Category: திவிக
ஜாதி மறுப்பு இணையர்களுக்கான பாராட்டு விழா மேட்டூர் 12022017
ஜாதி ஒழிய சமத்துவம் படைக்க புதிய உலகை உருவாக்க ஆதலால் காதல் செய்வீர்…. ஜாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்போம் சமத்துவ சமூகம் படைப்போம்….. காலை 10 – 12 கருத்தரங்கம் நண்பகல் 12 – 1 இணையர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பிற்பகல் 2 – 3 கலை நிகழ்ச்சிகள் மாலை 3 – 4 இணையர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்துதல் மாலை 4 முதல் பாராட்டு விழா வாய்ப்புள்ள தோழர்கள் முன்பதிவு செய்து தவறாமல் கலந்து கொள்ளவும் 9965025847 8056460580 செய்தி இரண்யா
அரியலூர் நந்தினிக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் ஆத்தூர் 06022017
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆத்தூரில்….. அரியலூர் சிறுமி நந்தினி வன்கொடுமை கொலையை கணடித்தும் இந்து முன்னனியியை சேர்ந்த ராஜசேகர் மற்றும் கொலையாளிகள் அனைவரையம் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். பங்கேற்றோர்… குடியுரிமை மக்கள் கழகம். பெண்கள் இணைப்புக் குழு. மார்க்சிய லெனினிஸ்ட். திராவிடர் கழகம். விடுதலை சிறுத்தைகள் கட்சி. திராவிடர் விடுதலைக் கழகம்.ஆத்தூர். செய்தி கணபதி
பொள்ளாச்சி திவிக ஆர்ப்பாட்டம் 06022017
பொள்ளாச்சி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக அரியாலூர் தழித்சிறுமி நந்தினியை பாலியல் செய்து கொலைசெய்த இந்து முண்ணனி காமுகனை கடுமையான தண்டனைச்சட்டம் இயற்றி நந்தினிக்கு நீதிகிடைக்கவேண்டும் எனறு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
கோபி நகர தோழர் நாகப்பன் படத்திறப்பு 30012017
கடந்த 12.01.2017 அன்று மறைந்த கோபி நகர கழகத்தலைவர் தோழர் நாகப்பன் அவர்களின் படத்திறப்பு 30.01.2017 அன்று கொளப்பலூரில் நடைபெற்றது படத்திறப்பு நிகழ்விற்கு மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் இராம இளங்கோவன் அவர்கள் தலைமை தாங்கினார் மாநில அமைப்பு செயலாளர் தோழர் இரத்தினசாமி, மாநில பொருளாளர் தோழர் துரைசாமி ஆகியோர் தோழர் நாகப்பன் அவர்களின் படத்தை திறந்து வைத்தனர் படத்திறப்பு நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் தோழர் சிவகாமி தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் குணசேகரன் திராவிடர் கழக தோழர் யோகானந்தம் மணிமொழி மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர். செய்தி ம. நிவாசு
கொளப்பலூர் கழகத்தின் சார்பாக தமிழர் திருவிழா 30012017
ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி கொளப்பலூர் கிளை கழகத்தின் சார்பாக கடந்த 30.01.2017 அன்று தமிழர் திருவிழா நடைபெற்றது இந்நிகழ்விற்கு கொளப்பலூர் கிளை கழக தலைவர் தோழர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் அவரின் தலைமை உரையின் போது சாலைகளில் தேங்காய் பூசணிக்காய் உடைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அதனை உடைப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி உரையாற்றினார் தொடர்ந்து திருச்சி விரட்டு கலை பண்பாட்டு மையத்தின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது கலைக்கழு சார்பாக மயிலாட்டம்,ஒயிலாட்டம்,பறையாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒன்னுமில்லை எனும் பகுத்தறிவு நாடகம் நடைபெற்றது. மக்கள் இன்றைய காலகட்டத்தில் ஒன்னுமில்லா விசயங்களுக்காக எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று நாடகத்தின் மூலம் விளக்கினார்கள் கலை நிகழ்ச்சியில் மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் இராம இளங்கோவன் அவர்கள் உரை நிகழ்த்தினார் அவர் உரையாற்றும் போது உயிரின தோற்றம் குறித்தும் அறிவியல் வளர்ச்சி குறித்தும் விளக்கமாக உரையாற்றினார் தொடர்ந்து இரவு 10.30 மணி வரை...
நந்தினிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் 04022017
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட அரியலூர் மாவட்டம் செந்துரை அருகில் சிறுகடம்பூர் தலித் சிறுமி நந்தினி படுகொலையை கண்டித்தும் 1.நந்தினியின் கூட்டுபாலியல் வன்கொலையின் முக்கிய குற்றவாளி இந்து முன்னனி மாவாட்ட தலைவர் ராஜசேகரனை உடனே கைது செய். 2. தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதி மத கலவரங்களை தூண்டிவரும் இந்துமுன்னனி அமைப்பை தடைசெய். 3.நந்தினி குடும்பத்திற்கு ஒருகோடி நிதியும் அரசு வேலையும் உடனே வழங்கு. 4.சாதி மத அமைப்புக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எதிராகவும் சாதிய உணர்வோடு செயல்படும் காவல்துறை ஆய்வாளர் மற்றும் Dsp மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து உடனே கைது செய். 5. வழக்கினை CBI விசாரனைக்கு உத்திரவிடு. 6. நந்தினி குடும்பத்திற்க்கு உரிய பாதுகாப்பு வழங்கிடு. 7. மாவட்டதோறும் இயங்கும் தீண்டாமை ஒழிப்பு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடு. 8. SC ST வழக்குகளை விசாரிக்க தனி நீதீமன்றம்...
ஜாதி மறுப்பு இணையர்களுக்கான பாராட்டு விழா திருப்பூர் 12022017
ஜாதி ஒழிய சமத்துவம் படைக்க புதிய உலகை உருவாக்க ஆதலால் காதல் செய்வீர்…. ஜாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்போம் சமத்துவ சமூகம் படைப்போம்….. தோழர்கள் முன்பதிவு செய்து தவறாமல் கலந்து கொள்ளவும்
விழுப்புரம் மாவட்டத்தில் 30 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்
விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் வனத் தாம்பாளையம் கிராமத்தில் இளையரசன் இல்லத்தில் நடைபெற்றது. ஜனவரி 8 மாலை 3 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் சிவராந்தகம், பள்ளி மேளயனூர், மருதூர் வனத்தாம் பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து முப்பது தோழர்கள், இளையரசன் தலைமையில் கழகத்தில் இணைந்தனர். பின் புதிய தோழர்களிடம் கழகச் செயல்பாடுகள் குறித்து விழுப்புரம் அய்யனார் உரை யாற்றினார். இந்நிகழ்வில் புதுச்சேரி தீனா, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் க. இராமன், கி. சாமிதுரை, மா. குமார், சென்னை ஜான் மண்டேலா ஆகியோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 02022017 இதழ்
திருப்பூருக்கு புதிய பொறுப்பாளர்கள்
முகில் ராசு – மாவட்டத் தலைவர். நீதிராசன் – மாவட்டச் செயலாளர். அகிலன், சங்கீதா- மாவட்ட அமைப் பாளர்கள் . தனபால் – மாநகரத் தலைவர் மாதவன் – மாநகரச் செயலாளர். முத்து, யமுனா – மாநகர அமைப் பாளர்கள். கருணாநிதி – வடக்குப் பகுதி அமைப் பாளர். ராமசாமி – தெற்கு பகுதி அமைப்பாளர் . 11.12.2016 அன்று கழக கட்டமைப்பு நிதி வழங்கும் நிகழ்வில் கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 02022017 இதழ்
கொளத்தூரில் பெரியார் படிப்பகம் திறப்பு
மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பெரியார் படிப்பகத் திறப்பு நிகழ்வு ஜன.28 மாலை 5 மணி யளவில் சிறப்புடன் நடைபெற்றது. பறை முழக்கத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின படிப்பகத்தை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற மறைந்த டாக்டர் மே.பொ. ஆறுமுகம், படிப்பகத்துக்காக 5 சென்ட் நிலத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் பெயருக்கு பெரும் கொடை உள்ளத்தோடு வழங்கினார். ஏற்கெனவே சிறிய அளவில் இயங்கி வந்த இந்த படிப்பகம், இப்போது புதிய பொலிவுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நிலம் வழங்கிய மருத்துவர் மே.பொ. ஆறுமுகம் அவர்களின் மகனும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வருமான மருத்துவர் ஆ. துரைசாமி பங்கேற்றார். படிப்பகத்தைத் திறந்து வைத்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “பெரும் கொடை உள்ளத்தோடு மறைந்த மருத்துவர்...
கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர் தமிழ்ப் புத்தாண்டு-கலை விழாக்கள்
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு விழாக்கள் கலை விழாவாக நடத்தப்பட்டன. சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் அனைத்துக் கட்சியினரையும் இணைத்து தமிழர் திருநாள் விழாவை கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 17ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா ஜன.12ஆம் தேதி இராயப்பேட்டை வி.எம். சாலையில் எழுச்சியுடன் கலை விழா இசை நிகழ்ச்சிகளோடு நடை பெற்றது. புதுச்சேரி ‘அதிர்வு’ கலைக் குழுவினரின் பறை, கிராமிய நடனம், பாடல் நிகழ்ச்சிகள், பகுதி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாறுவேடப் போட்டிகள் நடைபெற்றன. தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தொடர்ந்து ‘அருண் ரிதம்ஸ்’ குழுவினரின் கானா, நாட்டுப்புற, வெள்ளித் திரைப்பாடல்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கருத்தாழ மிக்க பழைய திரைப்படப் பாடல்களையும் கானா பாடல்களையும்...
ககாபுதூர் சாதீய வன்முறை – உண்மையும் தீர்வும் கோவை 31012017
கா.க.புதூர் சாதீய வன்முறை மற்றும் பரவலாக நடைபெறும் ஆதிக்க சாதி இந்துத்துவ கூட்டு வன்முறையைக் கண்டித்து கோவை, பொள்ளாச்சி நகரங்களில் அனைத்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்! கடந்த சனவரி 8ஆம் தேதி கா.க.புதூரில் தோழர் கா.சு. நாகராசன் இல்லத்தில் ஆதிக்க சாதியினரும் இந்து முண்ணனி மதவெறிக் கும்பலும் சேர்ந்து நடத்திய வன்முறை தாக்குதல் பற்றிய உண்மையும்,தீர்வும் என்ற தலைப்பில் 31.01.2017 செவ்வாய் மாலை 05 மணிக்கு கோவை ஆதித்தமிழன் அரங்கில் அனைத்து இயக்கங்களின் கலைந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் “கொளத்தூர்” மணி அவர்கள், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ” ஆதித்தமிழர்” பேரவை நிறுவனர் இரா.அதியமான் முன்னிலை வகித்தார். திவிக தோழர் பொள்ளாச்சி வெ.வெள்ளிங்கிரி கா.க.புதூர் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அதிக்க சாதி இந்து முண்ணனி கூட்டணி குறித்தும் வரவேற்புரையில் தெளிவுபடுத்தினார்.தொடர்ந்து தோழர் கா.சு.நாகராசன் 8 ஆம் தேதி வன்முறை மற்றும் அதன் பின்னணி குறித்து அறிமுக உரையாற்றினார்....
பொங்கல் விழாப் பொதுக் கூட்டம் ஈரோடு 29012017
ஈரோடு மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 29,01,2017 ஞாயிறு அன்று லட்சுமி நகரின் அருகிலுள்ள அண்ணா நகரில் , அம்மக்களோடு இணைந்து பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நன்பகல் முதல் சிறுவர், இளைஞர் பொதுமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாலை சமத்துவப் பொங்கல் வைத்து ஊர்ப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6-30 மணிக்கு தோழர். மா. ஜெயபாரதி (தமிழ்நாடு மாணவர் கழகம்) வரவேற்புரையாற்ற , தோழர் ப.இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர், தி.வி.க.) தலைமையிலும், அண்ணா நகரைச் சேர்ந்த இராமசாமி, தமிழ்மணி, தி.வி.க. மாவட்ட செயலாளர் கு.சண்முகப் பிரியன், வேணுகோபால், மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி , சித்தோடு எழிலன் ஆகியோர் முன்னிலையில், சித்தோடு முருகேசன் அவர்களின் பகுத்தறிவுப் பாடலுடன் கூட்டம் துவங்கியது. தொடர்ந்து மூத்த வழக்குரைஞர் பா.ப. மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்துகொண்டவர்களுக்கும்...
திருப்பூரில் பொங்கல், தைப்புத்தாண்டு விழா ! 22012017
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் 22.01.2017 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை 8 ஆம் ஆண்டு திராவிடர் பெருவிழாவாக பொங்கல்,தைப்புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. 22.01.2017 அன்று காலை 8 மணிக்கு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பமானது.தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்,உரி அடித்தல்,குழு விளையாட்டுப்போட்டிகள் ஆகியன நடைபெற்றன. மாலை 6 மணிக்கு நிமிர்வு கலைக்குழுவினரின் ஜாதி ஒழிப்புப் பறையிசை நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.பின் காலை நடந்த விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பரிசுகளாக பெரியாரிய புத்தகங்கள்,வெற்றிக்கோப்பை,நாள்காட்டி ஆகியன வழங்கப்பட்டன. இவ்விழா அப்பகுதி பொதுமக்களிடம் பெரும் வரவேற்ப்பைப்பெற்றது. விழாவினை தோழர் அகிலன்,மாதவன்,நாகராசு,கணபதி, பிரவீன்குமார், நீதிராசன்,கருணாநிதி,தனபால்,ராஜசிங்கம் உள்ளிட்ட தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பரிசளிப்பு விழாவில் கழக பொருளாளர் துரைசாமி,அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி,மாவட்டத்தலைவர் முகில்ராசு,பாண்டியநாதன்,முத்துலட்சுமி,சங்கீதா,முத்து,பிரேம் குமார்,தனகோபால்,பல்லடம் சண்முகம்,மணி ஆகியோர் கலந்துகொண்டனர். உணவு ஏற்பாட்டினை மாதவன் குடும்பத்தினர்,அகிலன் குடும்பத்தினர்,கோமதி குடும்பத்தினர் ஆகியோர் செய்திருந்தனர். தோழர்...
மதுரையில் நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் ! 31012017
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 31.1.2017 அன்று காலை 11 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்ட கழகச்செயலாளர் தோழர் மா.பா.மணிகண்டன் தலைமை தாங்கினார்
தேசியக் கொடியை எரித்தால் கூட அது தேச விரோதச் செயல் அல்ல.. கொளத்தூர் மணி
தேசியக் கொடியை எரித்தால் கூட அது தேச விரோதச் செயல் அல்ல என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டத்தில் தேசியக் கொடியை அவமதித்து விட்டார்கள் தேச துரோகிகள் என்று பாஜக அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம், அரசியல் சட்டம் எரிப்புப் போராட்டம் என்று பெரியாரால் அறிவிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. தேசியக் கொடி எரிப்பு போராட்டத்திற்கான அடிப்படை இங்கே இருக்கிறது. தேசியக் கொடியை எரிப்பது அவ்வளவு பெரிய குற்றமா.. மோடியை பற்றி விமர்சித்தாலே தேச விரோதமா என்பது குறித்து ஒன்இந்தியா கேட்ட கேள்விகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பதில்கள் இதோ… ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது தேசியக் கொடி அவமதித்த தேசத் துரோகிகள் என்று நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம் நடந்த மண்...
அரியலூர் நந்தினிக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் 04022017
அரியலூரில் ஆர்ப்பாட்டம். #Justice_for_nandhini அரியலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நந்தினிக்கு நீதிவழங்கு என்கிற முழக்கத்தோடு… தோழர் கோபால் ராமகிருஷ்ணன். தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். இடம்:அண்ணாசிலை பின்புறம். பேருந்து நிறுத்தம். அரியலூர். நாள் :04.02.2017.சனிக்கிழமை. நேரம்:காலை.10.00மணிக்கு.
மெரினாவில் காவல்துறை தாக்குதலுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு 30012017
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்கள், மீனவர்கள் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்பட்ட காவல்துறையின் வன்முறைகளுக்கு நீதிகேட்டு…. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் 30012017 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம். செய்தி தோழர் வைரவேல்
காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம் கோவை 31012017
காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம். ******************* 31.01.17 செவ்வாய் மாலை 05 மணி. ஆதித் தமிழன் அரங்கம், மேட்டுப்பாளையம் சாலை, கோவை. தலைமை ———– தோழர் கொளத்தூர் மணி. தலைவர், (திராவிடர் விடுதலைக் கழகம்) முன்னிலை ————- தோழர் அதியமான் தலைவர், ( ஆதித் தமிழர் பேரவை ) சமூக நீதிக்கான களத்தில் நிற்கிற இயக்கங்களின் பொறுப்பாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம். இப்படிக்கு காசு.நாகராசன். #94439 33669
மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம் 31012017
31012017 காலை 11 மணிக்கு மதுரை ரயில் நிலையம் எதிரில் தங்கை நந்தினிக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.. அனைவரும் வருக திராவிடர் விடுதலைக் கழகம் மதுரை.9600408641
நங்கவள்ளியில் தமிழ்ப்புத்தாண்டு பொதுக்கூட்டம் ! 29012017
நங்கவள்ளியில் தமிழ்ப்புத்தாண்டு பொதுக்கூட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்……. நாள் : 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை.மாலை 6.00 மணி. இடம் : பேருந்து நிலையம் அருகில்,நங்கவள்ளி. சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் சிவகாமி, அமைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். விரட்டு கலை பண்பாட்டு மையம் வழங்கும் பறையாட்ட்ம்,கரகாட்டம்,ஒயிலாட்டம்,நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தீண்டாமை ஒழிப்பு பிரிவு முற்றுகை போராட்டம் மதுரை 31012017
அரியலூர் நந்தினிக்கு நீதிவழங்கு. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மதுரையில் செயல்படாத காவல்துறையின், “தீண்டாமை ஒழிப்பு பிரிவு” முற்றுகை போராட்டம்….! நாள்:31.01.2017. செவ்வாய்க்கிழமை. நேரம்:காலை11.00 மணி.
திருச்செங்கோட்டில் அரியலூர் நந்தினிக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம்…! 27012017
நாமக்கல் மாவட்ட திவிக சார்பில் திருச்செங்கோட்டில் அரியலூர் நந்தினிக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம்…! பொள்ளாட்சி,ஈரோடு,திருப்பூர்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 70க்கும் மேற்பட்ட ஜாதி ஒழிப்பு போராளிகள் பங்கேற்பு. (10 பெண்கள் உட்பட) நன்றி: •கா.சு.நாகராசு.ஒருங்கிணைப்பாளர். பெரியார் திக. •இரத்தினசாமி. மாநில அமைப்பு செயலாளர். திராவிடர் விடுதலைக் கழகம். •சிவகாமி.மாநில அமைப்பாளர். தமிழ்நாடு அறிவியல் மன்றம். •முல்லைவேந்தன்.மேட்டூர் •மணிமொழி.திவிக.பொள்ளாட்சி செய்தி வைரவேல்
கொளத்தூரில் முப்பெரும் விழா !
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் 138 வது பிறந்த நாள் விழா ! பெரியார் படிப்பகம் திறப்பு ! தமிழர் திருநாள் ! நாள் : 28.01.2017 சனிக்கிழமை. இடம் : பேருந்து நிலையம்,கொளத்தூர். படிப்பகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுபவர் : தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். விரட்டு கலை பண்பாட்டு மையம் வழங்கும் பறையாட்ட்ம்,கரகாட்டம்,ஒயிலாட்டம்,நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம் 23012017
வேலூர் மாவட்ட திவிக சார்பில் குடியாத்தம் பகுதியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி அவர்களை வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்த இந்து முன்னணியைச் சேர்ந்த ராஜசேகரை கைது செய்யக்கோரியும், அவனை தப்பவிட்ட காவல்துறையைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம். தோழர் கொளத்தூர் மணி கண்டன உரை காணொளி செய்தி பூரணாசுரன் சு
மாணவர் எழுச்சிக்கு அரணாய் சென்னை திவிக
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் அரணாய், அமர்க்களமாய் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் …. எதிரி பீட்டா ( PETA) அல்ல … அந்த போர்வைக்கு பின்னே ஒளிந்திருக்கும் இந்துத்துவாவே ( RSS) என்பதை முழக்கங்கள் மூலமாகவும், பதாகைகள் மூலமாகவும், வீதி நாடகங்கள் மூலமாகவும் மாணவர்களின் கவனத்திற்கு கொண்டுச் சென்றோம். மாணவர்களும் தெளிவாக பொது எதிரியை கண்டுக்கொண்டு பாஜக மோடி அரசையும், ( RSS) ஆர் எஸ் எஸ் யையும் கண்டித்து முழக்கங்களால் விண்ணை அதிர வைத்தனர். சென்னையிலுள்ள தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக சென்னை மாவட்டசெயலாளர் தோழர் இரா. உமாபதி தலைமயில் திவிக மாணவர் அமைப்பு சென்னை மாவட்ட செயலாளர் தோழர் பிரகாசு முன்னிலையில் போராட்டத்தில் கலந்துக் கொண்டு போராட்டத்தை சிறப்பித்தனர் . தோழர் பிரபாகரன் பிணமாக நடித்திட , திவிக தோழர்கள் உடலுரிமை இயக்க தோழர் இரன்யாவின் தலைமையில் ஒப்பாரி வடிவில் தமிழகத்தின் நசுக்கப்படும் உரிமைகளை...
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? – பசு கவுதமன்
முன் வெளியீட்டுத்திட்டத்தில் அதிரடி விலைக் குறைப்பு ! ரூபாய் 2000 மட்டுமே ! ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும் ?” பெரியாரின் 1925 முதல் 1973 வரையிலான முழுமையான பதிவுகள். ஐந்து தொகுதிகள் – 4000 பக்கங்கள் – விலை 4000/= முன் வெளியீட்டுத்திட்டத்தில் ரூபாய் 2000 மட்டுமே ! தோழர் பசு.கவுதமனின் பல்லாண்டு பெரும் முயற்சியில் பெரியார் எழுதியபடியே பெரியாரின் எழுத்துக்களுக்கான ஒரு செம்பதிப்பு !
பெரியார் தொண்டர் கோபி தோழர் நாகப்பன் மறைவு
ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரும், நமது கழக தோழர் மணிமொழி அவர்களின் தந்தையும், நம் கழகத்தோழர் நிவாஸ் அவர்களின் மாமனாரும் ஆன தோழர் நாகப்பன் அவர்கள் கடந்த 12.01.2017 அன்று உடல்நலக்குறைவுக் காரணமாக இயற்கை எய்தினார். அவரின் இறுதி நிகழ்வு உறவினர்களின் பெரும் ஒத்துழைப்புடோடு எந்த விதமான சடங்குகள் இல்லாமல் கழக மகளிர் முன் நின்று உடல் அடக்கம் நிகழ்வினை செய்தனர்.வீட்டில் இருந்து உடல் அடக்கம் செய்யும் சுடுகாடு வரைக்கும் பெண்களே சுமந்து சென்று உடல்அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கத்திற்கு பின் கருப்பு, கருமாதிஉள்ளிட்ட எந்த நிகழ்வு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது. தோழரின் இல்லத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இரங்கல் கூட்டத்தில் கழக தலைவர் கொளத்தூர் மணி, மாநில அமைப்பு செயலாளர் இரத்தினசாமி,மாநில வெளீயீட்டு செயலாளர் இராம.இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி, தபெதிக ஈரோடு மாவட்ட தலைவர் குணசேகரன், திராவிடர்...
பொங்கல் விழா கபாடி போட்டி தூத்துக்குடி 16012017
தூத்துக்குடி மாவட்டமான சூரங்குடி கிராமத்தில் நடந்த தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான “கபாடி” போட்டியில், சூரங்குடி ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பங்கேற்ற அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. பரிசுத் தொகையான 8001ஐ அணியின் கேப்டனான தோழர் சதிஷ் பெற்றுக்கொண்டார். வீர விளையாட்டில் பங்கேற்ற தோழர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நன்றிகளும், வாழ்த்துக்களும்.
பொங்கல் விழா கடலூர் மாவட்டம் கம்மாபுரம் 16012017
கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பாக விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு 16.01.2017 அன்று பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள், மாணவர்கள், அனைவர்களையும், ஊக்குவிக்கும் பொருட்டு ஓட்டப்பந்தயம், நீளம்தாண்டுதல், கோலப்போட்டி, திருக்குறள் ஒப்பிவித்தல், ஓவியப்போட்டி, கபாடி போட்டி, மித வேக சைக்கிள் போட்டி உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இரவு 9.00 மணியளவில் கடலூர் மாவட்ட செயலாளர் நட.பாரதிதாசன் அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து பாராட்டுக்களை தெரிவித்தார் விழா நடைபெற்று இனிதே நடந்து முடிந்தது. ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து திராவிடர் விடுதலை கழக தோழர்களுக்கும் நன்றி
ஜல்லிக்கட்டுக்காக கொதித்தெழும் அப்பாவி இளைஞர்கள்
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சென்னை மெரினாவில் மிகப்பெரிய அளவில் பேரணி நடைபெற்று உள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாத போதும், அதை வலியுறுத்தி நடந்த போராட்டங்கள் என்பது மிகக்குறைவே. தமிழக அரசியல் கட்சிகள், சில தேவர் சாதி அமைப்புகளைத் தவிர பெரிய அளவில் ஆதரவு இருக்கவில்லை. அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு அதுவும் தமிழகம் முழுவதும் எப்படி இது போன்ற திட்டமிடப்பட்ட போராட்டங்கள் நடைபெறுகின்றது என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. பேஸ்புக்கில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, இத்தனை ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள் என்று சொல்வது மோசடியானதாகவே தெரிகின்றது. குறிப்பாக சென்னையில் போராட்டத்தை Care and Welfere என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இது ஒரு அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். இந்த அமைப்புக்கும், ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை. அவர்களது...
காளியப்பகவுண்டன் புதூரில் கழகத் தலைவர் நேரில் ஆய்வு
பொள்ளாச்சி காளியப்பகவுண்டன் புதூரில் ஆதிக்க ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்ட தோழர் காசு.நாகராசன் மற்றும் தோழர்களையும் மருத்துவமனையில் சந்தித்து விட்டு பின்னர் ஊரில் சேதமடைந்த பகுதிகளையும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்… பேட்டி பார்க்க இங்கே சொடுக்கவும் பேட்டியில் காவல்துறை இரண்டு நாள் அவகாசம் அளிக்க கேட்டுள்ளனர் அதற்குள் குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்றால் தமிழ்நாடு தழுவிய அளவில் பெரிய போராட்டம் காசு.நாகராசன் க்கு ஆதரவாக நடத்தப்படும் என்று தெரிவித்தார்.. பின்பு ஊரில் கூடியிருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததால் ஊரில் பொதுகூட்டமாகவே நிகழ்ச்சி நடந்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம், தி.மு.க, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமுமுக, இந்திய ஜவ்ஹீத் ஜமாத் கட்சி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், மக்கள் விடுதலை முன்னணி, ஆதித் தமிழர் பேரவை, ஆதித் தமிழர் கட்சி, அம்பேத்கர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு மாணவர் மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
17ம் ஆண்டு … தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா சென்னை 12012017
தை ஒன்றே தமிழ்ப் புத்தாண்டு … திருவல்லிக்கேணி பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் இணைந்து நடத்தும் … 17ம் ஆண்டு … தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா … வாருங்கள் தமிழர்களாய் இணைந்து மனிதர்களாய் கொண்டாடி மகிழ்வோம் … நாள் : 12 : 01 : 2017 இடம் : வி . எம் . தெரு, இராயப்பேட்டை திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்
அரசு மருத்துவமனையில் சட்ட விரோதமாக கோயில் கட்டுவதை தடுக்க மனு கம்மாபுரம் 09012017
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் கிராமத்தில் அரசு மருத்துவனை வளாகத்தில், இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, சட்ட விரோதமாக, அனைத்து மதத்தினரும் வந்து, போகும், இடத்தில் ஒரு மத வழிப்பாட்டு தலமான விநாயகர் கோயில் கட்டுவது அரசாணைக்கு எதிரானதும், மதசார்பற்ற நாடு இந்தியா என்பதும் கேள்விகுறியாகும் செயலாகும், இதை எதிர்த்து கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தோழர் பாரதிதாசன் தலைமையில் தோழர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தார்கள்
பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10012017
பொள்ளாச்சியில் நாளை 10.01.17 “கண்டன ஆர்ப்பாட்டம்” ஜாதி வெறியர்களால் தோழர் கா.சு.நாகராசன் மற்றும் தோழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், காவல்நிலைய பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்ற குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தியும், தப்பவிட்ட காவல்துறைமீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கக்கோரியும், அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க மறுத்த மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அனைத்துக்கட்சிகள்,அனைத்து சமுக அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன உரை : தோழர் “கொளத்தூர்மணி” (தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்) நாள் – 10.01.17,காலை -11.00மணி. இடம்: திருவள்ளுவர் திடல்,பொள்ளாச்சி அனைவரும் ஒன்றுபடுவோம் சாதிவெறியர்களுக்கு எதிராக ! பேச : 9842487766, 8344053307
ஜாதி கலவரங்களை தூண்டும் பேச்சு மதுரை திவிக மனு 04012017
கல்வி, பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ள தேவர் சமூக மக்களை முன்னேற்றாமல், அவர்களை மூளை சலவை செய்து வன்முறையாளர்களாக மாற்றும் விதமாகவும், இரு தரப்பினரிடையே ஜாதி கலவரங்களை தூண்டும் விதமாகவும், பட்டியலின மக்களை கொலை செய்யம் படியும், இழிவுபடுத்தியும் பேசிய. -தமிழ் நாடு தேவர் பேரவை தலைவர். முத்தையா என்பவரை கைது செய்யக் கோரியும், இது போன்ற வன்மம் கக்கும் ஜாதி சங்கங்களை தடை செய்ய கோரியும் மதுரை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பிலும், புரட்சிகர இளைஞர் கழகம் சார்பிலும் மதுரை காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் மனு 04012017 அன்று மாலை 5 மணிக்கு தோழர் மணிகண்டன் அவர்களால் அளிக்கப்பட்டது. உடன் புரட்சிப் புலிகள் மாவட்ட நிர்வாகிகள் பீமாராவ், அகிலன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம், திவிக மாநகர் பொறுப்பாளர் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்துள்ளனர்.
நீதி கட்சி நூற்றாண்டு நிறைவுவிழா கருத்தரங்கம் சென்னை 03012017
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நீதி கட்சி நூற்றாண்டு நிறைவுவிழாவில் மாபெரும் கருத்தரங்கம் திரு மா சுப்பிரமணியன் MLA அவர்கள் தலைமையில் 03012017 மாலை 5.00 மணிக்கு சென்னை நீலாங்கரை சுகன்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது இக்கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சமஸ்கிருத திணிப்பு என்னும் தலைப்பிலும், சுப.வீ அவர்கள் நீட் தேர்வு என்ற தலைப்பிலும், கோவை இராமகிருஷ்ணன் அவர்கள் பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பிலும் நீண்டதொரு கருத்துரை வழங்கினார்கள்
திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம் சூலூர் 01012017
சூலூர் ஒன்றியம் பட்டணம் இந்திரா நகரில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தோழர் கொளத்தூ மணி அவர்கள் கலந்து கொண்டு திவிக மாத இதழ் நிமிர் அறிமுகப்படுத்தி சிறப்புரை ஆற்றினார். விழாவில் தோழர் வழக்குறைஞர் வெண்மணி அவர்கள் மேடையில் புரட்சி பெரியார் முழக்கம் சந்தா தொகைகளை கழக தலைவரிடம் கொடுத்தார். செய்தி தோழர் சூலூர் பன்னீர்செல்வம் பெரியார் முழக்கம் 12012017 இதழ்
திமுக தலைவர் கலைஞர் உடல்நலத்தை கழகத் தலைவர் விசாரிப்பு சென்னை 02012017
கலைஞரின் உடல் நலம் விசாரிப்பதற்காக அவர் இல்லம் சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் இன்று சென்றார்கள். அப்போது திமுக பொருளாளர் வரவேற்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, பொன்முடி இருந்தார்கள்.
ஈரோடு தெற்கு திவிக சார்பில் சித்தோட்டில் தெருமுனைக் கூட்டம் 01012017
தந்தை பெரியார் நினைவுநாளை முன்னிட்டு,திராவிடர் விடுதலைக் கழகம்,ஈரோடு தெற்கு மாவட்டம் ,சித்தோடு கிளைக் கழகம் சார்பாக 01.01.2017 ஞாயிறு மாலை 6 மணிக்கு, சித்தோடு சமத்துவபுரத்தில் தெருமுனைக்கூட்டம் நடந்தது.. தோழர்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.. திராவிடர் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர்.ஆசிரியர் செங்கோட்டையன் உரையாற்றினார். ஆசிரியர் வீரா கார்த்திக் மாட்டிறைச்சி அரசியல் பற்றி விளக்கிப் பேசினார். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சமூகத்தில் மலிந்து கிடக்கும் மூடநம்பிக்கைகள் குறித்தும்,கடவுளர் கதைகள் குறித்தும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.. தோழர்.சித்தோடு முருகேஷ் சாதி ஒழிப்புப் பாடல்கள், பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார்.. தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை சித்தோடு கமலக்கண்ணன்,யாழ் ஸ்டூடியோ எழிலன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.. முன்னதாக சமத்துவபுரம் பகுதியிலுள்ள 120 வீடுகளுக்கும் சென்று துண்டறிக்கைகளை வழங்கினர்.. நமது கூட்டக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட சமத்துவபுரம் பகுதி மாட்டுக்காரர் முருகன் அனைவருக்கும்...
மகளிர் சந்திப்பு ஈரோடு 31122016
தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ஈரோட்டில் 31.12.2016இல் நடந்த பெண்கள் சந்திப்பிற்கு திருப்பூர் சரசுவதி தலைமை தாங்கினார். தி.வி.க. மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். சுதா வரவேற் புரை ஆற்றினார். ‘ஊடகங்களில் பெண்கள்’ என்ற தலைப்பில் இசை மதி, ‘மனுதர்மமும் பெண்களும்’ என்ற தலைப்பில் மணிமொழி, ‘ஆடைக் கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் தனலட்சுமி, ‘குடும்பத்தில் முதல் பெரியாரியல் வாதியாக இருக்கும் பெண் சந்திக்கும் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் கோமதி, ‘பெரியாரியல் குடும்பங்களில் குழந்தைகள்’ என்ற தலைப்பில் கனல் மதி ஆகியோர் பேசினர். பின்னர் “பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் பெண்ணுரிமைக் கோட்பாட்டில் பெரியாரின் தனித்தன்மை” என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார். ஈரோடு தோழர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர். மதிய உணவிற்குப் பின்னர் பெரியாரின் இல்லம் சென்று பார்வையிட்டனர். பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு...
பெரியார் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் பள்ளிபாளையம் 29122016
தந்தை பெரியார் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் 29122016 அன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கருப்பரசன் நாடக குழுவினர் மிகச் சிறப்பாக பெரியாரிய கருத்துக்களால் உலுக்கிய எடுத்தார். கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்களின் உரை பார்க்க சொடுக்கவும் பகுதி 1 கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்களின் உரை பார்க்க சொடுக்கவும் பகுதி 2