பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் திருப்பூர்

திருப்பூரில் 17/09 காலை 10 மணிக்கு பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம் பெரியாரியல் கூட்டமைப்பு சார்பாக மிக சிறப்பாகவும் எழுச்சியோடும் நடைபெற்றது.
திராவிடர் விடுதலைக் கழகத்தோடு திக, தபெதிக ஒருங்கிணைப்பாய் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து இரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை வரை பெரியார் பிறந்தநாள் வாழ்த்தோடும் கொள்கை முழக்கங்களோடும் பேரணியாய் நடைபெற்றது. பெரியார் படையை வலுப்படுத்த தோழர்களோடு பெரியாரிய பிஞ்சுகளும் ஒன்று கூடினர்;
கொட்டும் மழையிலும் பெரியார் கொள்கை முழங்கினர்;
காரிருள் மண்ணில் இறங்கியதோ என வியக்கும் வண்ணம் கருஞ்சட்டையாய் அணிவகுத்து முழக்கங்களை எழுப்பி சென்றனர்

வாழ்க வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே

சாதி ஒழிப்பு போராளி தந்தை பெரியார் வாழ்கவே

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வாழ்கவே

இடஒதுக்கீடு பெற்றுத்தந்த தந்தை பெரியார் வாழ்கவே

சட்ட எரிப்பு போராளி தந்தை பெரியார் வாழ்கவே

இந்துத்துவ எதிர்ப்பு போராளி தந்தை பெரியார் வாழ்கவே

மணுதர்மத்தை கொளுத்திய தந்தை பெரியார் வாழ்கவே

அடிமைத்தனத்தை களைந்தெறிந்த தந்தை பெரியார் வாழ்கவே

சீர்திருத்தத் தலைவர் தந்தை பெரியார் வாழ்கவே

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான நாயகன் தந்தை பெரியார் வாழ்கவே

அம்பேத்கரின் தோழர் தந்தை பெரியார் வாழ்கவே

தென்னாட்டு அம்பேத்கர் தந்தை பெரியார் வாழ்கவே

காமராசரை முதல்வராக்கிய தந்தை பெரியார் வாழ்கவே

கல்வி உரிமை பெற்று தந்த தந்தை பெரியார் வாழ்கவே

தமிழர்களுக்கு மானமும் அறிவும் ஊட்டிய அறிவாசன் தந்தை பெரியார் வாழ்கவே

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்று போதித்த தந்தை பெரியார் வாழ்கவே

சாதி ஒழிப்பும் தனித்தமிழ்நாடும் இலக்கு என போராடிய தந்தை பெரியார் வாழ்கவே

தீண்டாமையை ஒழித்த தந்தை பெரியார் வாழ்கவே

இன இழிவை ஒழிக்க தன்மானம் ஊட்டிய தந்தை பெரியார் வாழ்கவே

தமிழ்தேசிய தந்தை தந்தை பெரியார் வாழ்கவே

தமிழர் தலைவர் தந்தை பெரியார் வாழ்கவே

பெண்களுக்கான கல்வி உரிமை பெற்று தந்த தந்தை பெரியார் வாழ்கவே

சுயமரியாதை திருமணத்தை வென்றெடுத்த தந்தை பெரியார் வாழ்கவே

புரட்சியாளர் அம்பேத்கர் பக்கம் நின்ற தந்தை பெரியார் வாழ்கவே

தமிழ்நாட்டில் தோழர் என்ற சொல்லை அறிமுகப்படுத்திய தந்தை பெரியார் வாழ்கவே

சமூக நீதி பெற்றுத்தந்த தந்தை பெரியார் வாழ்கவே

காடு கழனிகளில் கூலி வேலை செய்தவனை கலக்டராக்கிய தந்தை பெரியார் வாழ்கவே

அடுப்பறையில் இருந்த பெண்ணை
டாக்டராக்கிய தந்தை பெரியார் வாழ்கவே

தமிழனின் தன்மானம் காத்த தந்தை பெரியார் வாழ்கவே

இந்தியை அடித்து விரட்டிய தந்தை பெரியார் வாழ்கவே

சமஸ்கிருதத்தை அடித்து விரட்டிய தந்தை பெரியார் வாழ்கவே

மூடநம்பிக்கைகளை ஒழித்துக்கட்டிய தந்தை பெரியார் வாழ்கவே

குழந்தை திருமணங்களை ஒழித்துக்கட்டிய தந்தை பெரியார் வாழ்கவே

சூத்திரப் பட்டத்தை ஓழிக்க போராடிய  தந்தை பெரியார் வாழ்கவே

இரத்தமும் சதையும் போல அம்பேத்கரும் பெரியாரும் வாழ்கவே

பறையன் உன்றும் சக்கிலி என்றும் தோட்டி என்றும் இருந்ததை மாற்றி BA என்றும் MA என்றும் டாக்டர் என்றும் வக்கீல் என்றும் மாற்றிய அம்பேத்கரும் பெரியாரும் வாழ்கவே

இறுதியில் கழக மாநிலப் பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பெரியார் கொள்கைகளை அனைவரிடமும் எடுத்துரைத்தார்

தோழர் கனல்மதி திவிக உறுதிமொழியை படிக்க அனைத்து பெரியார் தொண்டர்களும் உறுதியேற்றனர்

நிகழ்வின் இறுதியில் அனைத்து பெரியாரிய இயக்கங்களும் இது போல் ஒன்றிணைந்து கூட்டாய் இனிவரும் காலங்களில் முன்னெடுப்போம் என்று உறுதி கொண்டனர்

tpr

You may also like...