ஈரோடு, திருப்பூரில் இணைய தள செயல்பாட்டாளர்கள் கலந்துரையாடல்
திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு மாவட்டத்தின் சார்பாக இணையதள கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி ஒருங்கிணைப்பில் ஆக.20 அன்று சூரம்பட்டி வலசுவில் பெரியார் ஜேசிபி பணிமனையில் நடைபெற்றது. இரத்தினசாமி அறிமுக உரை நிகழ்த்தினார்.
முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், தற்போதைய சூழலில் பெரியாரியல்வாதிகள் இணையத்தில் எவ்வாறு இயங்கவேண்டும் என்றும் மதவாத சக்திகளுக்கு எதிராக இளைஞர்களை ஒருங்கிணைப்பது பற்றியும் எடுத்துக் கூறினார். முகநூலில் கழகத் தோழர்கள் எப்படி தத்தம் கருத்துகளை சிறப்புற எடுத்துக்கூற வேண்டும் என்பதையும் விளக்கினார்.
கழக இணையதள பொறுப்பாளர் விஜய்குமார், கணினி மற்றும் கைபேசியில் தமிழ் உள்ளீடு முறைகளை குறித்தும் கழக இணையதளம் செயல்படும் விதம் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து திருச்செங்கோடு பூபதி மீம்ஸ் பதிவிடுதல் குறித்து விளக்கினார். 20க்கும் மேற்பட்ட தோழர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிந்தது.
ஈரோட்டை தொடர்ந்து 27.08.2017 அன்று திருப்பூரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் இணையதள பயன்பாட்டாளர்கள் கலந்துரையாடல் மற்றும் பயிற்சி முகாம் மாநில பொருளாளர் துரைசாமி இல்லத்தில் முகில்ராசு தலைமையில் நடந்தது
நிகழ்வில், தமிழில் கைப்பேசி, கணினி மூலம் எழுதும் முறையையும் கழக இணையதளத்தைப் பற்றியும் விஜய்குமார் எடுத்துரைத்தார். பரிமளராசன் முகநூல் வாட்ஸ் ஆப் அய்யங்கள் எளிமையாக பயன்படுத்தும் முறை குறித்து விளக்கினார். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 தோழர்கள் கலந்து கொண்டார்கள்
பெரியார் முழக்கம் 31082017 இதழ்