கடலூர், கரூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள்
6.11.2022 அன்று காலை 11 மணிக்கு புவனகிரி நகரத்தை அடுத்த கீரபாளயத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ் வரவேற்பு கூறினார்.
மாவட்டச் செயலாளர் சிவக்குமார், அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் தலைவர் அ.மதன்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கடந்த 15.10.2022 அன்று புவனகிரி நகரத்தில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1) 15.10.2022 அன்று சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம் என்ற கொள்கை முழக்கத்தோடு நடைபெற்ற நடைபெற்ற தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள் விழா பொதுகூட்டத்திற்கு பெரும் உழைப்பை செலுத்திய, நிதி அளித்து பங்களிப்பை செலுத்திய அனைத்து தோழர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்படு கிறது.
2) தொடர்ச்சியாக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் இந்தித் திணிப்பு முயற்சிகளைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
3) 2023ஆம் ஆண்டிற்கான புரட்சிப் பெரியார் முழக்க சந்தாக்களை வசூலித்து உரிய நேரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.
இறுதியாக புதிய பொறுப்பாளர்களாக சதிஷ் – கழக மாவட்ட அமைப்பாளர், சிவா- இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், பிரேம் – தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஒப்புதலுக்காக பரிந்துரைக்கப்படுகிறது. பிரேம் நன்றி கூறினார்.
கரூர் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் கரூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 06.11.22 அன்று காலை கரூர் ஜவகர் பஜார் ரவி மினி ஹாலில் நடைபெற்றது.
கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் இராமசாமி மற்றும் தோழர்கள் பழனிசாமி, மோகன்தாசு, காமராஜ், வடிவேல் ராமசாமி, செந்தில்குமார், விஜயமோகன், விஜயகுமார், நிகில் கார்த்திக், அண்ணாதுரை, அறிவழகி, அய்யப்பன், பிரபாகரன், கபிலன், நிலவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1) மாவட்டக் கழகத்தினைக் கட்டமைக்கும் வரை வடிவேல் ராமசாமி மாவட்ட அமைப்பாளராக செயல்படுவார்.
2) மாதந்தோறும் கலந்தாய்வு கூட்டங்களை நடத்துவது.
3) வரும் நவம்பர் 26 அன்று ஜாதி ஒழிப்பு மாவீரர் நாளையொட்டி தெருமுனை கூட்டங்களை நடத்துவது.
4) பெரியார் முழக்க சந்தா சேர்த்தலை விரைவுபடுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 10112022 இதழ்