பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் பேராவூரணி

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா

தந்தைப் பெரியாரின் 139 வது பிறந்தநாளையொட்டி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பேராவூரணியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில், திவிக பொறுப்பாளர் சீனி. கண்ணன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். மேலும் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் முனியன், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், உழைக்கும் மக்கள் கட்சியின் வீர.மாரிமுத்து, நாகூரான், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் அனல் இரவீந்திரன், பெரியார் பிஞ்சுகள் அறிவுச்செல்வன், அரும்புச் செல்வன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்வில் ஆறு.நீலகண்டன், ஆயில் மதியழகன், பைங்கால் இரா.மதியழகன், தா.கலைச்செல்வன் உள்ளிட்ட பெரியாரிய தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

பெண் விடுதலை, சாதி மறுப்பு, வகுப்புவாரி இடஒதுக்கீடு, மநுநீதி எதிர்ப்பு, திருக்குறள் மீட்பு, மாநில சுயாட்சி உள்ளிட்ட பெரியாரின் கருத்துக்கள் ஒலிபெருக்கிமூலம் முழக்கம் செய்யப்பட்டது.

img_20170917_100427

You may also like...