தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ஈரோடு தெற்கு

தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக,கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பின்னர் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம்,திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த தோழர்கள் இருசக்கர வாகனங்களில் ஈரோடு மார்க்கெட் பகுதியில் ஊர்வலமாகச் சென்று, தந்தை பெரியாரின் நினைவிடத்தை அடைந்தனர். அங்கு தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது..

அடுத்ததாக தோழர்கள் இருசக்கர வாகனங்களிலும் கழக ஆட்டோவிலும் ஊர்வலமாகச் சென்று ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த கழகக் கொடிக்கம்பங்களில் கொடியேற்றினர்.

மரப்பாலம் பகுதியில் சத்தியமூர்த்தி கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.

லோகநாதபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் அப்பகுதி தோழர் சித்ரா சுரேஷ் கொடியேற்றினார். ஆசிரியர் சிவக்குமார் உரையாற்றினார். தோழர் சித்ரா அனைவருக்கும் நன்றி கூறினார். தோழர் சித்ரா அவர்களின் இல்லத்தில் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.

ரங்கம்பாளையத்திலுள்ள கொடிக்கம்பத்தில் தோழர்.மணிமேகலை கழகக் கொடியேற்றினார். பெரியார் பிஞ்சு தோழர்.நிறைமதி பெரியார் பிறந்த நாள் கேக் வெட்டினார். 92 வயது கடந்த மூத்த பெரியார் தொண்டர் அய்யா இனியன் பத்மநாபன் உரையாற்றினார்.

சூரம்பட்டிவலசில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் தோழர்.சென்னிமலை செல்லப்பன் கொடியேற்றினார். ஆசிரியர் பெ.சே மோகன்ராஜ் உரையாற்றினார்.

பெருமாள்மலையில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் தோழர்.முருகன் கொடியேற்றினார். தோழர் கொங்கம்பாளையம் சௌந்தர் உரையாற்றினார்..

மரவபாளையம் பகுதியில் தோழர்.மகேஸ்வரி கொடியேற்றினார். ஆசிரியர்.சிவக்குமார் உரையாற்றினார்.

கொங்கம்பாளையம் பகுதியில் தோழர்.சண்முகப்பிரியன் கொடியேற்றினார். தோழர்.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார்.

சித்தோடு நால்ரோடு பகுதியில் கழக அமைப்புச் செயலாளர் தோழர்.இரத்தினசாமி கொடியேற்றினார். ஆசிரியர் சிவக்குமார், கமலக்கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். அமைப்புச் செயலாளர் தோழர்.இரத்தினசாமி சிறப்புரையாற்றினார்.

இறுதியாக, சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தோழர்.இரத்தினசாமி,தோழர்.செல்லப்பன் ஆகியோர் உரையாற்றினர். ரங்கம்பாளையம் பிரபு அனைத்து தோழர்களுக்கும் நன்றி கூறினார்.

கலந்து கொண்ட தோழர்கள்:

தோழர்.இரத்தினசாமி,கழக அமைப்புச் செயலாளர்

தோழர்.சண்முகப்பிரியன்,மாவட்டச் செயலாளர்

தோழர்.கிருஷ்ணமூர்த்தி,மாவட்டப் பொருளாளர்

தோழர்.குமார், மாவட்ட அமைப்பாளர்

தோழர்.செல்வராசு,மாவட்ட அமைப்பாளர்

தோழர்.சிவானந்தம்,நகரச் செயலாளர்

தோழர்.திருமுருகன்,நகரத் தலைவர்

தோழர்.சத்தியமூர்த்தி,நகர துணைத் தலைவர்

தோழர்.ஆசிரியர் சிவக்குமார்,அமைப்பாளர்,தமிழ்நாடு அறிவியல் மன்றம்

தோழர்.மோகன்ராஜ், மாவட்ட செயலாளர்,தமிழ்நாடு அறிவியல் மன்றம்

மூத்த பெரியார் தொண்டர் இனியன் பத்மநாபன்

கமலக்கண்ணன்
எழிலன்
பிரபாகரன்
கோபிநாத்
இசைக்கத்திர்
இனியவன்
கவிப்பிரியா
பெரியார் பிஞ்சு செங்காந்தள்
கார்த்திகேயன்
வினோத்
ரங்கம்பாளையம் கிருஷ்ணன்
மணிமேகலை
பெரியார் பிஞ்சுகள் ஈவெரா பிரபாகரன்,நிறைமதி
C.M நகர் பிரபு
பாரதி
கௌதம்
மாறன்
பிரபு
விஜி
கலைச்செல்வி
சத்தியராசு
சௌந்தர்

கழக ஆதரவாளர் சுண்ணாம்பு ஓடை பழனிச்சாமி தோழர்களுக்கு மதிய உணவு வழங்கினார்..

புதிய மகிழ்வுந்து வாங்கிய நகரச் செயலாளர் தோழர்.சிவானந்தம் கழக வளர்ச்சிக்கென ரூ.1000/- அமைப்புச் செயலாளர் தோழர்.இரத்தினசாமி அவர்களிடம் வழங்கினார்..

 

செலவு கணக்கு
கமலக்கண்ணன்    – 700
எழிலன்                     – 900
சிவக்குமார்              – 500
மோகன்ராஜ்            – 500
செல்லப்பன்             – 500
குமார்                        – 500
கிருஷ்ணன்             – 500
சண்முகப்பிரியன்- 1500
மாட்டு ரவி              – 1000
சிவானந்தம்           – 500
மதி, அறிவு.            – 100
  வரவு (மொத்தம்) -7200
      செலவுகள்
கொடித் துணி        – 3150
மாலை&சாக்லெட் – 700
உணவு                     – 900
கொடிக்குச்சி உள்ளிட்ட
இதர செலவுகள்     – 500
மொத்த செலவுகள்-5250
 மீதம் 1950 தோழர் எழிலன் வசம் உள்ளது.
சென்னிமலை செல்வராஜ் குடும்பத்தார் கொடி தைத்து கொடுத்தனர்.

erode

You may also like...