அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் 02092017
சேலத்தில்
சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்கிட கோரியும், NEET தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் 02092017 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் கருப்பூர் சக்திவேல் தலைமை தாங்கினார்,
சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் தோழர் ஏற்காடு பெருமாள் முன்னிலை வகித்தார்.
தோழர் இரணியாவின் முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் துவங்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் சூரி, மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் கோவிந்தராசு, தோழர் முல்லை வேந்தன், சேலம் மாநகர அமைப்பாளர் தோழர் பாலு, தலைமை செயர்குழு உறுப்பினர் தோழர் R.S.சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சேலம் மாநகர செயலாளர் தோழர் பிரபு நன்றியுரை ஆற்றினார். இவ்ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகரம், இளம்பிள்ளை, நங்கவள்ளி, ஏற்காடு, மேட்டூர், கொளத்தூர், ஆர்.எஸ் பகுதி பொறுப்பாளர்கள், தோழர்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் அந்த வழியே வந்த இளைஞர்கள் என சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்.
பொதுமக்கள் கணிசமான அளவு அங்கேயே நின்றிருந்து ஆர்ப்பாட்டத்தை முழுமையாக கவனித்தனர் என்பதும் தனி சிறப்பு. சேலம் மாநகர தலைவர் தோழர் பரமேஸ் குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.