கழகத் தோழர் பழனி கொலை வழக்கு
விசாரணையை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றியது உச்சநீதிமன்றம் கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர் பழனி, 5.7.2012இல் அவரது வீட்டில் இருந்த போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தளி. இராமச்சந்திரனின் தூண்டுதலில் அவரது ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிறகு அவரது தலையைத் துண்டித்தனர். தளி பகுதியில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தவர் தளி. இராமச்சந்திரன், அப்பகுதியில் தங்களின் ‘சாம்ராஜ்யத்தை’க் கேள்விக்குள்ளாக்கும் துணிவோடு (அன்றைய) பெரியார் திராவிடர் கழகம் உருவாகி வளருவதை விரும்பவில்லை. எனவே கழகத் தோழர்களைத் தொடர்ந்து மிரட்டி தாக்குதல் நடத்தி வந்தவர்கள், இறுதியில் கழக அமைப்பாளர் பழனியையும் படுகொலை செய்தனர். தளி இராமச்சந்திரனும் அவரது குடும்பத்தாரும் நடத்திய தொழில் மோசடி, வன்முறைகளை பொதுக் கூட்டங்கள் வழியாகத் துணிவோடு அம்பலப்படுத்தி வந்தது (அன்றைய) பெரியார் திராவிடர் கழகம். அவர் மீதான நடவடிக்கையை கழகம் வலியுறுத்திய நிலையில் பழனி கொலைக்குப் பிறகு தளி. இராமச்சந்திரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு...
