28 தெருமுனைக் கூட்டங்கள்; கோவையில் மண்டல மாநாடு : ‘திராவிட மாடலின்’ சமூகநீதி – சுயமரியாதை கொள்கைகளுக்கு மக்கள் பேராதரவு
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு கோவை டாடாபாத் ஆறுமுக்கு சாலையில் 11.5.2022 புதன் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
முன்னதாக 23.04.2022 அன்று கோவை மேட்டுப் பாளையத்தில் துவங்கி கோவை திருப்பூர் உடுமலை பொள்ளாச்சி என பல்வேறு பகுதிகளில் 07.05.2022 வரை 28 தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து நமக்கான அடையாளம் திராவிட மாடல் எனும் பரப்புரையை கோவை திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியது. நிறைவாக மண்டல மாநாடு நடைபெற்றது.
மாநாட்டின் துவக்க நிகழ்வாக திராவிட மாடல் குறித்தப் பாடல்களை மேட்டூர் டி.கே. ஆர் இசைக் குழு வினர் பாடினர். இதில் கழகத் தோழர்கள் மேட்டூர் கோவிந்த ராஜ், கோவை கிருஷ்ணன், புரட்சித் தமிழன், பொள்ளாச்சி வினோதினி ஆகியோர் பாடல்களை பாடினர்.
பின்பு திராவிட மாடல் மண்டல மாநாடு துவங்கியது. மாநாட்டிற்கு கோவை மாநகர கழகச் செயலாளர் நிர்மல்குமார் தலைமை தாங்கினார். மாநாட்டு நிகழ்வுகளை கோவை மாவட்டக் கழகச் செயலாளர் யாழ். வெள்ளிங்கிரி ஒருங்கிணைத்தார். மாநகர துணைத் தலைவர் வெங்கட் வரவேற் புரையாற்றினார்.
கழக மாநில பொருளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் சிவகாமி, திவிக கோவை மாவட்ட தலைவர் இராமச்சந்திரன், திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு, தமிழ்நாடு மாணவர் கழக கோவை மாவட்ட பொறுப்பாளர் விஷ்ணு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சிவசேனாபதி – ராஜீவ் காந்தி பங்கேற்பு: மாநாட்டில் சிறப்பு அழைப் பாளர்களாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலக்குழு தலைவர் மீனா லோகு (திமுக), திமுக வட்டச் செயலாளர் பசுபதி, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, திமுக தலைமைக் கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் இராஜிவ் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களுக்கு “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு தமிழ்நாடு முழுவதும் நடந்த தெருமுனை கூட்டங் களுக்காக கழகத்தின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்களை திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, சிவகாமி, கோவை மாதவன் சங்கர், சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் வழங்கினர்.
நிறைவாக மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திராவிட மாடல் ஆட்சி குறித்தும் திராவிட இயக்கத்தின் சாதனைகள் குறித்தும் நிறைவுரையாற்றினார். இறுதியாக கோவை அமிலா நன்றியுரை கூறினார்.
முன்னதாக கோவை மேட்டுப் பாளையம் திருப்பூர் உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் கழகத் தின் சார்பில் நமக்கான அடையாளம் திராவிட மாடல் எனும் முழக்கத்தோடு தெருமுனைக் கூட்டங்கள் பரவலாக நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்களிடம் திராவிட மாடல் ஆட்சி குறித்தும் திராவிட இயக்க சாதனைகள் குறித்தும் கழகத் தோழர்கள் கடும் வெயி லிலும் பரப்புரைகளில் ஈடுபட்டனர். விடிய விடிய சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் என நள்ளிரவு நேரங் களிலும் கழகத் தோழர்கள் இம் மாநாட் டிற்காக கடுமையாக பணியாற்றினர். மேலும் பரப்புரையின் போது, கழகத்தின் சமீபத்திய வெளியீடான புத்தகங்களை மக்களிடம் விற்பனை செய்தார்கள். கழகத்தின் பரப்புரைக்கு மக்களிடையே நல்ல ஆதரவு இருந்தது.பொதுமக்கள் சில இடங்களில் தாமாகவே முன்வந்து தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்தார்கள். தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் மாநாடும் கோவை திருப்பூர் பொள்ளாச்சி தோழர்களின் கடுமையான உழைப்பால் மிக சிறப்பாக நிறைவுற்றது.
காவல்துறையின் இழுத்தடிப்பு : இந்த மாநாடு நடத்துவதற்கு காவல் துறையின் அனுமதி வேண்டி கழகத் தோழர்கள் காவல்துறையை அணுகிய பொழுது அனுமதிக்காக தொடர்ந்து அலைக்கழிப்பு செய்தும், ஒவ்வொரு இடங்களையும் அனுமதி மறுத்து மாற்றி மாற்றி நான்காவதாக டாடாபாத் இடத்தை காவல்துறை அளித்தது. தொடர் காவல்துறையினரின் அலைக் கழிப்பு, அனுமதி மறுப்பு, மேலும் மழை வரக்கூடிய ஒரு இடர்பாடான சூழல் ஆகியவற்றிலும் தோழர்கள் துவண்டு விடாமல் இம்மாநாட்டை ஏராளமான பொதுமக்கள் பார்வையோடு வெற்றி கரமாக நடத்தியுள்ளனர். மாநாட்டு நிகழ்வுகளை புகைப்படங்கள் காணொளி களாக பதிவு செய்த தோழர்கள், சிவராஜ்,ஸ்டாலின் ராஜா, ஆனைமலை கணேஷ்,கிருஷ்ணன், முத்து,திருப்பூர் தனகோபால்.
பரப்புரையில் பங்கேற்றத் தோழர் கள்: நடைபெற்ற 28 தெருமுனைக் கூட்டங்களிலும் கழகப் பொருளாளர் துரைசாமி, தமிழ்நாடு மாணவர் கழகம் மகிழவன், அய்யப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
கோவை மாநகரம் – நிர்மல் குமார், வெங்கட், கிருஷ்ணன், புரட்சித் தமிழன், அமிலா, நேருதாஸ், சிவராஜ், தங்கராஜ், மாதவன் சங்கர், முனியப்பன், ராஜாமணி, ஜெயந்த், சக்கரவர்த்தி. சூலூர் ஒன்றியம் – பன்னீர்செல்வம், தமிழ்செல்வி, பாபு, நாகலட்சுமி, முனியப்பன். பொள்ளாச்சி – வெள்ளிங்கிரி, அரிதாசு, அப்பாதுரை, சபரி, மணி, வினோதினி, சிவா, நடராஜ், சந்தோஷ், பாலா, கணேஷ், பகத்சிங், கதிர், அனுசுயா, முருகேசு, விவேக், ஆனந்த், மேட்டுப்பாளையம் – பா.இராம சந்திரன், அமுல்ராஜ். அன்னூர் ஒன்றி யம் – விஷ்ணு,மோகன், பார்த்திபன், நந்தகுமார், மனோ.
திருப்பூர் பரப்புரை மற்றும் மாநாட்டில் கலந்துகொண்ட தோழர்கள்: சு.துரைசாமி,பொருளாளர் – வீ.சிவகாமி தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம் – முகில் இராசு,மாவட்டத் தலைவர் – நீதி ராசன், மாவட்டச் செயலாளர் – சங்கீதா, மாவட்ட அமைப்பாளர் – இராமசாமி, தெற்குப் பகுதி பொறுப்பாளர் – தனபால், மாநகரத் தலைவர் – மாதவன், மாநகரச் செயலாளர் – முத்து, மாநகர அமைப் பாளர் – அய்யப்பன், இராஜசிங்கம், மாரிமுத்து, அகிலன், மோகன், மதன், பரந்தாமன், நாகராசு, இரவி, விஜய், சுசீலா, பார்வதி, சரசு, முத்துலட்சுமி, வசந்தி, சாரதி, திலகவதி, சிரிசா, வீர லட்சுமி, கோமதி, கார்த்திகா.
பல்லடம் – பருதி இளம் வழுதி, நகர தலைவர், பல்லடம் – கோவிந்தராசு,நகரச் செயலாளர், பல்லடம் – சண்முகம், ஒன்றியச் செயலாளர், பல்லடம் – வீரகுமார், சரஸ்வதி
உடுமலை – இயல்,அமைப்பாளர், உடுமலை – கணக்கன் ஒன்றியத் தலைவர், மடத்துக்குளம் – சிவானந்தம் ஒன்றியச் செயலாளர், பாண்டியநாதன் மடத்து குளம் – கலைவாணி, மடத்துக்குளம். மாணவர் கழகத் தோழர்கள்: மகிழவன், பிரசாத், இலக்கியா, பிரபாகரன், புகழேந்தி, ஆகாஷ். பெரியார் பிஞ்சுகள் லவ்லி, அமுதினி, இளமதி, வெற்றிமாறன், மெல்வின், அஸ்வின், ஈழமாறன், யாழிசை, யாழினி.
செய்தி : பரிமளராசன்
(கழக சமூக ஊடக பொறுப்பாளர்)
பெரியார் முழக்கம் 19052022 இதழ்