கோவையில் இரயில் மறியல்
“தீண்டாமை ஒழிப் புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்திட்ட, தீர்ப்பைத் திரும்பப் பெற்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை 9ஆவது அட்டவணை யில் இணைத்திடு” என்ற கோரிக்கையை வலி யுறுத்தி 2.7.2018 அன்று தமிழகம் முழுவதும் இரயில் மறியல் நடத்து வதென முடிவு செய்யப் பட்டு அதற்காக மக்களை திரட்டுவதெனவும் முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 26, 27 இரு தினங்கள் வாகனம் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. இராம கிருஷ்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் இரயில் நிலையம் முன் திரண்டனர். காவல்துறைக்கும் தோழர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கே அமர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் 378பேர் கைதாயினர். கு. இராமகிருஷ்ணன் (பொதுச் செயலாளர், த.பெ.தி.க.), யு. சிவஞானம் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), சிறுத்தைச் செல்வன் (தமிழ்ப் புலிகள்), சுசி கலையரசன் (வி.சி.க.), நடராசன், முன்னாள் எம்.பி. (சி.பி.எம்.) மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பா. இராமச்சந்திரன், நிர்மல் குமார், விக்னேஷ், இயல், அமுல்ராஜ், மாதவன், நேரு தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 05072018 இதழ்