அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் கோவை 02092017
இன்று கோவையில் காந்திபார்க்கில் நீட் எதிர்ப்பு மாணவர் கூட்டமைப்பு சார்பில் 02092017 காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் “தோழர் பூர்ணிமா நந்தினி” தலைமையில் சிறப்பாக நடந்தது..
நிமிர்வு குழுவின் பறை முழக்கத்தோடு ஆரம்பமானது.
நீட் தேர்வு விலக்கு பெறும்வரை “தினமும் நடக்கும்” இடம் அந்தந்த அமைப்பு தோழரிடம் அறிவிக்கப்படும் .
“அனுமதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நடக்கும்” என்ற முடிவோடு ஆர்ப்பாட்டம் முடிந்தது.
பொதுவாக வேடிக்கை பார்த்தவர்கள் கூட நிகழ்வு முடிவடையும் நேரத்தில் பங்கேற்பாளர்களாக இருந்தார்கள்..
தேன்மொழி தோழர் (bjp+பார்ப்பனர்களின்) நோக்கங்களை அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி விளக்கி சிறப்பாக பேசினார்.
கண்மனி,வினோத்,இளந்தமிழகம்,CFI தோழர்களும் உணர்வுப் பூர்வமாக பேசினர்..நிமிர்வு சக்தி ,மாதவன் சங்கர் முழக்கங்கள் சிறப்பு.
செய்தி நிர்மல்குமார்