தூத்துக்குடி மாவட்ட கலந்துரையாடல்

18.6.2017 அன்று தூத்துக்குடி, டூவிபுரம் 2ஆம் தெருவில் உள்ள முத்து மகாலில் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்தரையாடல் கூட்டம், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமையில் நடைபெற்றது. கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் க. மதன், குழந்தைகள் படிப்பிற்கான தொகையினை வருடா வருடம் கொடுத்து வருவது போன்றுஇவ்வாண்டும் கொடுப்பது என்றும், அதற்கான தோழர்களின் பங்களிப்பை விருப்பம் உள்ளவர்கள் மாவட்டத் தலைவரிடம் ஒப்படைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்கள் சந்தாவை சேர்ப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, மாவட்டச் செயலாளர் கோ. அ. குமார். மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள், பொருளாளர் பொறுப்புகளுக்கு பொறுப்பாளர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 24082017 இதழ்

You may also like...