Category: கோவை புறநகரம்

கழகப் பரப்புரைப் பயண விளக்கக் கூட்டங்கள்

கழகப் பரப்புரைப் பயண விளக்கக் கூட்டங்கள்

வேட்டைக்காரன் புதூரில் : மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரைப் பயண விளக்கப் பொதுக்கூட்டம் 26.08.2019 அன்று மாலை 6 மணிக்கு  பொள்ளாச்சி வேட் டைக்காரன் புதூரில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஒன்றியச் செயலாளர் அரிதாசு தலைமை வகித்தார்.  ஒன்றிய தலைவர் அப்பாதுரை முன்னிலை வகித்தார். நிகழ்வில் கழக பொருளாளர் துரைசாமி, செயற்குழு உறுப்பினர் மடத்துகுளம் மோகன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி உரையாற்றினர். முனைவர் சுந்தர வள்ளி,  திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். தோழர்கள் வினோதினி – மணி இணையர்களின் குழந்தைக்கு நிறைமதி என கழகத் தலைவர் பெயர் சூட்டினார். சபரிகிரி நன்றி கூறினார். இந்நிகழ்வில், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஆனமலை பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரத்தில் : மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்பு பயணத் தின்  பிரச்சார பயண விளக்க  பொதுக் கூட்டம் 26.08.2019 அன்று மாலை 5 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட...

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரை பயண பொதுக்கூட்டம் / வேட்டைக்காரன்புதூர் 26082019

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரை பயண பொதுக்கூட்டம் / வேட்டைக்காரன்புதூர் 26082019

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரை பயணத்தின் திருப்பூர் கோவை அணியின் ஒரே நிகழ்வாக வேட்டை காரன்புதூரில் பொதுக் கூட்டம் 26-8-2019 மாலை 6 மணிக்கு நடைபெற்றது. நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் அரிதாசு தலைமையும் ஒன்றிய தலைவர் அப்பாதுரையும் முன்னிலை வகித்தனர். விழாவில் கழக பொருளாளர் துரைசாமி அவர்களும் செயற்குழு உறுப்பினர் மடத்துகுளம் மோகன் அவர்களும் கோவை மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி அவர்களும் சிறப்புரையாற்றினர் . விழாவில் முனைவர் சுந்தரவள்ளி அவர்களும் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களும் பேருரையாற்றினர்.விழாவில் தோழர்கள் வினோதினி – மணி இணையர்களின் குழந்தைக்கு நிறைமதி என கழக தலைவர் பெயர் சூட்டினார்.விழாவிற்கு தோழர் சபாகிரி நன்றியுரையாற்றினார். விழாவில் செயற்குழ உறுப்பினர் பன்னீர் செல்வம் அவர்களும் கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் அவர்களும் கோவை மாநகரத் தலைவர் நேருதாசு அவர்களும் கோவை மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் அவர்களும் ஆனைமலை...

காமராசர் பிறந்த நாள்:  மேட்டுபாளையத்தில் கழகம் ஒரு நாள் பரப்புரை

காமராசர் பிறந்த நாள்: மேட்டுபாளையத்தில் கழகம் ஒரு நாள் பரப்புரை

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 14, 15, 16 தேதிகளில் திருப்பூர், பல்லடம், மடத்துக்குளம் பகுதிகளில் நடந்த தெருமுனை கூட்டங்களின் நிறைவு நிகழ்வாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பரப்புரை இயக்கங்கள் நடைபெற்றது. 28 .07.2019 அன்று காலை எல்லம்மாள் தங்கும் விடுதி அருகில் நடந்த பரப்புரை நிகழ்விற்கு, மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் தலைமை ஏற்று நிகழ்வை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தோழர்கள் முகில் ராசு மற்றும் யாழ் வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்விற்கு அமுல்ராஜ் நன்றி கூறினார். மதியம்  மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் வீட்டில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மாலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடந்த பரப்புரை கூட்டத்திற்கு  இராமசந்திரன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வேலுச்சாமி உரையாற்றினார்.  மடத்துக்குளம் மோகன், பொருளாளர் துரைசாமி மற்றும் யாழ் வெள்ளியங்கிரி சிறப்புரையாற்றினர்.  விஷ்ணுபிரசாத் நன்றியுரையாற்றினார். மாலை நிகழ்வில் திராவிடர் கழகத்தைச் சார்ந்த, சாலை...

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

மாட்டிறைச்சி முகநூல் பதிவுக்காக கழகத் தோழர் நிர்மல் கைது அனைத்து இயக்கங்கள் கண்டனம்

மாட்டிறைச்சி முகநூல் பதிவுக்காக கழகத் தோழர் நிர்மல் கைது அனைத்து இயக்கங்கள் கண்டனம்

மாட்டிறைச்சியை ஆதரித்த முகநூல் பதிவுக்காக கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் நா.வே. நிர்மல்குமார், காவல்துறையால் பிணையில் வெளிவர முடியாத சட்டப் பிரிவு களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் துறையின் சிறப்பு பிரிவுகள் தொடர்ந்து மக்களுக்காய் களத்தில் நிற்கும் தோழர்களின் முகநூல் பதிவுகளைத் தொடர்ந்து கண் காணித்து வருகிறது. அந்த வகையில் கோவையில் ஜாதி, மத வெறியர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டமக்களோடு களத்தில் நின்று போராடும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் நிர்மல் பதிவை பதிவிட்ட அன்றே காவல்துறை கண்காணித் திருக்கும். அதன் பிறகு ஜாதி ஆணவப் படு கொலைகளைத் தடுக்கத் தவறும் தமிழக அரசு, காவல் துறை ஆகியவற்றை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. 17.07.2019 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்புக் கடிதம் கொடுத்த காவல்துறை அக்கடிதத்தில் நிர்மலின் முகநூல் பதிவையே காரணம் காட்டி யுள்ளது. மேலும்...

ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

தொடரும் ஜாதி வெறித் தாக்குதல்கள், ஜாதிய ஆணவப் படுகொலைகளை அலட்சியப்படுத்தும் தமிழக அரசைக் கண்டித்து  கோவையில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 23/07/2019 செவ்வாய் மாலை நான்கு மணியளவில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காவல் துறையின் தடையை மீறி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தலைமை நிர்மல்குமார் (கோவை மாநகர செயலாளர்), முன்னிலை ப கிருட்டிணன் (கோவை மாநகர அமைப்பாளர்), வரவேற்புரை மா.நேருதாசு (கோவை மாநகர தலைவர்), கண்டன ஆர்ப்பாட்டத்தில் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், பொருளாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன், தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் முகில்ராசு உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ...

கோவையில் கழகம் நடத்திய  கல்விக் கொள்கைக் கருத்தரங்கம்

கோவையில் கழகம் நடத்திய கல்விக் கொள்கைக் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இந்தியை திணிக்காதே! கல்வியை காவி மயமாக்காதே! என்ற முழக்கத்துடன், புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019 பற்றிய கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் 12.07.2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கத்தில் மாலை 4:30 மணிக்கு நடைபெற்றது.  கருத்தரங்கிற்கு நேருதாசு தலைமை வகித்தார். வெங்கட் வரவேற்புரையாற்றினார். பா.இராமச்சந்திரன், யாழ் வெள்ளிங்கிரி, இரா. பன்னீர்செல்வம், நா.வே. நிர்மல் குமார், ஜெயந்த், கிருட்டிணன், சிலம்பரசன், வைத்தீஸ்வரி, அஜீத்குமார், சபரிகிரி, தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றிய விரிவான கருத்துரையை, பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் மாநில ஒருங் கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வழங்கினார். தமிழ்நாடு மாணவர் கழகத்தின் விஷ்ணு நன்றியுரையாற்றினார். பெரியார் முழக்கம் 18072019 இதழ்

தோழர் நிர்மல்குமார் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கோவை 31072019

தோழர் நிர்மல்குமார் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கோவை 31072019

ஆர்ப்பாட்டம் ! கோவை – 31.07.2019. தோழர் நிர்மல்குமார் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ! ”கருத்துரிமையை பறிக்கும் அரசின் அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு” சார்பில் ……….. கழகத் தோழர் கோவை மாவட்டச்செயலாளர் தோழர் நிர்மல் குமார் அவர்கள் ஒரு முகநூல் பதிவிற்காக 27.07.2019 அன்று பொய் வழக்கில் தமிழக அர்சின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதனைக் கண்டித்தும்,தோழரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோவையில் ”கருத்துரிமையை பறிக்கும் அரசின் அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு” சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 31.07.2019 அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு த.பெ.தி.க.பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் அவர்கள் தலைமை வகித்தார்.கழகத்தின் மாவட்டத்தலைவர் தோழர் நேருதாஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுசி கலையரசன், திராவிட தமிழர் கட்சியின் வெண்மணி, சிபிஎம் மாநில குழு உறுப்பினர் பத்மநாபன், தமிழ்தேசிய இறையாண்மைக்கட்சி தென்மொழி, பு.இ.முவின்...

தோழர்களே, கோவைக்குத் திரளுவீர்!

தோழர்களே, கோவைக்குத் திரளுவீர்!

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் தலைவிரித்தாடுகின்றன. ஜாதிகளைக் கடந்து ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்து கொள்ள அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஜாதிவெறிக் கூட்டம் கையில் எடுத்துக் கொண்டு வீச்சறிவாளையும் கத்தியையும் தூக்கிக் கொண்டு வருகிறது. ‘நாம் எல்லோரும் இந்துக்கள்’ என்று மதவாதம் பேசும் கூட்டம், இந்துக்களுக்குள்ளே நடக்கும் ‘ஜாதிக் கொலைகளை’ எதிர்க்காமல் மவுனம் சாதிக்கிறது. தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலைகளே நடக்கவில்லை என்கிறது, தமிழக அரசு! ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் சட்டத்தையும் கொண்டுவர மறுக்கிறது, மத்திய சட்ட ஆணையம். ஜாதியப் படுகொலைகளைத் தடுக்கும் மசோதாவைத் தயாரித்து 2011ஆம் ஆண்டு நடுவண் ஆட்சிக்கு அனுப்பி பல ஆண்டுகளாகியும் மசோதா கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஜாதி ஆணவப் படுகொலைகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு மாநில அரசுகளுக்கு 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 22 மாநில அரசுகள் பதிலளித்து விட்டன. தமிழ்நாடு மட்டுமே பதிலளிக்கவில்லை. இளைஞர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய முன் வந்தால் முதியவர்கள்...

ஜாதி வெறிப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் நேரில் ஆறுதல்

ஜாதி வெறிப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் நேரில் ஆறுதல்

ஜாதி வெறி மனிதத்தையே சாகடிக்கிறது. மேட்டுப்பாளையம் அருகே தலித் பெண்ணோடு குடும்பம் நடத்தியதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த வினோத்குமார் என்ற 24 வயது இளைஞர், சொந்தத் தம்பியையே வெட்டிப் படுகொலை செய்து விட்டான். தாக்குதலுக்கு உள்ளாகிய தலித் பெண்ணும் மரணமடைந்து விட்டார். 24 வயதுள்ள இளைஞனைக்கூட ஜாதி வெறி எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பது தமிழ்நாட்டுக்கே அவமானம். கடந்த 5 ஆண்டுகளில் 185 ஜாதி வெறிக் கொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. ‘கவுரவக் கொலை’களே தமிழ்நாட்டில் நடப்பது இல்லை என்று ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது சட்டசபையில் ‘வாய் கூசாமல்’ பேசினார். 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், ஜாதி வெறிப் படுகொலைகள் குறித்த விவரங்களை மாநில அரசுகளிடம் கேட்டது. 22 மாநில அரசுகள் விவரங்களை அனுப்பின. தமிழ்நாடு அரசு எந்த அறிக்கையையும்  அனுப்பவில்லை. தேசிய சட்ட ஆணையம், ஜாதி வெறியோடு திருமணங்களைத் தடுக்க முனைவதை சட்டப்படி குற்றமாக்கும் மசோதா ஒன்றை 2011ஆம் ஆண்டு...

பரப்புரைப் பயணத்துக்கு ஆனைமலை ஒன்றிய கழகம் தயாராகிறது

பரப்புரைப் பயணத்துக்கு ஆனைமலை ஒன்றிய கழகம் தயாராகிறது

30.06.2019 காலை 10 மணியளவில் ஒன்றிய தி.வி.க சார்பாக, ஆனைமலையில் கலந்துரையாடல்  நடைபெற்றது. பரப்புரைப் பயணத்துக்கு தயார் ஆவது என முடிவு செய்யப்பட்டது. கலந்துரையாடலில், ஒன்றிய தலைவர் அப்பாத்துரை, ஒன்றிய செயலாளர் அரிதாசு, ஒன்றிய அமைப்பாளர் சபரிகிரி, தோழர்கள் சிவா, கணேசன், மணி, பாலன், காஜா, சந்தோசு மற்றும் கோவை மாவட்டச் செயலாளர் யாழ் வெள்ளிங்கிரி, மடத்துக்குளம் இரா. மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்கண்ட தோழர்கள் கட்டமைப்பு நிதி வழங்கினர். ஏ.ஆர்.வி. சாந்தலிங்கம் – ரூ. 10000/-         மருத்துவர் வசந்த ஆல்வா – ரூ. 3000/- பழ.முருகானந்தம் – ரூ. 2000 /-                      – ஆகியோர் கட்டமைப்பு நிதியை அளித்தனர். பெரியார் முழக்கம் 04072019 இதழ்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கோவை விடியல் நண்பர்கள் ரூ.   4,20,000 (27.5.2019 அன்று மாலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் விடியல் நண்பர்கள் குழுவினரைச்  சந்தித்தபோது தங்கள் நிதியுடன் திரட்டிய நிதியையும் சேர்த்து ரூ. 4,20,000த்தைக் கழகத் தலைவரிடம் வழங்கினர். இவர்கள் ஏற்கனவே ரூ. 20,000 வழங்கியுள்ளனர்.) அ.மாசிலாமணி (கீழப்பாவூர்)  ரூ.         25,000 கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட சார்பில்     ரூ.   4,35,000 (ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டக் கழக கட்டமைப்பு நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி 27.05.2019 அன்று கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டு முதல் கட்டமாக ரூ.4,35,000 (நான்கு இலட்சத்து முப்பத்தி ஐயாயிரம்) ரூபாயை கழகத் தலைவரிடம் ஒப்படைத்தனர்) மேட்டூர் நாத்திகர் விழாவில்…...

சங்கர் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

சங்கர் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

சங்கர் சமூகநீதி அறக்கட்டளை சார்பில் சங்கர் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டம் 13.3.2019 அன்று உடுமலைப்பேட்டை குமரலிங்கம் பேருந்து நிலையம் அருகில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில், ‘தந்தை பெரியார் வழியில் சமூகநீதி’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், ‘பெண் விடுதலைத் தளத்தில் சமூகநீதி’ தலைப்பில் தமுஎச மாநிலத் துணைச் செயலாளர் சுந்தரவள்ளி, ‘அண்ணல் அம்பேத்கர் ஒளியில் சமூகநீதி’ தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘தமிழ்த் தேசிய மரபில் சமூகநீதி’ தலைப்பில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தோழர் வே. பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாலை 4 மணிக்கு சங்கர் தனிப் பயிற்சி மய்யக் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. பெரியார் முழக்கம் 25042019 இதழ்

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

சென்னையில் : டாக்டர் அம்பேத்கர் 128ஆவது பிறந்தநாளான 14.04.2019 காலை 9 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர்  சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழகத் தோழர்கள் ஜாதி, மத எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் கழகத்  தோழர்கள் ராஜீ, சங்கீதா, அம்பிகா, பூர்ணிமா ஆகியோர் அம்பேத்கர் படத்திற்கும், பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். திருப்பூரில் :  திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வாக 14.04.2019 ஞாயிறு காலை 11.00 மணியளவில் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. கழகப் பொரு ளாளர்...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கண்டன ஆர்ப்பாட்டம் ஆனைமலை 19032019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கண்டன ஆர்ப்பாட்டம் ஆனைமலை 19032019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், அனைத்து குற்றவாளிகளையும் அரசியல் தலையீடு இல்லாமல் கைது செய்யவும் ஆனைமலை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்து தோழமை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து 19032019 மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வலியுறுத்தியும் எஞ்சிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் தோழர்கள் முழக்கமெழுப்பினர்.

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10032019

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10032019

தமிழக அரசே ..! பொள்ளாச்சி பெண்கள் மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்து, கைது செய்துள்ள குற்றவாளிகளின் மீது பெண்கள் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடை, எஞ்சிய உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து எந்தவித பாரபட்சமும் இன்றி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய், பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கு இந்த வழக்கில் அரசியல் தலையீடுகளை தடுத்து நிறுத்து என வலியுறுத்தி #கண்டன_ஆர்ப்பாட்டம் #தோழர்_வினோதினி தலைமையில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில்… நேற்று (மார்ச் 10) மாலை 5 மணிக்கு நடைபெற்றது … இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை: #பேராசிரியர்_சரசுவதி PUCL _துணைதலைவர் #ஆசிரியர்_சிவகாமி தமிழ்நாடு அறிவியல் மன்றம் கண்டன உரை : #திமுக_நகர_துணைசெயலாளர் நா. கார்த்திகேயன் வெள்ளிங்கிரி யாழ் திவிக மாவட்டச் செயலாளர் #மடத்துக்குளம்_மோகன் திவிக செயற்குழு உறுப்பினர் #திருப்பூர்_துரைசாமி திவிக மாநில பொருலாளர் #காசு_நாகராசன் ஒருகினைப்பாளர், தமிழ்நாடு திக #தேன்மொழி தமிழ்நாடு மாணவர் கழகம் நன்றியுரை...

பொள்ளாச்சி மாணவிகள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் 10032019

பொள்ளாச்சி மாணவிகள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் 10032019

பொள்ளாச்சி மாணவிகள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம். நாள் : 10.03.2019 ஞாயிறு நேரம் : மாலை 4 மணி இடம்: திருவள்ளுவர் திடல், பொள்ளாச்சி. கண்டன உரை : “பேராசிரியர் சரசுவதி”, துணைத் தலைவர் (PUCL) திராவிடர் விடுதலைக்கழகம் – பொள்ளாச்சி.

‘பொருளாதார’ இடஒதுக்கீட்டைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

‘பொருளாதார’ இடஒதுக்கீட்டைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் சமூக நீதி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சமூகநீதியை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க அரசின் உயர்சாதிக்கான 10ரூ இட ஒதுக்கீட்டைக் கண்டித்து 11.1.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழக மாநகர மாவட்டத் தலைவர் நேருதாசு தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் வெண்மணி (திராவிடர் தமிழர் கட்சி), மலரவன் (புரட்சிகர இளைஞர் முன்னணி) வழக்கறிஞர் சேகர் பி.யு.சி.எல்., இராமசந்திரன் (திவிக), இளவேனில் (தமிழ் புலிகள்), சண்முக சுந்தரம் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), எம்.எஸ். வேல்முருகன் (சி.பி.அய். எம்.எல்.), வழக்கறிஞர் சக்திவேல் (சி.பி.அய்.), சபரி தமிழ்நாடு மாணவர் கழகம், ரமேஷ் முற்போக்கு வழக்கறிஞர் சங்கம், இனியவன் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம், தண்டபாணி சமூக நீதி கட்சி ஆகியோர் கண்டன உரையாற்றினர். கூட்டத்திற்கு திவிக தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், பாலமுருகன் (பி.யு.சி.எல்.), சிங்கை பிரபாகரன்...

கழக ஏடுகளுக்கு சந்தா  சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

டிசம்பர் 24ஆம் தேதி திருச்சி கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகி வரும் கழகத் தோழர்கள் கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்திலும் முனைப்போடு  செயல்பட்டு வருகிறார்கள். மாவட்டக் கழகத் தோழர்களுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். முதல் கட்டமாக பயணம் நவம்பர் 21ஆம் தேதி காலை ஈரோடு வடக்கு மாவட்டம் கோபியில் காலை 11.30 மணியளவில் கழகத் தோழர் நிவாஸ் இல்லத்தில் நடந்தது. ஈரோடு வடக்கு மாவட்டமான கோபியில் 7 ஒன்றியங்களில் கழக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தைத் தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத் தோழர்கள் பரப்புரைக்காக வாங்கியுள்ள வாகனத்தைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாக பரப்புரையை தொடர் நிகழ்வாக நடத்தி வருவது...

மணவிழா நாள் மகிழ்வாக பெரியாரியல் பயிலரங்கம் நடத்திய இணையர்கள்

மணவிழா நாள் மகிழ்வாக பெரியாரியல் பயிலரங்கம் நடத்திய இணையர்கள்

திருப்பூர் – கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் உடுமலை திருமூர்த்தி மலை படகுத் துறையில், 2017 ஜூன் 11, 12 தேதிகளில் நடத்திய பெரியார் பயிலரங்கில் வினோதினி – மணி ஆகியோர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். முதலாம் ஆண்டு மணவிழாவின் மகிழ்ச்சியாக பெரியாரியல் பயிலரங்கை நடத்த விரும்பி அதற்கு நிதி உதவி அளிக்க வினோதினி முன் வந்தார். ஏற்கனவே ஜாதி மறுப்பு திருமணம்செய்து கொண்ட கோவை கழக இணையர்கள் நிர்மல் – இசைமதி மணவிழா நாளும் ஏறத்தாழ இதை ஒட்டியே வருவதால் தோழர் நிர்மல், பயிலரங்கத்துக்கு தங்கள் மணவிழா மகிழ்வாக நிதி உதவி செய்ய முன் வந்தார். உடனே பயிலரங்கம் ஏற்பாடானது.  பொள்ளாச்சி கழகத் தோழர் வெள்ளியங்கிரி இத் தகவலை பலத்த கரவொலிக்கிடையே பயிலரங்கில் அறிவித்தார். கழகத் தோழர் கோவை நிர்மல், “இனி ஒவ்வொரு ஆண்டும் மணவிழா நாளில் இத்தகைய பயிலரங்கை வினோத்-மணி இணையருடன் இணைந்து நடத்துவோம்”...

பொள்ளாச்சியில் ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம்

பொள்ளாச்சியில் ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம்

பொள்ளாச்சி பகுதி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள நஞ்சை கவுண்டன்புதூரில் அருள்ஜோதி உணவு விடுதி அரங்கில் ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம் ஜூலை 15, 2018 அன்று நடந்தது. 84 பேர் பயிலரங்கில் பங்கேற்றார்கள். இதில் 10 பேர் பெண்கள். பயிற்சியாளர்கள் அனைவரும் புதிதாக பெரியாரியலை நோக்கி வரும் இளைஞர்கள். பயிலரங்கைத் தொடங்கி வைத்து, மூத்த கழகத் தோழர் மடத்துக்குளம் மோகன் உரையாற்றினார். தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘திராவிடர் இயக்க வரலாறு’ என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார். 2 மணி நேரம் வகுப்பு நடந்தது. மதிய உணவைத் தொடர்ந்து கழகப் பொறுப்பாளர் வெள்ளியங்கிரி, ‘பயிற்சி முகாம் நோக்கம்’ குறித்து விரிவாகப் பேசினார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘பெரியார்-அம்பேத்கர் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் இரண்டு மணி நேரம் வகுப்பு எடுத்தார். சுல்லிமேடு காடுப் பகுதியிலிருந்து பெரியாரியல் நோக்கி வந்துள்ள பழங்குடி சமூகத்தைச் சார்ந்த...

பெரியாரியியல் பயிலரங்கம் பொள்ளாச்சி 15072018

பெரியாரியியல் பயிலரங்கம் பொள்ளாச்சி 15072018

ஞாயிற்றுக்கிழமை ஜூலை 15 அன்று, பொள்ளாச்சியில் ”பெரியாரியல் பயிலரங்கம்.” கழகத்தலைவர்,கழக பொதுச்செயலாளர் பங்கேற்கிறார்கள். நாள் : 15-07-2018,ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10 மணி இடம் : அருள்ஜோதி உணவக அரங்கம், நஞ்சேகவுண்டன் புதூர்,பொள்ளாச்சி. #பெரியார்_அம்பேத்கர்_இன்றும்_தேவை_ஏன்? – ‘தோழர் கொளத்தூர் மணி’ #திராவிடர்_இயக்க_வரலாறு – தோழர் விடுதலை இராசேந்திரன் #பெரியாரும்_பகுத்தறிவும் – ‘தோழர் மடத்துக்குளம் மோகன்’ #பெரியாரியல்_பயிலரங்கம்_ஏன்..? – ‘தோழர் வெள்ளிங்கிரி’ வாருங்கள் தோழர்களே ! தொடர்புக்கு : 9842487766,9976086033

கோவையில் இரயில் மறியல்

கோவையில் இரயில் மறியல்

“தீண்டாமை ஒழிப் புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்திட்ட, தீர்ப்பைத் திரும்பப் பெற்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை 9ஆவது அட்டவணை யில் இணைத்திடு” என்ற கோரிக்கையை வலி யுறுத்தி 2.7.2018 அன்று தமிழகம் முழுவதும் இரயில் மறியல் நடத்து வதென முடிவு செய்யப் பட்டு அதற்காக மக்களை திரட்டுவதெனவும் முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 26, 27 இரு தினங்கள் வாகனம் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. இராம கிருஷ்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் இரயில் நிலையம் முன் திரண்டனர். காவல்துறைக்கும் தோழர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கே அமர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் 378பேர் கைதாயினர்.  கு. இராமகிருஷ்ணன் (பொதுச் செயலாளர், த.பெ.தி.க.), யு. சிவஞானம் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), சிறுத்தைச் செல்வன் (தமிழ்ப் புலிகள்), சுசி கலையரசன் (வி.சி.க.), நடராசன், முன்னாள் எம்.பி....

பெரியாரியல் பயிலரங்கம் பொள்ளாச்சி 15072018

பெரியாரியல் பயிலரங்கம் பொள்ளாச்சி 15072018

பெரியாரியல்_பயிலரங்கம் #பெரியார்_அம்பேத்கர்_இன்றும்_தேவை_ஏன்? – தோழர்கொளத்தூர்மணி #திராவிடர்_இயக்க_வரலாறு– தோழர்விடுதலைஇராசேந்திரன் #பெரியாரும்_பகுத்தறிவும் – தோழர் மடத்துக்குளம் மோகன் #பெரியாரியல்_பயிலரங்கம்_ஏன்..? – தோழர் வெள்ளிங்கிரி வருங்கள் தோழர்களே……… நாள்:15-07-2018,ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10 மணி இடம்:அருள்ஜோதி உணவக அரங்கம் நஞ்சேகவுண்டன் புதூர் பொள்ளாச்சி #அம்பேத்கர்_பெரியாரை கற்போம் …… பரப்புவோம்…….. பேச :9842487766,9976086033

கல்வி வேலை வாய்ப்பு உரிமை கோரி தமிழ்நாடு மாணவர்க் கழகம் ஆர்ப்பாட்டங்கள்

கல்வி வேலை வாய்ப்பு உரிமை கோரி தமிழ்நாடு மாணவர்க் கழகம் ஆர்ப்பாட்டங்கள்

திருப்பூரில் : திருப்பூர் 02-05 2018 புதன்கிழமை காலை 11 மணி அளவில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக தமிழக மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பு உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சியின் முன்பு நடைபெற்றது. 1)            தமிழக அரசு இயற்றிய ‘நீட்’ விலக்கு தொடர்பான சட்ட மசோதாவுக்கு இசைவு கோரியும், 2)            கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25ரூ மாணவர் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தக் கோரியும், 3)            பட்டியலின பழங்குடி மாணவர்களின் பொறியியல் படிப்பைத் தடுக்கும் அரசாணை 51,52 யை இரத்து செய்து முன்பு இருந்ததுபோல அரசாணை92 ஐ நடைமுறைப்படுத்தக்  கோரியும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோரிக்கை மனு ஆட்சியர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. நிகழ்வில்  தேன்மொழி (மாவட்ட அமைப்பாளர் – டி.எஸ்.எப்.),  தமிழ் செழியன் (டி.எஸ்.எப்.), மதுலதா (டி.எஸ்.எப்.) ஆகியோர் உரையாற்றினர். வீ. சிவகாமி (தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம்), முகில் இராசு (மாவட்ட தலைவர்...

பொள்ளாச்சியில் சடங்குகள் இன்றி கழகத் தோழர் இல்லத் திறப்பு

பொள்ளாச்சியில் சடங்குகள் இன்றி கழகத் தோழர் இல்லத் திறப்பு

பொள்ளாச்சி ஆனைமலையில் 8.4.2018 அன்று கழகத் தோழர்கள் அனுசுயா-கணேசன் இணையரின் இல்லத் திறப்பு விழா எவ்வித சடங்குகளும் இல்லாமல் நடைபெற்றது. இல்லத்தினை கணவரை இழந்த கழகத் தோழரின் உறவுப் பெண் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அனைவரும் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.  மணிமொழி வரவேற்றுப் பேசினார். கழகப் பொறுப்பாளர் பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, “புதுமனை புகு விழா வைதிக முறையில் ஏன் செய்யப்படுகிறது என்பதையும், அதில் நம்மை நாமே இழிவு செய்து கொள்வதையும், சடங்குகள், சாதி, கடவுள் மோசடிகள் குறித்தும் விளக்கினார். தோழர்கள் இசைமதி, வினோதினி, பெண் உரிமைப் பாடல்களைப் பாடினர். மடத்துக்குளம் மோகன், ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்ச்சி நடத்தி, அறிவுக் கருத்துகளை பாமரருக்கும் புரியும் வகையில் பேசியது அனைவரையும் கவர்ந்தது. இறுதியாக கணேசன் நன்றி கூறினார். ஆனைமலை சட்ட எரிப்புப் போராளி ஆறுமுகம், ஆனைமலை கழகத் தோழர்கள் அரிதாசு, ஆனந்த், மணி, விவேக் சமரன், சிவா, முருகேசன் மற்றும் கோவை மாவட்டப்...

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

அய்.பி.எல். சுவர் விளம்பரம் : கழகத் தோழர்கள் அழித்தனர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்கள் இணைந்து 05.04.2018 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “ஐபிஎல் வேண்டாம்” – “காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பைத் தெரிவித்தனர். மந்தவெளி இரயில் நிலையம் முற்றுகை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சார்ந்த மக்கள் இணைந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து 06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகை யிட்டனர். மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். விழுப்புரத்தில் அஞ்சலகம்...

கோவையில் பெரியாரிய பெண்கள் சந்திப்பு

கோவையில் பெரியாரிய பெண்கள் சந்திப்பு

மாவட்ட வாரியாக நடந்து வந்த பெரியாரிய பெண்கள் சந்திப்பு 1.4.2018 அன்று கோவையில் நடந்தது. தோழர்களை உருவாக்குவதற்கும், உருவான தோழர்களை களப்பணியாளர்களாக தயாராவதற்காக வும் இந்த சந்திப்புகள் நடந்து வருகின்றன. கோவையில் இரத்தினசபாபதிபுரத்தில் (ஆர்.எஸ்.புரம்) பெரியார் பெருந்தொண்டர் கஸ்தூரியார் படிப்பகத்தில் அவருடைய மகன் தேவேந்திரன் சந்திப்பு நிகழ்வை நடத்த மகிழ்வுடன் அனுமதி அளித்தார். பெரியார் பிஞ்சு தமிழினி கடவுள் மறுப்பு சொல்லி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். சந்திப்பில் பல்வேறு தலைப்புகளில் தோழர்கள் பேசினர். ‘மதங்கள் பெண்களுக்கு எதிரானவை ஏன்?’ என்ற தலைப்பில் ஆனைமலை வினோதினி, ‘பெரியாரியக்கத்தின் பெண் தளபதிகள் பற்றிய நினைவுகள்’ என்ற தலைப்பில் கோபி மணிமொழி, ‘திராவிடர் இயக்கத்திற்கு முன்னும் பின்னும் பெண்கள் நிலை’ என்ற தலைப்பில் பவானிசாகர் கோமதி ஆகியோர் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். ஒவ்வொருவர் கருத்திற்குமிடையேயும் விவாதங்கள் நடந்தன. இறுதியாக தோழர்களின் சந்தேகங்களுக்கும் மக்களிடையே உறவினர்களிடையே சந்திக்கும் சவால்கள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஆசிரியர் சிவகாமி...

இந்து – இஸ்லாம் – கிறித்துவ மதங்களின் வன்முறைகள் விளக்கப்பட்டன கோவையில் பாரூக் நினைவேந்தல்

இந்து – இஸ்லாம் – கிறித்துவ மதங்களின் வன்முறைகள் விளக்கப்பட்டன கோவையில் பாரூக் நினைவேந்தல்

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் முதலாமாண்டு நினைவு நாள் – குருதிக் கொடை முகாம் – மத எதிர்ப்புக் கருத்தரங்கம் – நினைவேந்தல் உரைகளுடன் கோவையில் மார்ச் 18 அன்று அண்ணாமலை அரங்கில் நிகழ்ந்தது. கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், உணர்வாளர்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்று, தோழர் பாரூக்கிற்கு வீரவணக்கம் செலுத்தினர். பகல் 11 மணியளவில் அண்ணாமலை அரங்கில் குருதிக் கொடை முகாமை பாரூக்கின் மனித நேயப் பயணத்தில் துணை நின்ற அவரது துணைவியார் ரசிதா பாரூக் தொடங்கி வைத்தார். 50க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் குருதிக் கொடை வழங்கினர். மதத்திற்கு குருதி பேதம் இல்லை என்பதை உணர்த்தும் நோக்கத்துடன் இந்த முகாமை தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பிற்பகல் 4 மணியளவில் ‘வரலாற்றில் மதங்களின்...

பொள்ளாச்சியில் ரயில் மறியல் !

பொள்ளாச்சியில் ரயில் மறியல் !

பொள்ளாச்சியில் ரயில் மறியல் ! திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள் 180 பேர் கைது ! 05.04.2018 காலை 09.00 மணிக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி திருவள்ளுர் திடலில் இருந்து பேரணியாக சென்று பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட 180 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர். போராட்டத்தில்,, திராவிடர் விடுதலை கழகம் திமுக தமிழ்நாடு திராவிடர் கழகம் வெல்ஃபேர் பார்ட்டி சிஅய்டியு காங்கிரஸ் தமிழ்ப் புலிகள் தமிழ்நாடு மாணவர் மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.

கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை !

கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை !

கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை ! திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள் 10 பேர் கைது ! 05.04.2018 காலை 10.30.00 மணிக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திவிக, தமிழ்ப்புலிகள்,பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்ட தோழர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

கோவையில்  பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை – 90 பேர் கைது ! 10042018

கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை – 90 பேர் கைது ! 10042018

  எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெறக்கோரி கோவை சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்ட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்றது. 10.04.20188 அன்று கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெறக்கோரி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே சாலை மறியல் நடைபெற்றது. அப்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சிவஞானம் தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாநில அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி,ஆதித்தமிழர் கட்சி மாநில தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுச்செயலாளர்...

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச். ராஜாவைக் கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உருவ பொம்மை எரிப்புகள் நடந்தன. குமரி மாவட்டத்தில் 07-03-2017 புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீநாத்திடம் புகார் மனு வழக்குரைஞர் வே.சதா (மாவட்டத் தலைவர்) தலைமையில் தமிழ்மதி (மாவட்டச் செயலாளர்), நீதி அரசர் (தலைவர், பெரியார் தொழிலாளர் கழகம்), சூசையப்பா (முன்னாள் மாவட்டத் தலைவர்), அப்பாஜி (வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர், தி.மு.க), வைகுண்ட ராமன், வின்சென்ட் ஆகியோரால் வழங்கப் பட்டது. ஆனைமலை : கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின்  ஒருங் கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் 07-03-2018 மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்றது. ஆனைமலை நகரச் செயலர் வே.அரிதாசு தலைமையில், நகர தலைவர் சோ.மணிமொழி முன்னிலையில் நடைபெற்றது. கண்டன உரையாக நாகராசு (திராவிடர் கழகம்), பரமசிவம் (சிபிஎம் ), மணிமாறன்  (வெல்ஃபேர் பார்ட்டி), அப்பன்குமார் (விசிக), சாந்துசாகுல்அமீது (இந்திய...

“சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா உடுமலைப்பேட்டை 13032018

“சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா உடுமலைப்பேட்டை 13032018

(13.03.2018) உடுமலைப்பேட்டையில், தோழர் கெளசல்யா அவர்களின் “சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். நாள் : 13.03.2018 செவ்வாய் நேரம்: மாலை 3 மணி இடம்: காயத்திரி திருமண மண்டபம், கொழுமம், உடுமலைப்பேட்டை.

ஆனைமலையில் எச்.ராஜாவை கைது செய்ய வலியுருத்தி கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆனைமலையில் எச்.ராஜாவை கைது செய்ய வலியுருத்தி கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆனைமலையில் எச்.ராஜாவை கைது செய்ய வலியுருத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் தமிழகத்தின் ஒற்றுமையையும் அமைதியையும் சீர்க்குழைக்கும் வகையில் வன்முறையை தூண்டி வரும் எச் ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி! கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் இன்று 07-03-2018 மாலை 5மணிக்கு ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்றது. ஆனைமலை நகரச்செயலர் வே.அரிதாசு தலைமையில் நகர தலைவர் சோ.மணிமொழி முன்னிலையில் நடைபெற்றது. கண்டன உரையாக நாகராசு (திராவிடர் கழகம்) பரமசிவம் (சிபிஎம் ) மணிமாறன் ( வெல்ஃபேர் பார்ட்டி ) அப்பன் குமார் (விசிக) #அதிமுக (#தினகரன்_அணி ) Arv சாந்து சாகுல் அமீது. (இந்திய ஜவ்கீத் ஜமாஅத் ) தினேசு குமார் (தமிழ்நாடு மாணவர் மன்றம் ) இறுதி உரையாக, தோழர் வெள்ளிங்கிரி யாழ் (திவிக பொறுப்பாளர் ) தோழர் காசு.நாகராசன் (தமிழ்நாடு திராவிடர் கழகம்) உரையாற்றினார்கள். நூற்றுக்கணக்கான தோழர்கள்,...

மனித நேயன் தோழர் பாரூக் முதலாமாண்டு நினைவேந்தல் !

மனித நேயன் தோழர் பாரூக் முதலாமாண்டு நினைவேந்தல் !

மனித நேயன் தோழர் பாரூக் முதலாமாண்டு நினைவேந்தல் ! திராவிடர் விடுதலைக் கழகம் கோவை சார்பில்……… குருதி கொடை முகாம் – கருத்தரங்கம் – நினைவரங்கம் நாள் : 18-03-2018 காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை

மார்ச் 18இல் கோவையில் பாரூக் நினைவு நாள் குருதிக் கொடை – கருத்தரங்கு

மார்ச் 18இல் கோவையில் பாரூக் நினைவு நாள் குருதிக் கொடை – கருத்தரங்கு

16.03.2018 அன்று இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக் முதலாமாண்டு நிகழ்வுகள் 18.03.2018 அன்று நடைபெறு கிறது கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலளார் விடுதலை இராசேந்திரன், முன்னிலை யிலும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகிறது. முதல் நிகழ்வாக மனிதநேயன்  பாரூக் குருதிக் கொடை முகாம் நிகழ்கிறது. முகாமை இரசீதா பாரூக் துவக்கி வைக்கிறார். அன்று மாலை 4 மணியளவில் ‘வரலாற்றில் மதங்களின் வன்முறைகள்’ என்கிற கருத்தரங்கம் நடைபெறுகிறது. நம் இரத்ததில் ஜாதி மத பேதமில்லை; ஏற்ற தாழ்வு இழிவுமில்லை; உயர்தவன் தாழ்ந்தவன் எண்ணமில்லை. அனைவரும் வருக குருதிக் கொடை முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9677404315 முகாம் நடைபெறும் இடம்: அண்ணாமலை அரங்கம்; நாள் – 18.03.2018 காலை 8:30 மணி முதல்; அனைவருக்கும் சான்றிதழ் உடனே வழங்கப்படும். ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம்,  கோவைமாவட்டம். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

கோவையில் கழக சார்பில் மார்ச் 18இல் பாரூக் நினைவேந்தல்

கோவையில் கழக சார்பில் மார்ச் 18இல் பாரூக் நினைவேந்தல்

கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் பிப்.11 அன்று தோழர் கலை அலுவலகத்தில் நடைபெற்றது. மதவெறிக்கு பலியான ஃபாரூக் நினைவு நாளை மார்ச் 18 அன்று காலை பாரூக் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரவணக்கம் செலுத்தி, அன்று கருத்தரங்கமும் குருதிக் கொடையும் வழங்க முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு, விஜயக்குமார் (இணைய தள பொறுப்பாளர்), ரகுபதி, ஸ்டாலின், ராஜா, திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் முத்து, மாநகர அமைப்பாளர் ஜெயந்த், விஜயகுமார், உசேன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 01032018 இதழ்

கழகம் எடுத்த  தமிழர் திருநாள் எழுச்சி

கழகம் எடுத்த தமிழர் திருநாள் எழுச்சி

கடலூர் : கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பாக 2018ஆம் ஆண்டு தமிழர் திருநாளை முன்னிட்டு  மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் ஓட்டப் பந்தயம், கோ-கோ போன்ற எண்ணற்ற போட்டிகள், காவல் துறையின் எதிர்ப்பை மீறி, ஒலிபெருக்கி அனுமதி மறுத்த போதும் அதை பொருட்படுத்தாது நடத்தியே தீருவோம் என்று நமது தோழர்களும், கிராம பொதுமக்களும், தீர்மானம் போட்டு சிறப்பாக நடத்தி முடித்தனர். 16.01.2018 அன்று இரவு பரிசளிப்பு விழா நடைபெற்று விழா இனிதே முடிவுற்றது. விழாவை முன்னின்று மிகச் சிறப்பாக நடத்திய திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நட. பாரதிதாசன் (மாவட்டச் செயலாளர்), நட. பாபு அம்பேத்கர், பாலமுருகன் சிலம்பரசன், மற்றும் தமிழ்நாடு  மாணவர் கழகத் தோழர்கள் பாலாஜி, தினேஷ், மோகன், மணிகண்டன் ஆகியோர் முன்னின்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். பேராவூரணி :  போராட்டப் பண்பே தமிழர்களின்...

வேட்டைக்காரன் புதூரில் காந்தியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்

வேட்டைக்காரன் புதூரில் காந்தியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்

ஆனைமலை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வேட்டைக்காரன் புதூரில் காந்தி படுகொலை நாள் கண்டன பொதுக்கூட்டம் 07.02.2018 மாலை 6 மணிக்கு நடைபெற்றது நிகழ்வின் தொடக்கமாக ரோஜா கலைக் குழுவின் பறை இசை முழக்கத்துடன் தொடங்கி, மா.ப.கண்ணையன் பாடல்கள் முழங்க, காவை.இளவரசனின் மந்திரமல்ல…தந்திரமே! நடைபெற்றது. நிகழ்ச்சியின் தலைமையேற்று சோ.மணி மொழி, வரவேற்புரை இரா.ஆனந்த், தொடக்கவுரையாக சிவகாமி, வே.வெள்ளிங்கிரி, மடத்துக்குளம் மோகன், கா.சு.நாகராசு (த.தி.க), கழகப் பொருளாளர் துரைசாமி, நிறைவுரையாக கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். நன்றி உரை வினோதினி. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோழர்கள் வே.அரிதாசு, அப்பாதுரை, மணி, சிவா, குமார், சபரிகிரி, விவேக், முருகேசன், கணேசன், கஜா சிறப்பாக செய்தனர். நிகழ்ச்சியில் தென்னை மரத் தொழிலாளர்கள் கருப்புசாமி, திராவிடர் கழகத் தோழர்கள், த.பெ.தி.க. தோழர்கள், தி.வி.க. தோழர்கள், வி.சி.க தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த சிறிய கிராமத்தில் 2000 ரூபாய்க்கு கழக நூல்கள் விற்பனை ஆயின. பெரியார் முழக்கம்...

கோவையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு வரவேற்பு

கோவையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு வரவேற்பு

27.12.2017 காலை கோவை வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற் பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட பெரியார் இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர். கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி மற்றும் கழகத்தோழர்கள் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 04012018 இதழ்

கோவையில், நூல் வெளியீட்டு விழா

கோவையில், நூல் வெளியீட்டு விழா

“இருட்டினில் வாழும் வெளிச்சங்கள்” நூல் வெளியீட்டு நிகழ்வு 27.12.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் கோவை  அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது.  த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன் நூலை வெளியிட, கழகத் தலைவர் கொளத்தூர் மணிநூலை பெற்றுக்கொண்டார்.  தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 04012018 இதழ்

கழகம் எடுத்த அம்பேத்கர் நினைவு நாள்

திருப்பூரில் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் திருப்பூரில் அம்பேத்கர் நினைவு நாளான 06.12.2017 அன்று காலை 11 மணியளவில் அம்பேத்கர் சிலைக்கு  கழகத் தலைவர் கொளத்தூர் மணி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பொருளாளர் துரைசாமி, அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, தனபால், அகிலன், மாதவன் பரிமளராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். பேராவூரணியில் பேராவூரணியில் தமிழக மக்கள்  புரட்சிக் கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து  நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாநில கொள்கைபரப்புச் செயலாளர் ஆறு.  நீலகண்டன் தலைமையில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை  செய்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சித.திருவேங்கடம், தா.கலைச்செல்வன்,  சுப.செயச்சந்திரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தோழர்கள் ஏனாதி சம்பத், ஆயில்  மதியழகன், இரா மதியழகன், ரெட்டவயல் மாரிமுத்து, கிறித்தவ நல்லெண்ண இயக்க  பொறுப்பாளர் ஆயர் த.ஜேம்ஸ், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன்...

தேர்வாணையத்தை எதிர்த்து கழக ஆர்ப்பாட்டங்கள்

தமிழ் தெரியாதவர்களும் பிற மாநிலத்தவரும் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் வேலை வாய்ப்புத் தேர்வுக்கு மனு செய்யலாம் என்ற தமிழ்நாடு தேர்வாணைய அறிவிப்பைத் திரும்பப் பெறக் கோரி கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம்  சார்பாக மாவட்டத்  தலைவர் வழக்கறிஞர் வே.சதா தலைமையில்  05.12.207 அன்று மாலை  4.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை வடநாட்டாருக்குத் தாரை வார்க்கும் அரசுத் தேர்வாணையத்தையும் தமிழக அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் தமிழ்மதி, மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், மாவட்டப் பொருளாளர் மஞ்சுகுமார்,  பெரியார் தொழிலாளர் கழகத் தலைவர்  நீதியரசர், செயலாளர் ஜான்மதி, சூசையப்பா, ஸ்டெல்லா, ராஜேந்திரன்,  அருந்ததியர் காலனி ஆறுமுகம் , குமரேசன் (ஆதித் தமிழர் கட்சி) , சிவராஜ பூபதி (மக்கள் அதிகாரம்), வழக்கறிஞர்கள் மைக்கிள் ஜெரால்டு, சுதர்மன், சமூக ஆர்வலர்  போஸ்,  புத்தோமணி, மணிகண்டன், விஷ்ணு,...

பெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார் சூலூர் கூட்டத்தில் உடுமலை கவுசல்யா பேச்சு

எனக்கு உரிமை படைத்த மேடையில் நிற்கும் உணர்வு எனக்கு இங்கே அதிகமாகக் கிடைக்கிறது. இந்த மேடை என்று சொல்வது திராவிடர் விடுதலைக் கழகம் என்ற அர்த்தத்தில் மட்டுமல்ல. சாதி ஒழிப்புக்காக தூய உள்ளத்தோடு உழைக்கிறவர் களான அதுவும் கருஞ்சட்டைகளோடு நிற்கையில் கர்ப்பப்பைக்குள் நிற்பதாகவே உணர முடிகிறது. ஆம் இது எனக்கான இடம், நீங்கள் என் சொந்தங்கள் என்ற உணர்வு இயல்பாகவே வந்து விடுகிறது. சாதியைப் பாதுகாக்கும் ஐந்து சட்ட விதிகளை பெரியார் கொளுத்திய நாள் இன்று! அதன் வரலாறு , அடக்குமுறை, வீரச்சாவுகள் குறித்தெல்லாம் எனக்குப் பின்னால் தோழர்  கொளத்தூர் மணி அவர்கள் பேச இருக்கிறார். நான் புதிதாகக் கற்கத்  தொடங்கியுள்ள மாணவிதான். நானும் கற்கத்தான் இங்கே வந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த சில செய்திகளை கீற்று போன்ற இணையத்தில் படித்து கிடைத்த புரிதல்களை மட்டும் இங்கே முன் வைக்க விரும்புகிறேன். பெரியார் ஆணைக்கிணங்க சட்டத்தைக் கொளுத்திய 16 வயதே  நிரம்பிய சிறுவன்...

நவம்பர் 26இல் ஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரித்து சிறையேகிய போராளிகள் நினைவு நாள் சூலூரில் சூளுரைத்தது கழகம்

1957 நவம்பர் 26இல் தமிழ்நாடு முழுதும் அரசியல் சட்டத்தின் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை எரித்து 6மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறையேகிய பெரியார் இயக்கத்தின் போராட்ட வரலாற்றை நினைவுகூர்ந்து சூலூரில் கழகம் பொதுக் கூட்டம் நடத்தியது. போராட்ட வரலாறுகளை கழகத் தலைவர் கொளத்தூர் மணி விரிவாக விளக்கினார். ஜாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தொடர கழகம் சூளுரைத்தது. கோவை மாவட்டம் சூலூரில் 26.11.2017 அன்று ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரித்த ஜாதி ஒழிப்பு வீரர்கள் நினைவைப் போற்றும் வகையில் மாலை 6.00 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகப் பொதுக்கூட்டம் தொடங்கியது. சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில், சட்ட எரிப்பு போராளி ஆனைமலை ஏ.கே. ஆறுமுகம் முன்னிலையில் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மேட்டூர் டிகேஆர் பகுத்தறிவு இசைக்குழுவின் பகுத்தறிவு பறையிசையைத்  தொடர்ந்து, சட்ட எரிப்பு நாள் வீரர்களை நினைவு கூர்ந்து திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில் ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி,...

சட்ட எரிப்பு மாவீரர்கள் நினைவை போற்றும் பொதுக்கூட்டம் சூலூர் 26112017

கோவை மாவட்டம் சூலூரில் 26112017 அன்று ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரித்த ஜாதி ஒழிப்பு வீரர்கள் நினைவை போற்றும் வகையில் மாலை 6.00 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கியது. நிகழ்வு தோழர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில், சட்ட எரிப்பு போராளி ஆனைமலை ஏ கே ஆறுமுகம் முன்னிலையில் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். முதலில் மேட்டூர் டிகேஆர் பகுத்தறிவு இசைக்குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியாக பறையிசை தொடர்ந்து பகுத்தறிவு பாடல்கள் அனைவரையும் சிந்தையும் கருத்தையும் ஈர்க்கும் வண்ணம் பாடினார்கள் சட்ட எரிப்பு நாள் வீரர்களை நினைவு கூர்ந்து திருப்பூர் மாவட்ட தலைவர் தோழர் முகில் ராசு, பொள்ளாச்சி தோழர் வெள்ளியங்கிரி, கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் இராமசந்திரன், மந்திரமா தந்திரமா தோழர் மோகன், கழக பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்து போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர் பின்னர் தோழர் கௌசல்யா சங்கர் அவர்கள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராய் கலந்துகொண்டு...

கருஞ்சட்டைகளோடு நிற்கையில் கர்ப்பப்பைக்குள் நிற்பதாகவே உணர முடிகிறது – தோழர் கௌசல்யா நெகிழ்ச்சி உரை சூலூர் 26112017

அனைவருக்கும் வணக்கம்! எனக்கு உரிமை படைத்த மேடையில் நிற்கும் உணர்வு எனக்கு இங்கே அதிகமாகக் கிடைக்கிறது. இந்த மேடை என்று சொல்வது திராவிடர் விடுதலைக் கழகம் என்ற அர்த்தத்தில் மட்டுமல்ல. சாதி ஒழிப்புக்காக தூய உள்ளத்தோடு உழைக்கிறவர்களான அதுவும் கருஞ்சட்டைகளோடு நிற்கையில் கர்ப்பப்பைக்குள் நிற்பதாகவே உணர முடிகிறது. ஆம் இது எனக்கான இடம், நீங்கள் என் சொந்தங்கள் என்ற உணர்வு இயல்பாகவே வந்துவிடுகிறது. சாதியைப் பாதுகாக்கும் ஐந்து சட்ட விதிகளை பெரியார் கொளுத்திய நாள் இன்று! அதன் வரலாறு , அடக்குமுறை, வீரச்சாவுகள் குறித்தெல்லாம் எனக்குப் பின்னால் தோழர்  கொளத்தூர் மணி அவர்கள் பேச இருக்கிறார். நான் புதிதாகக் கற்கத்  தொடங்கியுள்ள மாணவிதான். நானும் கற்கத்தான் இங்கே வந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த சில செய்திகளை கீற்று போன்ற இணையத்தில் படித்து கிடைத்த புரிதல்களை மட்டும் இங்கே முன் வைக்க விரும்புகிறேன். பெரியார் ஆணைக்கிணங்க சட்டத்தைக் கொளுத்திய 16 வயதே  நிரம்பிய சிறுவன்...

TNPSC திருத்தத்தை இரத்து செய்யக்கோரி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி 24112017

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் பெரியார், அண்ணா, கலைஞர், MGR , ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காத்த சமூக நீதி கொள்கையை குழி தோண்டி புதைக்கின்ற விதமாக தமிழக அரசு TNPSC தேர்வாணைய சட்டத்தை திருத்தி தமிழகத்தில் பல லட்சம்பேர் வேலைக்காக காத்திருக்கும்போது வெளி மாநிலத்தவருக்கு வேலைகளை அள்ளிக்கொடுக்கும் போக்கை கண்டித்து தமிழக அரசே! தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை வழங்கு திருத்திய சட்டத்தை உடனே திரும்பப்பெறக்கோரி *திராவிடர் விடுதலைக் கழகம்* சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்… நாள் :-24.11.17 மாலை 4மணி இடம் :-திருவள்ளுவர் திடல் ,பொள்ளாச்சி.