தோழர்.தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி இணையேற்பு விழா ஈரோடு 03092017
திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் தோழர் சண்முகப்பிரியன் அவர்களின் மகன் தோழர் தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி ஆகியோர்
வாழ்க்கை இணையேற்பு விழா , 03.09.2017 அன்று ஈரோடு அசோகபுரம் கே.கே.எஸ்.கே மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது..
வாழ்க்கை இணையேற்பு நிகழ்விற்கு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி தலைமை தாங்கினார்.
ஆசிரியர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார்.
ஈ.கே.எம் நிறுவனங்களின் உரிமையாளர் “EKM முகமது தாஜ்”, “வெங்காயம்” திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராச்குமார், மருத்துவர் சக்திவேல், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, திராவிடர் விடுதலைக் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் தோழர் பால்.பிரபாகரன், மாநில வெளியீட்டுச் செயலாளர் தோழர் இராம.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் மருத்துவர் கலைச்செல்வன்,
திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் செல்லப்பன், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திகசோதி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மூத்த பெரியார் தொண்டர் அய்யா இனியன் பத்மநாபன், தோழர் இந்தியப்பிரியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தோழர் சண்முகப்பிரியன் நன்றி கூறினார்.
விழாவில் கலந்து கொண்ட தோழர்களுக்கும் உறவினர்களுக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது..
மணவிழா மகிழ்வாக, இயக்க வளர்ச்சி நிதியாக ரூ.2000/- கழகப் பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி அவர்களிடம் வழங்கப்பட்டது..