அருஞ்சொல் பொருள்

 

அகவிலை – தவச விலை

அக்காரவடிசில் – சருக்கரைப் பொங்கல் வகை

அசூயை – பொறாமை

அடப்பக்காரன் – வெற்றிலைப் பை வைத்திருக்கும் ஏவலன், வெற்றிலையை மடித்துக் கொடுக்கும் ஊழியக்காரன்.

அந்தகாரம் – இருள், அறியாமை

அந்தர் – நிறுத்தல் அளவு (50 கிலோ எடை)

அமரிக்கை – அமைதி

அனாசாரம் – தீய நடத்தை

ஆக்கினை – கட்டளை

ஆப்பு – மூளை

ஆயுள்பரியந்தம் – வானாள் முழுவதும்

இஞ்சிநீயர் – பொறிஞர்

இதோபதேசம் – நல்லறிவூட்டல்

ஈடுமெடுப்பும் – ஒப்புயர்வும்

உண்டை கட்டி – கோயிலில் தரும் சோற்று உருண்டை

உருவாரமாய் – பிரதிமையாய்

உளைமாந்தை – கடுநோய், உட்புண்

ஒட்டை வேட்டு – பத்து விரற்கடை வெடி

கந்தமூலம் – கிழங்கு வேர் கனிகள்

கலி – வறுமை, துன்பம்

குச்சுக்காரி – விலைமகளிர்

குதவை – அடமானம்

குமரி இருட்டு – விடியற்கு முன் உள்ள இருள்

குலாம் – அடிமை

கிப்பாத்தும் – ஊதியமும்

கிரியாம்சையில் – செய்கையில்

கிலேசம் – துன்பம்

காலக்ஷேபம் – இசைக் கதையாடல்

காலதேசவர்த்தமானம் – கால இடங்களின் நிலைமை

காலாடிகள் – தொழிலற்றுத் திரிவோர்கள்

காலாடித்தனம் – தொழிலற்றுத் திரிவோன் செய்யும் வேலை

சஞ்சாரம் – யாத்திரை

சம்சயவாதி – சந்தேகவாதி

சர்வகுண்டி – மூத்திரம்

சிட்சை – தண்டனை

சில்வானம் – செலவுக்குக் கொடுத்ததை மிகுத்து வைக்கும் பணம்

சிலாக்கித்த – புகழ்ந்த

சொக்காரன் – சகலன்

சேகண்டி – கோல் கொண்டு அடிக்கும் வட்ட மணி வகை.

சைன்யங்கள் – படைகள்

தகரப் போகிணிகள் – தகர நீர்க்கங்கள்

தத்தம் – நீர் வார்த்துக் கொடுக்கும் கொடை

தத்துகள் – ஆபத்துகள்

ததியோதனம் – தயிர்ச்சோறு

ததாஸ்து – அங்ஙனமே ஆகுக

தம்பூர் – பக்கச் சுருதிக்குரிய ஒரு நரம்புக் கருவி

துக்ஷேபம் – தீமை

துர்லபம் – பெறுதற்கரியது

துராக்ரகம் – வீண்பகை, பேராசை

துலை வழி – நிறைகோல் வழி

தாசாத்துவம் – அடிமைத்தனம்

தாயாதி – ஒரு குடியில் பிறந்த உரிமைப் பங்காளி

தோரணைதரன் – தோரணை தரித்தவன்

நமன் – யமன்

நித்தியம் – நாள்தோறும்

நிமித்தியம் – சகுனம், காரணம்

நிஷ்ட்டூரம் – கொடுமை

நெக்குவிட்ட – தள்ளிவிட்ட, பிளவுபட்ட

பங்கா – படவிசிறி

பஞ்சேந்திரியங்கள் – மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் அய்ம்பொறிகள்

படுகாளி – போக்கிரி, பொய்யன்

பட்டாங்கம் – உண்மை நிலை

பட்டாங்கமாய் – உண்மையாய்

பரிகரிக்க – நீக்க

பரிமளிக்கும் – கூடிக் களிக்கும்

பவனம் – இல்லம், அரண்மனை

புத்திர சந்தானம் – புதல்வற் பேறு

புனருத்தாரணம் – மீண்டும் நிலை நிறுத்துகை

பூண் – கவசம்

பிதிரார்ஜித – முன்னோர் தேட்டை

பிரக்கியாதி – புகழ்

பிரக்யாதி – புகழ்

பிரகாரம் – தன்மை, விதம்

பாப்பர் – இல்லான், பொருளிலி

பொக்கி – தறிதலை

முட்டின்றி – நெருக்கடியின்றி

முனிவு – சினம், வெறுப்பு, களைப்பு, வருத்தம்.

மிருகாதி – புலி

மாரீசம் – வஞ்சகம், ஒய்யாரம்

ரஜா – விடுமுறை

லண்ட – முரண்டுத் தன

வசந்தோற்சவம் – காமன் பண்டிகை, இளவேனிலில் நடைபெறும் திருவிழா

வதிந்து – தங்கி

வன்மனம் – கன்னெஞ்சு

வஜா – நிலவரித்தள்ளுபடி

விட்டி – கோழி

வியக்தமாய் – வெளிப்படையாய்

வியாழவட்டம் – வானமண்டலத்தில் குருவின் பன்னிரு ஆண்டுச் சுற்று.

விரக்கடை தவணை – ஒருமாத தவணை

விருத்தன் – முதமையோன், மேலோன்

விருத்தாந்தம் – வரலாறு

வாக்குத்தத்தம் – உறுதி மொழி கூறல்

வைரி – பகைவன்

 

You may also like...