதட்டல்) ஏனெனில் தினம் ஐந்துபேர் நான்குபேர் இரண்டுபேர் இந்தி எதிர்ப்புக்காகச் சிறை செல்வதை நீங்கள் நேரில் பார்த்து வருகிறீர்கள். ஆனால், இந்தி எதிர்ப்புச் செய்திகளை வெளிப்படுத்திவரும் ்விடுதலை”யை ஒழித்தாலொழிய நாம் முன்னேற முடியாதென நினைத்து அதன் ஆசிரியரையும் வெளியிடுவோரையும் கைது செய்தனர் இன்றைய பார்ப்பன மந்திரிகள். (வெட்கம் என்ற கூச்சல்) இன்னும் நாம் பணிவதா. அன்றி யாரைக் கைது செய்யலாம்,...

இன்றைய பிரச்சினை

இன்றைய பிரச்சினை

  “குடி அரசு” பத்திராதிபரும் பிரசுரகர்த்தாவும் “விடுதலை” பிரசுரகர்த்தாவுமான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமியும், “விடுதலை” ஆசிரியர் பண்டித எஸ். முத்துசாமி பிள்ளையும் 124 எ. ராஜ நிந்தனைச் சட்டப்படியும் 153 (எ) வகுப்புத்துவேஷச் சட்டப்படியும் அக்டோபர் 7-ந்தேதி சென்னை சர்க்காரால் கைது செய்யப்பட்டு ஈரோடு சப்ஜெயிலில் காவலில் வைத்திருக்கின்ற சேதியை தினசரி வாயிலாக அறிவீர்கள். இதிலிருந்து சொந்த மனசாட்சிப்படி எவரும் பொதுநல சேவையில் ஈடுபட முடியாதென்றும், சுய மதிப்போடும், தன் மனசாட்சிப்படியும் ஒருவர் நடக்க வேண்டுமானால் அவர் எத்தகைய கஷ்ட நஷ்டத்திற்கும் அடக்குமுறைக்கும் ஆளாக வேண்டுமென்பது நன்கு புலனாகும். இத்தகைய துன்பங்கள் ஏகாதிபத்தியத்தையே எதிர்க்கிறோம் – உடைக்கிறோம் – தகர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஆட்சியில் ஒருவர் அனுபவிக்க வேண்டியிருக்கிற தென்பதைக் குறித்துதான் நாம் வருந்த வேண்டியிருக்கிறது. இந்தச் சம்பவத்தை நோக்கும்போது கனம் ராஜகோபாலாச்சாரியார் ஹிட்லரைப்போல தனக்கு விரோதமான அபிப்பிராயமுடைய நோக்கமுடைய கட்சியோ இயக்கமோ நாட்டிலேயிருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவருக்கு...

இந்தி செத்தது! இனி ஆச்சாரியாரின் அடுத்த ஆட்டம் என்ன?

இந்தி செத்தது! இனி ஆச்சாரியாரின் அடுத்த ஆட்டம் என்ன?

  நம் சரணாகதி மந்திரிகள் தமிழ் மக்களுக்குள் ஆரியக்கலை ஆரிய நாகரிகம் ஆகியவைகளைப் புகுத்தி வருணாச்சிரம தர்மத்தை புதுப்பித்து நிலைநிறுத்தச் செய்யும் சூழ்ச்சியான இந்தி கட்டாயமாய் கற்பிக்கும் திட்டத்தை எதிர்த்து தமிழ் மக்கள் போர்புரிந்து வருவதும் அதற்காக இதுவரை சுமார் 360 பேர்கள் பார்ப்பன ஆட்சிக் கொடுமைக்கும் வண்நெஞ்ச அடக்குமுறைக்கும் ஆளாகி பலர் வருஷக் கணக்கான கடின காவல் தண்டனை அடைந்து சிறையில் வதிந்து வருவதும் வாசகர்கள் அறிந்ததாகும். நம் சரணாகதி மந்திரிகள் ஆங்கிலேயரிடம் சரணாகதி அடைந்து தன்மானமற்று பெற்ற பதவியை நாட்டு நலனுக்கோ மனித வர்க்க உயர்வுக்கோ கால நாகரிகத்துக்கோ பயன்படுத்தாமல் வஞ்சம் தீர்க்கவும் தம் வகுப்புக்கு நிலையான ஆதிக்கமும் அதிகாரமும் ஏற்படுத்தச் செய்யவும் மற்ற வகுப்பார் என்றென்றும் தலையெடுக்க வகையில்லாமல் அழுத்தி வைக்கவும் முறட்டுத்தனமாய் பயன்படுத்தி வருவதும் “உள்ளங்கை நெல்லிக்கனி” என்பது போல் யாவருக்கும் விளங்கக் கூடிய காரியமேயாகும். சரணாகதி மந்திரிகள் பதவியேற்ற 15 மாத காலத்துக்குள் பார்ப்பனரல்லாதார்...

காங்கரஸ் ஆட்சியில் போலீஸ் நீதி

காங்கரஸ் ஆட்சியில் போலீஸ் நீதி

  தலைவர் அவர்களே! தோழர்களே! கோவை ஜில்லா இந்தி எதிர்ப்புத் தொண்டர் படையை வரவேற்கும் இந்த பெரிய கூட்டத்தில் போலீசார் சம்மந்தமான விஷயங்களை பேசவேண்டாம் என்று இருந்தேன். ஆனால் எனக்கு முன் பேசிய தோழர்கள் அந்த விஷயத்தை இழுத்துவிட்டுவிட்டதாலும், சற்று கடுமையாய் பேசினதாலும் நான் அதைப் பற்றி இரண்டொரு வார்த்தைகளாவது முதலில் பேசவேண்டி ஏற்பட்டுவிட்டது. தோழர் நடேசன் ஒரு சப் இன்ஸ்பெக்டர் மகன் ஆதலால் போலீசாரின் யோக்கியதையை நன்றாய் அறிந்தவராதலாலும் வாலிபரானதாலும் சற்று வீரமாகவே பேசினார். ஆனால் என்னால் அப்படிப் பேச முடியாது. அதோடு போலீசாரால் ஏற்படும் நன்மை தீமை இரண்டைப் பற்றியும் பேசவேண்டும். போலீசார் உதவி நமக்கு போலீசார் உதவி இல்லை என்று சொல்லிவிட முடியாது. எனது இந்த 15, 20 வருஷம் பொதுத் தொண்டு வாழ்வில் இம்மாகாணம் பூராவும் குறிப்பாக தமிழ்நாடு பூராவும் சுற்றிச்சுற்றி 100 முதல் ஒண்ணரை லக்ஷம் ஜனங்கள் வரை கொண்ட ஆயிரக்கணக்கான மீட்டிங்குகளில் பேசி...

பகிரங்கப் பேச்சு  – கொறடா

பகிரங்கப் பேச்சு – கொறடா

  “நம் ராஜாஜி ஏதாவது ஒரு காரியத்தைச் செய்தால் அதில் தவறு இருக்குமா? தவறுதான் இருந்தாலும் அதைத் தவறு என்று தான் எண்ண முடியுமா? அப்படியே யாராவது எண்ணிவிட்டாலும் மகாத்மா காந்திதான் அப்படி எண்ணுவதற்கு இடங்கொடுத்து விடுவாரா? ஒருக்காலும் இடங்கொடுக்கமாட்டார் என்பதை, மகாத்மா காந்தி தாம் சமீபத்தில் எழுதிய “ஹரிஜன்” கட்டுரையின் மூலம் காட்டிக்கொண்டுவிட்டார். ஹிந்தி எதிர்ப்பாளர்கள் விஷயத்தில் ராஜாஜி நடந்து கொண்டதும், அதன் சம்பந்தமாக அவர் கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகித்ததும் சரிதான் என்று மகாத்மா காந்தி அக்கட்டுரையில் கூறிவிட்டார். “மகாத்மா காந்தியே சரிதான் என்று கூறிவிட்ட பிறகு, ராஜாஜி செய்தது தவறு என்று கூற யாருக்கு வாயிருக்கிறது?” என்று சில பத்திரிகைகளும் கூறிவிட்டன. ~subhead அனாவசியம் ~shend வாஸ்தவந்தான். மகாத்மா காந்தி ஒருவர் செய்ததில் எது சரி. எது தவறு என்பதை யோசித்துப் பார்க்காமலா கூறுவார்? கூறமாட்டார் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அதோடு அனாவசியமாக மற்றோர் விஷயத்தையும் காந்தி...

காந்தி ஜயந்திக்கு அர்ப்பணம்

காந்தி ஜயந்திக்கு அர்ப்பணம்

  காங்கரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியையும், முஸ்லிம் லீக்கையும் உத்தியோக வேட்டைக் கட்சிகள் என்றும், கண்டிறாக்ட் கொள்ளை கட்சிகள் என்றும் ஆதலாலேயே இவர்கள் கையில் இருக்கும் நிருவாக அதிகாரத்தை எப்படியாவது பிடிங்கிவிட வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டு என்ன என்னமோ சூழ்ச்சிகளும் பிரயத்தனங்களும் செய்து வந்தார்கள். இந்தக் காரியத்திற்காக பார்ப்பனர்கள் ஒரு காந்தி என்பவரை பிரமாத விளம்பரப்படுத்தி அவர் பேரைச் சொல்லி மக்களை பலவழிகளில் ஏமாற்றி வந்தார்கள். இதற்கு ஆக பிரசாரம் நடைபெறுவதற்கு தனிமையில் யோக்கியதை அற்றவர்களையும் சமுதாயத்தில் இழிவான ஈன வாழ்க்கை உள்ளவர்களையும் வாழ்க்கைக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் எப்படிப்பட்ட ஈனக் காரியங்களும் செய்துவந்த அனுபவமுள்ளவர்களையும் பிடித்து கூலியும் கொடுத்து மற்ற கட்சியாரை வையும் படியும் அதாவது தங்களைத்தவிர மற்றவர்கள் உத்தியோக வேட்டைக்காரர் என்றும் கண்டிறாக்ட் ஆட்சிக்காரர் என்றும் நிர்வாகத்தில் லஞ்சம் வாங்குபவர்கள் என்றும் கூப்பாடு போட்டு குரைக்கும்படியும் செய்தார்கள். பாமர மக்கள் தங்களது மடமையினாலும் பொறுப்பற்ற தன்மையினாலும் அற்ப சுயநல குணத்தாலும் இவர்கள்...

* சைமன் ராமசாமி மறுப்பு

* சைமன் ராமசாமி மறுப்பு

  காங்கரஸ் பத்திரிகைகளின் புரட்டும் யோக்கியதையும் திருச்சி. செப். 21. பிரபல தினசரிகளாகிய “ஹிந்து” “சுதேசமித்திரன்” “தினமணி” “ஜெயபாரதி” முதலியவைகளில் தமிழ் படையினர் தவிப்பு, காங்கரஸ் கட்சியின் உதவி, தமிழ் படைத்தலைவர் குட்டு வெளியாகியது, வசூல் ரூ.1000 எங்கே? ஈ.வெ.ரா.வின் யோக்கியதை, படையினர் சந்தியில் விடப்பட்டனர், ஊர்போகப் பணங்கிடையாது என்று 17-9-38ந் தேதி “ஜெயபாரதி”யிலும், ஜெயிலுக்குப் போகிறாயா? பட்டினி கிடக்கிறாயா? என்றும் இன்னும் அயோக்கியத்தனமாகவும் 17-9-38 “தினமணி”யிலும், தெருவில் தவிக்கவிடப்பட்டனர் என்று 16-9-38 “சுதேசமித்திர”னிலும் தலைப்புகள் கொடுத்தும் அறிக்கை கொடுத்தவர்கள் நால்வர்களில் என் பெயரை முதலில் பிரசுரித்தும் இருப்பதைப் பத்திரிகைகளில் பார்த்ததும் அப்படியே திடுக்கிட்டுப் போனேன். பத்திரிகா உலகு இவ்வளவு கட்டுப்பாடாயும் கேவலமாயும் நடப்பதையறிந்து மனமுடைந்து போனேன். அவ்வறிக்கையில் கண்டது அத்தனையும் சுத்தக் கட்டுக்கதை என்றும் புராணப் புரட்டு என்றும் அதற்கும் எனக்கும் கிஞ்சித்தும் சம்பந்தம் கிடையாது என்றும் இவ்வறிக்கையின் மூலம் எல்லோருக்கும் அறிவிக்க விரும்புகிறேன். இத்துடனில்லாது, சென்னை சட்டசபை காங்கரஸ்...

காங்கரஸ்காரர் இழி செயல்

காங்கரஸ்காரர் இழி செயல்

  இந்தி எதிர்ப்பு இயக்கம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வலுப்பெற்று வருகிறது. கனம் ஆச்சாரியார் கிரிமினல் திருத்தச் சட்டத்தைக் கையாளுவதைப் பார்த்து இந்தியா முழுதும் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. சென்னை மாநகரம் முழுதும் காங்கரசை எதிர்க்கிறது; வெறுக்கிறது. எனவே தமது மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஏதாவது செய்து தீரவேண்டிய நிர்ப்பந்தம் காங்கரஸ்காரருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்காக நேர்மையான முறையில் ஏதாவது அவர்கள் செய்ய முயன்றால் எவரும் ஆட்சேபிக்கமாட்டார்கள். ஆனால் இழிவான முறைகளைக் கையாண்டால் யாராவது கண்டிக்காமல் இருப்பார்களா! இந்தி எதிர்ப்பாளர் மானத்தைக் கெடுக்கும் பொருட்டு பலபொய்க் கதைகளை காங்கரஸ் பத்திரிகைகள் கட்டிவிட்டன. சிறையிலிருக்கும் இந்தி எதிர்ப்பாளரை மன்னிப்புக் கேட்டு வெளியேறும்படி விளம்பர மந்திரி கனம் எஸ். ராமநாதன் தூண்டியதாகவும் கூட சென்னை “சண்டே அப்சர்வர்” பத்திரிகை எழுதிற்று. ஸ்டாலின் ஜெகதீசனை விலைக்கு வாங்கி அவரைக்கொண்டு இந்தி எதிர்ப்பாளரைத் தாக்கி ஒரு அறிக்கை வெளியிடும்படியும் காங்கரஸ்காரர் சூழ்ச்சி செய்து பார்த்தார்கள். திருச்சித் தமிழர் பெரும்படை சோற்றுப்படை என்றும்...

தமிழ்நாடு தமிழருக்கே

தமிழ்நாடு தமிழருக்கே

  காங்கரஸ் லôயம் “சுயராஜ்யம்” என முதன் முதல் கூறியது காலஞ் சென்ற தாதாபாய் நவரோஜி. அது போல “தமிழ்நாடு தமிழருக்கே”என தமிழர்களின் பிரதிநிதிகளான மூன்று பெரியார்கள் சென்ற 11-ந்தேதி சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒன்றரை லக்ஷம் தமிழர்கள் முன்னிலையில் கூறிவிட்டார்கள். அக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த மறைமலை அடிகள் மதவாதிகள் பிரதிநிதி, அக்கூட்டத்தில் பேசிய தோழர் பாரதியார் காங்கரஸ்காரர் பிரதிநிதி, அன்று பேசிய ஈ.வெ. ராமசாமிப் பெரியார் பகுத்தறிவுவாதிகள் பிரதிநிதி. ஆகவே தமிழ்நாட்டின் அபிப்பிராயம் அக்கூட்டத்திலே பூரணமாகப் பிரதிபலித்தது என தைரியமாகக் கூறிவிடலாம். தமிழ் நாட்டார் மதவாதிகள், பகுத்தறிவுவாதிகள், காங்கரஸ் வாதிகள் என்ற மூன்று பெரும் பிரிவில் அடங்கி விடுவர். அந்த மூன்று பிரிவார் அபிப்பிராயத்தையே அந்த மூன்று பெரியார்களும் தமிழர்களுக்கு அன்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் இப்பொழுது தோன்றியிருக்கும் தமிழர் இயக்கம் எந்தக் கட்சிக்கும் உரியதல்ல வென்பதும் ஜாதி மத நிற கட்சி வித்தியாசமின்றி தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்பதும்...

* சுப்பிரமணியய்யர் புராணம்

* சுப்பிரமணியய்யர் புராணம்

  புத்தக வியாபாரத்தில் பங்கு கேட்ட படலம் கல்விக் கமிட்டி அங்கத்தினரைக் காக்காய் பிடித்த அத்தியாயம் M.S. SUBRAHMANIA AIYER 160, THAMBU CHETTY ST., Author – Journalist Councillor, Corporation of Madras Madras, 23.4.1937 சோதரர் ஸ்ரீமான் இலட்சுமண சுவாமி முதலியாரவர்கள் சமூகம். சுபம். ஆசி பல எல்லாம் வல்ல இறைவனருளால் தங்களுக்கு ஸர்வ மங்களமும் உண்டாகுமாக. நேற்றும் இன்று காலையும் தங்களைக் காண முயன்றேன், ஆனால் முடியவில்லை. தங்கள் கல்வி கமிட்டியில் பாட புத்தகங்களை மாற்றும் யோசனை இருப்பதாகக் கேள்வி. ஸ்ரீமதி அம்முவையும் பார்த்தேன். புதிதாகப் புத்தகங்கள் வைப்பதானால், எனக்கும் ஒரு சிறிது பங்கு தருதல் வேண்டும். மங்கள வாசகங்கள் ஐந்தும் என்னுடையன. வேறு புத்தகங்களில் எனக்குப் பங்கு கிடையாது. எல்லாம் எனக்கே கொடுக்கும்படி கேட்கவில்லை. ஒன்று அல்லது இரண்டு கொடுத்தால் போதும். தங்களைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறேன். மற்றவை நேரில். தங்கள் உதவியை மறக்க மாட்டேன்....

காங்கரஸ் கவுண்சிலர்கள் லஞ்சம் வாங்குவதில்லையாம்

காங்கரஸ் கவுண்சிலர்கள் லஞ்சம் வாங்குவதில்லையாம்

  நண்பர்களுக்கு கண்டிராக்ட் கொடுப்பதில்லையாம் கண்டிராக்டில் பங்கில்லையாம் உத்தியோகத்தை சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்வதில்லையாம் இதற்கு ஆதாரம் ஒரு காங்கரஸ் கவுன்சிலர் தோழர் எம்.எஸ். சுப்பிரமணியய்யர் ஒரு காங்கரஸ் வீரராம். தேசபக்தராம். அவர் சிறைக்குப் போனாரோ என்னவோ தெரியாது. ஆனால் பெரிய தேச பக்தர் நாடகம் ஆடி வருவது ஏதோ உண்மைதான். அவர் சென்னைக் கார்ப்பரேஷனிலே மெம்பராகவுமிருக்கிறார். பார்ப்பனர் நிறைந்த ஒரு தொகுதியால் அவர் இரண்டு முறை கார்ப்பரேஷன் மெம்பராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். “தினமணி” ஆசிரியர் தோழர் சொக்கலிங்கம் பிள்ளையின் பிரதம தனகர்த்தர். அவர் மூலம் வெளியான கார்ப்பரேஷன் ஊழல் நாடகத்தில் முக்கிய நடிகராயிருந்தவர் தோழர் எம்.எஸ். சுப்பிரமணியய்யரே. அவர் சென்னை கார்ப்பரேஷன் பள்ளிக்கூடப் புத்தக வியாபாரத்தில் பங்கு கேட்ட கதையை விளக்கும் அவருடைய கடிதம்* அடுத்த பத்திகளில் பார்க்கவும். கார்ப்பரேஷன் கவுன்சிலர் அதிலும் காங்கரஸ் கவுன்சிலர் மேற்கண்ட மாதிரி பங்கு கேட்ட விநோதத்தைப் பாருங்கள். சென்னை முனிசிபல் ஆக்ட் செக்ஷன் 53-கிளாஸ் (ஞீ)...

“மகாத்மா” புரட்டு

“மகாத்மா” புரட்டு

  “கடவுள்ீகளையும், அவதாரங்களையும் காட்டி மக்களை ஏமாற்றுவது இந்தியாவிலே தொன்று தொட்ட வழக்கமாக இருந்திருக்கிறது. ிகடவுள்ீ ஆகவும், அவதார புருஷர்கள் ஆகவும் விரும்பாதவர்களையும் கூட பாமர மக்கள் பிற்காலத்தில் கடவுள்களாக்கி அவதார புருஷர்களாக்கி ஆலயப் பிரதிஷ்டை செய்து தேர்திருவிழா நடத்திக் கொண்டாடுவது இந்தப் பாழும் இந்தியாவிலே, ஒரு வாடிக்கையாகிவிட்டது. புத்தர் ஒரு சீர்திருத்தக்காரர். மதப்புரட்டையும் பார்ப்பனப் புரட்டையும் வெட்ட வெளிச்சமாக்கி மக்களுக்கு நேரான பகுத்தறிவுக்குப் பொருந்திய சாந்தி வழிகாட்டுவதே அவரது லôயமாக இருந்தது. அவரையும் கூட அவரது சிஷ்யர்கள் பிற்காலத்தில் அவதார புருஷராக்கி ஆலயப் பிரதிஷ்டை செய்து புத்தமதத்தை இந்து மதத்திலும் கீழான மதமாக்கி இந்தியாவிலே புத்தமதம் பூண்டு அற்றுப்போகும்படி செய்துவிட்டார்கள். குருட்டு நம்பிக்கையுடையவர்களை வசியப்படுத்த மதம் ஒரு சுளுவான கருவியாக இருப்பதினால் மத சம்பந்தமில்லாத துறைகளிலும் ஒரு சொட்டு மதத்தைப் புகுத்தி மக்களை ஏமாற்றுவது ஒரு பெருவழக்காகப் போய்விட்டது. இந்த உண்மையை உணர்ந்தே தோழர் காந்தி இந்திய அரசியலில் புகுந்ததும்...

ஈ.வெ.ரா. அறிக்கை  பரீøை பார்க்க தொண்டர்களுக்கு வேண்டுகோள்

ஈ.வெ.ரா. அறிக்கை பரீøை பார்க்க தொண்டர்களுக்கு வேண்டுகோள்

  இதுவரை எந்த பத்திரிகைகளுக்கும், இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி சம்பந்தமாக நான் ஒரு அறிக்கையும் விடுக்கவில்லை. ஆனால், இப்பொழுது இந்தி எதிர்ப்பு இயக்கத்தை குறித்து எனது அபிப்பிராயத்தை வெளியிட வேண்டும் என நான் கருதுகிறேன். அதோடு கனம் பிரதம மந்திரி தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் இந்தி எதிர்ப்பாளர்களை குண்டர்கள் என்றும் குண்டர்கள் கிளர்ச்சி என்றும் கூறியிருப்பதற்கும் இச் சமயத்தில் பதில் எழுத வேண்டுமென்று கருதுகின்றேன். சென்றவாரம் பொப்பிலிராஜா சாஹிப் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைக் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அது மிக்க பெருந்தன்மையாகவும் அவரது பரம்பரைக்கு ஏற்றதாகவும் இருந்தது என்பதுடன் அதில் நிலைமையை நன்கு ஆராய்ந்து விளக்கப்பட்டுமிருந்தது. மேலும் அதில் இந்தி பிரச்சினையை குறித்து பொதுஜன வாக்கு எடுக்க வேண்டும் என்றும் இரு கட்சியினரும் இதற்கு கட்டுப்பட வேண்டுமென்றும் காட்டப்பட்டிருந்தது. அது ஒரு நேர்மையான யோசனைதான். அதை எவரும் மறுக்கவு மாட்டார்கள். காங்கரசுக்காரர்களும் காந்தியாரும் இந்த பொதுஜன வாக்கை மதித்து வந்திருக்கிறார்கள். ஆனால்...

இந்தியை இன்று எதிர்க்கவில்லை  12 வருடங்களுக்கு முன்பிருந்தே எதிர்க்கிறோம்

இந்தியை இன்று எதிர்க்கவில்லை 12 வருடங்களுக்கு முன்பிருந்தே எதிர்க்கிறோம்

  சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த அதாவது 1923-ம் வருடத்திலிருந்தே இந்தியைக் கண்டித்து வந்திருக்கிறது. அந்த இயக்கத்தின் சார்பில் கூடுகிற ஒவ்வொரு மகாநாடுகளிலும் இந்தியைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றியும் பட்டிருக்கின்றன. உதாரணமாக 1931 வருடம் ஜúன் மாதம் 7-ந் தேதி கூடிய நன்னிலம் தாலூகா சுயமரியாதை மகாநாட்டில் இந்தியை கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. அந்த தீர்மானத்தை தோழர் சாமி சிதம்பரனார் அவர்கள் பிரேரேபித்தார். தோழர் கு. ராமநாதன் (இப்பொழுது விளம்பர மந்திரியாக இருப்பவர்) அவர்கள் ஆமோதித்து அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றிப்பேசி இருக்கிறார். அந்தத் தீர்மானத்தின் பேரில் 1931-ம் வருடம் ஜüன் மாதம் 14-ந் தேதி “குடி அரசு” பத்திரிகை ஒரு நீண்ட தலையங்கம் எழுதி இருக்கிறது. அந்தத் தலையங்கத்தில் பெரிதும், அந்தத் தீர்மானத்தை பிரேரேபித்தவரும் ஆமோதித்தவரும் பேசிய பேச்சுக்களையே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது பின்னார் பிரசுரிக்கப்படும். அந்த மகாநாட்டில் நிறைவேறிய தீர்மானம் வருமாறு:- “பழைய புராணக் கதைகளைச் சொல்லுவதைத் தவிர...

நமது வேண்டுகோள்

நமது வேண்டுகோள்

  தேச விடுதலைக்காக காங்கரசில் சேர்ந்து உழைத்த அனுபவத்தினால் இந்திய விடுதலைக்கு வெள்ளைக்கார ஆட்சியைவிட பார்ப்பனீயக் கொடுமையே பெரிய தடையாக இருக்கிறதென்றும் காங்கரசில் இருந்து கொண்டு அந்தப் பார்ப்பனீயக் கொடுமையை ஒழிக்க முடியாதென்றும் உணர்ந்த தோழர் ஈ.வெ.ரா. காங்கரசிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டு அவரது சக்திக்கும் புத்திக்கும் இயன்றபடி உழைத்து வரவே பார்ப்பனீயத்துக்குப் பார்ப்பன மதமும் பார்ப்பனர் சிருஷ்டித்த கடவுள்களும் பெருந் துணையாயிருப்பதினால் பார்ப்பன மதமும் பார்ப்பனர் சிருஷ்டித்த கடவுள்களும் ஒழிந்தால்தான் பார்ப்பனீயம் அழியுமெனக் கண்டு பார்ப்பன மதத்தையும் பார்ப்பனர் சிருஷ்டித்த கடவுள்களையும் தாக்கி வரலானார். அதனால் தென்னாட்டுப் பார்ப்பன சமூகம் முழுதும் அவருக்கு எதிரியாயிற்று. எல்லாத்துறைகளிலும் பார்ப்பனர் ஆதிக்கமே இருந்து வந்ததினால் பலவழியிலும் தோழர் ஈ.வெ.ரா. ஹிம்சிக்கப்பட்டார். டாக்டர் வரதராஜúலு நாயுடு அவர்களை அரசியல் விதவையாக்கி மூலையில் உட்கார வைத்துவிட்டது போல்-தோழர் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவரது தமிழ் உணர்ச்சி முழுமையையும் அடக்கிக் கொண்டு மறைமுகமாகவாவது பார்ப்பனீயத்துக்கு ஆதரவளிக்கும்படி செய்துவிட்டதுபோல்...

மீண்டும் ஒன்றரைக் கோடி கடன்  ஒரு சம்பாஷணை  – சித்திரபுத்திரன்

மீண்டும் ஒன்றரைக் கோடி கடன் ஒரு சம்பாஷணை – சித்திரபுத்திரன்

  காங்கரஸ்காரன்: இப்படி கோடி கோடியாய் கடன் வாங்குகிறீர்களே! இது அடுக்குமா? நாமோ எந்த சமயத்தில் விட்டுவிட்டு ஓடப்போகிறோமோ யார் கண்டார்கள். அப்புறம் இந்தக் கடனை யார் கட்டுவது? மந்திரி: கடன்பட்டவன் கட்டிவிட்டு சாகிறானா, சம்பாதித்தவன் சாப்பிட்டு விட்டு சாகிறானா? என்னமோ நம்ம காலம் வரை சக்கரம் ஓடினால் சரி. எவனோ கட்டுகிறான் நமக்கு அந்தக் கவலை எதற்கு? கா: முன்னமே மூன்றேகால் கோடி. இப்பொழுது வேறே ஒன்றரை கோடியா? இது என்ன ஊரா, பாழா? பொது ஜனங்கள் மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போட்டவர்கள் கேட்க மாட்டார்களா? ம: கேட்டு அவர்கள் தாலி அறுந்தது. எங்கேயோ அடித்துப் பிடித்து பணக்காரனிடம் பணம் பிடிங்கி தங்களுக்கு நல்லது செய்வதாகத்தான் கருதுவார்கள். மற்றபடி இது தங்கள் மீது சுமத்தப்படப்போகும் கடனே என்று ஒருவருக்கும் தெரியாது. கா: காங்கரசல்லாத பத்திரிகைகள் இவற்றை வெளியாக்கி விடுமே அப்புறம் கூடவா தெரியாது? ம: நாம்தான் காங்கரசல்லாத பத்திரிகைகள் எல்லாம்...

நான் சிறை புகுந்தால்?

நான் சிறை புகுந்தால்?

  அன்புமிக்க சுயமரியாதைத் தோழர்களே! இந்தி எதிர்ப்புத் தோழர்களே!! நான் இன்று சென்னைக்கு செல்லுகிறேன். பார்ப்பன ஆட்சி அடக்கு முறையின் பயனாய் அநேகமாக 11-ந் தேதி கைது செய்யப்பட்டு விடுவேன். எனக்கு சுமார் மூன்று நான்கு வாரங்களுக்கு முன்பே வாரண்டு பிறப்பிக்கப்பட்டுவிட்டது என்றும் என்னை சென்னைக்கு வெளியில் பிடித்தால் கிளர்ச்சி பலப்பட்டுவிடுமோ என சர்க்கார் யோசித்து நான் சென்னைக்கு வந்தவுடன் கைதியாக்கிவிட வேண்டுமென்று காத்திருக் கிறார்கள் என்றும் கொஞ்ச நாளைக்கு முன்பே கேள்விப்பட்டேன். என்றாலும் கொஞ்ச நாள் வரையில் நான் சென்னைக்கு வருவேன் என்று சர்க்கார் காத்திருந்து பார்த்துவிட்டு அப்புறம் சென்னைக்கு வெளியில் வந்து என்னை கைதியாக்குவார்கள் என்று கருதி நானும் கொஞ்சநாள் தயாராக காத்திருந்து பார்த்தேன். ஆனால் என்ன காரணத்தினாலோ சர்க்கார் அந்தப்படி செய்ய துணிவு கொள்ளவில்லை என்பது எனக்கு தெரிந்துவிட்டது. ~subhead சர்க்கார் மனோபாவம் ~shend சர்க்கார் தங்களுடைய அபிப்பிராயத்துக்கு மாறுபட்டவர்கள் எவ்வித எதிர்ப்பு கிளர்ச்சியும் செய்யக்கூடாது என்கின்ற...

கோவை தமிழர் படை  பவானியில் மாபெருங் கூட்டம்  காங்கரஸ் காலித்தனம்

கோவை தமிழர் படை பவானியில் மாபெருங் கூட்டம் காங்கரஸ் காலித்தனம்

  இன்று இங்கு தமிழர் படை வந்திருக்கிறது என்றும், அந்தப்படை வரவேற்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கே தான் வந்திருப்பதாகவும், இந்த ஊருக்கு தான் 10, 12 வருடத்திற்கு முன் வந்து பேசி இருப்பதாகவும், இன்று தமிழர் படை செல்வதின் நோக்கத்தைப்பற்றிப் பேசப்போவதாகக் கூறினார். இது சமயம் பார்ப்பனரால் தூண்டப்பட்ட ஒரு பார்ப்பனரல்லாத கூலி “வந்தே மாதரம்” என்று கூறினார். அதற்குத் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் “இப்போது வந்துதான் ஏமாற்றுகிறீர்களே இன்னுமா ஏமாற்ற வேண்டும்?” என்று கூறிவிட்டு தான் கூறுவதில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் நாளைக் கூட்டம் போட்டு பதில் கூறுங்கள். இல்லாவிட்டால் பேசுவதில் ஏதாவது சந்தேகமேற்பட்டால் சந்தேகங்களை தலைவர் மூலம் எழுதிக்கொடுத்தால் பதில் சொல்வதாகவும், வீணில் கூட்டத்தில் கலகம் செய்து காலித்தனம் செய்தால் நான் பயந்து விட்டு ஓடி விடப்போவதில்லை யென்றும், தான் இந்த ஊரில் பழகினவரென்றும் தன்னை பயமுறுத்தினால் பயந்து விட மாட்டாரென்றும், இவர்கள் கலகம் செய்வதால் இவர்கள் சூழ்ச்சிகளை...

சர்வம் பார்ப்பன மயம் ஜகத்

சர்வம் பார்ப்பன மயம் ஜகத்

  தாழ்த்தப்பட்ட மக்களுடைய குறைபாடுகளை கவனித்து சீர்திருத்தம் செய்து முன்னேற்றம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட லேபர் கமிஷனர் வேலையை ஒரு பார்ப்பனருக்குக் கொடுத்து அதில் பார்ப்பனீயம் புகுத்தப்படுவதோடு அந்த இலாக்காவும் பார்ப்பனமய மாக்கப்படுகிறது. இப்போது போதாக்குறைக்கு சென்னை இன்ஸ்பெக்டர் ஆப் லோக்கல் போர்டாக தோழர் எஸ்.ரங்கநாதம் ஐ.சி.எஸ். அவர்களை நியமித்திருக்கிறார்கள். இவர் எவ்வளவு பிடிவாதப் பார்ப்பன ஆதிக்கக்காரர் என்பது தோழர் தேவர் விஷயத்தில் நடந்து கொண்டதிலிருந்தும் மற்றும் அவரது கலெக்டர் உத்தியோகத்தில் இருந்தும் மக்கள் நன்றாய் உணர்வார்கள். இம்மாதிரி பெரிய பெரிய பயனுள்ள அதிகார ஆதிக்கமுள்ள உத்தியோகங்களுக்கெல்லாம் பார்ப்பனர்களே நியமிக்கப்படுகிறார்கள். இதற்குப் பெயர்தான் ஜனநாயகம் போலும். இதுதான் ராமராஜ்யம் போலும். இதுதான் “இப்போது நடப்பது நம்ப ஆட்சி” போலும். நடந்தது நடக்கட்டும். இன்னும் என்னென்ன நடக்குமோ நடக்கட்டும். அதிக முறுக்கேறினால் அறுந்துபோகும் என்கின்ற ஆப்த வாக்கியம் மெய்யாகுமா பொய்யாகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். குடி அரசு – செய்தி விளக்கக் குறிப்பு –...

தமிழைக் கட்டாய பாடமாக்காததேன்?  – உண்மை கண்டோன்

தமிழைக் கட்டாய பாடமாக்காததேன்? – உண்மை கண்டோன்

  இப்போது நடந்த சென்னை சட்டசபைக் கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன் காங்கரஸ் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் பல ரசமான விவாதங்கள் நடந்தன. அதுசமயம் காங்கரஸ் தலைவர்களின் அந்தரங்க மனப்பான்மை வெளியாயிற்று. சட்ட சபைக் காங்கரஸ் மெம்பர்களுக்குள்ளேயே சிறு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. தாய்ப்பாஷையபிமானமும், தேசீய வேட்கையுமுடைய எம்.எல்.ஏ. ஒருவர் காங்கரஸ் தலைவர்களைக் கண்டு நாம் சென்ற வருஷ ஆகஸ்டு மாதத்தில் நடந்த கமிட்டி கூட்டத்திலேயே இந்தியைக் கட்டாய பாடமாக வைக்கும்போது தாய்ப்பாஷையையும் கட்டாயமாக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோமே இப்போது தாய்ப் பாஷையைக் கட்டாயப்படுத்தாமல் இந்தியைக் கட்டாய பாடமாக்கியதால் தானே இவ்வளவு எதிர்ப்பு உண்டாகி விட்டது; தாய்பாஷையும் கட்டாய பாடமாகப் பத்தாம் வகுப்பு வரையில் இருக்க வேண்டுமென்று உத்தரவு செய்து விடுங்கள் என்று கேட்டார். உடனே, தலைவர் அவரை ஏற இறங்கப் பார்த்து உண்மையாகவா இப்படி கேட்கிறீர் என்று கேட்டு “தாய்ப் பாஷையை – தமிழைக் கட்டாயமாக்கினால் எப்படி இந்தி எதிர்ப்பு...

ஆம்பூரில் ஈ.வெ.ரா. விஜயம்

ஆம்பூரில் ஈ.வெ.ரா. விஜயம்

  தலைவர் அவர்களே! சகோதரர்களே! நான் இன்று நண்பர் தோழர் சித்தக்காடு கே.ராமையாவைப் பார்த்துப் பேசிவிட்டுப் போவதற்காகவே இங்கு வந்தேன். நான் வந்ததைத் தெரிந்து கொண்ட நீங்கள் என்னை பேசிவிட்டுத்தான் போகவேண்டுமென்று கண்டிப்பாக இட்ட கட்டளையை என்னால் மீற முடியவில்லை. எனக்கு அவசரமான வேலைகளிருக்கின்றன. என்னைப்பற்றி கூட்டத் தலைவர் நான் முஸ்லிம்களுக்கு அதிகம் வேலை செய்து வருவதாகவும், எனது பார்வையில் நடக்கும் பத்திரிகைகள் முஸ்லிம்களின் நன்மைக்கு தொண்டாற்றுவதாகவும் புகழ்ந்தார்கள். அப்படி அவர்கள் என்னைப் புகழ்ந்தது என்னைப் பெருமைப்படுத்துவதற்காகவும் நான் எடுத்துக் கொண்டிருக்கும் வேலையில் உற்சாக மூட்டுவதற்காகவும் சொல்லப்பட்டனவைகளாகவே கருதுகிறேன். ஆனால் உண்மை என்னவெனில் பிராமணரல்லாதாருடைய நன்மைக்கும் குறிப்பாக ஆதிதிராவிடர்கள் நன்மைக்குமே நான் முஸ்லிம்களுடைய உதவியை நாடியதாக இருக்குமே ஒழிய நான் முஸ்லிம்களுக்கு எதுவும் செய்திருக்க முடியாதென்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன். அன்றியும் முஸ்லிம்களுக்கு இன்று யாருடைய உதவியும் தேவையில்லை. இன்று இந்து மத சம்பிரதாயப்படி முஸ்லிம்களைப் பற்றி என்ன எழுதப் பட்டிருக்கிறதோ அதையே...

உஷார்! உஷார்!!  சுபாஷ் போஸ் வருகிறார்!!!  ஏன் வருகிறார்?

உஷார்! உஷார்!! சுபாஷ் போஸ் வருகிறார்!!! ஏன் வருகிறார்?

  காங்கரஸ் தலைவர் என்னும் பேரால் சுபாஷ் பாபு சமீபத்தில் நம் நாட்டுக்கு வரவழைக்கப்படப் போகிறார். அதாவது இம்மாதம் 9- ந் தேதி சென்னை மாகாணத்துக்கு வரப்போகிறாராம். இரண்டு வாரம் சுற்றுப் பிரயாணம் செய்வாராம். அவர் ஏன் வருகிறார்? அவரை யார் வரவழைக்கிறார்கள்? அவர் எதற்காக வரவழைக்கப்படுகிறார்? அவர் எப்படிப்பட்டவர்? அதற்காக நாம் என்ன செய்யவேண்டும்? என்கின்ற விஷயங்களை தமிழ் மக்கள் அறிய வேண்டியது மிகவும் அவசியமும் அவசரமுமான காரியமாகும். எனவே அதைப் பற்றி விளக்குவோம். தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி காங்கரஸ் சர்க்காரால் (பார்ப்பனர்களால்) சமாளிக்க முடியாத நிலைமையில் நடைபெறுகின்றது. இந்த இந்தி எதிர்ப்பைப் பற்றி பார்ப்பனர்களும், பார்ப்பன மந்திரிகளும், பார்ப்பன பத்திரிகைகளும், மற்றும் அவர்கள் தம் நிபந்தனை இல்லாத கூலிகளும் எவ்வளவுதான் விஷமத்தனமாகவும், இழிதன்மையாகவும் பழித்தும், பொய்க் கூற்றுகள் கற்பித்தும், வீணான குற்றச்சாட்டுகள் கூறியும், தப்புப் பிரசாரம் செய்து அலட்சியமாகப் பேசியும் எழுதியும் வந்த போதிலும் இந்தி...

சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷன்  இனியும் மஞ்சள் பெட்டியா?  வெட்கம் இல்லையா?

சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷன் இனியும் மஞ்சள் பெட்டியா? வெட்கம் இல்லையா?

  காங்கரஸ்காரர்கள் கார்ப்பரேஷன் எலக்ஷனுக்கு 13 ஆட்களைப் பொறுக்கி எடுத்து விட்டார்கள். இவர்களுக்கு வரிகொடுப்போர் எதற்காக ஓட்டுச் செய்ய வேண்டும்? சட்டசபையிலேயே ஒரு மந்திரி சொல்லுகிறபடி ஒன்பது மந்திரிகள் ஆடுகிறார்கள். அவர்களுக்கு சொந்த புத்தி கிடையாது. இருந்தாலும் உபயோகிக்க முடியாமல் மானங்கெட்டு தவிக்கிறார்கள். சட்டசபை மெம்பர்கள் கதியும் அப்படியே. அது போலவே கார்ப்பரேஷனிலும் ஒருவர் (சத்தியமூர்த்தி என்கின்ற ஒரு பார்ப்பன தோழர்) சொன்னபடிக்கு தான் மற்றவர்கள் கேட்க வேண்டும். கேட்காவிட்டால் லஞ்சம் வாங்கினான் என்றோ, அடங்காப் பிடாரி – கட்டுப்பாட்டை மீறினான் என்றோ குற்றம் சாட்டி பெயரைக் கெடுத்து ராஜிநாமா செய்யச் சொல்லி வெளியில் விரட்டி விடுகிறார்கள். அய்யருடைய யோக்கியதை சிவசைலம் பிள்ளையை அவமானப் படுத்தியதிலும் தணிகாசலம் செட்டி ரோட்டுப் பெயர் மாற்றியதிலும் தெரியவில்லையா? ஆகவே காங்கரசின் பேரால் நிற்பவர்க்குத் தான் வெட்கம் இல்லை, மானம் இல்லை என்றாலும் காங்கரஸ் நிறுத்தின ஆட்களுக்கு ஓட்டுப்போடும் ஓட்டர்களுக்காவது மானம் வெட்கம் இருக்க வேண்டாமா?...

குடு குடுப் பாண்டி

குடு குடுப் பாண்டி

  குடு குடு, குடு குடு குடு, குடுக் குடுக். சதியாலோசனை நடக்குது சதியாலோசனை நடக்குது நடக்குதூ. குடு குடு, குடு குடு, குடுக் குடுக். அந்த மூலையிலெ நடக்குது. கடலோரத்திலே, காற்று வாக்கிலே, பத்து மந்திரி கூட்டத்திலே மாபாவிகள் நினைப்பிலே நடக்குது, நடக்குது, சதியாலோசனை நடக்குது. குடு குடு குடு குடு குடுக். என்ன நடக்குது சொல்லடி கம்பளத்தாயி? குடு குடு குடு குடு குடக். பத்திரிகையை நிறுத்தலாமா? ஜாமீன் கேட்கலாமா? பாண்டியனைப் பிடிக்கலாமா? விஸ்வநாதனைப் பிடிக்கலாமா வேண்டாம் – வேண்டாம், ராமசாமி ஒருவனைப் பிடித்தால் போதும். அப்புறம் பத்திரிக்கையைப் பிடிக்கலாம் என்று நடக்குது நடக்குது சதியாலோசனை நடக்குது. குடு குடு குடு குடு குடக். ஒரு பழைய சொக்காய் நீங்கள் கட்டிக் கிழித்த பீத்தல் துணி கொடுங்க. நடக்குது நடக்குது அந்த மூலையிலே நடக்குது. இந்தி எதிர்ப்பு படைக்கு 144 போடலாமா என்னு நடக்குது சதியாலோசனை. வாண்டாம் –...

சாஸ்திரியார் – ஆச்சாரியார் சம்பாஷணை

சாஸ்திரியார் – ஆச்சாரியார் சம்பாஷணை

  சாஸ்திரியார்: ஓய், ஓய், ஆச்சாரியாரே! உம்ம காந்தியும் நீரும் ஒழிந்து போக மாட்டீர்களா? ஆச்சாரியார்: என்ன, என்ன இப்படி கோபிக்கிறீள் சாஸ்திரிவாளே? சா: கோபமா, மண்ணாங்கட்டியா? உம்ம தலையிலே நெருப்பை வாரிக் கொட்ட! ஆ: சும்மா சொல்லுங்கள் சாஸ்திரிகளே. கோபப்படாதீர்கள், சங்கதி என்ன? சா: சங்கதியா வேணான்றா! இங்காராவது சூத்திரப்பயல்கள் இருக்கிறார்களா? (என்று சுத்தியுமுத்தியும் திரும்பி பார்க்கிறார்.) ஆ: ஒருத்தருமில்லை சொல்லுங்கோள். சா: நீர்தான் மகாபுத்திசாலியாயிற்றே அப்படி இருக்க இந்த எம்.சி.ராஜா என்கிற – யன் பிராம்மணாள் ஓட்டலிலே, காப்பிகடைகளிலே “பறையன் பள்ளன்” எல்லாம் ஒண்ணா பின்னா புழங்கலாம் என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால் நீங்கள் 50-60 பிராம்மணாள் கொழுக்கட்டையாட்டமா அங்கே இருந்துண்டு அதெ பாசாக்கீட்றதா? இது என்ன கலி காலம். நீர் தான் உம் பெண்ணை காந்தி மகனுக்கு தந்தீர். தொலைந்து போமே. குரங்கு வனத்தைக் கெடுத்ததுமல்லாமெ சந்திரபுஷ்கரணியையும் கெடுத்த மாதிரி இப்படிப் பண்ணீட்டீரே இது நியாயமா? உம்ம...