மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல்: திராவிட மாடல் விளக்கக் கூட்டம்
கழக செயல்வீரர், தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் நமக்கான அடையாளம் திராவிட மாடல் விளக்கப் பொதுக்கூட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 01.06.2022, புதன் கிழமை மாலை 6 மணியளவில் கணியூர் பெரியார் திடலில் நடைபெற்றது.
முன்னதாக காலை 10 மணியளவில் மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் கழகக் கொடி ஏற்றப்பட்டது. முனைவர் பேராசிரியர் சுந்தரவள்ளி (தமுஎகச) கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மடத்துக்குளம் மோகன் இணையர் ஜோதிமணி மகள் அறிவுமதி மற்றும் கழக நிர்வாகிகள் தோழர்கள் கணக்கன், சிவானந்தம், ஐயப்பன், சரவணன், வெள்ளிங்கிரி, ஆனந்த், நீலாம்பூர் கருப்புசாமி, பாண்டியநாதன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாலை 6 மணி அளவில் கணியூர் பெரியார் திடலில் நமக்கான அடையாளம் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. யாழினி – ஆனைமலை வினோதினி ஆகியோர் கொள்கைப் பாடல்களை பாடினார்கள்.
ஒன்றியத் தலைவர் த.கணக்கன் தலைமை தாங்கினார். சங்கீதா சிவானந்தம் வரவேற்புரையாற்றினார்.
உடுமலை நகர அமைப்பாளர் இயல் – மடத்துக்குளம் ஒன்றிய துணைத் தலைவர் வெ.ஐயப்பன் – கழகத் தோழர்கள் வெ.சரவணன், தெ.சக்திவேல், துரை. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழகப் பொருளாளர் துரைசாமி – தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் – உடுமலை முற்போக்காளர் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் சாதிக்பாட்சா – விடுதலை சிறுத்தைகள் கட்சி பழ. ராஜசேகர் – திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் சாமிநாதன் – தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி – கோவை மாவட்டக் கழகச் செயலாளர் வெள்ளிங்கிரி – திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில் ராசு – கோவை மாநகர செயலாளர் நிர்மல் மற்றும் பாண்டிய நாதன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மடத்துக்குளம் மோகன் படத்தைத் திறந்து வைத்தார். அப்பொழுது கோவை மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி வெள்ளிங்கிரி புகழ் வணக்கம் செலுத்தி முழக்கங்களை எழுப்பினார். நீலாம்பூர் கருப்புச்சாமி நன்றியுரையாற்றினார்.
இப்பொதுக்கூட்டத்தில் மடத்துக்குளம், உடுமலை, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் பகுதிகளில் இருந்து கழகத் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
மறைந்த தோழர் மடத்துக்குளம் மோகன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் நினைவாக அவரது குடும்பத்தின் சார்பில் இணையர் ஜோதிமணி மகள் அறிவுமதி ஆகியோர் ‘புரட்சிப்பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.5000/- (ரூபாய் அய்ந்தாயிரம்) கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினர்.
மடத்துக்குளம் ஒன்றியம் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் இந்நிகழ்வுகள் சிறப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெரியார் முழக்கம் 09062022 இதழ்