Category: மாவட்ட செய்திகள்

“பாண்டியாறு – மோயாறு” இயக்கத்தினர் தலைவருடன் சந்திப்பு

“பாண்டியாறு – மோயாறு” இயக்கத்தினர் தலைவருடன் சந்திப்பு

கோபி: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பளையத்திற்கு வருகைபுரிந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம், பாண்டியாறு – மோயாறு இணைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் கழக முன்னோடியுமான அக்ரி அ.நே.ஆசைத்தம்பி சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை ஆகிய 4 மாவட்டங்களில், உள்ள சுமார் ஒரு கோடி பொதுமக்களுக்கும், லட்சக்கணக்கான கால் நடைகளுக்கும், 5 இலட்சம் ஏக்கர் பயிர் சாகுபடிக்கும் பெரிதும் பயனளிக்கும் “பாண்டியாறு – மோயாறு” இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற கழகத்தின், ஆதரவு கோரியும், உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ள வலியுறுத்தியும் கோரிக்கை மனுவினை வழங்கினார். இந்தச் சந்திப்பில் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், ஈரோடு வடக்கு மாவட்ட அமைப்பாளர் நிவாஸ், அருளானந்தம் ஆகியோர் உடனிருந்தனர். பெரியார் முழக்கம் 08.08.2024 இதழ்

வனவாசியில் கலந்துரையாடல் கூட்டம்

வனவாசியில் கலந்துரையாடல் கூட்டம்

நங்கவள்ளி : வனவாசி கிளைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 01.08.2024 அன்று வனவாசி நகரத் தலைவர் பா.செந்தில்குமாரின் இல்லத்தில் நடைபெற்றது. இதற்கு சேலம் மாவட்டக் கழக அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, மேட்டூர் அண்ணாதுரை, கிட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாதந்தோறும் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது, கிளைக் கழக சந்தாவாக ரூ.100/- வழங்குவது, புதிய தோழர்களைக் கழகத்தில் இணைப்பது எனப் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் இராசேந்திரன், கிருஷ்ணன், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், பொருளாளர் பன்னீர்செல்வம், அமைப்பாளர் கதிர்வேல், நங்கவள்ளி பகுதி தோழர்கள் சிவக்குமார், விஸ்வநாதன், தானாவதியூர் பகுதியைச் சேர்ந்த புதிய தோழர்கள் சந்திரசேகரன், விக்னேஷ் ஆகியோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 08.08.2024 இதழ்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை ஓமலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை ஓமலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரியும், தொடர் ஆணவப் படுகொலைகளைக் கண்டித்தும், 04.08.2024 அன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அண்ணா சிலை அருகில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கழக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல் தலைமை தாங்கினார். நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் பொ.கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், சிந்தாமணியூர் நகரத் தலைவர் ம.ரவிக்குமார், சிந்தாமணியூர் நகரப் பொருளாளர் கோ.ஜெயபிரகாஷ், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் சி.தங்கதுரை, பவளத்தானூர் இரா.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் இரா.டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர் இரா.தெய்வானை, வி.சி.க ஒழுங்கு நடவடிக்கைக் குழு மாநிலத் துணைச் செயலாளர் சௌ.பாவேந்தன், திராவிடர்...

கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் தொடங்கியது போதைக்கு எதிரான பரப்புரைக்குத் தயாராக அறிவுரை

கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் தொடங்கியது போதைக்கு எதிரான பரப்புரைக்குத் தயாராக அறிவுரை

19.07.2024 அன்று தலைமைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கழகத் தலைவரின் மாவட்ட வாரியான சுற்றுப்பயணம் சென்னையில் தொடங்கியது. சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 04.08.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. முதல் நிகழ்வாக அண்மையில் மறைந்த கழகச் செயல்வீரர் மதிவாணன் அவர்களின் படத்தைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். பின்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவரது மகன் தமிழரசன் மாவட்டக் கழக வளர்ச்சி நிதியாக ரூ.5000/- வழங்கினார். மேலும் தற்போது போதைப்பொருள் கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் சூழலில் அதற்கு எதிரான பரப்புரைகளைக் கழகத் தோழர்கள் திவிரமாக மேற்கொள்ள வேண்டும் எனக் கழகத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார். கழகப் பொதுச்செயலாளர் பேசுகையில் ஊடகங்களும், பத்திரிகைகளும்...

கொளத்தூரில் கலந்துரையாடல்;  மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்

கொளத்தூரில் கலந்துரையாடல்; மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்

கொளத்தூர்: கொளத்தூர் நகரக் கலந்துரையாடல் கூட்டம் 27-07-2024 அன்று கொளத்தூர் சோதனைச் சாவடி அருகில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை தாங்கினார். சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் அன்பு, நங்கவள்ளி பொறுப்பாளர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இயக்க வளர்ச்சி மற்றும் புதியத் தோழர்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான செய்திகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கொளத்தூர் நகரக் கழகத்தின் எதிர்காலப் பணிகள் – புதியத் தோழர்களை அமைப்பாக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.. மேலும் இந்த கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அது பின்வருமாறு:- 1. மாதம்தோறும் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது. 2. பெரியார் படிப்பகத்தை முறையாக பயன்படுத்தி வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவது. 3. புதிய தோழர்களைச் சந்தித்து அவர்களுடன் கழகம் – பெரியாரியல் குறித்து எடுத்துக்கூறி அமைப்பாக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. கூட்டத்தின் முடிவில் பெரியார் இயக்கத்தின்...

கழகத் தோழர் மதிவாணன் முடிவெய்தினார்

கழகத் தோழர் மதிவாணன் முடிவெய்தினார்

கோவை : வட சென்னையில் வசித்து வந்த கழகத் தோழர் மதிவாணன், 28.07.2024 அன்று அவரது இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென முடிவெய்தினார். அவரின் பூர்வீகம் கோவை என்பதால் அவரது உடல் கோவைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கோவை குறிச்சி அண்ணா நகரில் உள்ள மயானத்தில் எந்தவித மதச் சடங்கு சம்பிரதாயங்களின்றி உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்விற்கான ஏற்பாடுகளை கழக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமார், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், கழக மாநகர அமைப்பாளர் கிருட்டிணன், கழகத் தோழர் சதிஷ்குமார் ஆகியோர் மேற்கொண்டனர். தோழரின் உடலுக்கு கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சந்திரசேகர், குமரேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செந்தில்குமார் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தோழர் மதிவாணன் பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றுப் பணியாற்றி வந்தவர் என்பதால் அவரது உடலை எந்த மதச் சடங்கு சம்பிரதாயங்களின்றி அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் எவ்வித...

ரூ.5,000 வளர்ச்சி நிதி

ரூ.5,000 வளர்ச்சி நிதி

கோபி : ஓய்வுபெற்ற வேளாண் இயக்குநரும், கழக முன்னோடியுமான ஆசைத்தம்பி – கற்பகம் இணையரின் மகளான தமிழ்ப்பாவை – அருண் இணையருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இதனையொட்டி 28.07.2024 அன்று கோபியில் உள்ள அவரது இல்லத்திற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். குழந்தை பிறந்ததன் மகிழ்வாக கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ. 5000/-யைக் கழகத் தலைவரிடம் வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 01.08.2024 இதழ்

பகுத்தறிவாளர் வி.பி.சண்முகசுந்தரம் மறைவு; கழகத் தலைவர் மரியாதை

பகுத்தறிவாளர் வி.பி.சண்முகசுந்தரம் மறைவு; கழகத் தலைவர் மரியாதை

கோபி : மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சீரிய பகுத்தறிவாளர் வி.பி. சண்முகசுந்தரம் 20.07.2024 அன்று முடிவெய்தினார். இந்நிலையில் 28.07.2024 அன்று கோபியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துக் கொண்டார். மேலும் அன்பழகன் IAS, மதிமுக மாவட்டச் செயலாளர் கந்தசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்ட கழகத் தோழர்களும் ஆறுதல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 01.08.2024 இதழ்

புதிய குற்றவியல் சட்டங்களின் ஆபத்துகள் விளக்கக் கருத்தரங்கம்

புதிய குற்றவியல் சட்டங்களின் ஆபத்துகள் விளக்கக் கருத்தரங்கம்

பொள்ளாச்சி: சமஸ்கிருத பெயரிலான நஞ்சு தடவிய மூன்று குற்றவியல் சட்டங்களை அனுமதியோம்! சிறப்புக் கருத்தரங்கம் 28.07.2024 அன்று பொள்ளாச்சி பர்வானா அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு பொள்ளாச்சி யாழ்.வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். சபரிகிரி வரவேற்புரையாற்றினார். அரிதாசு முன்னிலை வகித்தார். இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மக்கள் சிவில் உரிமைக் கழக தேசியச் செயலாளர் வழக்குரைஞர் ச.பாலமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மேலும் இந்நிகழ்வில் பொள்ளாச்சி நகர மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் கா.சு.நாகராசன், மக்கள் விடுதலை முன்னணி தலைவர் கா.மாரிமுத்து, தமிழ்நாடு தன்னுரிமை மீட்புக் கழகம் வழக்குரைஞர் சேதுபதி, திராவிடர் கழகம் மாரிமுத்து, தமிழ்ப்புலிகள் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளர் வானுகன், புரட்சிகர இளைஞர் முன்னணி வழக்குரைஞர் மலரவன் ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றினார்கள். நிறைவாக வினோதினி நன்றி கூற கருத்தரங்கம் நிறைவு பெற்றது. இதில் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி,...

பல்லடத்தில் குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்; கழகத் தலைவர் சிறப்புரை

பல்லடத்தில் குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்; கழகத் தலைவர் சிறப்புரை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 29.07.2024 திங்கள்கிழமை மாலை 5.00 மணிக்கு பல்லடம் NGR சாலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.வி.க. பல்லடம் நகர அமைப்பாளர் மு.கோவிந்தராசு தலைமை தாங்கினார். செம்பருதி வரவேற்புரை யாற்றினார். கழகத் தோழர்கள் பழனிச்சாமி, அஜித், கௌதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்க நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவினரின் பகுத்தறிவு பாடல்கள் பாடப்பட்டன. தோழர் அனுப்பட்டி சீனி.செந்தேவன் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன், கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், கழகப் பொருளாளர் துரைசாமி, திமுக பல்லடம் நகரப் பொருளாளர் குட்டி பழனிச்சாமி ஆகியோர் உரையாற்றினர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் குடிஅரசு இதழின் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பரமசிவம், இந்தியக்...

நங்கவள்ளி நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

நங்கவள்ளி நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

நங்கவள்ளி நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 22.07.2024 அன்று நங்கவள்ளியில் உள்ள அ.செ.சந்திரசேகரன் இல்லத்தில் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமையில் நடைபெற்றது. சேலம் (மே) மாவட்ட அமைப்பாளர் அ.அண்ணாதுரை, சேலம் (மே) மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, மே.கா.கிட்டு, கொளத்தூர் ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இயக்க வளர்ச்சி குறித்தும், புதிய தோழர்களை இயக்கத்திற்கு சேர்ப்பது, சந்தா சேர்ப்பு மற்றும் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி நகரச் செயலாளர் பிரபாகரன், அ.செ.சந்திரசேகரன், அருள்குமார், ரமேஷ், ரவிக்குமார், பேரறிவாளன் ஆகியோர் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 25.07.2024 இதழ்

கழகத் தோழர் இளவரசனுக்கு பாராட்டு விழா

கழகத் தோழர் இளவரசனுக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கும் வட சென்னை கழகத் தோழர் இளவரசனுக்கு பாராட்டு விழாவானது 19.07.2024 அன்று சேத்துப்பட்டு சமூக நலக் கூடத்தில் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது.. நிகழ்விற்கு சிகாமணி, தனசேகர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். கழகத் தோழர் அருள்தாஸ் பெரியார் – அம்பேத்கர் பாடல்களை பாடினார். இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், விசிக மையச் சென்னை (கி) மாவட்டச் செயலாளர் பி.சாரநாத், விசிக மையச் சென்னை (வ) மாவட்டச் செயலாளர் இளங்கோ, மக்கள் அதிகாரம் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். பா.இராஜன்...

ஆம்ஸ்ட்ராங் வீட்டில் கழகத் தலைவர்

ஆம்ஸ்ட்ராங் வீட்டில் கழகத் தலைவர்

அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சமூக விரோதக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, 20.07.2024 அன்று காலை 10:30 மணியளவில் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரை இழந்து வாடும் அவரது துணைவியாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொண்டார். இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்தனர். பெரியார் முழக்கம் 25.07.2024 இதழ்

அழகேந்திரன் ஆணவப் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

அழகேந்திரன் ஆணவப் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர் அழகேந்திரன் ஆணவப் படுகொலையைக் கண்டித்தும், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் ஒன்றை இயற்றக் கோரியும் 15.07.2024 அன்று மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மா.பா.மணி அமுதன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி வரவேற்புரையாற்றினார். மாவட்டக் கழக காப்பாளர் தளபதி முன்னிலை வகித்தார். மேலும் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாநகரத் கழகத் தலைவர் பாலு, திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி, சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் பெரியார் முத்து, தேனி மாவட்ட அமைப்பாளர் தேனி ராயன், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் சந்துரு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வெ.கனியமுதன், ஆதித்தமிழர் பேரவை மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார் உள்ளிட்டோர் பேசினார்கள். நிறைவாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் கண்டன...

“கொள்கைக் களமான கோவை!”

“கொள்கைக் களமான கோவை!”

கோவை மாநகர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் 14.07.2024 அன்று கோவை ஆர்.எஸ்புரம், தடாகம் ரோட்டிலுள்ள திருமூர்த்தி லேஅவுட்டில் ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம் நடைபெற்றது. இதற்கு கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமசந்திரன் தலைமை தாங்கினார். பயிலரங்கின் நோக்கம் குறித்து மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் விளக்கிக் கூறி வரவேற்புரையாற்றினார். பயிலரங்கைத் தொடங்கி வைத்து கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி உரையாற்றினார். தோழர்கள் அறிமுகத்திற்கு பின் “பார்ப்பனரல்லாதாரின் வளர்ச்சிக்கு வித்திட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம்” என்ற தலைப்பில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், வகுப்புரிமை வரலாற்றையும் பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதார் உரிமை மறுக்கப்பட்டதற்கு எதிராக திராவிடர் இயக்கம் செய்த பணிகளையும், உரிமைகளைக் கற்றுக்கொடுத்த தலைவர் களின் உறுதித் தன்மையையும் விரிவாக எடுத்துக் கூறினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பெரியாரியலாளர் சிற்பி இராசன் “மந்திரமல்ல தந்திரமே!” அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தினார். சாமியார்களின் மோசடிகளையும் மக்களின் மூடநம்பிக்கைகளையும் விளக்கினார். அறிவியல்...

இளம்பிள்ளையில் கலந்தாய்வு கூட்டம்

இளம்பிள்ளையில் கலந்தாய்வு கூட்டம்

இளம்பிள்ளை நகர திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 08.07.2024 அன்று இளம்பிள்ளையில் மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் கடையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் தலைமையில், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் முன்னிலையிலும் நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் தோழர் ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் 05.07.2024 அன்று படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இளம்பிள்ளை நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி இளம்பிள்ளையில் பொதுக் கூட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சேலம் (கி) மாவட்டச் செயலாளர் டேவிட், மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம், நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் (கி) மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, இளம்பிள்ளை நகரத் தலைவர் ரமேஷ், சௌந்தரராஜன், தனசேகர், கோபி, திவ்யா, தமிழ்மணி, தமிழ், கவியரசு, சேகர்,...

கிருஷ்ணகிரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சுய மரியாதை இயக்க நூற்றாண்டு விழாப் பொதுக் கூட்டம் 30.06.2024 அன்று நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார், மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார், கெலமங்கலம் ஒன்றியக் கழகச் செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் சிறப்புரையாற்றினார்.. நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய சமூக மாற்றங்களை பட்டியலிட்டு நிறைவுரையாற்றினார். செந்தில் நன்றி கூற பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது. பெரியார் முழக்கம் 11.07.2024 இதழ்

புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் ஒரு நபர் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு!

புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் ஒரு நபர் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு!

ஒன்றிய பாஜக அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற் கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்ய நாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடை முறையில் இருந்து வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை ‘பாரதிய நியாய சன்ஹிதா – 2023’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா – 2023’ மற்றும் ‘பாரதிய சாக்ஷியா சட்டம் – 2023’ என மாற்றப்பட்டு, ஜூலை 1 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் வெடித்த போராட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும், அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ள...

நேரில் மரியாதை

நேரில் மரியாதை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் உடலுக்கு கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.. இதில் வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 11.07.2024 இதழ்

வி.பி.சிங் சிலைக்கு மரியாதை!

வி.பி.சிங் சிலைக்கு மரியாதை!

சமூக நீதிக் காவலரும், முன்னாள் ஒன்றியப் பிரதமருமான வி.பி.சிங் அவர்களின் 94ஆவது பிறந்தநாளையொட்டி, சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 27.06.2024 இதழ்

தோழர் விஜயன் தந்தை நினைவேந்தல் நிகழ்வு

தோழர் விஜயன் தந்தை நினைவேந்தல் நிகழ்வு

வட சென்னை கழகத் தோழர் விஜயனின் தந்தை ஏகாம்பரம் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 23.06.2024 அன்று புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.. தோழர் அருள்தாஸ் தலைமையில், தட்சிணாமூர்த்தி முன்னிலையில் கூட்டம் தொடங்கியது. நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஏகாம்பரம் அவர்களின் படத்தை திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார். மேலும் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், சிபிஐ (எம்) அன்பு, விசிக தமிழ்மணி, உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். தோழர் விஜயன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. கூட்டத்தை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி தொகுத்து வழங்கினார். பெரியார் முழக்கம் 27.06.2024 இதழ்

கடலூர் மாவட்ட அமைப்பாளராக மதன்குமார் நியமனம்

கடலூர் மாவட்ட அமைப்பாளராக மதன்குமார் நியமனம்

கடலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், 28.5.2024 அன்று கருவேப்பிலங்குறிச்சி வசந்தம் மகாலில் மாவட்டத் தலைவர் அ.மதன்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் நா.கொளஞ்சி வரவேற்புரை யாற்றினார். மாவட்டத் தலைவர் அ.மதன்குமார், மாவட்ட துணைத் தலைவர் செ.பிரகாஷ் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்தும், தற்போதைய சூழல் குறித்தும் உரையாற்றினார்கள். மாவட்ட அமைப்பாளர் நா.கொளஞ்சி இயக்க நிலை குறித்தும், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் ப.அறிவழகன் கழகத்தின் கடந்த கால செயல்பாடுகள் குறித்தும் தற்போதைய சூழல் குறித்தும் பேசினார். நிறைவாக கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் “இன்றைய அரசியல் சூழலில் பெரியார் இயக்கத்தின் தேவை, எதிர்கால செயல்பாடுகள், இயக்க தோழர்களின் செயல்பாடுகள்” குறித்து விரிவாக உரையாற்றினார்கள். நிறைவாக முத்துகிருஷ்ணன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கடலூர் மாவட்டத்தில் பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்பட்டு தோழர் மதன்குமார் மாவட்ட அமைப்பாளராக நியமனம்...

தலைவர் பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள் தாரமங்கலம் பொதுக்கூட்டத்தில் படிவம் வழங்கினர்

தலைவர் பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள் தாரமங்கலம் பொதுக்கூட்டத்தில் படிவம் வழங்கினர்

தாரமங்கலம் நகரக் கழகத்தின் சார்பில் “குடிஅரசு இதழ் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா” பொதுக்கூட்டம் 20.06.2024 அன்று தாரமங்கலம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பவளத்தனூர் சரவணன் தலைமை தாங்கினார், கே.ஆர்.தோப்பூர் கண்ணன் வரவேற்புரையாற்றினார், தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, குடந்தை பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் முதல் நிகழ்வாக உமாபதி – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி மற்றும் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ் தொடக்கவுரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கே.ஆர்.தோப்பூர் கணேசன் நன்றி கூற கூட்டம் நிறைவு...

கீரனூரில் இரண்டு நாள் பயிலரங்கம்! திண்டுக்கல் மாவட்டக் கழகம் சிறப்பான ஏற்பாடு

கீரனூரில் இரண்டு நாள் பயிலரங்கம்! திண்டுக்கல் மாவட்டக் கழகம் சிறப்பான ஏற்பாடு

திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் இரண்டு நாள் பெரியாரியல் பயிலரங்கம் பழனி கீரனூரில் 11.06.2024 – 12.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. பயிலரங்கை கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் ஒருங்கிணைத்தார். கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி வாழ்த்துரை வழங்கினார். பின்னர் “பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் பொருத்தப்பாடு” மற்றும் ”பெரியார் மீதான அவதூறுகளும்” என்கிற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், பெரியாரின் பெண் விடுதலை என்கிற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொருப்பாளர் சிவகாமியும், பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலில் (இந்திய) பார்ப்பனர்களின் பங்கு என்கிற தலைப்பில் ம. கி. எட்வின் பிரபாகரனும் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் டெலஸ்கோப் மூலம் நிலவைக் குறித்து அறியும் அறிவியல் வகுப்பினை பேராவூரணி கலைச்செல்வன் நடத்தினார். முதல்நாள் நிறைவாக் சமூக ஊடகங்கள் குறித்து முகநூல் பொறுப்பாளர் பரிமளராசனும், இணையதள பொறுப்பாளர் விஜயகுமாரும் உரை நிகழ்த்தினார்கள். இரண்டாம் மற்றும் நிறைவு நாளான 12.06.2024 அன்று திராவிடர் இயக்கத்தின்...

தோழர் திலீபன் பெற்றோர் படத்திறப்பு

தோழர் திலீபன் பெற்றோர் படத்திறப்பு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழகத் தலைவர் திலீபனின் பெற்றோர் பச்சையப்பன் – தாயாரம்மாள் ஆகியோரது படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் 15.06.2024 அன்று நெமிலி பெரப்பேரி கிராமத்தில் நடைபெற்றது.. இந்நிகழ்விற்கு வேலூர் மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் இரா.சிவா தலைமை தாங்கினார். நிகழ்வில் பச்சையப்பன் – தாயாரம்மாள் ஆகியோரது படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் இரவிபாரதி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். நரேன் நன்றி கூறினார். இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, வேலூர் மாவட்டத் தலைவர் திலீபன், அன்பு, மற்றும் தோழர்கள், தோழமை இயக்கத்தினர், குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20.06.2024 இதழ்

தோழர் விஜயன் தந்தை முடிவெய்தினார்!

தோழர் விஜயன் தந்தை முடிவெய்தினார்!

வட சென்னை மாவட்டத் தோழர் விஜயன் அவர்களின் தந்தை கோ. ஏகாம்பரம் அவர்கள் 11.06.2024 அன்று முடிவெய்தினார். அவரது இறுதி நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வட சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி, அருள்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த ஏகாம்பரம் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் கொள்கை முழக்கங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு, எந்தவித இந்து மதச் சடங்கு சம்பிரதாயங்களின்றி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு கே.பி.பார்க் பகுதியில் நடந்தது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 20.06.2024 இதழ்

தோழர் திலீபனின் தாயார் முடிவெய்தினார்!

தோழர் திலீபனின் தாயார் முடிவெய்தினார்!

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் திலீபனின் தாயார் தாயாரம்மாள் 03.06.2024 திங்கட்கிழமை இரவு 11.30 மணி அளவில் முடிவெய்தினார். இறுதி நிகழ்வு இன்று 04.06.2024 மாலை 4.30 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் பெரப்பேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அம்மையாரின் உடலுக்கு வேலூர் மாவட்டக் கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினார்கள். அம்மையாரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம், 15.06.2024 அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கழக மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழமை இயக்கத்தினர் பங்கேற்கின்றனர். பெரியார் முழக்கம் 13.06.2024 இதழ்

திண்டுக்கல்லில் பயிலரங்கம்

திண்டுக்கல்லில் பயிலரங்கம்

திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் இரண்டு நாள் “பெரியாரியல் பயிலரங்கம்” ஜுன் 11,12 ஆகிய தேதிகளில் பழனி – தாராபுரம் சாலையில் அமைந்துள்ள கீரனூர் S.M மினி மகாலில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரியார் – அம்பேத்கர் – மார்க்ஸ் இன்றைய பொருத்தப்பாடு என்ற தலைப்பிலும், பெரியார் மீதான அவதூறுகளும், திராவிட இயக்கத்தின் இன்றைய தேவைகளும் என்ற தலைப்பிலும் வகுப்பு நடத்தவுள்ளார். மேலும் கழக முன்னணியினர் வகுப்பெடுக்கவுள்ளனர். பயிலரங்கில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும் மருதமூர்த்தி – 9940969803 மாவட்ட அமைப்பாளர், திண்டுக்கல் பெரியார் முழக்கம் 05.06.2024 இதழ்

தோழர் விசு படத்திறப்பு; தலைவர் பங்கேற்பு

தோழர் விசு படத்திறப்பு; தலைவர் பங்கேற்பு

பெருந்துறை ஒன்றிய திவிக செயலாளர் தோழர் விசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 23.05.2024 அன்று, மேட்டுப்புதூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விசுவின் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

ஈட்டியாய் கருத்தியல் பாய்ச்சிய மடத்துக்குளம் பயிலரங்கம்!

ஈட்டியாய் கருத்தியல் பாய்ச்சிய மடத்துக்குளம் பயிலரங்கம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிலரங்கம் மடத்துக்குளம் சூர்யா மகாலில் மடத்துக்குளம் மோகன் அரங்கில் மே 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் மிக சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் மே 21ஆம் தேதி காலை 9:30க்கு தோழர்கள் அறிமுக நிகழ்ச்சி தொடர்ந்து பயிலரங்கின் நோக்கம் குறித்து எடுத்துரைத்து தோழர்களை வரவேற்று கழகத்தின் வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன் உரையாற்றினார். முதல் வகுப்பு காலை 10.00 மணிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் “வகுப்புவாரி பிரதிநிதித்துவம்” என்னும் தலைப்பிலும், இரண்டாவது அமர்வாக பிற்பகல் 12.15 மணிக்கு தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தலைவர் சிவகாமி “கடவுள் மறுப்பு தத்துவம்” என்னும் தலைப்பிலும், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மூன்றாவது அமர்வாக மாலை 03.15 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள் “திராவிடர் இயக்க வரலாறு” எனும் தலைப்பில் வகுப்புகள் எடுத்தனர். நான்காம் அமர்வாக இரவு 07.00...

சத்தியமங்கலத்தில் பெரியார் படிப்பகம் திறப்பு

சத்தியமங்கலத்தில் பெரியார் படிப்பகம் திறப்பு

ஈரோடு வடக்கு : தந்தை பெரியார் படிப்பகம் திறப்பு விழா 26.05.2024 சத்தி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்விற்கு வழக்கறிஞர் தமிழரசன் தலைமை தாங்கினார். சத்தி ஒன்றிய செயலாளர் சிதம்பரம் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் செகதீஸ்வரன், மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, மாவட்ட அமைப்பாளர் கோபி நிவாசு, மாவட்டச் செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தந்தை பெரியார் படிப்பகத்தை கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிறைவாக தமிழ்நாடு அறிவியல் மன்றத் தோழர் கிருட்டிணசாமி நன்றி கூறினார். இதில் கோபி, நம்பியூர், தூ.நா.பாளையம் மற்றும் சத்தி ஒன்றிய கழகத் தோழர்கள், பொதுமக்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

நீதிமன்றத்தில் மத விழா!- கழகம் புகார்

நீதிமன்றத்தில் மத விழா!- கழகம் புகார்

ஈரோட்டில் அரசுக்கு சொந்தமான ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி கற்பக விநாயகர் திருக்கோவிலில் 19.05.2024 அன்று கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டது. “அரசுக்கு சொந்தமான நீதிமன்ற வளாகத்திற்குள் குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது, இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்லும் மதச்சார்பற்ற தன்மையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே மத வழிபாட்டு விழாவை தடுத்த வேண்டும்” என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி ஈரோடு மாவட்ட தலைமை நீதிபதி அவர்களிடம் 17.05.24 அன்று விண்ணப்பம் அளித்திருந்தார். எனினும், அரசு விதிமுறைகளை மீறி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டிருக்கிறது. ஊடகங்களிலும் அதுகுறித்த செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதுதொடர்பாக சட்ட ரீதியிலான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தெரிவித்துள்ளார். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

கழகத்தில் இணைத்துக்கொண்ட பெரம்பூர் விஷால்

கழகத்தில் இணைத்துக்கொண்ட பெரம்பூர் விஷால்

பெரம்பூர் விஷால், கழகத்தின் செயல்பாடுகளை இணையம் வழியாக அறிந்து கழகத்தில் இணைய விருப்பப்பட்டு 19.05.2024 அன்று மயிலாப்பூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 21வது நிமிர்வோம் வாசகர் வட்ட சந்திப்பில் மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். உடன் கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், வட சென்னை அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன். பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

தோழர் விக்னேஷ் படத்திறப்பு நிகழ்ச்சி

தோழர் விக்னேஷ் படத்திறப்பு நிகழ்ச்சி

மறைந்த கழக செயல்வீரர் தோழர் போரூர் விக்னேஷ் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 19.05.2024 அன்று கழகத் தலைமை அலுவலகத்தில், நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 21வது சந்திப்பில் நடைபெற்றது. வட சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் விக்னேஷ் படத்தை திறந்துவைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், மடிப்பாக்கம் பகுதிக் கழகச் செயலாளர் எட்வின் பிரபாகரன். பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

தீவட்டிப்பட்டி கலவரத்தில் காவல்துறை பாரபட்சம்! பாதிக்கப்பட்டவர்கள் மீதே பாயும் நடவடிக்கை! உண்மை கண்டறியும் குழுவின் பரிந்துரைகள்

தீவட்டிப்பட்டி கலவரத்தில் காவல்துறை பாரபட்சம்! பாதிக்கப்பட்டவர்கள் மீதே பாயும் நடவடிக்கை! உண்மை கண்டறியும் குழுவின் பரிந்துரைகள்

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி மே 2/2024 அன்று நடந்த சாதிய வன்முறைகளைத் தொடர்ந்து, முற்போக்கு, சனநாயக அமைப்புத் தோழர்கள் மே 11 ஆம் நாளன்று நேரடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று நாச்சினாம்பட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களையும், தீவட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களையும், தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் (Investigation Officer – I.O.) திரு.ஞானசேகரன் அவர்களையும் சந்தித்து ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் அடிப்படையில் உண்மை அறியும் குழு அரசுக்கு முன்வைக்கும் பரிந்துரைகள்: • ஆதிதிராவிடர் பகுதியில் தேவையில்லாமல் பலர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவை திரும்பப் பெறப்பட வேண்டும். எடுத்துக் காட்டாகப் பெருமாயி மகன் அருண்குமார் (வயது 23) , குணா ( 21 ) தா/பெ பழநியம்மாள் போன்ற பல அப்பாவி இளைஞர்கள் கலவரத்தில் காயம் அடைந்ததோடு ஆத்தூர் சிறையிலும் அடைக்கப் பட்டுள்ளனர். • காவல்துறை தாக்குதலால்...

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகர கழக சார்பில் “குடிஅரசு இதழ்” மற்றும் “சுயமரியாதை இயக்க” நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நாள் : 25.05.2024 சனி நேரம் : மாலை 5 மணி இடம் : தாரமங்கலம் அண்ணா சிலை அருகில் சிறப்புரை : கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு : தாராமங்கலம் நகர கழகம் பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

விஜயமங்கலம் விசு முடிவெய்தினார்

விஜயமங்கலம் விசு முடிவெய்தினார்

ஈரோடு வடக்கு : கழக பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயமங்கலம் விசு உடல்நலக்குறைவால் 11.05.2024 அன்று அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த தோழர் விசுவின் உடலுக்கு கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வகுமார், வடக்கு மாவட்ட அமைப்பாளர் நிவாஸ், இரமேசு மற்றும் கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். குறிப்பு : விஜயமங்கலம் விசு அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு 23.05.2024 அன்று காலை மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றுகிறார். பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

மாநிலத்தில் 4-வது இடம்பெற்ற கழக மாணவர்

மாநிலத்தில் 4-வது இடம்பெற்ற கழக மாணவர்

கழகத் தோழர்கள் கொளத்தூர் சுதா – ராஜா இணையரின் மகன் இரா.சு. கதிரவன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 496/500 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். மாணவர் கதிரவன் கோவிலுக்கு போனதில்லை, வேண்டுதல் வைத்ததில்லை, பாதபூஜை நடத்தவில்லை, சிறப்பு யாக பூஜையில் பங்கேற்கவில்லை ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு, தன்னம்பிக்கையோடு படித்து பத்தாம் வகுப்பில் 496 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் நான்காவது இடம் பிடித்திருக்கிறார். தேர்வில் வென்றதை அடுத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணியை தனது பெற்றோர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கழகக் கலந்துரையாடல் கூட்டம்

சேலம் : தாரமங்கலம் நகர கழக கலந்துரையாடல் கூட்டம் 11.05.2024 அன்று பவளத்தானூர் சரவணன் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சரவணன் தலைமை தாங்கினார். பவளத்தானூர் தனசேகர் முன்னிலை வகித்தார். இதில் தாராமங்கலம் நகர கழக சார்பில் மே மாத இறுதிக்குள் “குடிஅரசு இதழ்” மற்றும் “சுயமரியாதை இயக்க” நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பவளத்தானூர் சரவணன், தனசேகர், கே.ஆர்.தோப்பூர் கண்ணன், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, இளம்பிள்ளை சேகர், நங்கவள்ளி நகர செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

மேட்டூர் ஆர்.எஸ். மாதையன் காலமானார்

மேட்டூர் ஆர்.எஸ். மாதையன் காலமானார்

சேலம் மாவட்டம் மேட்டூர் RS பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சௌந்தர்ராஜனின் தந்தை மாதையன் (74) 07.05.2024 அன்று உடல் நலக்குறைவின் காரணமாக முடிவெய்தினார். மறைந்த தோழர் மாதையன் அவர்களின் இறுதி நிகழ்வு மேட்டூர் RS,தேங்கல்வாரை,NSK நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினார்கள். பெரியார் முழக்கம் 09.05.2024 இதழ்

+2 தேர்ச்சி பெற்ற திருநங்கைக்கு பாராட்டு

+2 தேர்ச்சி பெற்ற திருநங்கைக்கு பாராட்டு

சென்னை நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை சகோதரி நிவேதா. இவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 283/600 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருக்கிறார். சகோதரி நிவேதா அவர்களை மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி தலைமையில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். உடன் தோழர்கள் அருண்குமார், இராஜேசு, குமார், எழில், அன்னூர் விஷ்ணு. பெரியார் முழக்கம் 09.05.2024 இதழ்

மடத்துக்குளத்தில் பெரியாரியல் பயிலரங்கம்

மடத்துக்குளத்தில் பெரியாரியல் பயிலரங்கம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் இரண்டு நாள் கோடைக்கால பெரியாரியல் பயிலரங்கம் நடைபெறவுள்ளது. நாள் : மே 21,22 ஆகிய தேதிகளில் இடம் : சூரியா மகால், பழனி ரோடு, மடத்துக்குளம் குறிப்பு : இந்த பயிலரங்கில் திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு மாவட்டத் தோழர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். முன்பதிவு கட்டாயம். கட்டணம் ரூ.100/- முன்பதிவுக்கு : 9942645497, 9842248174, 9442837666, 7373561014, 9842487766 பெரியார் முழக்கம் 02.05.2024 இதழ்

தேவேந்திரன் – நிஷா இணையேற்பு விழா

தேவேந்திரன் – நிஷா இணையேற்பு விழா

சென்னை : மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் குழந்தைநல மருத்துவராக பணிபுரியும் அ.வா.தேவேந்திரன் அவர்களுக்கும், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த, மயிலாடுதுறை அறம் குழந்தைகள் சிகிச்சையக இயக்குநர் இராம.ஜெனிஃபர் (எ) நிஷா அவர்களுக்கும் ஜாதி – மத மறுப்புத் திருமணம் 14.04.2024 அன்று பெரியார் திடலில் நடைபெற்றது. இணையேற்பு விழாவுக்கு தலைமைத் தாங்கிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இணையேற்பை நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார். இந்நிகழ்வில் இயக்குநர் கோபி நயினார், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 02.05.2024 இதழ்

தோழர் பத்ரியின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல்

தோழர் பத்ரியின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல்

சென்னை : வாழ்க்கையை கொள்கையாக்குவோம்! கொள்கையை சமூகமாக்குவோம்!! என்ற இலட்சிய வேட்கையோடு களப்பணியாற்றிய செயல்வீரர் பத்ரி நாராயணனின் 20வது நினைவுநாளை ஒட்டி மயிலாப்பூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் திராவிட முன்னேற்றக் கழக சென்னை மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, விசிக மண்டலச் செயலாளர் ரூதர் கார்த்திக், திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் வெங்கடேசன், கழக மாவட்டத் தலைவர் வேழவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நினைவேந்தல் கூட்டம் இராயப்பேட்டை வி.எம் தெரு பத்ரி நாராயணன் நினைவுப் படிப்பகம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பத்ரி அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். தொடர்ந்து அவருடன் பயணித்த கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர், விசிக மைய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சாரநாத்,...

திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்

திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது ஜிஎஸ்டி குறித்து பாஜகவினரிடம் கேள்வி எழுப்பிய திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் சங்கீதா மீது தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகிகள் சின்னச்சாமி, சீனிவாசன், ரவிச்சந்திரன் ஆகியோர் மீது 15 வேலம்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். வழக்குப்பதிவான நிலையில் தலை மறைவான குற்றவாளிகள் முன்பிணைக் கோரி தாக்கல் செய்த மனுவை திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் குற்றவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 29.04.2024 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.‌ பாதிக்கப்பட்ட சங்கீதாவுக்கு ஆதரவாக கழக வழக்கறிஞர் திருமூர்த்தி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இருப்பினும் குற்றவாளிகளான பாஜக நிர்வாகிகளுக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் தாழ்த்தியதோடு, திருப்பூர் மாநகர அமைப்பாளர் சங்கீதா மீது பொய் வழக்கினை பதிவு செய்த 15 வேலம்பாளையம் காவல் ஆய்வாளருக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர்...

கழக செயல்வீரர் போரூர் விக்னேஷ் மறைவு

கழக செயல்வீரர் போரூர் விக்னேஷ் மறைவு

சென்னை மாவட்டக் கழக செயல்வீரர் போரூர் ‌‌‍விக்னேஷ் கடந்த ஆண்டு கழகத்தில் இணைந்த நாள் முதலே கழகம் நடத்திய ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். ஐடி ஊழியர், வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் தோழர் விக்னேஷ். அவர் 16.04.2024 அன்று முடிவெய்தினார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தோழர் விக்னேஷின் உடலுக்கு கழகத்தின் சார்பில் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தோழர் உமாபதி, எட்வின் பிரபாகரன், இரண்யா, அருண்குமார், அன்னூர் விஷ்ணு, அட்டி அருண், புகழ் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள். சொந்த ஊரான திண்டிவனத்தில் தோழர் விக்னேஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

எதிர்வரும் நிகழ்வு

எதிர்வரும் நிகழ்வு

இயக்கத்தின் கருப்பு மெழுகுவர்த்தி, கழக செயல்வீரர் தோழர் பத்ரி நாராயணன் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி ஏப்ரல் 30ஆம் தேதி காலை 9 மணியளவில் மயிலாப்பூர் மயானத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து இராயப்பேட்டை பத்ரி நாராயணன் நினைவுப் படிப்பகம் முன்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது எனவே தோழர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இரா.உமாபதி மாவட்டச் செயலாளர் – சென்னை திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

தோழர் சி.சுப்பிரமணியன் மறைந்தார் சடங்குகளை மறுத்து உடல் அடக்கம்

தோழர் சி.சுப்பிரமணியன் மறைந்தார் சடங்குகளை மறுத்து உடல் அடக்கம்

சேலம் : திராவிடர் விடுதலைக் கழகத் தோழர், கொளத்தூர், அய்யம்புதூர் சி.சுப்பிரமணியன் அவர்கள் 21.04.2024 அன்று முடிவெய்தினார். அவரது உடலை கழகப் பெண் தோழர்கள் சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், தோழமை இயக்கத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். இறந்தவர்களின் உடலை பெண்கள் சுமக்க கூடாது. சுடுகாடு வரை பெண்கள் வரக்கூடாது என்ற மூடத்தனத்தை மறுத்து, ஜாதி – மத சடங்குகளை மறுத்து பெண்களே முன்னின்று இறுதி நிகழ்வுகளை நடத்தியது அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு மறைந்த சி.சுப்பிரமணியம் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மறைந்த தோழர் சி.சுப்பிரமணியன் படத்தை திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார். இந்நிகழ்வில் கழக ஈரோடு வடக்கு...

தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!

தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!

பாஜகவினர் கழகத் தோழர் சங்கீதாவை தாக்கிய வழக்கில் குற்றவாளிகளுக்கு முன் பிணை மறுத்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜகவினரிடம் அப்பகுதி மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது அங்கிருந்த தோழர் சங்கீதாவும் பாஜகவினரிடம் ஜி.எஸ்.டி. குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் தோழர் சங்கீதாவின் கடையை தேடிச் சென்று, தனியாக இருந்த அவரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் வசைபாடியதுடன், கொலைவெறித் தாக்குதலும் நடத்தியுள்ளனர். இத் தாக்குதலில் ஈடுபட்ட பாஜக பொறுப்பாளர் சின்னச்சாமி உள்ளிட்ட 5 பேரை கைது செய்த கோரி 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் தங்களுக்கு முன் பிணை தர வேண்டும் என்று கூறி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோரிக்கை மனு சமர்ப்பித்திருந்தனர். இந்த...

கொளத்தூரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

கொளத்தூரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

கொளத்தூர் : கொளத்தூர் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 09.04.2024 அன்று கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பாடகர் கோவன் குழுவின் கலை நிகழ்ச்சி மற்றும் கலகக்காரன் குழுவின் தெருக்கூத்து நாடகத்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு கொளத்தூர் நகரத் தலைவர் ராமமூர்த்தி வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார் தலைமை தாங்கினார். இதில் திராவிடர் முன்னேற்றக் கழக கொளத்தூர் ஒன்றிய செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி கொளத்தூர் ஒன்றிய செயலாளர் சேட்டு குமார், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தீனரட்சகன், திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி மாவட்ட து. அமைப்பாளர் முருகேசன், ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கழக கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் நன்றி கூற பொதுக்கூட்டம்...