கீரனூரில் இரண்டு நாள் பயிலரங்கம்! திண்டுக்கல் மாவட்டக் கழகம் சிறப்பான ஏற்பாடு

திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் இரண்டு நாள் பெரியாரியல் பயிலரங்கம் பழனி கீரனூரில் 11.06.2024 – 12.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
பயிலரங்கை கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் ஒருங்கிணைத்தார். கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர் “பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் பொருத்தப்பாடு” மற்றும் ”பெரியார் மீதான அவதூறுகளும்” என்கிற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், பெரியாரின் பெண் விடுதலை என்கிற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொருப்பாளர் சிவகாமியும், பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலில் (இந்திய) பார்ப்பனர்களின் பங்கு என்கிற தலைப்பில் ம. கி. எட்வின் பிரபாகரனும் உரை நிகழ்த்தினார்கள்.
பின்னர் டெலஸ்கோப் மூலம் நிலவைக் குறித்து அறியும் அறிவியல் வகுப்பினை பேராவூரணி கலைச்செல்வன் நடத்தினார்.
முதல்நாள் நிறைவாக் சமூக ஊடகங்கள் குறித்து முகநூல் பொறுப்பாளர் பரிமளராசனும், இணையதள பொறுப்பாளர் விஜயகுமாரும் உரை நிகழ்த்தினார்கள்.
இரண்டாம் மற்றும் நிறைவு நாளான 12.06.2024 அன்று திராவிடர் இயக்கத்தின் இன்றைய தேவையும் என்கிற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், உலகம் தோன்றிய வரலாறு என்கிற தலைப்பில் பேராவூரணி கலைச்செல்வனும், இயக்கத்தில் தோழர்களின் அடுத்தகட்ட நகர்வு பற்றி சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி மற்றும் திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி ஆகியோர் உரையாற்றினார்கள்.
நிறைவாக அய்யம் களைதல் என்னும் தலைப்பில் தோழர்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் ஆதாரத்துடன், வரலாற்றுக் குறிப்புகளுடன், எளிமையான விளக்கத்துடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பாக பதிலளித்தார். இந்நிகழ்வை திண்டுக்கல் மாவட்டக் கழகம் ஏற்பாடு செய்தது.

பெரியார் முழக்கம் 20.06.2024 இதழ்

You may also like...