ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெரியார் பிறந்தநாள் விழா தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம்

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெரியார் பிறந்தநாள் விழா தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் 10.09.2017 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

மாநில வெளியீட்டு செயலாளர் இளங்கோவன் தலைமை யில் நடைபெற்ற கூட்டத்தில் வருகின்ற 17 அய்யா பிறந்தநாள் விழாவை மாவட்ட கழகத்தால் சிறப்பாக சத்தியமங்கலத்தில் துவங்கி மாவட்ட முழுவதற்கும் அனைத்து பகுதியில் கழக கொடியினை ஏற்றுவது எனவும், கோபி நகர,ஒன்றிய கழகத்தின் சார் பாக 24.09.2017 அன்று கொடியேற்று விழா நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா செலவிற்காக மாவட்ட அமைப்பாளர் நிவாஸ் அவர்களது மகன் பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் அவர்கள் தனது உண்டியல் சேமிப்பு தொகையாக ரூபாய் 750/_ ஐ மாவட்ட செயலாளர் வேணுகோபால் அவர்களிடத்தில் வழங்கினார். கலந்துரையாடலில் மாவட்ட கழகத்தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

img-20170910-wa0014

You may also like...