தோழர் விஜயன் தந்தை முடிவெய்தினார்!

வட சென்னை மாவட்டத் தோழர் விஜயன் அவர்களின் தந்தை கோ. ஏகாம்பரம் அவர்கள் 11.06.2024 அன்று முடிவெய்தினார்.
அவரது இறுதி நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வட சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி, அருள்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த ஏகாம்பரம் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் அவரது உடல் கொள்கை முழக்கங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு, எந்தவித இந்து மதச் சடங்கு சம்பிரதாயங்களின்றி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு கே.பி.பார்க் பகுதியில் நடந்தது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் முழக்கம் 20.06.2024 இதழ்

You may also like...