மேட்டூர் ஆர்.எஸ். மாதையன் காலமானார்

சேலம் மாவட்டம் மேட்டூர் RS பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சௌந்தர்ராஜனின் தந்தை மாதையன் (74) 07.05.2024 அன்று உடல் நலக்குறைவின் காரணமாக முடிவெய்தினார்.
மறைந்த தோழர் மாதையன் அவர்களின் இறுதி நிகழ்வு மேட்டூர் RS,தேங்கல்வாரை,NSK நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

பெரியார் முழக்கம் 09.05.2024 இதழ்

You may also like...