கழகக் கலந்துரையாடல் கூட்டம்

சேலம் : தாரமங்கலம் நகர கழக கலந்துரையாடல் கூட்டம் 11.05.2024 அன்று பவளத்தானூர் சரவணன் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சரவணன் தலைமை தாங்கினார். பவளத்தானூர் தனசேகர் முன்னிலை வகித்தார்.
இதில் தாராமங்கலம் நகர கழக சார்பில் மே மாத இறுதிக்குள் “குடிஅரசு இதழ்” மற்றும் “சுயமரியாதை இயக்க” நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பவளத்தானூர் சரவணன், தனசேகர், கே.ஆர்.தோப்பூர் கண்ணன், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, இளம்பிள்ளை சேகர், நங்கவள்ளி நகர செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

You may also like...