கட்டமைப்பு நிதி : மாவட்டங்கள் தீவிரம்

விழுப்புரம் கழகம் தீவிரம்

விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம்  20.04.2019 அன்று காலை 10.30 மணிக்கு  நடைபெற்றது மாவட்ட கழகத் தலைவர் பூஆ. இளையரசன் ஒருங்கிணைத்தார், மாவட்டச்  செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்திற்கு தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.   கழகத்தின் அடுத்தகட்ட செல்பாடு மற்றும் தலைமைக் கழக அலுவலகத்திற்கான நிதியை விரைவாக. மே 15 க்குள் வசூலித்து கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மே மாத இறுதியில் பொதுக்கூட்டம் மற்றும்  பயிற்சி வகுப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது

மாவட்ட துணைத் தலைவர் சிறீதர், ஒன்றிய பொறுப்பாளர்கள் பாபு,  கிருஷ்ணராஜ், மூர்த்தி மற்றும் தோழர்கள் கெஜராஜ், சிலம்பரசன், அருண், திருமாவளவன், சிறீநாத், மதியழகன், வசந்த்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு கழகம் தீவிரம்

கழகக் கட்டமைப்பு நிதி தொடர்பான, திருச்செங்கோடு  நகர திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் 28.04.2019 மாலை 4 மணியளவில் திருச்செங்கோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலுக்கு நகர செயலாளர் பூபதி தலைமை வகிக்க, மல்லை ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் முன்னிலை வகித்தார். நகரில் யார் யாரிடம் வசூல் செய்வது, கழக தோழர்களுக்கு கட்டாய நிதி போன்றவை கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

  • கழகத் தோழர் நபர் ஒருவருக்கு குறைந்தபட்சம்

ரூ. 1000 என்றும், அதிகபட்சம் அவரவர் விருப்பத்திற்கும் உட்பட்டது.

  • தோழர்கள் நகர கழகம் நிர்ணயித்த தங்களுடைய நிதியையும், மேலும் அவர்கள் வசூல் செய்த தொகையையும் கட்டாயம் மே15-ற்குள் கொடுக்க வேண்டும்.
  • இனிவரும் காலங்களில், ஒவ்வொரு மாதத்தின் இறுதி வார ஞாயிற்றுக்கிழமை திருச்செங்கோடு நகர கலந்துரையாடல் கட்டாயம் நடைபெறும்.

கலந்துகொண்ட தோழர்கள் திருச்செங்கோடு நகர செயலாளர் பூபதி, மல்லை ஒன்றிய செயலாளர் பெரியண்ணன்,  மனோஜ்,  சோமசுந்தரம்.

பெரியார் முழக்கம் 02052019 இதழ்

You may also like...