கடுவனூரில் குழந்தைகள் பழகுமுகாம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  விழுப்புரம் மாவட்டம் கடுவனூரில்  மாவட்ட அறிவியல் மன்ற அமைப்பாளர்  மு.நாகராசன் தலைமையில்  குழந்தைகள் பழகு முகாம்  நிகழ்ச்சி நடத்தப்பட்டன.

இயக்கத் தோழர் அய்யனார் நிலத்தில் 23.05.2018  புதன்கிழமை அன்று  பந்தல் அமைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டன. 5 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புவரை (ஆண், பெண்) 90 மாணவர்கள்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியாளராக  தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர்  ஆசிரியர் சிவகாமி வருகை புரிந்து  பயிற்சி அளித்தார்.  சிவகாமி மகள் கனல், காலை முதல் மாலை வரை பேய், பிசாசு, கடவுள், மதம் போன்ற பொய்யானவைகளை  விளக்கியும் உலகம் எப்படி தோன்றியது உயிர் எப்படி தோன்றியது போன்ற அறிவியல் – விஞ்ஞானம் சார்ந்தவைகளை பற்றியும் விளக்கமாக மாணவர்களுக்கு கற்பித்தனர். பழகுமுகாமில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் பொய்யான சாதி, மதம், கடவுள் சார்ந்த சிறு நாடகங்களை மாணவர்கள் நடத்தியது சிறப்பாக இருந்தன. இறுதியில் மாணவர்கள் பலரும்   சிவகாமி ஆசிரியரிடம் பல அறிவுசார்ந்த கேள்வி கேட்டதோடு  பழகுமுகாமில் கலந்துகொண்டது மிகவும் பயனுள்ளதாகவும்  மகிழ்ச்சியாகவும் இருந்ததாக மாணவர்கள் கூறினார்கள். மேலும் இந்த பழகு முகாம் அடுத்த கோடை விடுமுறையில்  நடத்துகின்ற போது இரண்டு நாட்கள் நடத்துங்கள் என்றும், இரண்டு நாட்கள் நடத்துகின்றபோது பல்வேறு துறைகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறினார்கள். நிகழ்ச்சியில் மாணவர் களுக்கு தேனீர், மிக்சர் வழங்கப்பட்டன. மதியம் இறைச்சி உணவு வழங்கப்பட்டன. இறுதியாக இராமர் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை முடித்து வைக்கப்பட்டன.

பெரியார் முழக்கம் 07062018 இதழ்

You may also like...