கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

பேராவூரணி: தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பேராவூரணி ஆவணம் சாலை முகத்தில் அமைந் துள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம்,  நகர அமைப்பாளர் கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா, மதிமுக பொறுப்பாளர்கள் குமார், கண்ணன், மணிவாசன், தேனி ஆல்பர்ட், தமிழக மக்கள் புரட்சி கழகப் பொறுப்பாளர்கள் பைங்கால் மதியழகன், வீரக்குடி ராஜா, சத்துணவு ஊழியர்கள் சங்க பொறுப்பாளர் முத்துராமன், அறநெறி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் வனராணி, ஜேம்ஸ்,   முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கீ.ரே. பழனிவேல், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பேராசிரியர் ச.கணேஷ்குமார், திரைப்படப் பாடலாசிரியர் செங்கை நிலவன், பெரியார் அரும்புகள் அறிவுச் செல்வன், அரும்புச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு : தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளான 17.09.2018 காலை 9 மணிக்கு,  திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, திருச்செங்கோடு ஒன்றிய அமைப்பாளர் சதீஷ்குமார் தலைமையில், பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

சேலம் கிழக்கு : சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது, இந் நிகழ்வில் மாவட்ட செயலாளர் டேவிட், மாவட்ட அமைப்பாளர் முத்து மாணிக்கம், மாநகர செயலாளர் பிரபு, இளம்பிள்ளை பகுதி செயலாளர் தங்கதுரை மற்றும் இளம்பிள்ளை சேலம் தோழர்கள் கலந்து கொண் டனர். பெத்தாம்பட்டி, முருங்கப்பட்டி, குள்ளனம் பட்டி, இரும்பாலை, கேஆர் தோப்பூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, பூசாரிக்காடு, கரிக்கடை, இளம்பிள்ளை பகுதிகளில் கொடியேற்றப்பட்டது. பேரணியின்போது இரண்டு ஆயிரம் துண்டறிக்கைகள் விநியோகம் செய்யப்பட்டது.

நங்கவள்ளி : பெரியார் பிறந்தநாள் விழா நங்கவள்ளி மேச்சேரி ரோட்டில் உள்ள மு.சு.ஏஸ்பின்னிங்மில் தொழில் சங்கத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் ஜெயந்தி, நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் உள்ள கொடிக் கம்பத்தில்  யசோதா , வீரக்கல்லில் உள்ள கொடிக் கம்பத்தில் இந்திராணி ஆகியோர் கொடியேற்றினர்.  கலந்து கொண்ட  தோழர்கள் அன்பு, கிருஷ்ணன், ராஜேந்திரன்,  கண்ணன், சந்திர சேகர், மனோஜ், பன்னீர், உமாசங்கர்.

செஞ்சி : 140ஆ வதுபெரியார் பிறந்தநாள் விழா செஞ்சி கூட்டு சாலையில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பெரியார் சாக்ரடீஸ் அனைவரையும் வரவேற்க பெரியார் படத்திற்கு ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மணி, வி.சி.க. வெற்றிச்செல்வன், தி.க. அர்ச்சுணன், பழங்குடி ம.மு.சுடரொளி சுந்தரம், தி.மு.க. கர்ணன், அ.ம.க.சேகர், சி.பி.ஐ. செல்வராஜ், பெரியார் சிந்தனையாளர் பேரவை துரை திருநாவுக்கரசு. அரிமா சங்கம் அசோக், கவிஞர் செஞ்சி தமிழினியன், தர்மசிங், ஞானமணி மற்றும் பலர்      மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். அரசு நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

கோவை : பெரியாரின் 140ஆவது பிறந்த தின விழா கோவையில் மிக எழுச்சியோடு நடைபெற்றது. கழகத்தின் சார்பில் காலை 10 மணிமுதல் நமது சார்பில் அச்சிடப்பட்ட ‘மக்களை மடையர்களாக்கும் மதவெறி ஆட்சி’  துண்டறிக்கை அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. அதன் பின் காந்திபுரம் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு ஜாதி மத ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. விழா கோவையில் மிக எழுச்சியோடு நடைபெற்றது.  நேருதாஸ் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் தோழர்கள் நிர்மல்குமார், சூலூர் பன்னீர்செல்வம், ஜெயந்த், வீரபாண்டி கணேஷ், லோகு, ஜெப்பிரிகான், உடுமலை இயல், சமையல் கணேஷ், சூலூர் பாபு, முனியப்பன், கிருத்திகா, ராஜா, மாதவன், இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்னை : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக 17.09.2018 காலை 8.30 மணிக்கு சிம்சன் பாலம் அருகில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கத்தை செலுத்தினர்.

தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் பேரணியாக தி.நகர் பேருந்து நிலையம், கலைஞர் கருணாநிதி நகர் பகுதி, கிண்டி ஆலந்தூர் பகுதி, மந்தவெளி குடியிருப்பு மற்றும் இராயப்பேட்டை பெரியார் படிப்பகம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

இறுதியாக இராயப்பேட்டை பெரியார் சிலை அருகே கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் கேக்வெட்டி, பெரியாரின் 140வது பிறந்தநாளில் நாம் முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து தோழர்கள் முன்பு சிறப்புரையாற்றினார்.

திருப்பூர் : பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா. பெரியார் உருவில் ஊர்வலம்  17.09.2018 அன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து துவங்கியது. பாசிச பாஜகவின் மதவெறி அரசியலை முறியடிக்க அணி திரண்ட திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஒரு கி.மீ. ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

150க்கும் மேற்பட்ட தோழர்கள் பெரியார் உருவம் பொறித்த முகத்தினை கொண்டு தந்தை பெரியாரின் புகழ்பாடும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் பாசிச மதவெறி பாஜக அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிமிர்வு கலைக்குழுவின் பறையிசை முன்செல்ல பறையிசைக்கு ஏற்றவாறு தோழர்கள் சிலம்பம் சுழற்றி உடன் வந்தனர். பெரியார் இயக்க கூட்டமைப்பு சார்பில் பாதகை ஏந்தி கொடிகளை உயர்த்தி பிடித்து 150 பெரியார்கள் இரண்டிரண்டு பேராய் முழக்கம் எழுப்பி பெரியார் சிலைக்கு வந்தடைந்தனர்.

கழகத்தின் சார்பில் பொருளாளர் துரைசாமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். முகில்ராசு, நீதிராசன் உட்பட கழகத்தின் மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.  பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 24.09.2018 அன்று நடத்த பெரியார் சிலையில் இருந்து வாகன ஊர்வலமாய் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை ஆரம்பிக்கப்பட்டது.

இராசிபுரம் : இராசிபுரம் நகர கழகத்தின் சார்பில் பெரியாரின் 140 ஆவது பிறந்தநாள் விழா இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு,  பெரியார் படத்துக்கு  மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டு , பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்வில்,  மணிமாறன் (நகர செயலாளர் சிபிஐ) முன்னிலை வகிக்க, சுமதி மதிவதனி வரவேற்புரையாற்ற, ரா.பிடல்சேகுவேரா (நகர அமைப்பாளர்) தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வி.பாலு (திமுக முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், ராசிபுரம் நகர வளர்ச்சி மன்றத் தலைவர்),  வைகறைசெல்வன் (விசி. மாநில துணை செயலாளர் விவசாய அணி),  து. பூபதி, (பொறுப்பாளர் வி.சி.க. இளஞ் சிறுத்தை எழுச்சி பாசறை) ம.சந்திரசேகர் (மா.து.செயலாளர் ஆதி தமிழர் பேரவை), கருப்பண்ணன் (நகர செயலாளர், ஆதி தமிழர் பேரவை),  குப்புசாமி (பொதுச்செயலாளர் தந்தை பெரியார் தொழில் சங்கப் பேரவை), கேசவன் (தலைவர், சிஐடியூ மெய்யநூர் கிளை), நா.குபேர்தாஸ் (தலைவர், கோல்டன் நற்பணி மன்றம்), கீதாலட்சுமி  (வழக்கறிஞர், திமுக), பாலகிருஷ்ணன் (பு.இ.முன்னணி), பூபதி (கோல்டன் நற்பணி மன்றம்), கோபால் வளவன் மற்றும் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். இறுதியாக திலீபன் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.

பெரியார் முழக்கம் 20092018 இதழ்

You may also like...