சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல்
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 19.08.2017 மாலை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்று முடிந்தது. கலந்துரையாடல் கூட்டத்தை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி ஒருங்கிணைத்தார். கூட்டத்தின் தொடக்கமாக கடவுள் மறுப்பு உரையை குகன் கூறினார்.
இதில், சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்களது சமூகநீதி- சமத்துவ பரப்புரை பயணத்தின் அனுபவங்கள் குறித்தும், அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தனர்.
இதில் பேசிய கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வருகிற 25ஆம் தேதி நடைபெற இருக்கும் வினாயகர் சதுர்த்தி எப்படி இந்துமுன்னணி போன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால் அவர்களின் சுயலாபத்துக்காக அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்களை கடவுளின் பெயரால் ஒன்றுதிரட்டி மற்ற மதத்தவருக்கு எதிராக மாற்றும் போக்கினை எப்படி முறியடிப்பது. வீட்டில் வணங்க வேண்டிய இந்த வினாயகர் சிலையை எதற்காக தெருவில் கொண்டுவந்து இது எப்படி அரசியல் ஆக்கப்படுகிறது, இதன் உள்நோக்கம் என்ன என்பதை மக்களிடம் புரிய வைக்க நாம் என்ன வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும், அதை மக்களிடம் எப்படி எளிய முறையில் கொண்டுச்சென்று புரிய வைக்க வேண்டும் என்பன குறித்த பல கருத்துக்களை முன்வைத்து சிறப்பான உரையாற்றினார். இறுதியாக கழக மாவட்ட தலைவர் வேழவேந்தன் வந்திருந்த தோழர்களுக்கு நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
பெரியார் முழக்கம் 24082017 இதழ்