தவறான செய்தியை யாராவது பரப்பும் நோக்கத்தோடு செயல்படுவார்களானால் அவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடரும் திவிக எச்சரிக்கை

20.07.2018 மாலை 5 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சென்னை, மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கழகத்தின் மீது அவதூறு பரப்பும் தீயுள்நோக்கத்தோடு அவதூறு பரப்பும் வீரமணி என்பவரால் உருவாக்கப்பட்ட செய்தியினை பாலசுப்பிரமணியம், ராமலிங்கம், வெங்கட்ராஜூ மற்றும் பலரால் பகிரப்பட்டுள்ளது.
குற்றவாளிக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் வேண்டுமென்றே கழகத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பிய வீரமணியையும், அவருக்கு உடந்தையாக செய்தியினை வெளியிட்டு பரப்பிய பாலசுப்பிரமணியம், ராமலிங்கம், வெங்கட்ராஜூ போன்றோரின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மீது மீண்டும் தவறான செய்தியை மேலும் யாராவது பரப்பும் நோக்கத்தோடு செயல்படுவார்களானால் அவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துக் கொள்கிறோம் – தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

You may also like...