கழகப் பரப்புரைப் பயண விளக்கக் கூட்டங்கள்
வேட்டைக்காரன் புதூரில் : மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரைப் பயண விளக்கப் பொதுக்கூட்டம் 26.08.2019 அன்று மாலை 6 மணிக்கு பொள்ளாச்சி வேட் டைக்காரன் புதூரில் நடைபெற்றது.
நிகழ்விற்கு ஒன்றியச் செயலாளர் அரிதாசு தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் அப்பாதுரை முன்னிலை வகித்தார். நிகழ்வில் கழக பொருளாளர் துரைசாமி, செயற்குழு உறுப்பினர் மடத்துகுளம் மோகன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி உரையாற்றினர். முனைவர் சுந்தர வள்ளி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். தோழர்கள் வினோதினி – மணி இணையர்களின் குழந்தைக்கு நிறைமதி என கழகத் தலைவர் பெயர் சூட்டினார். சபரிகிரி நன்றி கூறினார். இந்நிகழ்வில், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஆனமலை பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் : மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்பு பயணத் தின் பிரச்சார பயண விளக்க பொதுக் கூட்டம் 26.08.2019 அன்று மாலை 5 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் காஞ்சிபுரம் பெரியார் நினைவுத் தூண் அருகே ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில், தினேஷ், மாவட்ட செயலாளர் வரவேற்புரையாற்றினார், பரப்புரை பயண நோக்கத்தை விளக்கி, இரா. உமாபதி (திவிக), பாசறை அ.செல்வராஜ் (விசிக), காஞ்சி அமுதன் பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம், தஞ்சை தமிழன், மக்கள் மன்றம், தாண்டவமுர்த்தி, தன்னாட்சி தமிழகம், சீதாவரம் அ.மோகன், தமிழ்நாடு விவசாயிகள் இயக்கம், ராமஜெயம், திவிக ஆகிய தோழர்கள் உரையாற்றினார்கள்.
இறுதியாக ஏழுமலை நன்றியுரை யாற்றினார். முன்னதாக விரட்டு கலைக் குழுவினர் வீதி நாடகம் நடந்தது.
இராயக்கோட்டையில்:மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரைப் பயண விளக்கப் பொதுக் கூட்டம் 28.08.2019 அன்று மாலை 6 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடை பெற்றது. நிகழ்விற்கு கா.குமார், மாவட்ட செயலாளர் தலைமை வகித்தார். வாஞ்சிநாதன் மாவட்ட துணைச் செயலாளர், கிருட்டிணன் மாவட்டத் துணைத் தலைவர், பழநி, சங்கர் கெலமங்கலம் ஒன்றியத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வின் தொடக்கத்தில் மேட்டூர் டி.கே.ஆர் கலைக் குழுவின் பறை இசை, மற்றும் வீதி நாடகம் நடைபெற்றது. தமிழரசன் (தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்) உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினார். இறுதியாக இரமேஷ் நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 0509209 இதழ்