பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சென்னை

தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாளான 17.09.2017 காலை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் கழகப் பொதுச் செயலாளர் தோழர். விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் தி.நகர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கத்தோடு மரியாதை செலுத்தினார்கள்.

அதன் தொடர்ச்சியாக கிண்டி ஆலந்தூர், மந்தவெளி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்பு, மயிலாப்பூர் பகுதியில் அமைக்கப்பட்ட பெரியாரின் திருஉருவப் படத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் மாலை அணிவித்தார்.

அதை தொடர்ந்து இராயப்பேட்டை மற்றும் சென்னை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, சமூகநீதி முழக்கத்தோடு மரியாதை செலுத்தப்பட்டது.

தண்டையார்பேட்டை பகுதியில் கழக கொடி ஏற்றி, தோழர்.அனிதாவிற்கு வீர வணக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

கடைசியாக, திருவொற்றியூர் பகுதியில் கழக கொடியை ஏற்றி தோழர்.அனிதா மற்றும் எழுத்தாளர்.தோழர்.கவுரி லங்கேஷ் அவர்களுக்கு மாலை அணிவித்து வீரவணக்க முழக்கமிட்டனர்.அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தோழர்.உமாபதி, தோழர்.அய்யனார், தோழர்.பாண்டியன், தோழர்.ராஜூ, தோழர்.பாரி சிவா மற்றும் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பெரியாரின் பிறந்தநாள் நிகழ்வை பற்றி கூறி நிறைவு செய்தனர்.வந்திருந்த தோழர்கள் அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.

chennai

You may also like...