நாகை திருவள்ளுவன் மீதான பொய் வழக்குகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததற்கு நீதிக் கேட்டு போராடிய நாகை திருவள்ளுவன் மீது தாக்குதல் நடத்தி, பொய் வழக்குகள் பதிந்து சிறையிலிட்டதைக் கண்டித்து பெரியாரிய உணர் வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப் பாட்டம் 09.12.2019 அன்று மாலை 3 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்ட தலித் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், சுவர் கட்டிய சிவசுப்ரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும், தோழர் நாகை திருவள்ளுவனை தாக்கிய காவலர்கள் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும், தோழர் நாகை திருவள்ளுவன் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளும் திரும்ப பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
பெரியார் முழக்கம் 19122019 இதழ்