தோழர் திலீபன் பெற்றோர் படத்திறப்பு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழகத் தலைவர் திலீபனின் பெற்றோர் பச்சையப்பன் – தாயாரம்மாள் ஆகியோரது படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் 15.06.2024 அன்று நெமிலி பெரப்பேரி கிராமத்தில் நடைபெற்றது..
இந்நிகழ்விற்கு வேலூர் மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் இரா.சிவா தலைமை தாங்கினார். நிகழ்வில் பச்சையப்பன் – தாயாரம்மாள் ஆகியோரது படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
மேலும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் இரவிபாரதி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். நரேன் நன்றி கூறினார்.
இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, வேலூர் மாவட்டத் தலைவர் திலீபன், அன்பு, மற்றும் தோழர்கள், தோழமை இயக்கத்தினர், குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 20.06.2024 இதழ்

You may also like...