தேவேந்திரன் – நிஷா இணையேற்பு விழா

சென்னை : மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் குழந்தைநல மருத்துவராக பணிபுரியும் அ.வா.தேவேந்திரன் அவர்களுக்கும், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த, மயிலாடுதுறை அறம் குழந்தைகள் சிகிச்சையக இயக்குநர் இராம.ஜெனிஃபர் (எ) நிஷா அவர்களுக்கும் ஜாதி – மத மறுப்புத் திருமணம் 14.04.2024 அன்று பெரியார் திடலில் நடைபெற்றது.
இணையேற்பு விழாவுக்கு தலைமைத் தாங்கிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இணையேற்பை நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார்.
இந்நிகழ்வில் இயக்குநர் கோபி நயினார், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 02.05.2024 இதழ்

You may also like...