பெண்களின் “நாத்திகப் பேரணி” – கடவுள் இல்லை; மதம் இல்லை; ஜாதி இல்லை!
கருப்பு உடை தரித்து பெரியாரியப் பெண்கள் தீச்சட்டிகளுடன் அலகுகுத்திக் கொண்டும் கடவுள் இல்லை என்றும் பேரணியாக அணிவகுத்த காட்சியை கொளத்தூர் கண்டது. “நாங்கள் பெரியாரியப் பெண்கள்; எங்களுக்கு கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை, தோழியர்களே! இந்த நம்பிக்கைகள் தான் நம்மை அடிமையில் ஆழ்த்துகின்றன” என்ற செய்தியை மக்களுக்கு கூறினார்கள். மேட்டூர் வட்டத்தின் ஒரு சின்னஞ்சிறு கிராமம் கொளத்தூர். அந்த ஊரைச் சார்ந்த திராவிடர் விடுதலைக் கழக மகளிர் அணியினர் ஒரு புரட்சிகர முடிவை எடுத்தனர். நாத்திகர் விழா நடத்துவது என்று அறிவித்து களம் இறங்கினர். கழகத் தலைமைக்கு அந்த முடிவை தெரிவித்தனர். பெண்களே நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். பெண்களே பொதுமக்களிடம் நிதி திரட்டினார்கள். கடவுள், மதத்தை எதிர்த்து இப்படி பெண்கள் களத்தில் இறங்கி செயல்பட்டு பேரணியையும் விழாவையும் நடத்தி அதை வெற்றியாக்கி சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு முழுதும் இருந்து கழகத் தோழர்கள் பெண்களும் ஆண்களுமாக கொளத்தூர் நோக்கி திரண்டனர்....
