கோயில் நுழைவு உரிமை கோரி கழகம் முற்றுகைப் போராட்டம்

 

ஜாதி – தீண்டாமை – வன்கொடுமைக்கு எதிராக உரிய நடவடியை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் 15-06-2023 அன்று மாலை 3 மணியளவில்  நடைபெற்றது.

 

முற்றுகை போராட்டம் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் தலைமையில் நடைபெற்றது.

 

விழுப்புரம் மாவட்ட தலைவர் இளையரசன், செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் இராமர், கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

 

போராட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட கழகத் தலைவர் மதியழகன், கடலூர் மாவட்ட கழகச்  செயலாளர் சிவக்குமார்,  கள்ளக்குறிச்சி மாவட்ட கழக அமைப்பாளர் சாமிதுரை, கடலூர் மாவட்ட கழக அமைப்பாளர் சதீஷ், விடுதலை இசைக் குழு கார்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி பரப்புரை செயலாளர் விஜி, பகுத்தறிவு, தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா மற்றும் தோழர்கள்  மருதூர் மதிவாணன், பாலாஜி, வீரபாண்டி மற்றும் ஆத்தூர் திவிக மாவட்டப் பொறுப்பாளர் மகேந்திரன் உட்பட விழுப்புரம் கள்ளகுறிச்சி கடலூர் மாவட்ட கழகத் தோழர்கள் 50க்கும் மேற்ப்பட்டவர்கள்  கலந்துகொண்டனர். பின்னர் அனைவரும் கைதாகி மாலை 7.30 மணியளவில்  விடுவிக்கப்பட்டனர். தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைத்த தோழர்களை விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி  உறுப்பினரின்  தனி செயலாளர் மருதம் இரவி கார்த்திகேயன்  நேரில் வந்து  தோழர்களை வாழ்த்தினார்.

 

ஆசிரியர் சுண்டு விரல் இராமமூர்த்தி போராட்டத்தில் பங்கேற்ற தோழர்களை பெரியார் முன்னெடுத்த ஜாதி ஒழிப்பு போராட்டத்தை குறிப்பிட்டு பேசியதோடு விழுப்புரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய இந்த போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று தோழர்களை வாழ்த்தி பேசினார்.

பெரியார் முழக்கம் 22062023 இதழ்

You may also like...