பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குமரி

திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம் நடத்திய தந்தை பெரியார்-ன் 139-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 16-09-2017 சனிக்கிழமை மாலை 5.00மணிக்கு  நாகர்கோவில் அம்பேத்கர் சிலை அருகில் நடைப்பெற்றது.

மாவட்டத் தலைவர்.தோழர்.வழக்கறிஞர்.வே.சதா தலைமைத்தாங்கினார்.கழகத் தோழர்.விஸ்ணு வரவேற்புரையாற்றினார்.தோழர்கள் நீதி அரசர்,தமிழ் மதி,சூசையப்பா சிறப்புரையாற்றினர்.

கழகப் பரப்புரைச் செயலாளர் தோழர்.பால் பிரபாகரன் “வஞ்சிக்கப்பட்டத் தமிழர்கள்” என்றத் தலைப்பில் பார்ப்பனீய பாரதீய சனதா அரசின் துரோகங்களைப் பட்டியலிட்டு பொதுமக்களுக்குப் புரியும் வகையில் நீண்டதொரு உரையாற்றினார்.முடிவில் கழகத்தோழர் அனீஸ் நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்டத் தலைவர். தோழர்.ச.ச.மணிமேகலை தொகுத்து வழங்கினார். கழகத் தோழர்கள்.மஞ்சு குமார்,இராஜேஸ் குமார்,தமிழ் அரசன்,றசல் ராஜ்ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

img_20170916_194326

You may also like...