அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி பாஜக அலுவலகம் முற்றுகை, மோடி உருவ மொம்மை எரிப்பு சென்னை 02092017

சென்னையில், மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய பா.ஜ.க. மோடி அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுருத்தியும் பா.ஜ.க. தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம்.

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் நீட்டுக்கு எதிராக சமூக நீதி கோரி வழக்கு தொடுத்தவரும் மத்திய காவி பா.ஜ.க. மோடி அரசால் மருத்துவ படிப்பு கனவு சிதைக்கப்பட்டு தோழர் அனிதாவின் . படுகொலைக்கு காரணமான மோடி அரசை கண்டித்தும்,நீட் தேர்வை ரத்து செய்ய வலியுருத்தியும் 02.09.2017 அன்று மாலை 3 மணியளவில் பா.ஜ.க தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) தலைமையில் நடைபெற்றது.

முற்றுகைப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டு மத்திய மோடி அரசுக்கு எதிராகவும், தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோக செயலை கண்டித்து போர் முழக்கமிட்டனர்…

தமிழக கல்வி உரிமைகளை மாநில பட்டியலில் இருந்து நீக்கி, பொதுப்பட்டியலுக்கு மாற்றி அமைக்கும் மோடி ஆட்சியை கண்டித்து மோடியின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது…

போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தி.நகரில் அமைந்துள்ள முருகன் கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டன.

chennai

You may also like...