கரூர்-க.பரமத்தியில் எழுச்சி நடைபோட்ட கழகக் கொடியேற்று விழா – கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

22.03.2022 செவ்வாய்கிழமை கரூர் மாவட்டத்தில் கழகக் கொடியேற்று விழா தி.க.சண்முகம் தலைமையில் காலை 11.00 மணிக்கு துவங்கி மாலை வரை நடை பெற்றது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தென்னிலை சமத்துவபுரம், மலைச்சியூர் பிரிவு, சின்னதாராபுரம் பேருந்து நிலையம், அமராவதி ஆற்றுப் பாலம், டி.வெங்கிடாபுரம், இராஜபுரம் பிரிவு, அரவக்குறிச்சி பேருந்து நிலையம், தேர்வீதி, வட்டாட்சியர் அலுவலகம் அருகில், பள்ளபட்டி, அண்ணாநகர், தடா கோவில் ஆகிய 11 இடங்களில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

கொடியேற்று நிகழ்வில், தமிழன் சு.கவின்குமார், ராம்ஜி (எ) தொல் காப்பியன், இரா.காமராஜ், மலைக் கொழுந்தன், ந.முத்து மருதநாயகம், சிலம்பம் கொ.சரவணன், பெ.ரமேஷ், பெ.குமரேசன், ர.ராகவன், பிரசன்னா, தா.பெரியசாமி, நாகராஜ் அரவக் குறிச்சி ஆகிய தோழர்கள் உடனிருந்தனர்.

மாலை 06.00 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம், கழகத் தோழர் வடிவேல் இராமசாமி தலைமையில் நடை பெற்றது.

பொதுக் கூட்டம் துவங்கும் முன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி க.பரமத்தி கடைவீதியில் கழகக் கொடியேற்றினார்.

முதல் நிகழ்வாக காவை இளவரசனின் “மந்திரமா தந்திரமா?” அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடை பெற்றது.

கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி,கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், தி.க.சண்முகம், வழக்கறிஞர் கரூர் தமிழ் ராஜேந்திரன், சாமானிய மக்கள் கட்சி குணசேகர் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “தொடர வேண்டும் திராவிடர் ஆட்சி ஏன்?” எனும் தலைப்பில் உரையாற்றினார்.

நிகழ்வில், தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம், கரூர் மோகன்தாஸ், விஜயகுமார் கடவூர் விஜயமோகன், திருப்பூர் அய்யப்பன்,  தனபால், முத்து,மாணவர் கழகத்தின் ஆனைமலை சபரிகிரி, திருப்பூர் சந்தோஷ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேடையில் கழக வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு 10 சந்தாக்களுக்கான தொகை 2500 ரூபாயை கழகத் தலைவரிடம் வடிவேல் ராமசாமி வழங்கினார்.

பொதுக் கூட்டத்தின் போது கழக வெளியீட்டு புத்தகங்கள் 1800 ரூபாய்க்கு விற்பனை ஆகின.

இறுதியில் கலந்து கொண்ட தோழர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொதுக்கூட்ட நிகழ்வுகளை வடிவேல் இராமசாமி மற்றும் கரூர் கழகத் தோழர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தார்கள்.

 

பெரியார் முழக்கம் 31032022 இதழ்

You may also like...