மதுரையில் நீட்டுக்கு எதிராக போராடிய தோழர்கள் கைது !
மதுரையில் நீட்டுக்கு எதிராக போராடிய தோழர்கள் கைது !
6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக அரசு !
நள்ளிரவில் சிறையில் அடைப்பு !
தமிழக காவல்துறையின் அராஜகம் !
நேற்று 07.09.2017 அன்று காலை மதுரை தமுக்கம் மைதானத்தில் நீட் தேர்விற்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்புகள் கலந்து கொண்டன.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கூட்டியக்கத் தோழர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி கடுமையாக தாக்கியுள்ளது.இத்தாக்குதலில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச்செயலாளர் தோழர் மணியமுதன் மா.பா. அவர்களுக்கு காலில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் மாணவர்கள்,இயக்கத்தோழர்கள் பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் 75 பேரை தமிழக காவல்துறை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தது.
மதியம் கைது செய்த காவல்துறை நள்ளிரவு வரை அவர்களை அடைத்துவைத்திருந்து நள்ளிரவில் கைது செய்யப்பட்டவர்களில் மாணவர்களை மட்டும் எச்சரித்து விடுவித்துவிட்டு நீட்டுக்கு எதிரான கூட்டியக்கத்தோழர்கள் 73 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.
திராவிடர் விடுதலைக் கழகம்,ஆதித்தமிழர் பேரவை,புரட்சிகர இளைஞர் முன்னணி, சட்டப்பஞ்சாயத்து இயக்கம்,R.Y.A,,குறிஞ்சி மக்கள் நல இயக்கம்,தமிழ் தேச மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இயக்கத்தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட்டுக்கு எதிராக அறவழியில் போராடிய தோழர்களை கடுமையாக தாக்கி வன்முறையை ஏவி,கைது செய்துள்ள தமிழக அரசையும் அதன் ஏவல்துறையான காவல்துறையையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
மாணவர்களின் உரிமைகளுக்காக போராடிய தோழர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப்பெற்று அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.