Category: திருவாரூர்

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தையில்: ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து கும்பகோணம் மீன் மார்க்கெட் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மண்டல மாநாடு 16.5.2022 அன்று மாலை சிறப்புடன் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் மு. இளங்கோவன் தலைமையில் சா.வெங்கடேசன் (ஒன்றிய அமைப்பாளர்) முன்னிலையில் நடைபெற்றது. கு. பாரி (தஞ்சை மாவட்ட செயலாளர், தி.வி.க.), தெ. மகேசு (மாவட்டச் செயலாளர்), திருச்சி நாகம்மையார் இல்லத்துப் பெண்ணைத் திருமணம் செய்தவரும், திராவிடர் கழகத் தோழருமான பவுண்டரீகபுரம் முருகேசன், பொறியாளர் திருநாவுக்கரசு (உழவர் இயக்கம்), சி.த. திருவேங்கடம் (மாவட்ட அமைப்பாளர்), சா. விவேகானந்தன் (மண்டல செயலாளர் வி.சி.க.) உள்ளிட்டோர் மாநாட்டில் பேசினர். முன்னதாக, பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் திரிபுரசுந்தரி மற்றும் தி.க. தோழர்கள் குணா, சங்கர், கழகத் தலைவர்-பொதுச் செயலாளருக்கு துண்டுகளை அணிவித்து மகிழ்ந்தனர். கரிகாலன் நன்றி கூறினார். தொடர்ந்து 20...

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச். ராஜாவைக் கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உருவ பொம்மை எரிப்புகள் நடந்தன. குமரி மாவட்டத்தில் 07-03-2017 புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீநாத்திடம் புகார் மனு வழக்குரைஞர் வே.சதா (மாவட்டத் தலைவர்) தலைமையில் தமிழ்மதி (மாவட்டச் செயலாளர்), நீதி அரசர் (தலைவர், பெரியார் தொழிலாளர் கழகம்), சூசையப்பா (முன்னாள் மாவட்டத் தலைவர்), அப்பாஜி (வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர், தி.மு.க), வைகுண்ட ராமன், வின்சென்ட் ஆகியோரால் வழங்கப் பட்டது. ஆனைமலை : கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின்  ஒருங் கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் 07-03-2018 மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்றது. ஆனைமலை நகரச் செயலர் வே.அரிதாசு தலைமையில், நகர தலைவர் சோ.மணிமொழி முன்னிலையில் நடைபெற்றது. கண்டன உரையாக நாகராசு (திராவிடர் கழகம்), பரமசிவம் (சிபிஎம் ), மணிமாறன்  (வெல்ஃபேர் பார்ட்டி), அப்பன்குமார் (விசிக), சாந்துசாகுல்அமீது (இந்திய...

நாச்சியார்கோவிலில் கொளத்தூர்மணி பேச்சு இடஒதுக்கீடு வறுமை ஒழிப்பு திட்டமல்ல

தஞ்சைமாவட்டம் திருவிடைமருதூர்ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 17.10.2016 அன்று மாலை 6மணியளவில் நாச்சியார்கோவில் வடக்கு வீதியில் அமைக்கப்பட்ட சுயமரியாதைச் சுடரொளி குடந்தை ஆர்பிஎஸ் ஸ்டாலின் நினைவு மேடையில் தலைமை கழக பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்றது. துவக்கத்தில், மக்கள்பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் குழுவினரின் பகுத்தறிவு பண்பாடும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.  கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர் சா. வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார்.  திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு, நாகை மாவட்ட செயலாளர் தெ. மகேசு, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.  பின்னர், பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று கழகப் பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமை உரையாற்றினார். இறுதியாக, கழகத் தலைவர் கொளத்தூர்மணி சிறப்புரையாற்றினார்.  அவர் தனது உரையில், “ஜாதி ஒழிப்பிற்கு ஒரு இடைக்கால நிவாரணம் என்றால் அது அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களும்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை – மன்னார்குடியில் கண்டன பொதுக்கூட்டம்

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை வாக்கு அரசியலுக்காக தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது” மன்னார்குடியில் மதிமுக மாநில பேச்சாளர் தஞ்சை விடுதலைவேந்தன் பேச்சு! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார்தலைமையில் நடைபெற்றது. சிறப்புரையாற்றிய மதிமுக மாநில பேச்சாளர் தஞ்சை விடுதலைவேந்தன் பேசியபோது, ‘இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த எந்தஒரு மத்திய அரசும், ஒரு மாநிலத்திற்கெதிராக வெளிப்படையாக செயல்பட்டதில்லை ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு மட்டும் தான் காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க உத்திரவிட்டும், அத்தீர்ப்பினை மதிக்காமல் கர்நாடத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அங்கு பாஜக ஆட்சியை பிடிக்க...

கண்டனக்கூட்டம் ! மன்னார்குடி 08102016

கண்டனக்கூட்டம் ! காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவின் மோடி அரசைக் கண்டித்து. திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்….. நாள் : 08.10.2016 அன்று மாலை 6மணியளவில் இடம் : பந்தலடி கீழ்புறம்,மன்னார்குடி. சிறப்புரை : தோழர்.தஞ்சை விடுதலைவேந்தன், (மதிமுக தலைமை கழக பேச்சாளர்)

காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய,கர்நாடக அரசுகளை கண்டித்தும்.. தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவும்

காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய,கர்நாடக அரசுகளை கண்டித்தும்.. தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவும்

திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பிரச்சார கூட்டம். 17.09.2016 மாலை 6மணிக்கு பெரியார் சிலை அருகில் மன்னார்குடி தலைமை : இரா.காளிதாசு மாவட்டசெயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம். சேரன்குளம் சு.செந்தில்குமார் செயலாளர் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் …………………………………………………… சிறப்புரை ………………… தஞ்சை விடுதலைவேந்தன் சாக்கோட்டை இளங்கோவன் தலைமை கழக பேச்சாளர் திராவிடர் விடுதலைக் கழகம்… ………………………………………………………… திராவிடர் விடுதலைக் கழகம் திருவாரூர் மாவட்டம்

தோழர் செங்கொடி 5 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்

மன்னார்குடி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 28.08.2016 மாலை 6 மணிக்கு பெரியார் சிலை அருகில் தோழர் செங்கொடியின் 5ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெறும் தலைமை  இரா.காளிதாசு, மாவட்டச்செயலாளர் சிறப்புரை சேரன்குளம் செந்தில்குமார் செயலாளர் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் நிகழ்ச்சி ஏற்பாடு திராவிடர் விடுதலைக் கழகம் திருவாரூர் மாவட்டம்

நம்புங்கள் அறிவியலை… நம்பாதீங்க சாமியார்களை….பொதுக்கூட்டம் மன்னார்குடி 08082016

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் .கொளத்தூர்மணி அவர்கள் தலைமையில்… திருவாரூர் மாவட்டதில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் நம்புங்கள் அறிவியலை… நம்பாதீங்க சாமியார்களை…. அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம்!… 08.08.2016 மாலை 5மணிக்கு நீடாமங்கலம் பெரியார் சிலைஅருகில்.. இரவு 7மணிக்கு மன்னார்குடி பந்தலடி கீழ்புறத்தில்… மாபெரும் பொதுக்கூட்டம்…!!  அனைவரும் வாரீர்!

சமஸ்கிருத திணிப்பை மோடி அரசு கைவிடவேண்டும் – மன்னார்குடி திவிக ஆர்பாட்டம்

மன்னார்குடி ஜூலை 9 மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் விஞ்ஞான கருத்துக்கள் ஏராளம் இருப்பதாக கூறி, ஐஐடிகளிலும், மத்திய பாடத்திட்டத்தில் இயங்கும் சிபிஎஸ்சி பள்ளிகளிலும், சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அலுவல் மொழிகள் பட்டியலில் எட்டாவது மொழியாக சமஸ்கிருதத்தை அறிவித்துள்ளது. இவற்றை கைவிட வலியுறுத்தி திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மனிதநேய ஜனநாயகட்சி மாவட்ட செயலாளர் சீனி ஜகபர்சாதிக், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் சேக்தாவூத், தொகுதி தலைவர் முகமது அலி தமிழக மக்கள் புரட்சிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆறுநீலகண்டன், திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன், மதிமுக நகர செயலாளர் சன் சரவணன், மாவட்ட பிரதிநிதி மீனாடசி சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் தொகுதி துணை செயலாளர்...

அய்யா அருணாசலம் மறைவு திராவிடர் இயக்கத்திற்கு பேரிழப்பு

‘அய்யா அருணாசலம் மறைவு திராவிடர் இயக்கத்திற்கு பேரிழப்பு’ திருக்கண்ணபுரத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு பேச்சு திருக்கண்ணபுரம் மே. 25 பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் தமிழ் இசை மன்றம், தமிழ் சான்றோர் பேரவை நிறுவனருமான அய்யா அருணாசலம் அவர்கள் நேற்று முன்தினம் சென்னையில் இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் நடைபெற்றது. அய்யா அருணாசலம் அவர்களின் இறுதி நிகழ்வில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் தலைமைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளையராஜா, நாகை மாவட்ட செயலாளர் தெ.மகேசு, மாவட்ட அமைப்பாளர் அன்பரசன், மாவட்ட பொருளாளர் விஜயராகவன், திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, திருச்சி மாவட்ட அமைப்பாளர் குணா, மயிலாடுதுறை நகர தலைவர் நாஞ்சில் சங்கர் ஆகியோர் பங்கேற்று இறுதி மரியாதை செய்தனர். பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு பேசுகையில்...

முள்ளி வாய்க்கால் பேரழிவு 7ம் ஆண்டு நினைவேந்தல் மன்னார்குடி 19052016

முள்ளி வாய்க்கால் பேரழிவு 7ம் ஆண்டு நினைவேந்தல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார் குடியில் நடைபெற்றது. மன்னார்குடி மே.19 இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி அன்று அப்பாவி தமிழர்கள் மீது தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்கள் கொத்து குண்டுகளை வீசி ஒரே நாளில் ஒன்றை லட்சம் தமிழ் மக்களை சிங்கள அரசு முள்ளி வாய்கால் பகுதியில் கொன்று குவித்தது, அப்போரில் இறந்த அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முள்ளி வாய்க்கால் 7ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் சேரன்குளம் செந்தில் குமார், மதிமுக நகர செயலாளர் சன் சரவணன், நாம் தமிழர் கட்சி மன்னார்குடி சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் வேதா பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்....

காவி இருளில் முழ்கி கிடக்கும் மக்களை,பகுத்தறிவு பாடல்கள் மூலம் மீட்க வேண்டும்”- மக்கள் பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் தாயார் படத்திறப்பில் தோழர் அரங்ககுணசேகரன் பேச்சு.

”காவி இருளில் முழ்கி கிடக்கும் மக்களை,பகுத்தறிவு பாடல்கள் மூலம் மீட்க வேண்டும்”- மக்கள் பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் தாயார் படத்திறப்பில் தோழர் அரங்ககுணசேகரன் பேச்சு. பேராவூரணி மே. 6 திராவிடர் விடுதலைக்கழக பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் மறைவுற்ற தாயார் சின்னப்பிள்ளை அவர்களின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி திராவிடர் கழக மாவட்ட துணைத்தலைவர் அரு.நல்லதம்பி தலைமையில் பள்ளத்தூரில் நடைபெற்றது. தோழர் சின்னபிள்ளையின் படத்தினை பெரியார் பெருந்தொண்டர் அழகிய நாயகிபுரம் தோழர் ப.அ.வைத்தியலிங்கம் திறந்து வைத்தார். தோழர் சின்னப்பிள்ளையின் தொண்டினை நினைவு கூர்ந்து, சத்துணவு ஊழியர்சங்க மாவட்ட தலைவர் மனோகரன், ஆசிரியர் வீரமணி, தமாகா நிர்வாகி வை.ராகவன்,விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி முருகேசன், விடுதலை தமிழபுலிகள் கட்சியின் பொறுப்பாளர் பசுபதி, கூத்தலிங்கம் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆத்மநாதன், திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் செல்வராஜ்,திராவிடர் விடுதலைக்கழக தஞ்சை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கு.பாரி,மெய்சுடர் இதழ் ஆசிரியர் வெங்கடேசன், இசிஐ திருச்சபை ஆயர் ஜேம்ஸ், தமிழக...

உடுமலை சங்கர் படுகொலையை கண்டித்து பேராவூரணியில் கண்டன ஆர்ப்பாட்டம் 25032016

இன்று (25.03.2016) மாலை 5 மணிக்கு பேராவூரணியில் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஜாதி மறுப்பு திருமணம் செய்த உடுமலை சங்கர் ஜாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தோழர் எவிடன்ஸ் கதிர்,தோழர் ஆறு.நீல கண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்கள்.

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – மன்னார்குடி புகைப்படங்கள்

மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் ! மன்னார்குடியில் 01.02.2016 அன்று மாலை கண்டன ஆர்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் நடைபெற்றது. ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பயின்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டும், தற்கொலைக்கு காரணமான ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் அப்பாராவ், மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிதி இராணி, மத்திய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய அமைச்சர் இருவரையும், பதவி நீக்கம் செய்யகோரியும், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனிஜெகபர் சாதிக், எஸ்டிபிஐ கட்சி தொகுதி தலைவர் முகமது அலி,...

மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சி மன்னார்குடி 27112015

திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சி மன்னார்குடி நடைபெற்றது. மன்னார்குடி நவ 27 இளமை சுகங்களை எல்லாம் துறந்து விட்டு, எதிர்கால சந்ததிகளுக்காக தம் நிகழ்காலத்தைப் பணயம் வைத்துப் போராடி தம் இன்னுயிரை ஈகம் செய்தோர் பல்லாயிரக்கணக்கானோர். ஆண், பெண் என்கிற பாலின வேறுபாடின்றி, ஏழை, பணக்காரன் என்கிற பொருளிய வேறுபாடுகளின்றி, உயர்சாதி ரூ கீழ்சாதி என்கிற சமூக வேறுபாடுகளின்றி, தரைப்படை, வான்படை, கடற்படை, தற்கொலைபடை என உலகின் எந்த நாட்டு விடுதலைப்படைக்கும் இல்லாத தனிச்சிறப்புகளுடன் களம் கண்டு மாண்ட அம்மாவீரர்கள் நினைவைப்போற்றும் நாளே நவம்பர் 27. 1982ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று பிரபாகரனின் மடியில் தலைவைத்தபடியே உயிர்விட்ட சங்கர் என்கிற சத்தியநாதன் முதற்களப்பலியான அம்மாவீரனின் மறைந்த நாளே (நவம்பர் 27) மாவீரர் நாள். அந்நாளில் இலட்சியத்துக்குத் தன்னையே ஈந்தரூநாட்டு விடுதலைக்கு உயிரை கொடுக்க முன்வந்த – தமிழ்மக்களின் நல்வாழ்வுக்காக வாழ்வை இழந்த மாவீரர்களுக்கும், தமிழ் பொதுமக்களுக்கும் மரியாதை செலுத்திட உலகம்...

மன்னார் குடியில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் ஆர்ப்பாட்டம் !

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! என வலியுறுத்தி 19.10.2015 திங்கட்கிழமை காலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அரசு அலுவலகங்களில் மதசார்புடைய வழிபாடுகள் மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களை தடுக்கக்கோரியும், அவற்றிக்கு எதிரான அரசு உத்தரவுகளைநடைமுறைப்படுத்தக்கோரியும், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில், தமிழக அரசு அலுவலகங்களில் எவ்வித மதவழிபாடுகளும் ஆயுத பூஜை கொண்டாட்டங்க-ளும் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு காவல்துறை உட்பட அனைத்து அலுவலகங்களுகும் ஆணைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அரசு ஆணைகளை முறையாக நடைமுறை படுத்தப்படாமல் அவற்றிக்கு எதிரான செயல்பாடுகள் அலுவலகங்களில் மிகுந்துள்ளன. ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், கடவுள் படங்கள் சாமியார்களின் படங்கள் சிலைகள் வழிபாட்டுபொருட்கள் வைக்கப்பட்டு கோவில்களில் நடப்பதுபோல் சூடம்கொளுத்துதல், சாம்பிராணி புகைபோடுதல் தீபாராதனை போன்றவைகள் நடந்துவருகின்றன. இதன் ஒருபகுதியாக ஆயுதபூஜை நேரங்களில் மிகவும் ஆடம்பரமாக ஒலிபெருக்கிகளை வைத்து வாழைமரம் கட்டி புரோகிதர்களை அழைத்துவந்து...

முத்துப்பேட்டையில் பெரியார் சிலை கூண்டு – கழக முயற்சியால் நீக்கம் 0

முத்துப்பேட்டையில் பெரியார் சிலை கூண்டு – கழக முயற்சியால் நீக்கம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த 16 செப்டம்பர் 1996ம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தந்தை பெரியாருக்கு முழு உருவ சிலை வைக்கப்பட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திறந்து வைத்தார். 2 ஆண்டுகள் கழித்து முத்துப்பேட்டை பகுதியில் உள்ள இந்துத்துவ சக்திகளால் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. மீண்டும் கடந்த 2004ம் ஆண்டு மதிமுக சார்பில் புதிதாக முழு உருவ பெரியார் சிலை அமைக்கப்பட்டு மதிமுக பொதுச் செய லாளர் வைகோ திறந்து வைத்தார். இந்த நிலையில் முத்துப்பேட்டையில் இந்துத்துவா சக்திகளின் தொடர் சதி செயல்களால் பல்வேறு மத கலவரங்கள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டன. வருடா வருடம் இந்து முன்னணி பா.ஜ.க. சார்பில் வினாயகர் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு தொடர்ந்து முத்துப்பேட்டை பகுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்தனர். தந்தை பெரியார் சிலையை எப்படியேனும் அகற்ற பல்வேறு சதி திட்டங்களை தீட்டி வந்தனர்....

0

திருவாரூர் மாவட்டக் கலந்துரையாடல்

12-8-2015 அன்று மாலை 6-00 மணிக்கு கழகத்தின் திருவாரூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், மன்னார்குடி  மதர்சா அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.