மேலப்பாளையம் ஆதிதிராவிட மகாநாடு

 

தலைவரவர்களே! தோழர்களே!

ஆதிதிராவிடர்கள் என்பவர்கள் ஆயிரக்கணக்காகக் கூடியுள்ள இந்த பெரிய கூட்டத்தில் பேசும்படியான சந்தர்ப்பம் கிடைத்ததற்காக நான் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதில் ஆதிதிராவிட அபிவிர்த்தி என்பதைப் பற்றி நான் பேச வேண்டுமென்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள். உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி பேசிப்பேசிக் களைத்துப் போய்விட்டது. இனி பேசித் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. உங்கள் நிலை பல நூற்றாண்டுகளாகவே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. அதற்கு முன் ஆயிரக்கணக்கான வருஷங்களாக நீங்கள் இப்படித்தான் இருந்து வந்ததாக புராணங்களும் சரித்திரங்களும் கூறுகின்றன. இவ்வளவு நாள் பேசப்பட்டிராத விஷயம் இனி என்ன பேசப் போகிறேன்? உங்கள் சமூகம் சரித்திரங்களிலும் புராணங்களிலும் இருந்ததைவிட இப்போது அதிலும் இந்த 10 வருஷ காலத்தில் சிறிது மேலான நிலைமையில் இருக்கிறதாக நான் அறிகிறேன்.

~subhead

கொடுமை சிறிது குறைந்தது

~shend

யார் என்ன சொன்னபோதிலும் ஆங்கிலேய அரசாò ஏற்பட்ட பிறகு உங்களுக்கு ஓரளவு கொடுமை குறைந்திருக்கிறதென்று நான் தைரியமாய்ச் சொல்லுவேன். பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்பட்ட பிறகு இனியும் சிறிது உங்கள் நிலை உயரவும் உங்கள் கஷ்டங்கள் கொடுமைகள் போகவும் செளகரியமேற்பட்டதென்று சொல்லுவேன்.

~subhead

பயப்படத் தக்க நிலை

~shend

ஆனால் இவைகள் எல்லாம் 100ல் ஒருபங்கு அளவு என்றுதான் சொல்லலாம். இனியும் 99 பாகம் இருக்கிறது. ஆனால் இன்றைய அரசியல் நிலையைப் பார்க்கும்போது இதுவரை கிடைத்துவந்த நன்மைகளும் சவுகரியங்களும் ஒழிக்கப்பட்டுப் போகும் என்ற பயப்படத்தக்க நிலை ஏற்படுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உங்களுக்கு ஏற்பட்ட நன்மையும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் ஏற்பட்ட நன்மையும் அடியோடு ஒழிந்து போகும்போல் இருக்கிறது.

~subhead

புதிய அரசியல் ஒரு யமன்

~shend

புதிய அரசியல் உங்கள் சமூகத்துக்கு எமனாய்த் தோன்றி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உங்கள் கல்வி ஒழிந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். வார்தா கல்வித் திட்டப்படி இனி உங்கள் ஜாதித் தொழில்கள் என்பவை புதிப்பிக்கப்படப் போகின்றன. அப்படியானால் உங்கள் தொழில் என்ன?

குறிப்பு: 07.10.1938 ஆம் நாள் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் நடைபெற்ற கணேசபுரம் ஆதிதிராவிட மாநாட்டில் அளிக்கப்பட்ட வரவேற்புப் பத்திரங்களுக்கு பதிலளித்து பேசியது.

குடி அரசு – சொற்பொழிவு – 23.10.1938

You may also like...