கள்ளக்குறிச்சியில் ‘பறிபோகும் மாநில உரிமைகள்’ விளக்கப் பொதுக்கூட்டம்

11-03-2023 அன்று மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நைனார்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது .

கழக பரப்புரைச் செயலாளர் தூத்துகுடி பால்.பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள்

விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூஆ.இளையரசன். கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார், கடலூர் மாவட்டச் செயலாளர் சிவக்குமார். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் இராமர், மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை, மாவட்டத் துணைச் செயலாளர் வெற்றிவேல், நைனார்பாளையம் நடராஜ், பெரியார் வெங்கட், அசி.சின்னப்பா, தமிழர் பாவலர் கீர்த்தி, பெரியார் பிஞ்சு பாடகர் திராவிட மகிழன், நங்கவள்ளி கிருஷ்ணன், பிரபாகரன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டும் கருத்துரையாற்றியும் சிறப்பித்தார்கள்.

தோழர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு பேசப்பட்ட கருத்துகளை ஆர்வமுடன் கேட்டார்கள்.

பெரியார் முழக்கம் 23032023 இதழ்

You may also like...