சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷன் இனியும் மஞ்சள் பெட்டியா? வெட்கம் இல்லையா?

 

காங்கரஸ்காரர்கள் கார்ப்பரேஷன் எலக்ஷனுக்கு 13 ஆட்களைப் பொறுக்கி எடுத்து விட்டார்கள்.

இவர்களுக்கு வரிகொடுப்போர் எதற்காக ஓட்டுச் செய்ய வேண்டும்?

சட்டசபையிலேயே ஒரு மந்திரி சொல்லுகிறபடி ஒன்பது மந்திரிகள் ஆடுகிறார்கள். அவர்களுக்கு சொந்த புத்தி கிடையாது.

இருந்தாலும் உபயோகிக்க முடியாமல் மானங்கெட்டு தவிக்கிறார்கள். சட்டசபை மெம்பர்கள் கதியும் அப்படியே.

அது போலவே கார்ப்பரேஷனிலும் ஒருவர் (சத்தியமூர்த்தி என்கின்ற ஒரு பார்ப்பன தோழர்) சொன்னபடிக்கு தான் மற்றவர்கள் கேட்க வேண்டும்.

கேட்காவிட்டால் லஞ்சம் வாங்கினான் என்றோ, அடங்காப் பிடாரி – கட்டுப்பாட்டை மீறினான் என்றோ குற்றம் சாட்டி பெயரைக் கெடுத்து ராஜிநாமா செய்யச் சொல்லி வெளியில் விரட்டி விடுகிறார்கள். அய்யருடைய யோக்கியதை சிவசைலம் பிள்ளையை அவமானப் படுத்தியதிலும் தணிகாசலம் செட்டி ரோட்டுப் பெயர் மாற்றியதிலும் தெரியவில்லையா?

ஆகவே காங்கரசின் பேரால் நிற்பவர்க்குத் தான் வெட்கம் இல்லை, மானம் இல்லை என்றாலும் காங்கரஸ் நிறுத்தின ஆட்களுக்கு ஓட்டுப்போடும் ஓட்டர்களுக்காவது மானம் வெட்கம் இருக்க வேண்டாமா?

மானமிருந்தால் மஞ்சள் பெட்டியை காறித் துப்புங்கள்!

குடி அரசு – வேண்டுகோள் – 28.08.1938

You may also like...